தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், ஆகஸ்ட் 17, 2020

துயரத்துள் துயரம்


வணக்கம் நட்பூக்களே...
சமீப காலமாக உலகையே ஆட்டிப் படைக்கும் கொரோனா எனக்கு பல விடயங்களை சொல்லிச் சென்றது ஆனால் என்னை அள்ளிச் செல்லவில்லை இதற்கு இறைவனுக்கு நன்றி சொல்வதா... வேண்டாமா ? என்பதில் சற்று மனக்குழப்பம். காரணம் இன்றைய வாழ்வு இன்பமா ? துன்பமா ? என்ற கேள்விக்கு விகடகவி என்று பதிலளித்தால் வினா எழுப்பியவரின் நிலைப்பாடு ? விகடகவி இடமிருந்து வலமாக படித்தாலென்ன ? வலமிருந்து இடமாக படித்தாலென்ன ? குழப்பமான வார்த்தைதானே...

கொரோனா எனக்கு சொல்லிச் சென்ற விடயங்கள் கவலையை கொடுத்ததா ? அல்லது என்னை அள்ளிச் செல்லாமல் சென்றது மகிழ்ச்சியை கொடுத்ததா ? என்றால் எனக்கு பதில் சொல்லத் தெரியவில்லை என்பதே உண்மையான உண்மை. கொரோனா எனக்கு இரத்த உறவுகளை மட்டுமல்ல மத்த உறவுகளையும், மொத்த மனிதர்களின் உண்மை முகத்தை தோலுரித்து காட்டி விட்டது உறவுகளை கணித்திடும் கணிதம் எனக்கு புலப்படவில்லை நான் படிக்காதவன்தானே... ஆகவேதான் இந்நிலை போலும்.

நான் தனிமைப்பட்டு கலங்கி நின்றவுடன் அதனுள் என்னை மேலும் தனிமைப்படுத்தியதே கொரோனா அதுதான் துயரத்துள் துயரம் இதற்காக நான் மோடியை குறை சொல்ல இயலுமா ? இல்லை எமது எடை குறைந்து போன பாடியைத்தான் நோக முடியுமா ? அயல் தோசத்தில் வாழ்ந்தவர்கள் பெரும்பாலும் சமையல் செய்ய கற்றுக்கொள்வர் இருபது வருடங்கள் வாழ்ந்த நான் அந்த வாசமே அறியாமல் வாழந்தது எவ்வளவு பெரிய இமாலயத் தவறு. இப்படியொரு நிலைக்கு வருவேன் என்று நான் நினைக்கவே இல்லையே எவன்தான் நாளை நாசமாகப் போவோம் என்று நினைக்கப் போகிறான் ?

எத்தனை மனிதர்கள் என்னிடம் விவாதித்தார்கள் வாழ்க்கைத்துணை அவசியம் வேண்டுமென்று துணையின்றி வாழ்வது நடைபிணத்துக்கு சமமென்று அத்தனை நபர்களையும் உதாசீனப்படுத்தி வாதித்தேனே... ஏன் அரேபியர்கள் உள்பட... மதுரை பானு அம்மா என்னிடம் எத்தனைமுறை வாதம் செய்து சண்டை போட்டு இருப்பீர்கள் ? நீங்கள் அபுதாபி வந்தாலும் வாக்குவாதம்தானே... மதக்கோட்பாடுகளோடு... ஒருவேளை எனக்கு அகம்பாவம் அதிகம்தானோ... இப்பொழுது உங்களை பார்க்கவே வெட்கித் தலை குனிகிறேன். ஆகவேதான் மதுரைக்கு வந்தால் தங்களது வீட்டுக்கு வரவே அஞ்சுகிறேன்.

சரி இனியெனும் சமையல் வேலை பழகி கொள்வோம் கற்றுத்தானே ஆகவேண்டும் இறுதிநாளை கடக்கும்வரை வாழ்ந்துதானே தீரவேண்டும். வாழ்வில் இளமையை கடந்து விட்டோம் என்று பெருமிதம் கொண்டேனே முதுமைதான் வாழ்வு என்று காலம் எனக்கு சம்மட்டி அடி கொடுத்து விட்டது கொரோனா காலகட்டத்தில் எனக்கு அவ்வப்போது உணவளித்த உறவுகளை எனது இறுதி மூச்சுவரை மறக்கமாட்டேன் இயல்பாகவே நான் நன்றி மறப்பதில்லை. கொரோனா என்னை எனது வலைத்தளத்தில் கமெண்ட் மாடரேஷனையே திறந்து வைத்து விட்டதே... அது மட்டுமா ?

எனது உயிரினும் மேலான எனது பெயர்த்திக்கு கடிதம் எழுதவும் வைத்து விட்டது. இது ஏற்கனவே தீர்மானித்த விடயமே... அவளிடம் நான் எவ்வளவோ விசயங்கள் சொல்ல வேண்டியது இருக்கிறது நமது வரலாறு தடம் மாற்றிச் சொல்லி விடுவார்கள் என்பது மட்டுமல்ல உண்மைகள் மறைக்கப்படக்கூடாது அல்லவா இப்பொழுது அவளிடம் சொன்னால் புரியுமா ? சொல்வோம் என்று சொல்லி விட்டு போனால் சொல்லித்தான் விடுவார்களா ? இல்லை எழுதி வைப்போம் என்றால் படித்து பிறகு உண்மைகள் சுடுமே கிழித்து போட்டு விடமாட்டார்களா... துரோகிகள்.

ஆனால் இருபது வருடம் கடந்த பிறகு எனது பெயர்த்தி உலகம் அறிந்த குமரிதானே... அன்று இந்த கில்லர்ஜி ஐயாவின் கடிதத்தை படிப்பாள். எனக்காக ஒருதுளி கண்ணீர் சிந்துவாள் அன்று எனது ஆத்மா ஆத்ம திருப்தி கொள்ளும். நான் படிக்கா விட்டாலும் ஐயா அப்துல் கலாம் அவர்களின் அளவுக்கு யோசிக்க முயல்வேன் ஆகவேதான் எனது அன்பின் பெயர்த்திக்கு கடிதம் எழுதினேன். எனது தளத்தில் பதிவு செய்துள்ளேன். எனது தளத்தின் இடது ஓரத்தில் தெருக்குரல் (ப்ளாஷ் நியூஸ்) ஓடிக்கொண்டு இருக்கிறதே... நாளை எனது பெயர்த்தி ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது கவனிக்க மாட்டாளா ? அல்லது எனது உண்மை நண்பர்கள் (உறவுகள் அல்ல) சொல்லி வைக்க மாட்டார்களா ? பிறகு அவள் காத்திருப்பாள் 07.11.2039 தேதிக்கு இந்த ஐயாவின் கடிதத்தை படிக்க...

க்ரிஷன்யா நீ எங்கிருந்தாலும் சீரும், சிறப்புமாய் எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ தினந்தோறும் இறைவனை பிரார்த்தித்தேன், பிரார்த்திப்பேன் இதைவிட வேறென்ன வேலை

நண்பர்களே எனது பெயர்த்தியின் பிறந்தநாள் நவம்பர் 06 நான் எதற்காக கடிதத்தை மறுதினம் வெளியாவது போல் தேர்வு செய்தேன் ?

ChavasRegal சிவசம்போ-
கொரோனாதான் இன்னும் தீரவில்லையே இனிமேல் அள்ளிக்கிட்டு போகலாமே...

சிவாதாமஸ்அலி-
இந்த வருசம் முழுவதும் போனால்தான் முடிவுக்கு வரமுடியும்.

சாம்பசிவம்-
அரசியல்வாதிகள் எல்லோரும் ஒருபுறம் நம்பிக்கையோடுதான் திட்டங்கள் தீட்டுறாங்க... மக்கள் மறுபுறம் திட்டுறாங்க...

86 கருத்துகள்:

  1. கில்லர்ஜி முதல்ல படமே மனதை என்னவோ செய்யுது.

    கீதா

    பதிலளிநீக்கு
  2. மனதை என்னவோ செய்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம்ஜி அவர்களின் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  3. கில்லர்ஜி நம்மையும் தொற்று அளிக்கொண்டு போகவில்லையே என்பதான எதிர்மறை வேண்டாமே.

