தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, ஆகஸ்ட் 22, 2020

சானியா மிர்ஷா, சாணியை மிதிச்சா

         என் இனிஇனியாவுக்கு உன் பனித்துளி படர்ந்த கனி இதழுக்கு சொந்தக்காரன் முனி செதுக்கிய மணிமடல் நான் நலமே... நம் அன்பு மகன் வினித்தும், மகள் வினிதாவும், நீயும் நலமா ? நான் எழுதிய "சானியா மிர்ஷா சாணியை மிதிச்சா" என்ற நாவலுக்கு கொங்காணி விருது கிடைத்து இருக்கிறது. எழுத்தாளர் அருக்காணி அவர்கள் கையால் விருது வாங்க போகிறேன்.

தற்பொழுது வார இதழ் பச்சைத் தாவணியில் நான் எழுதி வரும் "ஏணியில் இறக்கிய ஆணிகள்" தொடர் வாசகர்களுக்கு நல்ல தீனியாக இருக்கிறது உமது பாணியே தனி. தரணி போற்றும் நாள் உமக்கும் வரும்.  என்று ஆசிரியர் சகுனி என்னைப் பாராட்டிய போது தேனில் குழைத்த மாங்கனியை சுவைத்தது போலிருந்தது. காலம் கனிந்தது இனி நமக்கு வசந்த காலமே...

பிணியால் எனக்கு அலுவலக பணிச்சுமை தீரவில்லை ஆகவே வரும் ஜூனில்  பனிரெண்டாம் தேதி அல்லது பத்தொன்பதாம் தேதி சனிக்கிழமை உனக்கு பிடித்த பானி பூரியோடு நான் மட்டும். தனியாக வருவேன். இம்முறை உனது தம்பி சீனிவாசன் வரவில்லை. அவனது நண்பன் ஹனிஃபா உதவியால் தனியார் கணினி ஸ்பேர் பார்ட்ஸ் கம்பெனியில் சேல்ஸ் பணியில் அமர்ந்து விட்டான். நான் வரும்போது எனக்கு பிடித்த முக்குழிப் பணியாரம் செய்து வை.

உனது தங்கை மோனிஷாவின் பிறந்தநாளுக்கு வீட்டில் இருப்பேன். உனது சின்னத் தங்கை அனிதா பத்தாவது பாஸ் செய்து விட்டாளா ? உனது பவானி சித்திமகள் கனிமொழி சைனிஷ் மொழி கோர்ஸ் முடித்து விட்டாளா ? மாணிக்கம் சித்தப்பா இன்னும் மானிட்டரோடுதான் பவனி வருகிறாரா ? நமது காணியில் வெட்டிய கேணியில் ஊற்று இருக்கிறதா ? தோட்டத்தில் பூசணி, காய் போட்டு இருக்கிறதா ? தேனியில் நம்ம தணிகாச்சலம் மாமா மகள் வேணி வீட்டுக்கு நாம் போக வேண்டும் ஆகவே உனது அக்கா ராணியிடம் சொல்லி அவளுக்கு பிடித்த கூனிக்கருவாடு வாங்கி வைக்கவும்.


இப்படிக்கு
உனது இனியவன் முனி
வாணியம்பாடி
22.04.1996

42 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. வாங்க ஜி இது விநாயகர் சதுர்த்தி ஆட்டம்.

   நீக்கு
 2. அடுக்கு மொழியால்திணற அடிக்கிறீர்கள் எழுதியதும் சொல்ல வந்ததும் மனதில் ஒட்டாமல் போய் விடுகின்றது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா இது வார்த்தைக் கோர்வை மட்டுமே மற்றபடி பதிவில் அர்த்தமில்லை.
   வருகைக்கு நன்றி ஐயா.

   நீக்கு
 3. வார்த்தைக் கோர்வை சிறப்பு. அசத்துங்க உங்க பாணியில!

