கோவை பிரமாண்டமான மகிழுந்து விற்பன்னர் நிறுவனம்.
இங்கு மகிழுந்து வாங்கும் உறுதியான எண்ணங்களோடு உள்ளே நுழைந்தேன். காரணம் ஏற்கனவே ஊரிலுள்ள எல்லா நிறுவனங்களிலும் ஏறி, இறங்கியாகி விட்டது. இனி மிதிவண்டி நிறுவனமே பாக்கி.
வாங்க ஸார் குட்மார்னிங்.
வணக்கம்.
ஸார் லேட்டஸ்ட் மோடல் பார்க்கிறீங்களா ?
பார்க்கலாமே...
ஸார் இதனோட ப்ரைஸ்............................
பலவாறானவைகளை பார்த்து இறுதியாக... பல மணி நேரத்திற்கு பிறகு...
நல்லது இதை எடுக்கலாம் முடிவான விலையை சொல்லுங்க ?
இதை பைனலாக ............. கொடுக்கலாம் ஸார்.
நல்லது இதையே முடிங்க...
ஸார் இதோடு எக்ஸ்ட்ரா டுவெல் தௌசண்ட்ஸ் ரூபீஸ் பே பண்ணினால் நல்லா பாலீஷ் ஏற்றி தருவோம் கிராச்சஸ் எதுவுமே இருக்காது.
இப்ப எனக்கு பேசியது புது வண்டிதானே ?
என்ன ஸார் நியூக்கார் ஷோரூமில் வந்து இப்படி கேட்கிறீங்க.. ?
நான் சரியாத்தான் கேட்கிறேன். கிறுக்கல்கள் எதுவும் இருக்காதுனு நீங்கதான் சொல்றீங்க...
அப்படி இல்லை சார் பாலீஷ் ஏற்றித் தருவோம்.
நான் வாங்கப் போற வண்டி நல்லா பளபளப்பாக இருக்காதா ?
ஸார் நியூக்கார் நல்லாத்தான் இருக்கும். எக்ஸ்ட்ரா பாலீஷ் போடுவோம். ஸ்மால் டாட்கூட பார்க்க முடியாது.
மறுபடியும் அங்கேதான் வர்றீங்க... நீங்க பனிரெண்டாயிரம் கேட்டீங்க... நான் இருபதாயிரம் தர்றேன் வண்டி இனிமேல் கிறுக்கல் ஆகாதுனு உங்களால் உத்தரவாதம் தரமுடியுமா ?
அது எப்படி ஸார் சொல்ல முடியும் ? ரோட்ல பறக்கிறவன் எப்ப உரசுவான்னு சொல்லவே முடியாதே... ?
அதனாலதான் சொல்றேன் புதிய வண்டி எடுக்க வந்தால் பளபளப்பு ஏற்றித் தருவோம்னு சொல்றது நான் பழைய வண்டி விற்கிற இடத்துக்கு வந்த உணர்வைத் தர்றீங்க...
நோ... ஸார் நீங்க வேற மாதிரி அண்டர்ஸ்டாண்டிங் செய்துக்கிட்டீங்க... கார் பாலீஷாத்தான் இருக்கும் கம்பெனி ஃபர்ஸ்ட் குவாலிட்டி பெயிண்ட்தான். ஓகே ஸார் உங்களுக்கு பாலீஷ் வேண்டாம்.
வேண்டாம்னு நீங்க எப்படி தீர்மானிக்கலாம் ?
இப்ப என்ன ஸார் செய்யச் சொல்றீங்க ?
புதிய வண்டிதான் வாங்கப் போறோம்னு நினைச்சேன் அந்த நம்பிக்கை குறைஞ்சு போச்சு.
எங்க சூப்பர்வைசரிடம் பேசுறீங்களா ஸார் ?
உங்களோட மேலாளரே வந்து இப்படி சொன்னாலும் இதே கேள்விகள்தான் கேட்டு இருப்பேன்.
ஸாரி சார்.
சரி மற்ற வேலைகளை பாருங்க... இதே வண்டிதான்.
அவர் மௌனமாக கணினியில் எனது விடயங்களை பதிவு செய்து கொண்டு இருந்தார். முகம் மட்டும் இஞ்சி தின்றது போலிருந்தது.
ஸார் எல்லா டாக்குமெண்டும் ரெடி இன்சூரன்ஸ் ஓகே, இந்த ஃபார்ம்ல ஸைன் செய்துட்டு கௌண்டர்ல செக் டெபாஸிட் பண்ணிடுங்க.
