தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், ஆகஸ்ட் 31, 2020

நவீன பட்டினத்தார்


செல்வந்தர்களே...
சமூகத்தில்,
குடும்பத்தில்,
உறவுகளிடத்தில்,
தொழிலாளர்களிடத்தில்,
அரசியல்வாதிகளிடத்தில்,
பொது மேடைகளில்,
ஆலய தரிசனத்தில்,
கோவில் திருவிழாக்களில்,

உங்களுக்கு கிடைக்கும் மரியாதை அது உமக்காக கிடைத்தது அல்ல உமது செல்வத்திற்காக கொடுக்கப்படும் போலியான மரியாதை. உமக்கு ஐயமிருந்தால் எல்லாவற்றையும் ஓர் முறையாவது இழந்து பட்டினத்தார் போல் வாழ்ந்து பார் உண்மைகள் புரியும்.

ChavasRegal சிவசம்போ-
இவரு பேச்சைக் கேட்டு மைக் டெஸ்டிங் செய்தா கையில் இருக்கிற வெண்ணையை இழந்துட்டு தொன்னையை நக்கணும் போலயே...

44 கருத்துகள்:

 1. அது பட்டினத்தார் அல்லவா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மன்னிக்கவும் மாற்றி விட்டேன் நண்பரே...

   நீக்கு
 2. எங்குமே நமக்குக் கிடைக்கும் மரியாதை, நம்மிடம் இருக்கும் செல்வத்துக்கு, அதிகாரத்துக்கு மற்றும் நல்ல பண்புக்குத்தான். நல்ல பண்பு இல்லாமல் மற்ற இரண்டும் இருந்தால், வெளியே கூழைக்கும்பிடு போடுவாங்க. நல்ல பண்பும் இருந்தால், நமக்குப் பின்னாலும் (நாம் இல்லாதபோதும்) மரியாதையா பேசுவாங்க.

  வெறும் பண்பு மட்டும் இருந்தால் - நம்மை ரொம்பத் தெரிந்தவர்கள் மட்டும் மரியாதை தருவாங்க. ஆபீஸில் வெறும் பண்புக்காக மரியாதைலாம் கிடைக்காது.

  இன்னொண்ணு கில்லர்ஜி.. நம்மிடம் இல்லாதது ஒருத்தரிடம் இருந்தால்தான் அதற்காக மரியாதை தருவாங்க. எப்போ நம்மிடம் இருந்து இவை போகிறதோ, அப்பவே நமக்கான மரியாதையும் போய்விடும்.

  அது இருக்கட்டும்..இன்றைக்கு ஏன் இந்தச் சிந்தனை?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே விரிவான அழகான கருத்துரை தந்தமைக்கு நன்றி.
   நேற்றிரவு குடுகுடுப்பைக்காரர் வந்து தனிமை உறக்கத்தை எழுப்பி விட்டு, மனதையும் குழப்பி விட்டு போய் விட்டார்.

   கடந்த பதிவுக்கு வரவில்லையே....

   நீக்கு
 3. தீட்டு ஆகிவிடும் என்பது நோட்டுகளில் (பணத்தில்) மட்டும் இல்லை ஜி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி உண்மையான வார்த்தை சொன்னீர்கள்.

   நீக்கு
 4. வித்தாரமும் கடம்பும் வேண்டாம் - மட நெஞ்சே
  செத்தாரைப் போலத் திரி...

  (இருந்தாலும் இல்லாவிட்டாலும்) புகழும் பெரும் பேச்சும் (உனக்கு) வேண்டாம் - மட நெஞ்சமே...
  - என்பதுவும் பட்டினத்தார் அருள் வாக்கு தான்..

  முதலிரண்டு வரிகள் கழிவிரக்கம்.. அவலம்..
  ஈற்றடிகள் இரண்டையும் சொல்லியிருக்கிறேன்.

  நல்லவர் சிந்தனைக்கு விருந்தானவை..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி
   பட்டினத்தாரின் பாடங்களை தந்தமைக்கு நன்றி

   நீக்கு
 5. கருத்து கந்தசாமி : எந்த செல்வந்தர் கில்லெர்ஜீ பதிவைப் படிக்கிறார்?  என்னமோ தெரியாத உண்மை போல சொல்வது.

   Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்ககூடத்தான் செல்வந்தர் மற்றும் சொல்வேந்தர் எனது பதிவுக்கு வருவதில்லையா ?

   நீக்கு
 6. கல்லானே யானாலுங் கைப்பொருளொன் றுண்டாயின்
  எல்லாருஞ் சென்றங்கு எதிர்கொள்வர்-இல்லானை
  இல்லாளும் வேண்டாள்மற்று ஈன்றெடுத்த தாய்வேணடாள்
  செல்லாது அவன்வாயிற் சொல்.

  என்று ஔவைப்பாட்டி நல்வழியிலேயே சொல்லியிருக்கிறாரே. எனவே பணமில்லாவிடில் பிணத்திற்கு சமம் என்பது உண்மையே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே ஔவையின் மொழிகளை அறிய தந்தமைக்கு நன்றி.

   நீக்கு
 7. ஜாமக்கோடங்கிகளைத் தெரியுமா கில்லர்ஜி? அர்த்தராத்திரியில் வந்து பலன் சொல்லுவார்கள். குடுகுடுப்பைச் சத்தம் கேட்டாலே தாய்மார்கள் பயந்து நடுங்குவார்கள். அவர்கள் வாக்குப் பலிக்கும் என்பதில் அத்தனை நம்பிக்கை.

  அவர்கள் எப்போதோ காணாமல் போய்விட்டார்கள். குடுகுடுப்பக்காரர்கள்கூட வருவதில்லையே.

  செல்வந்தர்கள் படிக்க வேண்டிய பதிவு இது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் நண்பரே கோடாங்கி மனதை குழப்பி விட்டார். ஏற்கனவே வாழ்வு தெள்ளுமணியாய் இருக்கிறது அதில் இவர்கள் வேறு...

   வருகைக்கு நன்றி நண்பரே.

   நீக்கு
 8. வணக்கம் சகோதரரே

  நல்ல பதிவு. யதார்த்தமான எக்காலத்திற்கும் பொருந்தும் பதிவு. பணத்திற்கென்று ஒரு புகழ் உண்டு. அந்த புகழுக்கு ஒரு மதிப்பு மரியாதை உண்டு. அதனால்தான் "பணமென்றால் பிணமும் வாய் திறக்கும்.." என்ற சொல் வந்தது. அதீத செல்வமும் ஒரு பாவமே..! ஆனால் அனைவருக்கும் பட்டினத்தார் ஆகிவிடும் தகுதி வேண்டாமா? அவரின் நிலை உணர்ந்து செல்வத்தை நல்ல வழியில் (தர்மத்திற்கு) செலவு செய்கிறரோ அவர் பட்டினத்தாரின் கால் தூசியில் ஒரு துளியை அடைந்த நல்லறப்புகழைப் பெற்றவராவார். அதற்கும் ஒரு கொடுப்பினை வேண்டும். அருமையான உண்மை நிலையினை உணர்த்திய பதிவுக்கு மனமார்ந்த நன்றிகள்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ
   தங்களது விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.

   நீக்கு
 9. ஞானத்தங்கமே!
  இன்னும் வேற ஏதாவது இருக்கா?

  பதிலளிநீக்கு
 10. அன்பு தேவகோட்டை ஜி.
  இன்னமும் குடுகுடுப்பாய்க்காரர்கள் இருக்கிறார்களா.
  எங்கள் ஊரில் மாட்டுப் பொங்கலன்று தான் வருவார்கள்.

  முன்பு ஏதாவது சொல்லிவிட்டு அடுத்த நாள் வந்து
  பணம் கேட்பார்கள்.
  எனக்கு அவர்களைப் பார்க்கும் போதே நடுக்கம் வரும்.
  நீங்கள் கவலை கொள்ள வேண்டாம்.

  உங்களுக்குத் தேவையானதைப் பத்திரமாக
  வைத்துக் கொண்டு இறைவனை நினையுங்கள்.
  இல்லானை மதிக்காமல் இருந்தவர்கள் உண்டு,
  மதித்துக் காத்தவர்களும் உண்டு.

  நன்மை நிகழட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அம்மா குடுகுடுப்பைகள் இப்பொழுதும் வருகிறார்கள்.
   தங்களது வருகைக்கு நன்றி.