    யார் வாழ்வும் நிலையானதில்லைதான். அதற்காக இப்படி எல்லாம் வருந்தாதீங்க. உறவுகள் நம்மைப் புரிந்து கொள்ளவிள்ளை என்றாலும் நல்ல நட்புகள் நாம் உருவாக்கும் உறவுகள் இருக்கிறார்கள்தானே.

    நாம் செய்ய வேண்டிய நல்ல விஷயங்கள் எவ்வளவோ இருக்கின்றன. அதைச் செய்யலாம் கில்லர்ஜி. நான் இதை உங்களிடம் அடிக்கடிச் சொன்னதுண்டு. நீங்கள் உதவும் குழந்தைகள் இல்லத்திற்கு இப்போது செல்ல இயலவில்லை என்றாலும், உங்கள் தங்கை வனிதா போன்ற குழந்தைகள் இல்லத்திற்குக் கூட உதவலாம். இப்போது நேரில் செல்ல முடியவில்லை என்றாலும் அருகில் இருக்கும் குழந்தைகளுக்குப் பொருளால் இல்லை என்றாலும் நீங்கள் அறிந்த நல்ல விஷயங்களைச் சொல்லிக் கொடுத்து அவர்களை மகிழ்விக்கலாம்.

    நம்மை ஏதேனும் ஒரு விஷயத்தில் ஈடுபடுத்திக் கொண்டால் நம் மனம் மகிழ்வடையும் அதே சமயம் பிறரை மகிழ்விக்கும் மகிழ்ச்சியும் ஏற்படும். ரத்த சம்பந்தம் மட்டும்தான் உறவுகள் இல்லை ஜி. முயற்சி செய்து பாருங்கள்.

    கில்லர்ஜி மனைவி இருந்தாலும் சரி தனியாக இருந்தாலும் சரி நாமே சமைத்துச் சாப்பிடலாமே. சிம்பிளாகச் செய்து கொள்ளுங்கள் ஜி எப்பவுமே தன் கையே தனக்குதவி. ரைஸ் குக்கர் வைத்துக் கொண்டால் கூடப் போதும்.

    வருந்தாதீர்கள்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவை முழுமையாக படித்து தங்களது விரிவான ஆறுதலை தந்தமைக்கு நன்றி.

      நீக்கு
  4. படிக்கவே கஷ்டமாக இருக்கிறது. நீங்கள் யாரேனும் சமையல்காரர்கள் சாப்பாடு வீட்டுக்குக் கொண்டு வந்து கொடுப்பார்களா என விசாரித்துத் தெரிந்து கொண்டு மாதா மாதம் ஏற்பாடு செய்து கொள்ளுங்கள். உறவுகள் எல்லாம் கொஞ்ச நாட்கள் கொடுப்பார்கள். அவங்களுக்கும் அவங்க அவங்க பிரச்னைகள் இருக்குமே! வருத்தப்படாதீங்க! அக்கம்பக்கம் பழகிக் குழந்தைகளைப் பழக்கம் செய்து கொண்டு அவங்களுக்கு உங்களுக்குத் தெரிந்த எதையானும் சொல்லிக் கொடுங்கள்.குழந்தைகள் ஆர்வமாகக் கற்பார்கள். அல்லது குழந்தைகள் இல்லம் சென்று பொழுதைப் பயனுள்ளதாகக் கழியுங்கள். அக்கம்பக்கம் சிறிய கோயில்களுக்கு உங்களால் ஆன சிரமதானம் செய்யுங்கள். (கோயிலைச் சுத்தப்படுத்துதல், பிரசாதம் விநியோகம், தண்ணீர் நிரப்புதல் போன்றவை) கடைகளில் இப்போது எல்லாமும் தயார் நிலையில் கிடைக்கின்றன. அவற்றை வாங்கி வைத்துக் கொண்டு அவற்றின் உதவியோடு சிக்கனமாக எளிமையாகச் சமைத்துச் சாப்பிடுங்கள். முடிந்தால் செல்லங்கள் ஏதேனும் வளர்க்க முடியுமா என யோசியுங்கள். அவை மன அழுத்தத்தை நீக்கும். உங்கள் கூடவே வரும். நீங்கள் என்ன திட்டினாலும், அடித்தாலும் உங்களையே சுற்றும். நன்றி மறவாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ எனக்கு ஏற்கனவே ஓர் குழந்தையை எடுத்து வளர்க்க வேண்டுமென்ற எண்ணம் உள்ளது ஆனால் இன்று என்னைப் பார்க்கவே ஆள் வேண்டும் போல் இருக்கிறது பார்க்கலாம்.

      கொரோனா பிரச்சனை மாறட்டும் பிறகு எல்லோருடைய சூழலும் மாறும். தங்களது ஆலோசனைகளுக்கு நன்றி.

      நீக்கு
  5. ஒரு வாரமாகவே மனதைச் சங்கடப்படுத்தும் விஷயங்களாகக் கேட்கவும், பார்க்கவும், படிக்கவும் நேர்ந்திருக்கிறது. இறைவன் தான் இவற்றுக்கெல்லாம் ஒரு முடிவு கட்ட வேண்டும். அவனே துணை, அவன் பாதங்களைச் சரண் அடைவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லோருக்கும் இதேநிலைதான் தாய்மாமன் மனைவி அத்தை இறந்து விட்டார் செல்ல இயலவில்லை.

      நீக்கு
  6. ஏராள அனுபவ அறிவிருக்கிறது உங்களுக்கு. உடம்பில் வலிமையும் இருக்கிறது. போதிய அளவுக்கு நல்ல நண்பர்கள் இருக்கிறார்கள். எழுத்தாற்றலும் பலமொழி அறிவும் இருக்கிறது. வெளியே தெரியாத இன்னும் பல திறமைகள் உங்களுக்குள் ஒளிந்திருக்ககூடும். வாழ்நாளை வெகு சிறப்பாக வாழ்ந்து முடிப்பதற்கான இத்தனை தகுதிகளைப் பெற்றிருக்கும் நீங்கள் மனம் கலங்கலாமா?

    ஏற்கனவே நான் குறிப்பிட்டது போல, பெண்டாட்டி பிள்ளைகள் உடனிருந்தும் நடைப்பிணமாக வாழ்பவர்கள் நிறையவே இருக்கிறார்கள்.

    உற்சாகத்துடன் வாழ்வதற்கான புதிய வழிகளைத் தேடுங்கள். நிச்சயம் பலன் கிடைக்கும்.

    வாழ்த்துகள் கில்லர்ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே
      //பொண்டாட்டி பிள்ளைகள் உடனிருந்தும் நடைபிணம் உண்மைதான்//

      தங்களது விரிவான கருத்துரை கண்டு மகிழ்ச்சியும், நன்றியும்.

      நீக்கு
  7. அன்பு தேவகோட்டைஜி,
    மனம் வருந்த வேண்டாம். இருக்கும் வரை
    நிம்மதி வேண்டும். மனதை சமாதானப் படுத்துங்கள்.
    அங்கே சமையல் தெரிந்தவரிடம்
    ஒரு வேளையாவது சமைத்துக் கொடுக்கச் சொல்லி
    மாதத்துக்குப் பணம் கட்டலாம்.
    என் பெரியப்பா மகன் சென்னையில் இப்படித்தான் செய்கிறார்.
    அவருக்கு 72 வயதாகிறது. மகள் சென்னைக்கு சற்று வெளியில் இருக்கிறார்.

    மனைவி இல்லை.
    மனம் தளராமல் இருக்க உணவு தேவை.
    நம்மைவிடக் கீழ் நிலையில் இருப்பவர்களை
    நினைத்து நிதானம் கொள்ள வேண்டும்.
    பத்திரமாக இருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அம்மா தங்களது வருகைக்கும் ஆலோசனைகளுக்கும் நன்றி.

      நான் எப்பொழுதுமே விரும்பி கேட்கும் பாடல்...

      //உனக்கும் கீழே உள்ளவர் கோடி
      நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு//

      இதுதான் அம்மா.

