வணக்கம் நட்பூக்களே.... இது எனது
விழியில் பூத்த நான்காவது பதிவு இவைகள் இணையத்திலோ, அல்லது பிறருடைய தளங்களிலோ
எடுத்து நான் தரவில்லை இதில் வழக்கம்போல எனது மாற்றங்களையோ, திருத்தங்களையோ (Edit) செய்யவும் இல்லை எமது திருநாமத்தை மட்டும் இதயம்
நல்லெண்ணையில் பொறித்து இருப்பேன் காரணம் வரலாறு முக்கியம். இவைகளை ரசித்தால் ? ? ? கருத்து மழை பொழியலாம் அன்பன் - கில்லர்ஜி
வாருங்கள்
ரசிப்போம்...
நட்பூக்களே...
ரசித்தீர்களா ? முந்தைய
பதிவுகள் இதோ - ஒன்று இரண்டு மூன்று
மாறி வரும் பக்தி மார்க்கம்
(இடம்: பரமக்குடி)
உலகிலேயே இரண்டாவது பெரிய பள்ளி
(இடம்: அபுதாபி)
கந்தனைக்காண கால் நடையாக...
(இடம்: செம்பட்டி)
மின்சார இணைப்புகளோடு செல்லும் பேருந்து
(இடம்: ஸ்விட்சர்லாண்ட்)
மனவளச்சி குன்றிய நல்உள்ளங்களை சந்தித்தபோது...
(இடம்: மதுரை)
உலக அதிசயத்தின் உயரம் பார்த்தேன்
(இடம்: ஃப்ரான்ஸ்)
பாழடைந்த கோயிலின் கொட்டாரம்
(இடம்: அக்ரமேசி)
மூன்று முடுதாறுகளின் அணி வகுப்பு
(இடம்: துபாய்)
அரோகரா சொல்லிய மனோகரா
(இடம்: தேவகோட்டை)
கண்ணீரில் வரைந்த கோலங்கள்
(இடம்: ஜெர்மனி பெர்லின்)
வித வித படங்கள் நீங்கள் சென்ற ஊர்களைப் பறைசாற்றுகின்றன. அருமை
பதிலளிநீக்குவருக தமிழரே நன்றி.
நீக்குதமிழ்வாணன் பெயரைப் பார்த்ததும் எனக்கு உங்கள் மகன் நினைவு வந்தது. அவரது வீடு கோயமுத்தூரிலல்லவா என்று யோசித்தேன். குளிர் கண்ணாடியைப் பார்த்ததும்தான் இது எழுத்தாளர் என்று புரிந்தது
பதிலளிநீக்குஹா.. ஹா.. தேவகோட்டையிலும் வீடு இருக்கிறதே...
நீக்குநானும்தான், தேவகோட்டை வீட்டின் பெயரை, மகன் பெயருக்கு மாற்றி விட்டீங்களோ என யோசித்தேன்:))
நீக்குநானும் ஒரு செகண்ட் டவுட் :) பட்டேன்
நீக்குஎனக்கும் வந்ததது.
நீக்குஹா.. ஹா.. இன்றைய சூழலில் அப்படி எழுதினால் நான் தெருவில் நிற்க வேண்டியது வரும்.
நீக்குபடங்கள் எல்லாம் அருமை.
பதிலளிநீக்குநன்றாக எடுத்து இருக்கிறீர்கள்.
வருக சகோ மிக்க நன்றி.
நீக்குஅனைத்து படங்களும் அருமை ஜி... ஆத்தாடி எத்தனை ஊர்கள்...!
பதிலளிநீக்குவாங்க ஜி வருகைக்கு நன்றி
நீக்குஅழகான படங்கள். நீங்கள் பயணித்திருக்கும் நாடு/ஊர்களின் ஒரு மாதிரி பட்டியல் நன்று!
பதிலளிநீக்குதொடரட்டும் படங்களும், பயணங்களும்.
வாங்க ஜி தங்களின் கருத்துரைக்கு நன்றி.
நீக்குஅற்புதம்...குப்பைமேட்டில் நகைக்கடை.👌👌👌👌
பதிலளிநீக்குவருக கவிஞரே நன்றி.
