தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, மே 09, 2021

வருங்கால முதல்வரே...

வணக்கம் நட்பூக்களே... ஒரு திரைப்படம் மாபெரும் வெற்றி பெறுகிறது என்றால் அதன் வெற்றிக்காக ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உழைத்து இருக்கின்றார்கள். அவர்கள் யார்... யார் ? பிரம்மன் என்று சொல்லப்படும் தயாரிப்பாளர் அதாவது அனைவருக்கும் சம்பளம் கொடுக்கும் முதலாளி இவர்கள் இல்லையெனில் திரையுலகமே இல்லை.

அதாவது இயக்குனர், கதாசிரியர், வசனகர்த்தா, ஒளிப்பதிவாளர், ஒலிப்பதிவாளர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், பாடகர்கள், பாடகிகள், ஒப்பனையாளர்கள் இன்னும் எத்தனையோ தொழிநுற்ப வல்லுனர்கள், லைட்பாய் உள்பட, மேலும் உலக்கை நாயகன், சுப்புசாறு, எலைய தலவிதி, தலை, காலு இந்த மாதிரியானவர்களுக்கு வாழ்க்கையே கிடையாது. இவர்கள் அனைவருமே முழுமையான தொழில் பக்தியோடு உழைத்துதான் படம் வெற்றி பெறுகிறது. படம் வெற்றி பெற்றால் தயாரிப்பாளர் முதலீட்டை எடுத்து விடுவார், சந்தோஷமாக அடுத்த படத்துக்கு பூஜை போடுவார்.

இல்லையெனில் மனைவி வீட்டில் பூசை போடுவார் காரணம் வீடு,தோட்டம், நகைகள் எல்லாமே இந்தப்படத்தை நம்பித்தானே உள்ளே இருக்கிறது. இதில் மற்றவர்கள் எல்லோரும் உழைப்பிற்கான ஊதியத்தை பெற்று விடுகிறார்கள். தயாரிப்பாளர் மட்டும் வயிற்றில் கொரோனாவை கட்டிக்கொண்டு இருப்பார். படம் வெற்றியடைந்த பிறகு எல்லா தொழிலாளர்களும் அடுத்தடுத்த படங்களுக்கு வழக்கம் போலவே சம்பளம் பெறுவார்கள். ஒரு சில இயக்குனர் வேண்டுமானால் தனது ஊதியத்தை உயர்த்த வழியுண்டு.

ஆனால் கசாநாயகன் என்றவருக்கு மட்டும் சட்டென சம்பளம் உயர்ந்து விடுகிறது இது எவ்வகையில் நியாயம் ? இவனுகளை இந்த ரசிகர்கள் என்ற பட்டதாரி அறியாமைகள் தூக்கி வைத்து கொண்டாடுகின்றனர். அடேய் முடுமைகளா... உங்களது அபிமான நடிகர் திறமைசாலிதான் எதை மையமாக வைத்து நடிக்கிறான் ? அவனை தனியாக சாலையில் நின்று நடிக்கச்சொல் பார்க்கலாம் தயாரிப்பாளர்கள் இல்லையெனில் நாட்டில் தியேட்டர்களே கிடையாது. நமக்கு பொழுது போக்கை தருவதற்காக கோடிக்கணக்கில் முதலீடு செய்யும் தயாரிப்பாளர்களே... முன்னோடிகள்.

கதாசிரியர் தனது மூளையில் உதித்த கதையை எழுத, பாடலாசிரியர் பாடல் எழுத, இசையமைப்பாளர்கள் இசையை மீட்ட, பாடகர்கள் அற்புதமாக பாட, இயக்குனர் நல்ல விதமாக இயக்கிட, நாயகியும் தாராளமாக நடித்திட நாயகனும் நன்றாக நடித்திட்டான் என்று வைத்துக் கொள்வோமே... படம் வெற்றி பெற்றவுடன் கசாநாயகனை மட்டும் வருங்கால முதல்வரே என்று அழைப்பது அறிவீனம் இல்லையா ?

வெளிநாட்டு மனிதர்களைப் பார்த்து முடி வெட்டிக் கொள்கிறீர்கள், உடையணிந்து கொள்கிறீர்கள், பெண்கள்கூட நைட்டி போட்டு பழகிக் கொண்டீர்கள், ஆனால் அவர்கள் இரவில் போட்டுக் கொண்ட நைட்டியை நீங்கள் டூட்டிக்கும் போடுகின்றீர்கள் என்பது வேறு விடயம். ஏண்டா கூதரைகளா ? ஸ்டண்ட் நடிகர்கள் உயிரைப் பணயம் வைத்து நடித்திட கசாநாயகனை பாராட்டுகின்றீர்களே... இது மூடத்தனம் இல்லையாடா... அவர்கள் உண்மையானவனை ஆதரிப்பார்கள் ஆகவேதான் ஸ்டண்ட் நடிகர்களாக வந்த புரூஸ் லீ மற்றும் ஜாக்கிஷான் போன்றவர்களை நாயகர்களாக அங்கீகாரம் கொடுத்து ஏற்றுக் கொண்டார்கள்.