      நீக்கு
  8. படம் மனதை கனக்கச் செய்கிறது நண்பரே

    பதிலளிநீக்கு
  9. கலக்கம் வேண்டாம் கில்லர்ஜி. நல்லதே நடக்கும் என்று நம்பிக்கை கொள்ளுங்கள். நலமே விளையட்டும்.

    சமையல் - பெரிய கம்ப சூத்திரம் அல்ல! நீங்களும் கற்றுக் கொள்ள முடியும்.

    உங்கள் நேரத்தினை உங்களுக்குப் பிடித்த விஷயங்களில் - மெல்லிசை போன்றவற்றில் செலவிடுங்கள். தேவையற்ற எண்ணங்களை விட்டுத் தள்ளுங்கள். பிரச்சனைகள் யாருக்குத் தான் இல்லை! எல்லோருக்கும் இருக்கிறது. பிரச்சனைகளை எதிர்கொண்டு வெற்றி பெறலாம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி தங்களது ஆறுதலான கருத்துரையை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

      நீக்கு
  10. கில்லர்ஜி... நான் ஆறு வருடங்கள் அங்கு தனியாகத்தான் இருந்தேன். எப்போவாச்சும் கொஞ்சம் மனஅழுத்தம் (டிப்ரெஷன்) வரும். ஆனால் அதை கவனியாமல் கடந்துவிடுவேன். எனக்கு பிடித்தபோது சமையல் செய்வேன், என்ன பிடிக்குமோ அதனைச் செய்வேன். வெளியில் நடைப்பயிற்சி. அவ்வப்போது படங்கள். சில வார இறுதிகளில் இனிப்பு செய்து ஆபீஸ் நண்பர்களுக்குக் கொடுப்பேன். நாமே ஏன் சமையல் செய்கிறோம் என்ற நினைப்பே வரக்கூடாது. ஏன் நீங்க இன்னொரு மொழி கத்துக்கிட்டீங்க? அதில் ஒரு ஆசை வைத்துத்தானே. அதுபோலத்தான் சமையலையும் அணுகணும். வாய்ப்பு இருந்தால் நாம் செய்ததை பக்கத்தில் இருக்கும் சின்னஞ்சிறுசுகளுக்குக் கொடுத்தால் நமக்கு ஆத்மதிருப்தி கிடைக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே நான் குடும்பத்தை பிரிந்து வாழ்ந்த இருபது வருடங்களும் எப்பொழுது இந்தியா போய் அவர்களுடன் சந்தோஷமாக வாழ்வோம் ? என்ற நினைவுகளிலேயே காலத்தை ஓட்டினேன்.

      இப்பொழுது அந்த சிந்தனை சுக்குநூறாக சிதறி விட்டது.

      இதுவும் கடந்து போகட்டும்...

      நீக்கு
  11. என்னுடன் வேலை பார்த்தவனின் மனைவி கேன்சர் நோயால் அவதிப்பட்டுவந்தார் (அவர் மற்றும் குழந்தைகள் இந்தியாவில் இருந்தனர்). அப்புறம் ஒரு தடவை பஹ்ரைன் வந்திருந்தார். நானும் அவர்களைச் சந்தித்தேன். அந்த நண்பன் சொன்னதற்கிணங்க, நான் இந்தியா வந்திருந்தபோது என் ஆஸ்தான ஜோதிடரிடம் கேட்டேன். (எப்போ குணமாகும் என்று). அவர் சட் என்று (சரியான ஜாதகம் கிடையாது. நிமித்த ஜாதகம் பார்த்தார்) உங்க நண்பனை இன்னொரு திருமணம் செய்துகொள்ளச் சொல்லுங்கள் என்று சொல்லிவிட்டார். நான் ஊர் திரும்பிய ஒரு சில வாரங்களிலேயே அவனது மனைவி இறந்துவிட்டார். ஆனால் நண்பன் திருமணம் செய்துகொள்ளவில்லை. சங்கடப்பட்டுக்கொண்டோ இல்லை வேறு காரணமோ... அது சரியான முடிவு என்று நான் நினைக்கவில்லை, சொல்லவும் செய்தேன்.

    சரி.... மனைவி இறக்கவில்லை என்றே எண்ணிக்கொள்வோம். கடைசிவரை, அதாவது நம் ஸ்டேஷன் வரும்வரை அவளும் கூட வருவாள் என்று நிச்சயமாகச் சொல்ல இயலுமா? தடுமாறும் வயதில் அந்த மாதிரி நடக்காமல், சிறிது முன்கூட்டியே உங்களுக்கு அது நிகழ்ந்துவிட்டது என்றுதான் நினைத்துக்கணும். நாம் போன பிறகு என்ன நடக்கும் என்பதைப் பற்றி நமக்கு அக்கறை இல்லை. ஆனால் நம் வாழ்வின் எல்லை வரை நாம்தானே வாழ்ந்து தீர்க்கவேண்டும்.

    உற்சாகமாக சமையல் செய்வதை நினைத்துக்கொள்ளுங்கள். இறைவன் உங்களுடன் எப்போதும் இருப்பான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுடைய எடுத்துக்காட்டுகள் போல நானும் பல கோணங்களில் நினைப்பேன்.

      பிறருக்கும் சொல்லி இருக்கிறேன் ஆனால் நிகழ்வில் தனக்கு நடைமுறைக்கு வரும்போது மனம் ஏற்றுக்கொள்ள தயங்குகிறது.

      என்ன செய்வது இருப்பினும் கடப்போம்.

      நீக்கு
  12. காலம் எப்போது வேண்டுமானாலும் மாறும். விரைவில் மனவருத்தங்கள் அகன்று எல்லோரும் கூடி மகிழ்ந்து இருக்கணும் என்று ப்ரார்த்தித்துக்கொள்கிறேன். நிச்சயம் நல்லதே நடக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுடைய பிரார்த்தனைகளுக்கு நன்றி. நட்புகளின் தொடர்பே தற்பொழுது எனக்கு தெம்பு தருகிறது.

      கடந்த ஒருமணி நேரமாக அபுதாபியிலிருந்து நண்பர் பேசிக்கொண்டு இருந்தார்.

      நீக்கு
  13. சில சமயங்களில் நம் மனம் இபப்டி பலவீனப்பட்டுப் போகிறது.  சீக்கிரமே அதிலிருந்து வெளிவந்துவிட வேண்டும்.  நண்பர்கள் அனைவரும் சொல்லி இருப்பது போல மனதை வேறு விஷயங்களில் செலுத்தினால் கவனம் மாறும்.

    உங்களை என் மனதில் நான் கற்பனை செய்து வைத்திருக்கும் இடமே வேறு.    உங்களை நான் ரொம்ப தைரியமானவராக கற்பனை செய்து வைத்திருக்கிறேன் கில்லர் ஜி.  உங்கள் முறுக்கிய மீசை.  உங்கள் பன்மொழித்திறமையும், உங்கள் நகைச்சுவை,  அங்கதம் நிறைந்த எழுத்துகளும்.. எனவே நீங்கள் இதிலிருந்து சீக்கிரம் மீண்டு வந்து விடுவீர்கள் என்று நம்புகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி தங்களது நம்பிக்கையை ஒருபோதும் தகர்க்க விடமாட்டேன்.

      மனம் கனக்கும் பொழுது இப்படி சில பதிவுகள் வந்து விடுகிறது.

      எழுதி முடித்ததும் மனச்சுமை பறந்தது போன்ற உணர்வு.

      மிக்க நன்றி ஜி

      நீக்கு
  14. வணக்கம் சகோதரரே

    தங்கள் பதிவை இப்போதுதான் படித்தேன்.
    எப்போதும் போல் நீங்கள் எழுதியிருக்கும் பதிவாக இருக்கும் என்று படித்துக் கொண்டே வந்த எனக்கு தாங்கள் மனம் வருந்தி எழுதிய இப்பதிவை படிக்கும் போது மனதிற்கு கஸ்டமாக இருந்தது. ஏன் இந்த விசாரங்கள்?