சரி.
எல்லாம் சரியாக செய்து விட்டு புதிய மகிழுந்தை நாளை மறுதினம் வந்து எடுத்துக் செல்லலாம் என்று சொன்னதும் மீண்டும் அவரிடமே போனேன்.
எஸ் ஸார்... எனி ஹெல்ஃப் ?
சாவுகிராக்கி வந்து மாட்டிருச்சுனு நினைக்கிறீங்களா ?
நோ ஸார் உங்களை பார்த்தாலே பயமா இருக்கு அப்படி நினைக்கலை.
பொய் சொல்லாதீங்க... எனக்கு உங்கள்மீது கோபம் கிடையாது. உங்களது நிறுவனத்தோட அணுகுமுறைகள் தவறு. இதை உங்களது மேலிடத்தில் சொல்லி மாற்றி வையுங்கள். எதிர்காலத்துக்கு நல்லது. நான் பேசிய வார்த்தைகளை நீங்கள் விரும்ப மாட்டீர்கள் என்பது எனக்கு தெரியும். இருந்தாலும் எனது கேள்விகள் வில்லங்கமாக தோன்றலாம் ஆனால் சரியான கேள்விகள். நல்லது நாளை மறுதினம் பார்க்கலாம்.
ஓகே ஸார் தாங்க்யூ.
நன்றி வர்றேன்.
போன காரியம் வெற்றிகரமாக முடிய புதிய ஆண்டு 01.01.2018 காலை மீண்டும் சென்று புதிய மகிழுந்தை எடுத்துக் கொண்டு மகிழ்ச்சியாய் முதலில் போன இடம் அம்மாவின் விருப்பத்திற்காக பிள்ளையார் கோவில், அடுத்து எனது விருப்பத்திற்காக லட்டுகளோடு போன இடம் தி யுனைடெட் ஹேண்டி ஹேப்பிட் ஸ்கூல் குருவம்பாளையம் கோயமுத்தூர்.
சிவாதாமஸ்அலி-
வாழ்க தமிழ், வளர்க தமிழ்.
வடிவேலு பார்த்திபன் கதை மாதிரியல்லவா உங்களின் கார் வாங்கும் சம்பவம் இருக்கிறது
பதிலளிநீக்குவருக தமிழரே ஆம் அன்று அப்படித்தான் இருந்தது.
நீக்குஅவருக்கு எக்ஸ்ட்ரா பாலீஷ் - ன்னு இனி வாயிலேயே வராது ஜி...
பதிலளிநீக்குஆமாம் ஜி அவனுக்கு எனது நினைவு என்றும் இருக்கணும்.
நீக்குஇந்த எக்ஸ்ட்ரா பாலீஷ் ண்ணுசொல்றது (கல்யாணப்)புதுப்
பதிலளிநீக்குபொண்ணுக்கு ஃ பேஷியல் பண்ணி மேக் அப் பண்ற மாதிரி அப்படீன்னு எடுத்துக்கணும்
வாங்க மேடம் ஓஹோ இப்படியொரு அர்த்தம் உண்டா ?
நீக்குகார் விற்பவர் எப்படி பேச வேண்டும் என்று கற்றுக்கொடுத்து விட்டீர்கள்.
பதிலளிநீக்குஅம்மாவின் விருப்பம் இறை சேவை, உங்கள் விருப்பம் மக்கள் சேவை. (உன்னதமான சேவை.)
வாழ்க வளமுடன்.
வருக சகோ சில நிறுவனங்களில் பேசுவதற்கு பயிற்சி கொடுக்க வேண்டியது முதலாளிகளின் கடமை.
நீக்குபுதிய காருக்கு இன்னும் பெயிண்டு அடிக்கின்றேன் என்று காசு புடுங்காமல் விட்டாங்கள் உங்கள் பேச்சைப்பார்த்து!)))
பதிலளிநீக்குஆம் நண்பரே எனது மூஞ்சும் அப்படித்தான் இருக்குது.
நீக்குநம்மை சுரண்டி பிழைக்கும் வியாபார கும்பல் நண்பரே. எரிச்சலாக தான் இருகிறது. எப்போ தான் இவர்கள் திருந்துவர்களோ
பதிலளிநீக்குஇயன்றவரை பில் போடுவது நமது மக்களுக்கு போதிக்கப்பட்ட சட்டங்கள் நண்பரே...
நீக்குஅன்பின் தேவகோட்டைஜி,
பதிலளிநீக்குமுதலில் புதுக்காருக்கு வாழ்த்துகளைப்
பிடியுங்கள்.