  பதிலளிநீக்கு
 4. கோணியை மட்டும்தான் விட்டுட்டீங்க.

  பாவம் சானியா மிர்சாவை வம்புக்கு இழுக்கறீங்களே.. சிம்பு கோச்சுக்கப் போறார்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே சானியாவுக்கும், சிம்புவுக்கும் என்ன தொடர்பு ?

   நீக்கு
 5. மிகவும் கஷ்டப்பட்டு சொல் விளையாடல் விளையாடியிருக்கிறீர்கள். ஆணி கோணி போன்றவற்றை விட்டு விட்டீர்கள். உங்கள் பாணியே தனி. 
  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா தங்களது ரசிப்புக்கு நன்றி.

   நீக்கு
 6. 'னி'யையும் 'ணி'யையும் வைத்து வித்தை காட்டியிருக்கிறீர்கள். இது விசயத்தில் உங்களுக்கு நிகர் நீங்களே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே பதிவை ரசித்தமைக்கு நன்றி.

   நீக்கு
 7. இனியவன் முனி நன்றாக கடிதம் எழுதி இருக்கிறார்.

  வார்த்தை விளையாட்டு நன்றாக வருகிறது உங்களுக்கு.

  பதிலளிநீக்கு
 8. சொற்களால் ஒரு சிலம்பாட்டம்
  அருமை நண்பரே

  பதிலளிநீக்கு
 9. ஹா ஹா ஹா நல்ல கற்பனை... இனியாவின் குடும்பத்தை ஓவர் அக்கறையா நலம் விசாரிக்கிறாரே இந்த வாணியம்பாடி “முனி”:).. கில்லர்ஜிக்கு ரொம்ப தெரிஞ்சவரோ?:))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹலோ முனி, இனியாவின் கணவர் விசாரிப்பதில் தவறில்லை.

   இவரு நமக்கு கொஞ்சம் தூரத்து உறவு பங்காளி முறை.

   நீக்கு
 10. நல்லா இருக்கு உங்க சொல்லாடல்! இதிலே விநாயகர் எங்கே இருந்து வந்தார்? சானியா மிர்சா எங்கே இருந்து வந்தார்? என்றாலும் ரசிக்க முடிந்தது. நல்ல கூர்மையான அறிவு! இவ்வளவு அருமையான தகுதிகளை வைத்துக்கொண்டு அவற்றை வளர்த்துக் கொள்ளுங்கள். பிறரின் கருத்தும் நடத்தையும் உங்களை மதிக்காமல் போனால் என்ன? நீங்க கண்டுக்காதீங்க. அவங்களே காலில் வந்து விழுவாங்க.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ இதில் விநாயகர் எப்படி வந்தார் ? அந்த காலண்டரில் இருக்கும் ''இனியா'' என்ற வார்த்தையை வைத்துதான் நான் இப்பதிவை எழுத தொடங்கினேன். மற்றபடி பார்த்தால் பதிவில் அர்த்தமில்லை.

   அதேநேரம் சில விடயங்கள் யதார்த்தமாக எனக்கு அமைந்து விடுவது இறையின் செயலே நேற்று விநாயகர் சதுர்த்தி என்பது பதிவு வெளியான பிறகுதான் அறிந்தேன்.

   அதேநேரம் சாணியில் பிடித்து வணங்க வேண்டிய விநாயகரை மறந்து போனாலும், படத்தில் பிள்ளையாரும், வார்த்தைகளில் சாணியும் இணைந்தது யதார்த்தமானது.

   எனக்கு இன்னும் ஆச்சர்யமாகவே இருக்கிறது.

   தங்களது கருத்துரைக்கும், ஆறுதலுக்கும் நன்றியும், அனைவருக்கும் தாமதமான விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளும்....

   நீக்கு
  2. நாட்காட்டியின் விநாயகர் படத்தைப் பார்த்ததும், விநாயக சதுர்த்திக்கான பதிவோனு நினைச்சேன். அதான் விநாயகரைப் பற்றிப் பதிவில் காணோமே என்று கேட்டேன்.