    இதோ.. இன்று காலையிலிருந்து கிச்சனில் எனக்கு வேலைகள் சரியாக இருக்கிறது. உடம்பு முடியவில்லையென்றாலும் மன நிம்மதிக்காக வேலைகளை செய்து வருகிறேன். நடுவில் வலைப்பக்கம் வந்து வந்து போகிறேன். அதைப் போல் நீங்களும் உங்கள் ஒருவருக்காக சமையல் பண்ண வேண்டுமே என்ற எண்ணத்தை கைவிட்டு உங்களுக்கு தெரிந்த சமையலை செய்வதில் ஈடுபட்டு உங்களுக்காக நீங்கள் செய்வது என்ற சந்தோஷத்துடன் பாதி நாளை கழித்து விடலாம். நம் தினசரி வாழ்வில் உணவும் ஒரு அங்கமில்லையா? ஒரு வேளை உணவு எடுக்காவிடில் உடலுடன் மனமும் சோர்ந்து ஏதேதோ நினைக்கத் தோன்றும். தங்கள் குடும்ப பிரச்சனை எனக்கு தெரியாது. ஆனால் ஒவ்வொருவரின் வாழ்விலும் பிரச்சனைகள் காலைச் சுற்றியபடிதான் உள்ளது. தனிமை என்பது ஒரு வெறுமை மட்டுமில்லை.. கொடுமையுந்தான்..! ஆனாலும் மொத்தத்தில் மனம் தளர விடாமல் உங்களை நீங்களே உற்சாகப்படுத்திக் கொள்ளுங்கள். பகிர்வு மனச்சுமையை போக்கும். அடுத்தப் பதிவாக தங்களுடைய இயல்பான பதிவை எதிர்பார்க்கிறேன். நன்றி.

    அன்புடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ
      தங்களது ஆறுதல் மொழிகள் மனதை உற்சாகப்படுத்துகிறது.

      இப்பொழுது ஓரளவு சமையல் பழகி கொண்டேன்.

      எனக்கு கவலைகள் என்ன புதியதா ? கொரோனாவால் தனிமையானதுதான் கொஞ்சம் கஷ்டமாகி விட்டது.

      இது எனக்கு மட்டுமா ? உலக மக்கள் எல்லோருமே வீட்டுச்சிறைதானே...

      அடுத்த பதிவு நகைச்சுவையாகவே வரும் மிக்க நன்றி.

      நீக்கு
  15. இன்று இரண்டாவது மின்னூலை வாசித்தேன்... இன்னும் முடிக்கவில்லை...

    எழுதுங்க எழுதுங்க எழுதிக் கொண்டே இருங்க... இவை ஒன்று தான் மருந்து...

    பேத்தியுடன் இன்னும் பேரன் பேத்திகளுடன் விளையாடும் விளையாட்டில், அனைத்து சோகங்களும் தீரும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி
      மின்நூல் வாசித்தமை அறிந்து மகிழ்ச்சி.

      தங்களது வாக்கு நிறைவேறட்டும் ஜி

      நீக்கு
  16. உங்களிடம் சொல்லி இருந்தாலும், இங்கும் பதிவு செய்கிறேன்...

    கிட்டத்தட்ட எழுதுவதற்கு எந்த புதிய எண்ணமும் வரவில்லை... எனது பழைய பதிவுகளையே வாசித்துக் கொண்டே இருந்தபோது தான், நம் சிக்னல் பதிவும் வந்தது... அந்தப் பதிவு எழுதிய வருடத்தை நினைத்துப்பார்க்கிறேன்... அந்த வருடத்தில், 6 மாதத்தில் மொத்தமே இரண்டு பதிவுகள் தான்... அவ்வளவு வியாபார சுற்றல்... பொருளாதார ரீதியாகச் சிந்தித்தால் இப்போது சிக்கல் தான்... கைத்தறி நெசவாளர்கள் உட்பட இங்குப் பலருக்கும் பல பிரச்சனைகள்... நடப்பது நடக்கட்டும் அவ்வளவே...! குறள்களோடு மனதை ஒரு தொழினுட்பத்தில் செலுத்தி உள்ளேன்... நேரம் போவது தெரியவில்லை என்பதை விட மனம் சிலவற்றை வேறு திசையில் செல்கிறது...

    நேற்று எனது மாமியாரின் தங்கையின் கணவர் மறைந்து விட்டார்... தீநுண்மியால் அல்ல... சில பிரச்சனையால் இறப்பு என்றால் கூட, இன்றைக்கு மருத்துவமனை சென்றால்... கொடுமை... ஒருவர் பார்க்க Rs. 5,000/- எப்படியோ மீட்டு...

    இன்றைய சூழல் வாழ்வதற்கு மட்டுமல்ல சிரமம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருத்தமான விசயம் இன்றைய சூழலிலும் அரசு மருத்துவமனையில் பணம் தின்னும் பிணங்கள்தான் வேலை செய்கின்றனர்.

      நானும் மனதை மாற்ற எழுதிக் கொண்டுதான் இருக்கிறேன் ஜி.

      நீக்கு
  17. நம் ஊரில் கொரோனா பற்றின விழிப்புணர்வு மிக அவசியம் .எங்கள் மூவருக்கும்  மார்ச் மாதம் வந்தது . நான் அதுபற்றி எழுத நினைச்சி விட்டுட்டேன் .காரணம் .இந்த கொரோனா பன்முகத்திறமை படைத்தது .ஒவ்வொருவருக்கும் விதவிதமா சிம்ப்டம்ஸ் காட்டுதே !!விகடகவி !!! இதுநாள் வரைக்கும் இதை கவனிக்கலை பாருங்க எப்படி போட்டாலும் ஒரே சொல் .மனித குணத்தை கணிக்க படிப்பு உதவாதுங்க  அதுக்கு ஒரு படிப்பு டிக்ரீ வேணும்னா நிச்சயம் அந்த மாதிரி படிப்பே எக்காலத்திலும் வராது ..எல்லாம்  வாழ்க்கை  பாடம் .நாமெல்லாரும் ஒவ்வொருநொடியும் புது பாடங்களை கற்று புதுப்பிச்சுக்கறோம் .இதுவும் கடக்கும் இதையும் கடப்போம்னு பாஸிட்டிவா  வச்சிக்கோங்க மனசை  அமைதியா வச்சிக்கோங்க .உங்களுக்கு எது சரின்னுபடுதோ அதையே செய்யுங்க . அப்புறம் அந்த சகோதரி மதுரை பானு அவர்களோடு தொலைபேசியிலாவது தொடர்பு கொள்ளுங்கள் .உங்களது சிறந்த நட்பு எனத்தெரிகிறது .நிச்சயம் நல்ல நட்பு உங்கள் மனதை வருந்தசெய்யமாட்டார் .பல டிப்ரசக்ஷன்ஸ் மனம் விட்டு அதாவது சிறை  மனக் கூட்டைவிட்டு கொஞ்சம் வெளியே வந்து பேசினாலே சரியாகும் . இப்படி வெளிப்படையா சொல்வதும் நல்லது இல்லைனா மன புழுக்கம் அதிகரித்து ஸ்ட்ரெஸ் கூடும் .
    எத்தனையோ பாவம் பண்ணிட்டு பாவமூட்டைகளை சுமந்துக்கிட்டுருக்கவங்களாம் நல்லா சந்தோஷமா இருக்காங்க .நாம் யாரை மனதையும் புண்படுத்தலை  மனதாலும் தீங்கு இழைக்கலை  அதுங்கல்லாம் நலலா இருக்கும்போது நாம் எதற்கு மனம் வருந்தனும் கவலையில் இருக்கணும் ?  தெம்போடு சந்தோஷமா மாஸ்க் போட்டுட்டு வெளியே சென்று இயற்கையை  ரசியுங்க  மனசு லேசாகும் 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ
      தங்கள் குடும்பத்தில் வந்ததா ? இப்பொழுது பிரச்சனை இல்லையே...

      விகடகவியைப் போல் பல வார்த்தைகள் உண்டு.

      நான் இப்பொழுது அதிகமாக எழுதிவதில் இறங்கி விட்டேன். அது ஒன்றுதான் என் மனதுக்கு மகிழ்ச்சியை தருகிறது.

      தங்களது ஆறுதலுக்கு நன்றி.