நீக்குபடங்கள் அருமை
பதிலளிநீக்குநன்றி நண்பரே...
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஎல்லா படங்களும் அழகாக உள்ளது. அதற்கு பொருத்தமான வாசகங்கள் சிறப்பு. அனைத்து ஊரையும் சுற்றி வந்த உணர்வு எனக்கும் வந்தது.
மலைப் பாறைகளுக்கு நடுவில் பயமின்றி அமர்ந்திருக்கும் சிறுவன் அழகாக போஸ் தருகிறார். பழங்களின் கைவண்ணம் நன்றாக உள்ளது. குப்பைமேட்டின் நடுவில் நகைக்கடை.. வாசகம் சிரிப்பை வரவழைத்தது.
மாமலைகளின் நடுவே எனது மடு என்று அடக்கமாக நீங்கள் சொல்லும் போதும் தங்கள் வளர்ச்சிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.வாழ்த்துகள். மற்ற அனைத்துமே அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வருக சகோ
நீக்குபடங்களை இரசித்து விரிவாக கருத்துரை வழங்கியமைக்கு நன்றி.
கொழும்புப் படங்களும் இருக்கே, மூன்று கப்பல்களையும் பார்த்ததும், அதீஸ் ஆறோ என நினைச்சிட்டேன்ன்:))
பதிலளிநீக்குவாங்க அதிரா நீங்க கப்பல் வச்சு இருக்கீங்களா ?
நீக்குவிழியில பூத்தால் அது கற்றரக் ஆமே:)) ஹா ஹா ஹா..
பதிலளிநீக்குபுத்தகமாகவும் வெளியிட்டிருக்கிறீங்களோ? ஈ புக் மட்டும்தானே வெளியிடுறீங்கள் என நினைச்சேன்.. சூப்பர் வாழ்த்துக்கள்.. எனக்கு ஒவ்வொன்று அனுப்பி விடுங்கோ.. பணம் என் செக் தருவா...
பணம் எனக்கு செக்காகவே அனுப்பி விடுவீர்களா ? மகிழ்ச்சி.
நீக்குபுலியால் எனவும் ஒரு இடம் இருக்கோ?
பதிலளிநீக்குஅது எந்த ஊரணி?:))
படங்கள் அனைத்தும் அழகு... ஆனா ஒன்று படங்களை இங்கு XL இல் போட்டால் இன்னும் அழகாக இருக்கும் கில்லர்ஜி... ஏனெனில் ஒவ்வொன்றாக பெரிசாக்கி ஆரும் பார்க்க மாட்டினம், ஸ்கிறீனில் பார்க்கும்போது பெரிசாக இருந்தால் இன்னும் அழகு.
ஊரணி புலியாலில் இருக்கிறது.
நீக்குஅதிரா இருபது படம் வெளியிடுவதால் நீங்கள் சொன்னபடி செய்தால் பதிவு நீளமாக போய் விடும்.
தங்களது வருகைக்கு நன்றி
எல்லா படங்களும் அழகு .ஜாய் ஆலுக்காஸ் எந்த இடத்தில் விளம்பரத்தை நட்டிருக்காங்க :))மதுரையில் நல் உள்ளங்களோடு எடுத்த படம் மனதை தொட்டது
பதிலளிநீக்குவருக ஏஞ்சல் படங்களை இரசித்தமைக்கு நன்றி.
நீக்குஎத்தனை ஊர்களுக்குச் சென்றிருக்கிறீர்கள்... அம்மாடி.. எல்லாமே ரசிக்கத்தக்க படங்கள்.
பதிலளிநீக்குவாங்க ஜி ரசித்தமைக்கு நன்றி
நீக்குமிக மிக அருமையான படங்கள்.
பதிலளிநீக்குஉலகெங்கும் போய் வந்த இடங்கள் மிக அழகு.
ஸ்விஸ்ஸின் ரைன் ஃபால்ஸும்,
ஜெர்மையின் பழக்காட்சியும்,குழந்தை
மலைப் பாறையில் அமர்ந்திருக்கும் காட்சியும்
மிக அற்புதம்.
தமிழ்வாணன் தேவகோட்டைக்காரரா.
அதுவே தெரியாது.