   நீக்கு
  3. அதேதான் முகநூலில் படத்தைப் பார்த்த நண்பர் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள் சொல்லி இருக்கிறார். ஹி... ஹி... ஹி...

   நீக்கு
 11. கிணிகிணி கிண்கிணி என்று பதிவு முழுதும்
  முனி சத்தம்.. இல்லையில்லை மணி சத்தம்..

  அழகு.. அழகு...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி மணிச்சந்தத்தோடு வருகை தந்தமைக்கு நன்றி

   நீக்கு
 12. வாய்விட்டுச் சிரித்தேன்!

  பதிலளிநீக்கு
 13. கொடுத்து வைத்தவர் இனியவர் முனி.. அவர்க்குத்தான் எத்தனை கொளுந்தியாள்கள். .. கொங்காணி பரிசு பெறும் இனியவர் முனி அவர்களுக்கு எழுத்தாளாளர் அருக்காணி கையில் பரிசு பெறுவதற்கு வாழ்த்துக்கள்!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் நண்பரே கொழுந்தியாள் கிடைப்பதற்கு பாக்கியம் வேண்டும்.

   நீக்கு
 14. வணக்கம் சகோதரரே

  பதிவு அருமை. கற்பகபட்டி விநாயகர் படம் அழகு.அவர்தான் உங்களை இந்தப்பதிவுக்கு பிள்ளையார் சுளி போட்டு திறம்பட எழுத வைத்துள்ளார் என நினைத்தேன். நான் நினைத்தையே நீங்கள கருத்துரையிலும் சொல்லி விட்டீர்கள். வார்த்தைகளை வளைத்து சுவைபடுமாறு எழுதுவது ஒரு கலை. அந்தத் திறமை உங்களிடம் நிறைய உள்ளது.

  அடுத்தப் பதிவு நகைச்சுவையாக இருக்குமென்று போன பதிவில் கூறினீர்கள். அதன்படி னி. ணி என்ற எழுத்திரண்டையும் இணைத்து தந்த வார்த்தை விளையாட்டுப் பதிவை படித்து மனம் விட்டு சிரித்து மிகவும் ரசித்தேன். பாராட்டுக்கள்.

  நேற்றும், இன்றும் வேலைகள் சரியாக இருந்ததால், உங்களுக்கும் தாமதமான விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ பதிவை இரசித்து கருத்துரை இட்டமைக்கு நன்றி.

   தங்களுக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்.

   நீக்கு
 15. இவ்வாறு எழுத, ரூம் போட்டு சிந்திப்பீர்களோ? அது சரி, பதிவிற்கும் விநாயகர் படத்திற்கும் தொடர்பு?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக முனைவர் அவர்களே...
   நாட்காட்டியில் "இனியா" என்ற வார்த்தையே பதிவுக்கு துவக்கம்.

   மேலும் விநாயகர் சதுர்த்தியன்று பதிவு வந்தது வருகைக்கு நன்றி.

   நீக்கு
 16. டி.ஆர். கேட்டார் போங்கள்! அட்டகாசம்!

  பதிலளிநீக்கு
 17. வார்த்தை ஜாலம் பிரமாதம்.

  பதிலளிநீக்கு
 18. பதிவு முழுதும் 29 தடவை ‘னி’ யும் 21 தடவை ‘ணி’ யும் (தலைப்பில் உள்ளதை சேர்க்காமல் )வருமாறு எப்படித்தான் சொற்களை அமைத்தீர்களோ? பதிவை இரசித்தேன்! பாராட்டுகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே பதிவின் எழுத்துகளை கணக்கு எடுத்து சொன்னமைக்கு நன்றி.
   புகைப்படத்திலும் ''னி'' இருக்கிறது ஹா.. ஹா..

   நீக்கு