      நீக்கு
    2. ஆமாம் சகோ பானு அம்மா நண்பரின் அம்மா இப்பொழுது எனது வாழ்க்கை நிகழ்வுகள் இப்படித்தான் வரும் என்று பதினைந்து வருடங்களுக்கு முன்பிருந்தே சரியாக சொன்னவர்கள்.

      நீக்கு
  18. பதிவில் முதல் படம் மிகவும் மனதை கனக்க வைத்தது .ஒருவேளை உணவுகூட இல்லாம சில நாட்டினர் படும் பாடு வேதனை :(ஒரு புகைப்படம் நியூஸ் லெட்டரில் வந்திருந்தது  ஏதோவொரு நாடு சூடான எதுன்னு தெரிலா அங்குள்ள எளியோருக்கு வெளிநாட்டினர் ரொட்டி தயாரித்து விநியோகம் செய்றாங்க அதிலொரு பெண்மணியின் புன்னகை கண் வரைக்கும் விரிந்து பூ போல் கொள்ளை அழகு அனால் அவருக்கு விழிகள் இரண்டுமில்லை ..அதை பார்த்தப்போ  நெஞ்சே கனத்தது .நாமெல்லாம் எத்தனை பாக்கியம் செய்தவர்கள் .அந்த ஒரு ரொட்டி அவரது உணவு கிடைச்சின்னு மனமார அவர் இறைவனுக்கு நன்றி சொன்னதையும் அந்த செய்தியில் படிச்சேன் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உலகில் பலரும் ஒருவேளை உணவுக்காக எவ்வளவோ மனிதர்கள் உயிரை இழக்கிறார்கள்.

      நீக்கு
  19. சமையல் என்பது பெரிய விஷயமே இல்லை நிச்சயம் நீங்களும் சமைப்பீங்க எளிய குறிப்புகளை செய்து பாருங்க விரைவில் வசப்படும் .உங்க ஊர் தேவகோட்டை ஸ்பெஷல்கள் பற்றி ஒரு பதிவு எழுதுங்க வித் குறிப்புக்கள் . சைவம் மற்றும் ஸ்நாக்ஸ் செய்முறையோடு வேண்டும் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அல்லோ மிஸ்டர்ர்.. ஏற்கனவே கில்லர்ஜி கொலை வெறியோடு இருக்கிறார்.. இதைப் படிச்சாரோ அவ்ளோதேன்ன்.. ஓடிடுங்க ஜொள்ளிட்டேன்ன்ன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. அவரே ஏற்கனவே நொந்து நூலாகிப்போய் ஒரு போஸ்ட் போட்டால்.. ஆளாளுக்கு சமையல் சொல்லிக் குடுக்க வெளிக்கிடுகினம்:)..... இதை விட்டுப்போட்டு, கில்லர்ஜிக்கு ஒரு நல்ல இழமையான அன்பான சமையல்காரராக ஆயுத்தப்படுத்திக் குடுங்கோ பார்க்கலாம்.

      நீக்கு
    2. ///சமையல் என்பது பெரிய விஷயமே இல்லை///

      இது இன்னமும் நெல்லைத்தமிழனின் கண்ணில படேல்லைப்போலும்:))... டேவடைக்கிச்சினுக்கு ஜொந்தச் செலவிலேயே சூனியம் வச்ச கதையாகிடப்போகுதே வைரவா.. இதை எல்லாம் பார்க்கவோ இன்று என்னை இங்கு களம் இறக்கினாயப்பா:)..

      நீக்கு
    3. ழமையான //// ஹஹஹஹஹஹா இஸ்பெல்லிங் மிஷ்டேக் அந்த வீச்சருவா உங்க பக்கம் வரது :))

      உங்களுக்கு போர்ராமை என் மேலே :) ஹலோ முடிஜா ஒரு சமையல் பிளாக் எனக்கு போட்டியா ஆரம்பிங்க பார்க்கலாம் :))

      நீக்கு
    4. அவர் இந்திய நேரப்படி 9 மணிக்குமேல் வலைப்பக்கம் வரமாட்டார் அந்த தைரியத்தில் தான் நான் சமையல் பற்றி எல்லாம்  பேசறேன் :))))))))))))

      நீக்கு
    5. என்னை ஆரும் திட்டமாட்டினம் தெரியுமோ:)) அதுக்குப் பயந்தே என் உண்மைப் பெயரை வச்சிட்டனே:))

      நீக்கு
    6. இப்பொழுது சமையல் பழகி கொண்டு வருகிறேன்.

      நீக்கு

    7. ஹலோ ஏஞ்சல் & அதிரா கில்லர்ஜிக்கு நீங்கள் சகோவாக இருந்து என்ன புண்ணியம் .... இந்த நேரத்தில் ஒரு பொண்ணு பார்த்து கட்டி வைத்திருக்க வேண்டாமா என்ன? ஹும்ம்ம்ம் சும்மா இருக்காமல் ஒரு நல்ல காரியத்தை ஆரம்பித்து முடித்து வையுங்கள்.. முடிஞ்சால் எனக்கும் ஒரு பொண்ணு சேர்த்து பாருங்க

      நீக்கு
    8. வருக தமிழரே பக்கத்து இலைக்கு பாயாசம் கேட்டது போலிருக்கிறதே...

      நீக்கு
    9. ஹாஆஆஹா ட்ரூத் :) கர்ர்ர்ர்ர் இருங்க மாமிகிட்ட சொல்றேன் ஒரு 10 நாளுக்கு இலை தழை கொடுக்க சொல்லி உங்களுக்கு 

      நீக்கு
    10. நாங்கள் அன்பான பண்பான பாசமான சகோதரிகளாக இருந்தும், ட்றுத் கேட்டபடி ட்றுத்தின் ஆசையை நிறைவேற்றாவிட்டால் சகோதரம் இல்லை.. மகோதரம் என ஆகிடாது:)).. அதனால ட்றுத் க்கு .. ட்றுத்தின் ஆசைப்படி பொம்பிளை ரெடீஈஈஈஈஈ.. மேக்கப் எல்லாம் போட்டு அவ இப்பவே அம்பேரிக்கா வர ரெடியாகிட்டா:)).. உடனே போய்க் கூட்டி வாங்கோ ட்றுத்...:)...

      கில்லர்ஜிக்கு கொரோனா முடியட்டும் பார்த்திடலாம்...

      இது ட்றுத்துக்கு
      https://upload.wikimedia.org/wikipedia/commons/3/3d/Old_Chinese_woman_with_glasses.jpg

      நீக்கு
    11. //கில்லர்ஜிக்கு கொரோனா முடியட்டும்//

      ஏன் எனக்கு எப்போ கொரோனா வந்துச்சு ???

      நீக்கு
  20. ஆஹா இன்று ஆவணித் திங்கள் முதலாம் நாளில் மீண்டும் வலையுலகில் காலெடுத்து வைக்கிறேன்ன்.. அதனால எங்கிருக்கிறேன் என்ன பண்ணுறேன் என்றே தெரியுதில்லையே... இத்தனைக்கும் காரணம் நான் தெரியாமல் ஒருவரை என் “செக்” ஆக வைத்து:)), இப்போ என்னை இருக்க நிற்க விடாமல் ஒரே கலையோ கலையென கலைச்சு விரட்டி மிரட்டிக் களமிறங்க வைத்திருக்கிறா ....

    நான் எந்தப் போஸ்ட்டும் படிக்கவில்லை, பார்க்கக்கூட இல்லை, இது இன்று, கில்லர்ஜியும் கவலையாகப் போஸ்ட் போட்டிருக்கிறார்.. இன்று எப்படியும் கொமெண்ட் போட்டே ஆகோணும் என அஞ்சு மிரட்டிப்போட்டா:)).. சரி அது போகட்டும்.. இனிமேல் தொடர்வோம்.. போஸ்ட்டுக்கு வருகிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அதிரா உகாண்டா பயணம் முடிந்து விட்டதா ?

      இன்று முதல் வலையுலகம் வலம் வரும் உங்களை வரவேற்கிறேன்.