   நீக்கு
 11. வழக்கம்போல யதார்த்தத்தை அருமையாகப் பகிர்ந்துள்ளீர்கள். படத்திலுள்ள குடுகுடுப்பைக்காரர் நீங்களோ என நினைத்தேன், மீசையைப் பார்த்ததும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா.. ஹா.. நல்லவேளை நினைத்ததோடு சரி, நான் என்று சொல்லவில்லை.

   நீக்கு
 12. பட்டினத்தார் பற்றிய ஒரு கதைஒரு முறை அவர் வயலொன்றின் வரப்பில் தலை வைத்துப் படுத்திருந்தாராம் வரப்பில் நடந்து சென்ற இரு பெண்களில் ஒருத்தி ‘யாரோ மகான், களைப்போடு படுத்திருக்கிறார் ‘என்று கூறி வணங்கிச் சென்றாளாம். கூடவே வந்த இன்னொருத்தி ‘ இவர் பெரிய மகானா.?தலையணை வைத்துத் தூங்கும் சுகம் வேண்டி வரப்பைத் தலையணையாக வைத்திருப்பவரையா மகான் என்கிறாய்’ என்று கூறினாளாம். அவர்கள் சென்றதும் வரப்பிலிருந்து தலையை கீழே வைத்துப் படுத்துகொண்டாராம். சிறிது நேரத்தில் அதே வழியில் திரும்பி வந்த அவ்விரு பெண்களுள் முதலானவள் ‘பார் வரப்பை விட்டுக் கீழே படுத்திருக்கிறார் ‘என்றாள். அதற்கு இரண்டாமள் “ தன்னைப் பற்றி யார் என்னவெல்லாம் பேசுகிறார்களென்று தெரிந்து கொள்வதில் பற்று வைத்திருக்கிறாரே” என்று கூறினாள் ஞான விளக்கம் பெற இன்னும் நிறைய இருக்கிறது என்று பட்டினத்தார் தெரிந்து கொள்ள இச்சம்பவமும் எடுத்துக்காட்டாகக் கூறப் படுகிறது.
  /

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா பட்டினத்தார் கதையை நினைவு கூர்ந்தது அருமை.

   ஒரு விசயத்தை பல கோணங்களில் கருதலாம் என்பதற்கு எடுத்து காட்டு இக்கதை.

   நீக்கு
 13. பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்பது நிரூபிக்கப்பட்ட, உண்மைதானே தோழரே. இருந்தாலும் நெல்லைத்தமிழன் கூறியிருப்பது போல் பண்பு இல்லாத செல்வத்திற்கு கொடுக்கப் படும் மரியாதை போலியானது என்பதை அவர்களே  ஒரு கட்டத்தில் உணருவார்கள்.      

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தங்களது கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

   நீக்கு
 14. ஒரு கழுதை மீது கடவுள் சிலையை வைத்து ஊர்வலமாக எடுத்துச் சென்றார்களாம். செல்லும் வழியெல்லாம் மக்கள் வந்து அதை வணங்குவதை பார்த்த கழுதை, ஆஹா! என்னை எல்லோரும் வணங்குகின்றார்கள் என்று கர்வத்தோடு தலையை  நிமிர்த்திச் கொஞ்சம் தாறுமாறாக நடக்க ஆரம்பித்ததாம். உடனே அந்த கழுதையின் எஜமானன் தன்  கையில் வைத்திருந்த தடியால் அதன் மண்டையில் ஒரு போடு போட்டானாம், உடனே அது சரியாகியதாம். ஒருவனின்  அழகு, அறிவு, திறமைகள், போன்றவைகளுக்காக அளிக்கப்படும் மரியாதை  உண்மையில்  அவரிடம் உள்ள இறைத்தன்மைக்  காகத்தான் வழங்கப்படுகின்றன என்பதை வலியுறுத்த சொல்லப்படும் கதை இது.  உங்கள் பதிவை படித்ததும் எனக்கு இந்த கதை நினைவுக்கு வந்தது. செல்வமும் இறையம்சம்தானே?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பொருத்தமான கதையை நினைவு கூர்ந்து சொன்னமைக்கு நன்றி மேடம்.

