தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், மே 27, 2021

பதினாறாய் மூன்றும்...

01-16

மாலையில் மலர்ந்து விடும் நிலவே

காலையில் மறைந்து போவது எங்கே

சாலையில் நடந்து செல்லும் மலரே

சோலையில் பாடிச்செல்லும் குயிலே

சேலையில் மறைத்து இருப்பது என்ன

ஓலையில் நான் எழுதிய கவியை

மூலையில் வீசி விட்டது முறையோ

ஆலையில் வேலை செய்வதால்தானோ

வலையில் விழுந்து விடாதே பெண்ணே

விலையில் ஏற்றம் இருக்கலாம் கண்ணே

தலையில் கனமில்லை என்பதை கனியே

சிலையில் செதுக்கி விடவா மணியே

கலையில் மனம் செலுத்து ரதியே

மலையில் கோவிலில் சந்திக்கலாம்

பாலையில் மண்ணில் வாடினாலும்

அலையில் மிதந்து வருவேன் உன்னிடம்.

 

02-16

களை எடுக்கும் கருவிழி கண்ணே

காளை என்னை மறுக்காதே பெண்ணே

ஆளை கருப்பு என்று நினைக்காதே

நாளை சிவப்பாவேன் என்பதை மறக்காதே

பாளை எனது ஊரென்பது அறிந்துகொள்

வாளை பிடித்து சுழற்றும் வீரன் நான்

மூளை எனக்கு சுறுசுறுப்பானதே

முளை தொடங்கி இருப்பதுதானே

கிளை ஒடிந்த மரமாய் நானிருந்தாலும்

தோளை கொடுப்பது நீயாய் இருப்பாய்

தேளை விரட்டியடித்த போதும் நாமே

துளை இட்ட மாங்கனியாய் இருப்போமே

வளை-த்து என்னை போடுவாய் நீயே

திளை-த்து வாழ்வோம் மகிழ்வாய் நாமே

இளை-த்து போனாலும் நானே கண்ணே

சளை-த்து விடமாட்டேன் பெண்ணே

 

03-16

ஏழையாய் இருக்கிறேன் என்று ஒதுக்காதே

கோழையாய் அல்ல என்பதை மறக்காதே

பிழையாய் எதுவும் கிடையாது எம்மிடம்

பேழையாய் பொக்கிஷம் இல்லை நம்மிடம்

மழையாய் நீயும் பொழிவாய் தினமும்

குழைவாய் நானும் இருப்பேன் அணுவும்

வாழையாய் வளர்வோம் வாழ்வில் நாம்

உழைப்பாய் நானே இருப்பேன் தானே

கூழையாய் நானும் இருந்தாலும் பெண்ணே

ஊழையாய் அருவெருப்பாய் இறவேன்

புழையாய் நீரோட்டமாய் வருவேன் நானே

அழையா விருந்தாளியாய் வேண்டாம் கண்ணே

பழைய கலாச்சார முறைப்படி பெண்ணே

தழைக்க சந்ததிகளை நாமே கனியே

நுழைக்க விடுவோம் உலகில் தனியே

தாழையூர் மண்ணிலே வாழ்வோம் இனியே 

 

அர்த்தமற்ற வாக்கியங்களாயினும் லை, ளை, ழை, இவைகளின் சங்கமம் மட்டுமே... கில்லர்ஜி

27 கருத்துகள்:

  1. https://www.xn--vkc6a6bybjo5gn.com/

    மேற்கண்ட தளம் மிகவும் உதவும் ஜி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி தளம் சென்று வந்தேன் தகவலுக்கு நன்றிகள் பல!

      நீக்கு
  2. ஓலையில் நான் எழுதிய கவிதையை

    மூலையில் வீசியது முறையோ ?


    டிஜிட்டல் உலகம் இந்த காலத்தில் ஏன் ஓலையில் ?

    பதிலளிநீக்கு
  3. சொற்றோடர் பொருளாற்றதாக இருக்கலாம். ஆயினும் ரசிக்கும் படியாக தான் இருக்கிறது நண்பரே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே ஆகவே முன்கூட்டியே சொல்லி விட்டேன். ரசித்தமைக்கு நன்றி.

      நீக்கு
  4. அனைத்தும் சிறப்பு. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
  5. லை, ளை,ழை , இவைகளின் சங்கமம் மிக அருமை.
    வாழ்த்துக்கள் , வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  6. ரசிக்கும்படியாய் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  7. ஆஆஆஆஆஆ கில்லர்ஜியின் போஸ்ட்டுக்கள் பார்த்தால், எனக்கு ஏதும் ஆகிடும்போல இருக்கூஊஊஉ:))

    ஆனாலும் உங்களிடம் நிறைய விசயங்கள் ஒளிச்சிருக்குது கில்லர்ஜி.. இப்படி எழுத எல்லோராலும் முடியாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐய்யய்யோ உங்களுக்கு ஏதாவது ஆகி ஜேம்ஸ் ஊரணியில் குதிச்சுடுவீங்களோனு எனக்கு பயமாகீது....

      அப்படி எல்லாம் செய்ய மாட்டீங்கள்ல அருபது வருஷமாக புரூடா விடுறீங்களே... அந்த நம்பிக்கை இருக்கு.

      நீக்கு
  8. தமிழில் விளையாடி இருக்கிறீர்கள். நல்ல ஆழ்ந்த யோசனை! வாழ்த்துகள். கலக்கல் பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி.

      நீக்கு
  9. அருமை
    அருமை
    மீசைக்காரக் கவிஞருக்கு
    வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  10. கில்லஜி எப்பவும் சொல்வது போல் க்விதையிலும் மிளிர்கிறீர்கள். வாழ்த்துகள் பாராட்டுகள். ரசித்தேன்

    துளசிதரன்

    கில்லர்ஜி நீங்களே சொல்லிருப்பது போல ஓரிரு வரிகள் கொஞ்சம் தொடர் இல்லாமல் இருந்தாலும்

    லை ழை ளை சங்கமம் நன்றாகவே இருக்கிறது. வித்தியாசமா நல்லா எழுதறீங்க கில்லர்ஜி. ரசித்தேன் கில்லர்ஜி ரைமிங்க் செம...வாழ்த்துகள் பாராட்டுகள்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தங்களிருவரது வாழ்த்துகளுக்கும் நன்றி.

      நீக்கு
  11. கவிதை அருவி மாதிரி கொட்டுது சார்.
    அருமையோ அருமை

    பதிலளிநீக்கு
  12. அழகோ அழகு வார்த்தைகள்

    பதிலளிநீக்கு