      நீக்கு
    2. அல்லோ கில்லர்ஜி... கொரோனாவால உங்களுக்குப் பழசெல்லாம் மறந்து போச்சுது போல கர்ர்ர்ர்ர்:)).. உகண்டாவுக்கும் எனக்கும் தொடர்பில்லையாக்கும்.. உங்களுக்குத்தான் கொழுந்தியா அங்கிருக்கிறா.. இப்பூடி மறக்கலாமோ அபச்சாரம் அபச்சாரம்....

      நீக்கு
    3. கொரோனா எனக்கு எப்ப வந்தது ? எதுவும் மறக்கவில்லை நான்.

      நீக்கு
    4. ஹா ஹா ஹா ஹையோ ஹையோ இப்பூடியும் ஒரு அர்த்தம் இருக்கோ ஹா ஹா ஹா.. கில்லர்ஜி அனைத்தையும் கோட்டை விட்டிடுங்க ஆனா இப்படியானவற்றை மட்டும் கண்ணுக்குள் விளக்கெண்ணெய் விட்டுக் கண்டு பிடிக்கத் தெரியுது உங்களுக்கு கர்ர்:))..

      கொரோனாக் காலம் முடியட்டும்.. நல்ல காலம் பிறக்கும் அப்போ தேடும் படலத்தை ஆரம்பிச்சிடலாம் என ஜொள்ள வந்தேனாக்கும்:))

      நீக்கு
    5. ஓஹோ அப்படியா ? நான் பயந்துட்டேன்... ஹி.. ஹி.. ஹி..

      நீக்கு
  21. எனக்கு தலைப்பு சரியாப் புரியுதில்லை கில்லர்ஜி:)... அதாவது துயரத்தைத் தாண்டி இன்னும் ஒரு துயரம் இருக்குமோ?:))..

    கொரோனா வந்ததால பல குடும்பங்கள் மகிழ்ச்சியாகக் குதூகலமாகவும், பல குடும்பங்கள் பணமில்லாமல் கஸ்டப்பட்டும், பல குடும்பங்கள் எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாததுபோலவும் உணர்ந்திருக்கிறார்கள்..
    ஆனால் கில்லர்ஜி, உங்களுக்கு இப்படியாயினும் புத்தி புகட்டவே நாட்டில் கொரொனா வந்திருக்குது, இருந்தாலும் கில்லர்ஜி என்னைப்பொறுத்து நீங்க திருந்தவே மாட்டீங்க:)).. 5 இல் வளையாதது 50 இல வளையுமோ என்பினம் அது கரீட்டு:)).. சொந்தப் புத்தி வேணும் இல்லை எனில் சொல்புத்தி கேட்கோணும்.. இதிலயும் நீங்க ஃபெயில்:)).. நல்லாத் திட்டலாம் போல வருது கோபம் எனக்கு தெரியுமோ..

    உங்களுக்கு உங்கட சொந்த பந்தம் உற்றார் உறவினர் பற்றி நன்கு தெரியும், அவர்களால உங்களுக்கு 5 சதப் பிரயோசனம் இல்லை என்பதும் உங்களுக்கு தெரியும், ஆனாலும் நீங்க அந்த வட்டத்தை விட்டு வெளியே வரமாட்டேன் என்கிறீங்க, என் அறிவுக்கு எட்டி- உண்மையில் சொந்த பந்தங்களைத் திட்டினாலும், அவர்களுக்குப் பயந்தே நீங்க உங்கள் வாழ்வை வீணடிக்கிறீங்கள்...

    நீங்கள் இப்படி வர்களுக்குப் பயந்து, குறை சொல்லிடுவார்களே எனப் பயந்து வாழ்வதால மட்டும் உங்களுக்கு ஆரும் சிலை வைக்கப் போவதில்லை...

    கொரொனா வந்தது, இன்னும் உங்களுக்கு இருந்த கொஞ்ச நஞ்ச நப்பாசையை.. அதாவது ஆபத்தில உறவுகள் உதவலாம் என எதிர்பார்த்திருந்திருந்தால்.. அதையும் எதிர்பார்க்காதே எனத் தெளிய வைக்கவே...

    நம்மைக் குறை சொல்லவும் திட்டவும் முன் நிற்கும் இச்சமூகம், நம் துன்பங்களுக்கு நம்மோடு வரவே வராது, வரவும் முடியாது, அதனால இவர்களுக்காக பயந்து உங்கள் வாழ்வை வீணாக்கி கவலைப்பட வேண்டாம்...

    உங்கள் மனதுக்கு என்ன பிடிக்குதோ, எதை மனம் விரும்புதோ, எது சரியெனப் படுதோ.. அதைத் துணிந்து செய்யுங்கோ, மனட்சாட்சிக்கு மட்டுமே நாம் பயப்படோணும்.

    இன்பமும் துன்பமும் உங்கள் சொய்ஸ்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அதிரா இந்த சமூக கௌரவத்துக்காக பயந்து நம்மை நாமே ஏமாற்றி வாழ்வது அவசியமில்லாதது.

      இருப்பினும் எனது காலத்தை வீணாக்கி விட்டேன்.

      நீக்கு
  22. எதுக்குக் கில்லர்ஜி பேத்திக்குக் கடிதம், அவ வளர்ந்து நல்லா வருவா, அப்போ நீங்கள் நேரிலேயே சொல்லலாம்... உங்களுக்கு இன்னும் வயசெல்லாம் ஆகிவிடவில்லை... இக்காலத்தில் 60 ஐக் கடக்கும்போதுதான் இளமையின் விழிம்பில் நிற்கிறார்கள்.. அதனால வயதாகிவிட்டதென பெரிய பேச்செல்லாம் பேசாதிங்கோ.. நீங்கள் இன்னும் ஞானி ஆக பல வருடங்கள் ஆகும்:))

    போன ஜென்மம் என ஒன்று இருந்துதோ இல்லையோ நமக்கது தெரியாது, அடுத்த ஜென்மம் இருக்கோ இல்லையோ அதுவும் தெரியாது, இருந்தாலும் அதனால நமக்கு ஒன்றும் ஆகிவிடப்போவதில்லை, அதனால இந்த ஜென்மம் மட்டுமே நமக்கு தெரிந்து வாழ்கிறோம், இதை நமக்குப் பிடிச்சதைப்போல, மகிழ்ச்சியாக எப்படி வாழ முடியுமோ அப்படி வாழும் வழியைப் பாருங்கோ அதை விட்டுப்போட்டு.. கொரோனாவை விட மோசமாக கவலைப்பட்டு ஒண்ணும் ஆகப்போவதில்லை..

    இன்று சிறீ சிவசம்போ அங்கிள் குடிக்காமல் பேசியிருக்கிறார்:)).. குடிச்சிட்டுப் பேசியிருந்தால் தெளிவாகப் பேசியிருப்பார்:)).. இது குழப்புறார் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. அவரைக் குடிச்சுப்போட்டு வந்து பேசச் சொல்லுங்கோ கில்லர்ஜி:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெயர்த்திக்கு கடிதம் வரும் தேதி பார்த்தீர்களா ?

      ஆமாம் இன்றே நிஜம்.
      நேற்று முடிந்து விட்டது.
      நாளை நிச்சயமில்லை.

      ஹா.. ஹா.. சிவசம்போ குடித்தால்தான் நல்லா பேசுவாரோ...?

      வருகைக்கும் விரிவான கருத்துரைக்கும் நன்றி அதிரா.

      அலைபேசியில் விரிவாக எழுத முடியவில்லை.

      நீக்கு
  23. நான். எதற்கும் கவலைப்படுவதில்லை... இருந்தால் கஞ்சி..தண்ணி இல்லாவிட்டால்..குழாய் தண்ணி.. இப்போது குழாயிலும் தண்ணி வருவதில்லை..அதற்காக வருந்துவது இல்லை... நாட்களை போல..வாழ்க்கையுடன் ஓடிக் கொண்டே இருக்கிறேன்.... துயரத்துக்குள் துயரம்தான்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே ஆம் நடப்பது நடக்கட்டும். இதுதான் வழி.

