தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், ஏப்ரல் 06, 2021

அறியாமையே வெல்லும்

மீபத்தில் மனிதன் என்ற திரைப்படத்தை சிறிது நேரம் தொலைக்காட்சியில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் படத்தின் கசா'நாயகன் உதயநிதி ஸ்டாலின் நீதிமன்றத்தில் வழக்கில் தோற்று விட்டு தான் தங்கி இருக்கும் குடியிருப்பு பகுதிக்கு வருகிறார். அப்பொழுது மழை வருகிறது அதில் வீடில்லாத ஏழைகள் குழந்தை, குட்டிகளுடன் குடைகூட இல்லாமல் பாத்திரங்களை தலையில் வைத்து மழையிலிருந்து நனையாமல் சற்றே தங்களை பாதுகாக்கிறார்கள்.

இதைக்கண்ட கசா'நாயகன் அவர்களது வாழ்க்கையை கண்டு கலங்குகிறார். இதெல்லாம் தமிழ்ப்படத்தில் வழக்கம் போல் இருக்கும் காட்சிகள்தான் என்று என்னால் கடந்து போக முடியவில்லை. காரணம் படத்தின் கசா'நாயகனுக்கு நிச்சயமாக ஏழைகளின் கஷ்டம் தெரிய வாய்ப்பே இல்லை இன்னும் சொல்லப் போனால் ஸ்டாலினுக்கே ஏழைகளின் வாழ்க்கை தெரியாது ஆனால் இவர்களின் மூலம் திமுக முதலாளி மு.கருணாநிதி அவர்களுக்கு தெரியும் அவர் அடிப்படை வாழ்விலிருந்து வந்தவர் இவர்கள் இருவரும் பிறந்தது முதலே ராஜவாழ்க்கைதான்.
 
நான் எதற்காக திரைப்படத்தையும், அரசியல்வாதிகளின் நிகழ்கால வாழ்க்கையையும் ஒப்பீடு செய்கிறேன் என்றால் நல்லவன் என்று சொல்லும் தகுதி இல்லாதவர்களைத்தான் நாம் ஆதிமுதல் உத்தமபுத்திரனாக சித்தரிப்பதை நம்பியே தமிழகத்தை இந்த இழிநிலைக்கு கொண்டு வந்து விட்டோம். இவர்களின் குடும்பம் தமிழகத்தின் மூன்றாவது பணக்காரர்கள் உலக அளவில் அசையா சொத்துகள் இருக்கின்றது இப்படிப்பட்டவர்கள் இன்னும் தமிழகத்தை ஆள்வதற்கு நினைக்கின்றார்கள் இந்த கொரோனாவில் மக்கள் கஷ்டப்படும் நிலையிலாவது கொட்டி வைத்து இருக்கும் பணத்தை சிறு துளியாவது கொடுத்து இருக்கலாமே... நேற்று வந்த நடிகர் சிவகார்த்திகேயன் பல லட்சங்கள் நிவாரணநிதி கொடுத்ததாக செய்திகள் வருகின்றன.
 
இப்படித்தான் நிழலுக்கும், நிஜத்துக்கும் வித்தியாசம் அறிந்திடாமல் வாழ்ந்து விட்டோம். திரைப்படத்தில் எம்ஜிஆர் நல்லவன் நம்பியார் கெட்டவன் தமிழக தாய்மார்கள் மட்டுமல்ல பெரும்பாலான ஆண்களும் இதைத்தானே நம்பினார்கள் நிஜ வாழ்வில் நம்பியார் நல்ல பக்திமான் அப்பழுக்கற்ற மாமனிதர்.
 
அவர் கற்பழிப்பு காட்சிகளில் ஏராளமாக நடித்திருந்தாலும் எந்த நடிகையாலும் குற்றம் சுமத்தப்படாதவர் நாம் எப்பொழுதுமே நிழலையே போற்றுகிறோம் உண்மையை கூர்ந்து நோக்கும் ஆற்றல் நமக்கே இல்லை. இனி நமக்கு பிறக்கும் சந்ததிகளுக்கா இருக்கப் போகிறது எம்ஜிஆரால் பலன் அடைந்தவர்கள் தாராளம் ஆனால் அவரால் வாழ்வை இழந்தவர்கள் ஏராளம் தன்னை எதிர்ப்பவர்களை ஒழித்து விடுவதே அவரது கொள்கைகளில் முதன்மையானது சந்திரபாபு, எஸ்.ஏ.அசோகன், விஜயகுமார், ரஜினிகாந்த் இவர்களுக்கு ஏற்பட்ட இன்னல்கள் நிழலை ரசிப்பவர்களுக்கு தெரியாது.
 