தங்கள் புத்தகமும் கண்காட்சியில் இருப்பது
மிகப் பெருமை.
வாழ்த்துகள் ஜி.எங்கள் ஊருக்கும்
தொற்று முடிந்ததும் வாருங்கள்.
தொற்றா? அப்படியா? சீக்கிரம் முற்றிலும் குணமாக பிரார்த்திக்கிறேன் ஜி.
நீக்குவாங்க அம்மா படங்களை ரசித்து எழுதியமைக்கும், புத்தகத்தை வாழ்த்தியமைக்கும் நன்றி.
நீக்குஸ்ரீராம்ஜி தொற்று எனக்கல்ல ஹா.. ஹா.. ஹா..
நீக்குபொதுவாக சொல்லி இருக்கிறார்கள்
ஓ... மன்னிக்கவும் ஜி. எங்கள் உறவுகளும், நண்பர்களும் அடுத்தடுத்து பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். எனவே சட்டென அப்படிக் கேட்டு விட்டேன். மன்னிக்கவும்.
நீக்குபரவாயில்லை ஜி நான் மரணத்தை நேசிப்பவன்தான் வருத்தம் வேண்டாம்.
நீக்குஇதுவும் நகைச்சுவைதான்.
உங்களின் அச்சு வடிவ நூல் மிக்க மகிழ்ச்சி தந்தது.
பதிலளிநீக்குஅரிய சிறந்த நூல்களைத் தேர்வு செய்து வாசித்திருக்கிறீர்கள். மிகப் பல நாடுகளுக்குப் பயணித்திருக்கிறீர்கள். வாசிப்பும் பயண அனுபவமும்தான் உங்களை நல்ல எழுத்தாளராகவும் ஆக்கியிருக்கிறது.
இன்னும் இன்னும் வாசியுங்கள். மேலும் மேலும் பயணம் மேற்கொள்ளுங்கள். எழுதுங்கள். உங்களின் எழுத்தின் தரம் கூடும். உங்கள் எதிர்காலம் சிறக்கும்.
வாழ்த்துகள் கில்லர்ஜி.
வருக நண்பரே எனது நூல் கண்டு மகிழ்ந்ததில் மகிழ்ச்சி
நீக்குஅழகிய கருத்துரைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி.
எங்களை உலகம் முழுவதும் அழைத்துச் சென்றுவிட்டீர்கள். மிகவும் சிறப்பு. மகிழ்ச்சி. வாழ்த்துகள்.
பதிலளிநீக்குவருக முனைவரே தங்களது வருகைக்கு நன்றி.
நீக்குஎல்லாமே பார்க்காத இடங்கள். அருமையான தொகுப்பு. தமிழ்வாணன் தேவகோட்டையா? காரைக்குடினு நினைச்சுட்டு இருந்தேனே!
பதிலளிநீக்குவருக சகோ அறிவாளிகள் ஊர் தேவகோட்டையாகத்தானே இருக்க முடியும்.
நீக்குகுளுமையான படங்கள்! கருத்துகள்!!
பதிலளிநீக்குவருக நண்பரே மிக்க நன்றி.
நீக்குதமிழ்வாணன் இல்லம் மேல் இருக்கும் படமும் தாங்கள் குறிப்பிட்ட கிரைம் எழுத்தாளர் இல்லம் என்பதை பார்த்தவுடன் சட்டென்று எனக்கு புரிந்து விட்டது நண்பரே! இப்படியான தங்களது விழியில் பூத்தவற்றை பதிவிடுங்கள் நண்பரே! சோர்ந்து போன எனக்கு புத்துணர்வு ஏற்படட்டும்..
பதிலளிநீக்குவருக நண்பரே இனி தொடர்ந்து டானிக் கொடுப்போம்.
நீக்குஉலகத்தை சுற்றி காட்டிய உங்களுக்கு நன்றி.
பதிலளிநீக்குநல்ல உள்ளங்களை சந்தித்து படம் பகிர்ந்தது நெகிழ வைக்கிறது நண்பரே
வருக நண்பரே அவர்கள் நல்ல உள்ளங்கள் என்பது நூறு சதவீதம் உண்மையே காரணம் மூளை வளர்ச்சி இல்லாததே...
நீக்கு