நம்மில் தமிழ் மொழியறிவே இல்லாத டப்பிங் வாய்ஸுக்கு நடிப்பவனே அதிகம் தமிழ்ப்படத்தில் கசாநாயகனாக வலம் வருகிறான். நமக்காக எல்லையில் உயிரைக் கொடுத்து நாட்டைக் காக்கும் இராணுவவீரர்களே உண்மையான நாயகர்கள். நாட்டில் புயல், பெருமழை வந்தால் அவர்கள்தான் வந்து மீட்கிறார்கள், பூகம்பம் வந்தால் அவர்கள்தான் வந்து நம்மை காக்கிறார்கள், பெருங்கொண்ட விபத்து நேர்ந்தால் அவர்கள்தான் வந்து மீட்கின்றார்கள், அரசியல்வாதிகளால் கலவரம் மூண்டால் அவர்கள் வந்துதான் நம்மை காப்பாற்றுகிறார்கள், கொரோனா தீநுண்மி வந்தபோதும் அவர்களே நம்மை பாதுகாத்தார்கள்.

திரைப்படக் கூத்தாடி வீராவசனம் பேசியதெல்லாம் திரைப்படத்தில்தான் யதார்த்த வாழ்வில் ஜன்னலைத் திறந்து வைத்து பார்ப்பான், மற்றவன் கேட்டையே திறக்க மாட்டான். ஆனால் முதல்வர் பதவி மட்டும் வேண்டும். கூதரைகளே இனிமேலாவது மனிதனை மனிதனாக மட்டுமே பாருங்கள். கூத்தாடி நமக்கு பொழுதை போக்குவதற்காக வந்தவன்தான். அவன் கடவுளின் அவதாரமல்ல நம்மைப் போல் உணவருந்தி மலம் கழிப்பவனே...

சாநாயகன் முதல்வராக வரக்கூடாது என்பது எனது வாதமல்ல, ஆனால் அவன் நல்லவனாக நடித்தான் என்பதற்காக வரவேண்டும் என்று நினைப்பது அறியாமை. நல்ல கருத்தை திரைப்படத்தில் சொன்ன இயக்குனர்களை, பாடலாசிரியர்களை, துணிந்து பணத்தை இறக்கிய தயாரிப்பாளரை அரசியலுக்கு வருவதற்கு முதலில் ஆதரித்து பழகு. நல்லவன் வரட்டும் நல்லவனாக நடித்தவன் வேண்டாம். தமிழகத்தை மட்டுமல்ல, நமது கலாச்சாரத்தை மட்டுமல்ல, நமது பண்பாட்டை மட்டுமல்ல, நாளைய நமது சந்ததிகளையும் காப்பாற்று. வாழ்க தமிழ் அகம்.


சிவாதாமஸ்அலி-

குன்னக்குடிக்கு அன்னக்காவடி எடுத்தாலும் மாற்றம் வராது அடுத்த சந்ததிக்கு இதைவிட நாற்றம் வரும் காரணம் சூழ்நிலை அப்படித்தான் இருக்கு.

34 கருத்துகள்:

  1. நிழல் வேறு, நிஜம் வேறு என்பதை சாட்டையடியாக சொல்லி உள்ளீர்கள் ஜி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி படித்த பாமரனுக்கு விளங்கவில்லையே...

      நீக்கு
  2. காலண்டர் செய்தி மிக சரியாகத்தான் இருக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே கடந்த வருடத்து காலண்டர் பொன்மொழிகள் பொய்ப்பதில்லை.

      நீக்கு
  3. தொலைநோக்குப் பார்வை!  ஒரு தொழிலைச் செய்யும்போதே, அந்தத்தொழிலில் நஷ்டம் வந்தால் என்ன செய்வது என்று அடுத்த தொழிலையும் யோசிப்பது மனித இயல்பு.  இங்கு சம்பாதித்து விட்டு அடுத்து அரசியலுக்கு ஆசைப்படுகிறார்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஜி உண்மையில் நாட்டைக் காப்பாற்றியவர்கள் ஓய்வு பெற்று செக்யூரிட்டியாக வேலை செய்து நாதாரிகளுக்கு சல்யூட் வைப்பது மனதை கனக்க வைக்கிறது ஜி

      காப்பாற்றுவதுபோல் நடித்தவன் முதல்வராக ஆசைப்படுகிறான்.