      நீக்கு
  24. நண்பரே,

    மனம் பாரமாகிறது தங்களின் இந்த பதிவை வாசிக்கும்போது.இறைவனின் அருள் பரிபூரணமாக விளங்கும் என்பதில் திடநம்பிக்கையாய் இருங்கள். இந்த பதிவை வாசிக்கு முன் வரை, எத்தனையோ சுமைகளை மனதில் தாங்கி இருந்தாலும் நீங்கள் எப்போதும் ஒரு ஜாலியான நபர் என்றே நினைத்திருந்தேன். இதுபோன்றதொரு நெகிழ்ச்சியான மனமுருகும் பதிவை நான் உங்களிடமிருந்து கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப்பார்த்து நிம்மதி நாடு எனும் கவிஞரின் வரிகள் தாம் நினைவிற்கு வருகின்றது.

    கவலை மறந்து சந்தோஷமாக வாழ நினைத்தால் வாழலாம், அறிவுரை வழங்குவது சுலபம்தான் அனுபவிப்பவரின் பாரம் அவரவர்களுக்கே புரியும் என்பதும் உண்மைதான். மனம் தளரவேண்டாம். சமையல் ஒரு பெரிய விஷயமே இல்லை.

    கோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே
      தங்களது ஆறுதல் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி.

      நீக்கு

  25. கில்லர்ஜி நீங்கள் மனமுடைந்து போய் இருக்கிறீர்கள் என நினைக்கிறேன்... இந்த பதிவு உங்கள் மனபாரத்தை சிறிது குறைத்து இருக்கும் என நம்புகிறேன்...மனைவி இல்லாமல் இத்தனை ஆண்டுகள் காலம் கழித்து இருக்கிறீர்கள் என்று நினைக்கும் போது நீங்கள் மித தைரியமானவர் என நினைத்து இருந்தேன்... ஆனால் இந்த பதிவை படித்த பின் நீங்கள் மிக வளர்ந்த குழந்தையாகவே இருக்கிறீர்கள்......

    தைரியாமக இருங்கள் இதுவும் எளிதில் கடந்து போகும்...


    சமைப்பத்து மிக எளிது... சில பேசிக் விஷயங்களை கற்று கொண்டால் மிக நன்றாக சமைக்கலாம்... நானும் மனைவியும் கொரோனாவால் பாதித்த போது என் மகள்தான் எங்களுக்கு முதல் முறையாக நான் சொல்ல்வதௌ கேட்டு மிக நன்றாக சமைத்து கொடுத்தாள். அதனால் சொல்லுகிறேன் உங்களாலும் இது முடியும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே
      தங்களின் தைரியமூட்டும் நம்பிக்கையான கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
  26. சோர்ந்து போன மனதை உங்கள் பதிவு தெரிவிக்கிறது. சமைப்பது பெரிய விஷயமில்லை. ஆனால் அதை செய்வதற்கும்கூட மனதில் பிடிப்பும் சுவாரஸ்யமும் வேண்டும். அவை உங்களிடம் வெகுவாக குறைந்து விட்டதைத்தான் உங்கள் பதிவு உணர்த்துகிறது.
    பேசாமல் திரும்பவும் அமீரகம் வந்து விடுங்களேன். நிச்சயம் தன்னம்பிக்கையும் நம்மை மீறிய சுவாரஸ்யங்களும் ஏற்படும். தற்போதைய வாழ்க்கையில் அர்த்தங்கள் இல்லையென்றால் அர்த்தமுள்ள வாழ்க்கையை தேடிக்கொள்ளுங்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது வருகைக்கு நன்றி.
      நண்பர்களும் இதையேதான் சொல்கிறார்கள் அதேநேரம் மீண்டும் அந்த வாழ்க்கையும் சம்பளமும் நினைத்துப் பார்க்கவே இயலாததுதான்.

      அதேநேரம் எனக்கு இன்று பணம் தேவையில்லை உறவுகளை காணாத தனிமை வேண்டும் அதற்காகவாவது கொரோனா முடிவுக்கு வரட்டும் பார்க்கலாம்.

      நீக்கு
  27. நாம்முக்கியமென்று நினைப்பது நம்குழந்தைகள அப்படி நினைக்க வேண்டும் என்பது அவசியமில்லை தாமரை இலைத்தண்ணீராக வாழக்கற்க வேண்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா வறம்பு மீறி பாசம் வைப்பதுதான் பெரிய ஏமாற்றமாக உணர வைக்கிறது.

      நீங்கள் சொல்வதே சரி.

      நீக்கு
  28. கில்லர்ஜி அவர்களே! இதை எழுதியது நீங்களா? மனம் உடைந்து போகாதீர்கள். ‘காலா என் கண்முன்னே வாடா, உன்னைக் காலால் உதைக்கின்றேன்.’ என்றார் பாரதி. அதை நினையுங்கள் .கொரானா என்ன செய்துவிடும் நாம் பாதுகாப்பாக இருந்தால். சமையல் செய்வது ஒன்றும் கம்ப சித்கிரம் அல்ல. இணையத்தில் நுழைந்தால் எத்தனையோ பேர் உங்களுக்கு சமையல் செய்ய கற்றுக்கொடுக்க காத்திருக்கிறார்கள். இல்லையெனில் திடீர் சமையல் செய்ய முன்பே தயாரிக்கப்பட்டு பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் கடையில் கிடைக்கின்றன. அவைகளை வைத்து இந்த கொரானா காலத்தை ஓட்டிவிடலாம். பழையது எதையும் நினைக்காதீர்கள்.நண்பர்களோடு அடிக்கடி உரையாடுங்கள்.

    ‘இதுவும் கடந்துபோகும்’ என எண்ணி தங்களது எழுத்துப் பணியைத்தொடருங்கள். பெயர்த்திக்கு அஞ்சல் எழுதுவது நல்லது தான். அதில் நேர்மறை கருத்தையே சொல்லுங்கள். தங்களது அஞ்சல் அவருக்கு ஒரு உத்வேகத்தைக் கொடுக்கட்டும்.

    தங்களின் அடுத்த பதிவு வழக்கம் போல் இருக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே
      கொரானோ என்ன இதைவிட கொடுமையானது வந்தாலும் நான் பயப்படமாட்டேன். ஒருக்கால் கொரானா வந்தாலும் மகிழ்வாய் ஏற்றுக் கொள்வேன்.

      சமையல் வேலை பழகிகொண்டுதான் வருகிறேன் அதனைக் குறித்த கவலையும் கிடையாது. என்னால் எதையாவது செய்து சாப்பிட முடியும் என்ற நம்பிக்கை கடந்த ஒரு மாதமாக வந்து விட்டது.

      உறவுகளை மறக்கத்தான் நான் கஷ்டப்படுகிறேன். அந்த மறதி கிடைத்து விட்டால் நான் மகிழ்ச்சியான வாழ்வுதான். இப்பொழுது நான் நிறைய எழுதுகிறேன் நண்பரே...

      பெயர்த்திக்கு அறிய வேண்டிய விடயங்களை அஞ்சலாக்கி இருக்கிறேன் அதிலொரு மனநிறைவு அவ்வளவுதான்.

      தங்களது ஆறுதலுக்கு மிக்க நன்றி.

      நீக்கு
  29. உங்களின் இந்த பதிவு படிக்க மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது. எப்போதும் எல்லோரும், கலாய்த்து பதிவு போடும் கில்லர்ஜியா என்று தோன்றுகிறது. தனிமை துயரம்தான். வயதானவர்கள் மற்றவர்களிடம் பரிவையும், பாசத்தையும்தான் எதிர்பார்க்கிறார்கள் என்பது ஏனோ சில இளைஞர்களுக்கு புரிவதில்லை. இதுதான் உலகத்தின் இயல்பு என்று நாம்தான் உணர்ந்து கொள்ள வேண்டும். 
    நிலைமை சீரான பின் பயணங்கள் மேற்கொள்ளுங்கள். புது இடங்களும், புதிய மனிதர்களும் நமக்கு நிறைய கற்றுக் கொடுப்பார்கள். மூச்சுப் பயிற்சி செய்யுங்கள். 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மேடம் தங்களது கருத்துரைக்கு நன்றி. அடுத்த பதிவு நீங்கள் எதிர் பார்த்தபடியே வரும்.