சிவாதாமஸ்அலி-
உலகம் அழியும்வரை தமிழன் திராவிடக்கட்சிகளை கை விடமாட்டான்.

30 கருத்துகள்:

  1. உண்மை.  ஆனால் எம் ஜி ஆரின் ஹிட் லிஸ்ட்டில் அசோகன் இல்லை என்றே நினைக்கிறேன்.  அவர் என்றுமே எம் ஜி ஆரின் ஆள்.  நேற்று இன்று நாளை படம் தோல்வி அடைந்தது விதி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி நேற்று இன்று நாளை படத்திற்கு செட்டிங் போட்டு பல நாட்கள் எம்ஜார் ஸூட்டிங் வராமல் இழுத்ததடித்ததில் அசோகனுக்கு பல்லாயிரங்கள் நஷ்டம். இதையெல்லாம் நீங்களும், நானும் மறக்கலாம் அசோகன் குடும்பம் மறக்காது.

      நீக்கு
  2. நானும் பல முறை யோசித்தது உண்டு கலைஞ்ர் குடும்பம் தாங்கள் சம்பாதித்ததில் கொஞ்சத்தையாவது தமிழ்நாட்டில் முதலீடு செய்து சிறு சிறு தொழிற்சாலைகளை அல்லது தொழிலில் இன்வெஸ்ட்மென்ட் பண்ணி மக்களுக்கு அல்லது அவர்களது கட்சி ஆட்களுக்காகவது வேலை வாய்ப்பை பண்ணிக் கொடுத்து அவர்களையும் வாழ வைத்து தாங்களும் வாழ வைத்து இருக்கலாம் என்று.. ஹும்ம் அப்படி எல்லாம் அவர்கள் இன்றுமட்டுமல்ல என்றுமே செய்யமாட்டர்கள் என்பதுதான் உண்மை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே ஒருவருக்கு உதவ வேண்டும் என்பது ரத்தத்தில் ஊறி வரவேண்டும்.

      இது பாரம்பரிய பரம்பரை விடயம். பிறரை கெடுத்து வாழ்வதும் இப்படித்தான்.

      நீக்கு

  3. நல்லவனாக வேஷம் போடும் யாவரும் நல்லவர்கள் இல்லை கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதை தமிழக மக்கள் உணர்ந்து இருந்தால் இன்று தமிழகம் கூத்தாடிகள் கையில் அல்லோலப்படுமா ?

      குஷ்புகூட தமிழகத்தில் போட்டியிட முடிகிறதே... தமிழனுக்கு இது இழிவு இல்லையா ?

      நீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    உண்மை. அருமையான கருத்தை பதிவாக்கி உள்ளீர்கள். கண்டிப்பாக நிழலுக்கும், நிஜத்திற்கும் வித்தியாசங்கள் உண்டு. இதை மக்கள்தான் உணர்ந்து கொள்ள வேண்டும். வேறு என்ன சொல்வது... தலைப்பிற்கு பொருத்தமான படமும் நன்று. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ பதிவை உணர்ந்து படித்து கருத்திட்டமைக்கு நன்றி.

      நீக்கு
  5. நிழல் நிஜம் இல்லைதான்.
    நம்பி வாக்கு அளித்தவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் யார் வந்தாலும் என்றுதான் பிரார்த்தனை செய்ய தோன்றுகிறது , வேறு என்ன சொல்வது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.

      நீக்கு
  6. காமராசர் ஆட்சி பொற்காலம்...

    MGR ஆட்சி அமைப்போம் என்பதெல்லாம்...?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி கலிகாலம்தானோ ? வருகைக்கு நன்றி

      நீக்கு
  7. கொரோனா பாதிப்புக்கு ஸ்டாலின் குடும்பம் நிறையவே கொடுத்திருக்க வேண்டும். உங்கள் குற்றச்சாட்டு மிகச் சரியானதே.