   நீக்கு
 15. யதார்த்தம்.

  பட்டினத்தாராக இருந்து பார் - ரொம்ப கஷ்டம் கில்லர்ஜி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி உண்மைதான் வருகைக்கு நன்றி.

   நீக்கு
 16. பட்டினத்தார் முற்றும் துறந்தவர். அவர் மாதிரி எல்லோராலும் இருக்க முடியுமா? கஷ்டம் தான். செல்வம் இருந்தால் தான் மதிப்பார்கள் என்பதை என் வாழ்க்கையிலேயே நான் பலமுறை நெருங்கிய உறவுகளிலேயே கண்டிருக்கிறேன். நம்மை நமக்காக மதிப்பவர் குறைவே! நல்லதொரு கருத்து.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.

   நீக்கு
 17. குடுகுடுப்பை இன்னமும் வருகிறார் என்பது ஆச்சரியத்தைத் தருகிறது. என் மாமனார், கணவர் இருவருக்கும் அவங்க சொல்லில் ஓர் மயக்கம். தெருவில் வந்தாலே போதும், கூப்பிட்டு வைத்துப் பேசிக் கேள்விகள் கேட்டு பதில்கள் பெற்றுக் கொள்வார்கள். இதில் வாடிக்கையாக மூவர் வருவதுண்டு. துணி வாங்காமல் போக மாட்டார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் குடுகுடுப்பைக்காரர்கள் இப்பொழுதும் வருகிறார்கள்.

   நீக்கு
  2. அப்படியா? கம்பள நாயக்கர்கள் என்னும் இவர்களைப் பற்றிச் சில குறிப்புக்கள் சேகரித்து வைத்திருந்தேன். தேடிப் பார்க்கணும். ஜக்கம்மா இவர்கள் குலதெய்வம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே! ஆனாலும் அவர்கள் வழிபாடு, குறி சொல்லுவது, வழக்கங்கள், எப்படிக் குறி சொல்கிறார்கள், அவற்றில் நல்லதும், கெட்டதும் கலந்து இருந்தாலும் சிலர் ஜாடையாகச் சொல்லிச் செல்வார்கள். இதை எல்லாம் பற்றிப் படித்துத் தெரிந்து கொண்டு சேர்த்து வைத்திருந்தேன். இவர்கள் அதிகாலையில் வந்து சொல்லுவதே பலிக்கும் என்பார்கள். யார் வீட்டுக்கு நல்ல சொல் சொன்னார்களோ அங்கு மட்டும் போய் மறுநாள் காசோ, பணமோ,துணியோவாங்குவார்களாம். இவர்களைப் பற்றிய பல கதைகள் உலா வரும்.

   நீக்கு
  3. வருக ஜக்கம்மாபற்றி சொல்லவும் எனக்கு பழைய ஞாபகம் வருகிறது எட்டு வயது இருக்கும்போது கம்பளத்தாள் மண்டையை உடைத்து விட்டேன்.

   அதன் விடயத்தை பதிவாக எழுதுகிறேன்...

   நீக்கு
 18. இனிமேல் குடுகுடுப்பைக் காரரைக் கண்டால் ஸ்கொட்லாண்டுக்கு அனுப்பி விடுங்கோ கில்லர்ஜி:)... எனக்கும் அவர்களிடம் வாக்குக் கேட்க ஆசை...:)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரைட்டு நம்ம உகாண்டா குடுகுடுப்பையை அனுப்பி வைக்கட்டுமா ?

   நீக்கு
 19. பட்டினத்தார் எல்லாவற்றையும் ஆண்டு அனுபவித்த பின்னால்தானே ஞானியா ஆனார் என்று அறிவர்கள் சொல்லக் கேள்வி!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அளவுக்கு மிஞ்சியதால் அமிர்தமும் நஞ்சாக போயிருக்கலாமோ... ?

   நீக்கு
 20. யதார்த்தமான பதிவு நண்பரே.ஆரிய கூத்தாடினாலும் தாண்டவகோனே காசு காரியத்தில் கண் வையடா தாண்டவகோனே என்ற வரிகள் நினைவுக்கு வருகின்றன நண்பரே.

  பதிலளிநீக்கு