      கொரோனா காலம் முடிந்ததும் வாழ்க்கையை மாற்றிக் கொள்ளணும்.

      2020-க்குள் கொரோனா போய் விட்டால் நல்லது.

      நீக்கு
  30. மிகவும் வேதனையாக இருக்கிறது. மனதை திடப்படுத்தி நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்வோம். எழுத்தும் ஒரு மருந்துதான் மனதிற்கு. எழுதிக் கொண்டே இருங்கள். வாசிப்பதற்கு என்று உங்களுக்கு இருக்கும் வாசகர் வட்டம் உங்கள் மனதிற்கு ஆறுதல் கொடுக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக கவிஞரே...
      தங்களது கருத்துரை மகிழ்ச்சி அளிக்கிறது. ஆறுதலுக்கு மிக்க நன்றி

      நீக்கு
  31. மனம் சற்று அதிகமாக கனத்துவிட்டது நண்பரே. நாங்கள் இருக்கிறோம். உங்களின் எண்ணங்களைப் பகிர்ந்து மனதின் பாரத்தைக் குறைந்துக்கொள்ளுங்கள். நேர்மறை எண்ணங்கள் என்றும் நல்ல நிலைக்கு இட்டுச்செல்லும். உங்களின் எழுத்தும் வாசிப்பும் உங்களுக்குத் துணை நிற்கும். தொடர்ந்து எழுதுங்கள். வாசியுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவர் அவர்களின் வருகைக்கும், தன்நம்பிக்கையூட்டும் கருத்துரையை தந்தமைக்கும் நன்றி. ஆம் இப்பொழுது நிறைய வாசிக்கிறேன், எழுதுகிறேன்.

      நீக்கு
  32. பதிவு மனதை கனக்க வைத்து விட்டது. உங்கள் குடும்பவிவரங்கள் தெரியவில்லை, ஏன் தனிமை படுத்த பட்டீர்கள் இப்படி ஒதுக்க (ஓதுங்க அவசியம் என்ன என்று தெரியவில்லை.
    அம்மா கூட இருந்தார்களே இப்போது இல்லையா?

    தேவகோட்டையில் சமையல் செய்து தர வயதானவர்கள், ஆண்கள், பெண்கள் கிடைப்பார்களே அவர்களை வீட்டில் சமைத்து தர சொல்லலாம்.

    மனம் தளராமல் இருங்கள்.

    நமக்கு இப்போது தேவை ஆறுதலான பேச்சு, நம்மை எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்கும் அன்பு சொந்தங்கள், நட்புக்கள் . உங்களிடம் உண்மையான பாசம் வைத்து இருக்கும் சொந்தம், நட்பு இருப்பார்கள் அவர்களிடம் மனம் விட்டு பேசுங்கள்.

    நீங்கள் நல்ல படிப்பாளி, சமையலை கற்றுக் கொள்ள ஒன்றும் கஷ்டமே இல்லை. மற்ற வேலைகளுக்கு ஆட்கள் வைத்துக் கொள்ளுங்கள்.

    இரணடு நாளாக எப்படி இந்த பதிவை பார்க்காமல் விட்டேன் என்று தெரியவில்லை.
    என் வாழ்க்கை முறையும் மாறி இருக்கிறது. மாலை எல்லாம் கூட்டு பிரார்த்தனை செய்து வருகிறோம்.என் பழைய தோழிகளுடன். கொரோனா பயத்தால் உறவுகள், நட்புகள் யாரும் வீட்டுக்கு வருவது இல்லை, நாங்களும் போவது இல்லை. தொலைக்காட்சி, இறைவழிபாடு, படங்கள், பாட்டுக்கள் கேட்பது என்று போகிறது.

    குழந்தைகளிடம் பேசுங்கள் அவர்கள் பேசவில்லை என்றாலும் நீங்கள் பேசுங்கள் . பேத்தியிடம் தினம் பேசுங்கள்.

    தைரியமாக இருங்கள். வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ
      அம்மா தற்போது சகோதரர் வீட்டில். நான் இந்தியாவுக்கு நிரந்தரமாக வந்த பிறகுதான் உறவுகளின் உண்மை முகம் தெரிகிறது.

      நான் இயன்றவரை எழுத முனைகிறேன், மேலும் சமையல் செய்து சாப்பிடுகிறேன்.

      //பேத்தியிடம் தினம் பேசுங்கள்//

      ஹா... ஹா... இதற்கு என்ன பதில் சொல்வது ? என்று எனக்கு தெரியவில்லை.

      நீக்கு
  33. போனில் கூட்டுப்பிரார்த்தனை.
    நட்புகள், சொந்தங்கள் இறந்து இருக்கிறார்கள் அதற்கு போக முடியவில்லை, தம்பி மகளுக்கு வளைகாப்பு அதற்கு போக முடியவில்லை, தங்கை வீட்டில் பண்டிகை அழைப்புகள் வரலெட்சுமி , பிள்ளையார் கொலு என்று
    இரண்டு மூன்று திருமணங்கள் எதற்கும் போக முடியவில்லை. வீட்டில் அடைந்து கிடப்பதே மனதுக்கு வருத்தம் தரும் அதிலும் தனிமை கொடுமை. இந்த மாதிரி எந்த நோயும் வீட்டுக்குள் முடக்கவில்லை மனிதர்களை.
    இயற்கை வேறு சில இடங்களில் தன் ஆட்டத்தை ஆரம்பித்து இருக்கிறது.

    சீக்கீரம் நம்மை விட்டு இந்த கொரோனா கடந்து போகும். குழந்தைகளை போய் பார்த்து வாருங்கள். பெண் குழந்தை இருக்கிறார்கள் அல்லவா அவர்களும் உங்களிடம் பேச மாட்டார்களா?

    நான் இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன் உங்களுக்கு மன ஆறுதல் கிடைக்க வேண்டும் என்று.

    இரண்டு மூன்று தினங்களுக்கு முன் எனக்கு சில மனகஷ்டங்கள் நானும் கொஞ்சம் மனம் உடைந்து அழுதேன்.

    இறைவன் மேல் கொண்டுள்ள பக்தி, எல்லாம் நல்லபடியாக நம்மை வழி நடத்தி செல்வார், நடந்தவைகளுக்கு நாம் பொறுப்பு அல்ல இறைவன் விருப்பம் அதுதான் என்று ஏற்றுக் கொண்டு மன ஆறுதல் அடைக்கிறேன்.

    பறவைகளை பார்த்து நான் வைத்து இருக்கும் செடி கொடிகளைப்பார்த்து பொழுதை போக்குகிறேன் கவலை வரும் போது.

    தைரியமாக இருங்கள் . நல்லதே நடக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நானும் மூன்று மரணங்கள், இரண்டு திருமணங்களுக்கு செல்லவில்லை. மேலும் சகோதரர் மகளுக்கு பிறந்த குழந்தையை இரண்டு மாதங்களாக பார்க்ககூடாதாம் மருத்துவர்கள் உத்தரவு. இதோ இன்றுதான் பெயர் வைத்தார்கள் பார்த்து வந்தேன்.

      தங்களது பிரார்த்தனைகளுக்கு மனம் நெகிழ்ந்த நன்றி.

      கொரோனா இவ்வருடத்துக்குள் உலகை விட்டு வெளியேறி விடுமென்று நம்புவோம். இறையே வழி. மீண்டும் நன்றி.

      நீக்கு
  34. கலங்க வேண்டாம் ஜி...

    காலம் எல்லாவற்றுக்கும் ஒரு பதிலை வைத்திருக்கும்...

    மேய்வதற்குச் செல்லும் மாடு
    புல்லைத் தலையில் கட்டிக் கொண்டு செல்வதில்லை...

    உலகம் அறிந்த நீங்கள் உள்ளத்தைக் காயப் படுத்திக் கொள்ளவேண்டாம்...

    வரும் நாளெல்லாம் நலம் தரும் நாளே.. என்று கருதுங்கள்...

    எல்லாம் மாறும் ஒருநாள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி
      தங்களது ஆறுதல் மொழிகளுக்கு மிக்க நன்றி

      நம்பிக்கைதான் வாழ்க்கை

      நீக்கு