    அரசியலில் கோலோச்சுபவர்கள் அயோக்கியர்களே. நல்ல மனம் கொண்டவர்களை விசாரித்து அறிந்து ஆதரிக்கும் நல்ல மனம் நம் மக்களுக்கும் இல்லை.சமுதாய நலம் குறித்துச் சிந்திக்க முயலாத...விரும்பாத சுயநலவாதிகள்தான் இங்கே அதிகம்.

    இதனால்தான் நல்ல அரசியல்வாதிகள் உருவாவது சாத்தியப்படவில்லை.

    அரசியல் களம் ஆரோக்கியமாக இல்லை என்பதால் வாக்களிக்காமல் நாம் ஒதுங்கியிருக்கவும் முடியாது...கூடாது.

    எவன் குறைவாக அயோக்கியத்தனம் செய்திருக்கறான் என்பதையும் எந்தக் கட்சி குறைந்த அளவிலான அயோக்கியர்களைக் கொண்டிருக்கிறது என்பதையும் அறிந்து(இது எளிதான செயல் அல்ல) வாக்களிப்பதைத் தவிர வேறு வழியில்லை.

    என்னைப் பொருத்தவரை, நான் வாக்களிக்கும் கட்சித் தலைவர்களிடம்(அயோக்கியர்கள் ஆயினும்) ஓரளவுக்கேனும் இனப் பற்றும் மொழிப் பற்றும் இருக்குமெனில் அந்தக் கட்சி வேட்பாளருக்கு வாக்களிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன்.

    தமிழினத்துக்கென்று தன்னிகரில்லாதவொரு தலைவன் இல்லையே என்று மனம் நொந்து வருந்துவதும் எனக்கு வழக்கமாகிப்போன ஒன்றுதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது அரசியல் அலசல் கருத்து அருமை.

      எல்லா மக்களுக்கும் இப்படி புரிந்துணர்வு வந்து விட்டால் மக்கள் இப்படி அவலப்பட வேண்டிய அவசியமில்லை.

      தங்களது விரிவான கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

      நீக்கு
  8. "இவருடைய பொற்கால ஆட்சியைத் தருகிறோம்" என்று எந்தக் கட்சியாலும் சொல்ல முடிந்தால், அப்புறம் அவர் பொற்கால ஆட்சியைத்தான் தந்துள்ளார் என்று நம்பவேண்டும். அப்படிச் சொல்ல இயலவில்லை என்றால் அவர் நல்லவரில்லை. அவ்ளோதான்.

    எம்ஜிஆருக்கு இன்றைக்கும் மக்களிடையே செல்வாக்கு இருக்கிறது. தனக்குக் கெடுதல் செய்தவர்களுக்கும் அவர் நல்லது செய்திருக்கிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே சரிதான்.

      எம்.ஜி.ஆர் இறந்த பிறகும் அவரது ஆட்சிதான் நடக்கிறது என்று சொல்லும் அறியாமைவாதிகள் இன்னும் உண்டுதான்.

      தங்களின் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  9. தமிழக மக்களை நினைத்தால் ஏற்படும் வருத்தம் கொஞ்ச நஞ்சம் இல்லை.
    மீண்டும் மீண்டும் திரை மாயையில் சிக்குகிறார்களே
    என்று கலங்குகிறது.

    அசோகன் பற்றிப் படித்திருக்கிறேன். சந்திரபாபு கதையும் அவ்வாறே.
    மற்றவர்கள் பற்றி அவ்வளவு தெரியாது.

    நல்லவன் வாழ்ந்தான் என்று சொல்லியே ஓட்டு சேகரிப்பவன் அவன் நல்லவனா
    என்று யார் கணிப்பது.
    எல்லோருமே கோடிகளில் புரள் பவர்கள்.
    மணல் கொள்ளை அடித்தவர்கள்.
    நீரைக் கெடுத்தவர்கள்.

    இறைவன் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறான்.
    நல்லதொரு பதிவுக்கு நன்றி மா.
    நலமுடன் இருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அம்மா பதிவை விரிவாக அலசி கருத்திட்டமைக்கு நன்றி.

      நீக்கு
  10. வேதனை தான் மிஞ்சுகிறது. நடிகர்கள் மீதான மோகம், போலி அரசியல்வாதிகள் மீதான மோகம் என்று பல வகைகளில் மோகம் கொண்டு அலைகிறது நம் தமிழகம். விடிவு தான் இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி விடிவு அடுத்த தலைமுறைக்காவது கிடைக்கட்டும்.