      ஓய்வு பெற்ற இராணுவ வீரர்களே தேர்தலில் போட்டியிட சட்டம் இயற்ற வேண்டும்.

      நீக்கு
  4. நன்றாக அலசியுள்ளீர்கள் நண்பரே. அதே சமயம் சமீபத்திய தேர்தலில் மரண அடி வாங்கிய ஒரு புதிய கட்சியை மையத்தில் வைத்து அடித்த மாரி இருக்கே. உண்மையா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே அப்படி மட்டுமல்ல எக்காலமும் இது பொருத்தமாகிறதுதான் தமிழகத்தின் சாபக்கேடு.

      நீக்கு
  5. நல்ல அலசல். எல்லாமே உண்மை. ஆனாலும் நடிகர்கள் பின்னால் தான் நம் மக்கள் ஓடுவார்கள். அவங்களுக்கு இந்த மோகம் விடுவதே இல்லை. தானாகவும் திருந்த மாட்டார்கள். சொன்னாலும் கேட்டுக் கொள்ள மாட்டார்கள். நேற்று ஒரே நாளில் டாஸ்மாக் விற்பனை கிட்டத்தட்ட 500 கோடியைத் தொட்டிருக்கிறது. இதற்குப் பணம் இருக்கும் சாமானியர்களை இலவசங்களை அள்ளி வீசிக் கெடுக்கின்றனர் அரசியல்வாதிகள். மக்கள் திருந்தும் வழியே இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ
      எத்தனையோ இலவசங்களை சொல்லும் கட்சிகள் டாஸ்மாக்கை மூடுவோம் என்று சொல்ல வில்லையே...

      தமிழன் வீரபரம்பரை என்று சொல்வது கேலிக்கூத்தானது. குடிகார மட்டைகள்.

      நீக்கு
  6. //நல்லவன் வரட்டும். நல்லவனாக நடித்தவன் வேண்டாம்//

    வரவேற்கத்தக்க கருத்து.

    நல்லவனாகப் படத்தில் நடிப்பவன் மட்டுமல்ல, நடைமுறை வாழ்வில் நடிப்பவனும்கூட வேண்டாம். சரிதானே கில்லர்ஜி?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே ஆம் உண்மைதான்

      இன்று நடிகர்களைவிட அற்புதமாக நடிக்கின்றார்கள் அரசியல் வியாதிகள். வருகைக்கு நன்றி

      நீக்கு
  7. தங்களின் ஆதங்கம் புரிகிறது நண்பரே

    பதிலளிநீக்கு
  8. ஆதங்கம் தான். நம் மக்கள் இன்னும் இப்படியான நடிகர்கள் பின்னால் ஓடிக் கொண்டிருப்பது வேதனை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி தங்களின் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  9. //கசாநாயகனுக்கு சம்பளம் சட்னு உயர்ந்துடுது// - படத்தில் நடித்த முக்கியமானவர்கள் எல்லாருக்கும்தான். அது ஒரு பிஸினெஸ் இல்லையா? படமே ஊத்திக்கிச்சுன்னா, அவன் கேரியரும் பாதிப்படையும் இல்லையா?

    இந்தத் தேர்தலிலேயே பாருங்க... கசாயம் நிறுத்திய ஆட்களுக்கு டெபாசிட்டே வந்திருக்காது, ஆனால் உலக்கைக்கு நிறைய வாக்கு விழுந்தது. அவருமே, தன் பெண்ணைக் கூப்பிட்டு கோயமுத்தூர்ல ஆடவைத்தார் இல்லையா, அதிக வாக்கு வரும்னுட்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே
      யாரு சகாயமா ? மகளை ஆடவைத்தாரா ? இது எனக்கு புதிய செய்தி ஆக மொத்தம் வடை போச்சே ?

      நீக்கு
    2. உலக்கை, பெண்ணையும் பிரச்சாரத்துக்குக் கூட்டிப்பொனார். அவங்க ஆடினாங்கன்னு படத்தோட செய்தி வந்ததே.

      சகாயம், சாம்பிள் பார்க்க இருபது வேட்பாளர்களை நிறுத்தினார்.

      நீக்கு
    3. சகாயம் வேவு பார்த்து இருக்கிறார் தமிழக மக்களைப்பற்றி அவருக்கு நன்றாகவே தெரியும்.