      நீக்கு
  11. என்ன சொன்னாலும் திருந்தாத தமிழகம்! அதுக்கு மேல் என்ன சொல்வது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.

      நீக்கு
  12. சரியான கருத்துக்கள்! ஒரு பெண்ணுக்கு திருமணம் நடத்த வேண்டுமென்றால் பத்தாயிரம் அல்லது பதினைந்தாயிரம் இருந்தால்தான் நடத்த முடியும் என்று சுடாலின் பேசினார். அவர் குறிப்பிட்ட தொகைக்கு புடவை கூட வாங்க முடியாது என்ரு அவருக்த் தெரியவில்லை. அந்த அளவிற்கு நாட்டு நடப்பு அறிவு. இவர்களையெல்லாம் தேர்ந்தெடுத்தால் நம்  கதி என்னவாகும்? 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மேடம் இதை கட்சியின் அடிமைகள் உணர வேண்டும். என்ன செய்வது ?

      நீக்கு
  13. கருனாநிதி குடும்பத்தி பேசியஅளவுக்கு மற்றவர்களைப்பற்றி...அதாவது நாட்டையே அதானிக்கும் அம்பானிக்கும கொடுப்பவர்களைப்பற்றியோ. சாதிவெறி ராமதாசை பற்றியோ. ஆட்சியை தக்க வைக்க முயலும் இரண்டு அடிமைகளை ப்பற்றியோ யாரும் பேசவில்லையே ஏன்?...இது ஓரவஞ்சனையாக தெரிகிறது.. இன்றைக்கு மதவெறி பாசிசம். சாதிவெறி பாசிசம் பற்றி எல்லாம்.. நண்பர்க்கும் வலைதளத்தில் வலம் வரும் அதிகம் பேருக்கு தெரிந்திருக்கவில்லை...திமுகவை ஊழல் கட்சி என்கிறார்கள். . ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட ஜெயில் ஜெயலலிதாவை போல் கருனாநிதி எத்தனை ஊழல் வழக்கில் தண்டிக்க பட்டிருக்கிறார். இன்றைக்கு இருக்கின்ற கட்சிகளில் மொழிபற்றும் இனப்பற்றும் கொஞ்சமாவது கொண்ட கட்சி என்றால் அது திமுக தான் என்பது எனது கணிப்பு நண்பரே! இப்படி நிறைய சொல்லலாம்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே நான் என்றுமே கட்சி பாகுபாடின்றிதான் எனது கருத்தை முன் வைக்கிறேன்.

      கழுதை விட்டையில் முன் விட்டை வேறு, பின் விட்டை வேறு ஆகுமா ?

      நீக்கு
  14. திரையுலகு மீதான மோகம் வேதனையினைத்தான் தருகிறது நண்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது கருத்துக்கு நன்றி

      நீக்கு
  15. வணக்கம் ஜி,
    நல்லவர்களை உதாரணம் புருஷர்களாக அதாவது காமராஜர்,ஜீவானந்தம் போன்றவர்களை மேற்கோள் காட்டி பேசுவதே நகைச்சுவையானது என்ற மனநிலைக்கு மக்களை கொண்டு வந்து நிறுத்திவிட்டார்கள்.இப்போது நடக்கும் கொள்ளையின் அளவு எந்த எல்லையிலும் தெரிவதில்லை. மகாத்மா காந்தி கூட மோசமானவர் என்று பேச ஒரு தரமற்ற கூட்டம் பணத்தை பெற்றுக்கொண்டு தூற்றுகிறது.தரமற்ற அரசியல் கொள்ளையர்கள் ஒட்டுக்கு பெரும் தொகையை கொடுத்து மக்களை தரம் அற்றவர்கள் ஆக்கிவிட்டார்கள்.இந்த மனசாட்சி அற்ற தமிழகத்தின் முதல் அரசியல் விதை அய்யா கருணாநிதி தான். யார் வந்து மாற்றுவார்களோ. கடவுள் கன் திறக்கட்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெயர் அறியா நண்பரின் வருகைக்கு வந்தனம்.

      மாற்றம் மக்கள் மனதில் எழணும் நண்பரே... ஓட்டுக்கு பணம் கொடுத்தான் என்பதில் குறை காணும் சமூகம், வாங்கியது தவறுதானே என்று சிந்திக்கவில்லையே... விரிவான கருந்துரை தந்தமைக்கு நன்றி

      நீக்கு