      நீக்கு
  10. வணக்கம் சகோதரரே

    நல்ல அலசலான பதிவு. உங்கள் மன ஆதங்கங்கள் விரிவான அலசலுக்கு வழி வகுத்துள்ளது.ஆனால், நம் நாட்டு மக்கள் திரைப்பட வசனங்களை உண்மை என நம்புகிறார்களே... இந்நிலை மாறி, சினிமாவை அது ஒரு கலை என்பதாக மட்டும் தத்தம் பார்வையோடு மட்டும் பார்க்க கற்று கொண்டால், சினிமா கலையும் சிறப்புறும். நாடும் நன்றாக இருக்கும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ
      அழகான கருத்துரையை விரிவாக பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

      நீக்கு
  11. என்ன கில்லர்ஜி ஏதாவது ஒரு வகையில தொழில் பார்த்து கறுப்பு எல்லாம் வெளில வந்துதானே ஆகணுமில்லையா!!!!!? இதுக்குப் போயி புலம்புறீங்களே!!!! நீங்க எம்புட்டு புலம்பினாலும் மக்கள் செவிடன் காதில் சங்கு ஊதினாப்போலதான்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக மூச்சு உள்ளவரை ஊதுவோம் பிறகு இறைவன் விட்ட வழி.

      நீக்கு
  12. நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி நாடே இருக்குது தம்பி
    பழைய பாடல். சினிமாக்காரர்களை நம்ப வேண்டாம்.
    அரசியலிலேயே வேடம் கட்டி கோடி சம்பாதித்தவர்களை
    மட்டும் எப்படி நம்புவது. !!!!!
    ஆக மொத்தம் பலிகடாவாகவே இருந்து பழகி விட்டது
    மக்கள் குணம். எதையும் மறக்கடிக்க இருக்கவே இருக்கு டாஸ்மாக்.
    வேதனை ஐயா. நன்றி தேவகோட்டைஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அம்மா டாஸ்மாக்கால் மக்களின் சிந்தனை மழுங்கடிக்கப்படுகிறது என்ன செய்வது ?

      நீக்கு
  13. பதிவு சொல்லும் விஷயங்கள் அருமை.
    வேதாத்திரி மகரிஷி அவர்கள் பகிர்வு அருமை.
    நம்மால் கவலைபட்டு புலம்ப மட்டுமே முடியும்.
    மாற்றம் வந்தால் நல்லதுதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது கருத்தை பகிர்வு செய்தமைக்கு நன்றி.

      நீக்கு
  14. உங்கள் ஆதங்கத்தை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். சினிமாவில் டூப் போடுவதற்கு ஆட்கள் உண்டு என்று தெரியாத காலத்தில் கதாநாயகனை கும்பிட்டது சரி. இன்றோ, டூப்பைத் தாண்டி, கிராஃபிக்ஸ் வேறு வந்து விட்டது, அவையெல்லாம் குழந்தைகளுக்கும் தெரியும், ஆனாலும், நடிகர்கள் பின்னால் போகும் அவலம் ஏன் என்று தெரியவில்லை. 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மேடம் இதுவும் விஞ்ஞான வளர்ச்சிதான். மதியிருந்தும் மூடர்கள்.

      நீக்கு
  15. மேட்டர் ஓகே ஆனால் இன்னுமா2019 ம் வருட தினசரி காலண்டரைத் தூக்கி ஏரியாம இருக்கீங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மேடம் காலண்டர் பழமையானாலும் பொன்மொழி பொருத்தம்தானே ?

      நீக்கு
  16. நல்ல அலசல் பதிவு நண்பர. முடுமைகள் , கூதரைகள் போன்ற சொற்களுக்கான விளக்கம் தேவை.

    தங்களை போன்ற நல்லவர்களும் , படித்தவர்களும் , பண்புள்ளோரும் அரசியலுக்கு வர தயங்கும்போதுதான் இதுபோன்ற விபரீதங்கள் தலைவிரித்தாடுகின்றன, என்ன செய்வது... தமிழகத்தின் தலை எழுத்து தங்கள் எழுத்தின்மூலம் மாறவேண்டும் என்பது என் விருப்பம்.

    நானும் 1987 ஆம் ஆண்டு திரை துறையில் நுழைந்திருக்க வேண்டியவன், நல்ல வேலை அப்படி நடக்கவில்லை; இல்லை என்றால் முதல்வர் எனும் பெரும் பாரத்தை - பொறுப்பை சுமந்திருக்கக்கூடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லவேளை நண்பரே நீங்கள் கூத்தாடியாகவில்லை. நண்பராகவே தொடருங்கள்...

      நீக்கு