இரண்டாவது இனிமே அந்த ஆளு
பாலிஷுனே சொல்ல மாட்டான். :)))))))))
நீங்க தான் இந்த கன்சல்டேஷன் ஆரம்பியுங்களேன்.
நாட்டில் பேசத்தெரியாதவர்களுக்கா பஞ்சம்!!!!
அம்மாவின் பிள்ளை அருமை.
வாங்க அம்மா வாழ்த்துகளுக்கு நன்றி பழைய சம்பவம்தான் அம்மா.
நீக்குஎக்ஸ்ட்ரா செல்லிங் (அப் செல்லிங்) சகஜம்தான். அதுக்காக புது காருக்கு எக்ஸ்ட்ரா பளபளப்புன்னுலாம் ஏமாத்தப் பாக்குறாங்களே.
பதிலளிநீக்குஇதையே மற்ற கடைகளும் ஆரம்பித்தால், இந்த புதுப் புடவையை நல்லா மெருகு ஏற்றி அயர்ன் பண்ணித் தரேன், இருநூரு ரூபாய் அதிகமாகும், இனிப்பை சாப்பிட்டுப்்பார்த்து அடுக்கித் தர்றேன் எக்ஸ்ட்ரா ஐம்பது ரூபாய்னு சொல்லாமல் இருந்தால் சரிதான்
வருக நண்பரே புதிய காரை பளபளப்பு ஏற்றித்தருவோம் என்றால் நம்மை மூடனாக்குவது இல்லையா ?
நீக்குநீங்கள் கேட்ட கேள்விகள் சரியானதுதான். நியாயமானதும் கூட. இனி அவர்கள் அதிக பணம் பார்க்க வேறு வழிகளை நாடவேண்டும்!
பதிலளிநீக்குவாங்க ஜி தங்களின் வருகைக்கு நன்றி.
நீக்குநீங்கள் கேட்டது சரியே. இந்த மகிழுந்து விற்பனை செய்வோர் அவர்கள் சொல்லும் காப்பீட்டு நிறுவனத்தில்தான் காப்புறுதி ஒப்பந்தத்தை(InsurancecPolicy) எடுக்கவேண்டும் என்பார்கள். அவ்வாறு செய்யவேண்டிய அவசியமில்லை. அதையும் தட்டிக்கேட்கலாம்.
பதிலளிநீக்குவருக நண்பரே ஆம் இதுவும் உண்மையே... தங்களது வருகைக்கு நன்றி.
நீக்குதரமான சம்பவம். புது வண்டிக்கு எதற்கு பாலீஷ். உங்களைப் போல் கேள்வி கேட்பவர் குறைவு கார் வாங்கும்போது அந்த சந்தோஷத்தில் சிறுதொகைதானே என்று கூடுதல் செலவை பொருட்படுத்தாமாட்டார்கள் என்பது உளவியல். அதனால் தேவையில்லாமல் சில ஆயிரங்களை எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்குகளுக்கு இழந்து விடுகிறார்கள்.
பதிலளிநீக்குஆம் நண்பரே இப்படித்தான் என்னைப் போன்ற அப்பாவிகளை ஏமாற்றுகின்றார்கள்.
நீக்குநல்ல ஏமாத்து வேலை கில்லர்ஜி! நல்லகாலம் நீங்க உஷாரா இருந்து கேள்வி கேட்டுட்டீங்க. பலரும் கேட்கமாட்டாங்கனுதான் இப்படி ஏமாற்று வேலை. புதுக்காருக்கு பாலிஷ்!!! ஹா ஹா அதுவும் ஒரு டாட் கூடப் பார்க்க முடியாதுன்னு!!! கண்டிப்பா நாம என்னடா ஓட்டின காரான்னு நினைப்போம்.
பதிலளிநீக்குஎத்தனைப் பேர் மாட்டினாங்களோ!!
கீதா
கில்லர்ஜி பாலிஷ்னதும் உடனே நீங்க சரி ஒரு பூதக்கண்ணாடி கொண்டாங்கன்னு கேட்டிருக்கணும் ஹா ஹா ஹா....நீங்க சொல்றத பார்த்தா யூஸ்ட் கார் போல அல்லது ஃபேக்டரி செகண்ட்ஸ் போல இருக்கு அதான்...செக் பண்ணிடலாம்னு ந்னு சொல்லி...
நீக்குகீதா
ஆம் காலம் முழுவதும் இப்படி ஏமாற்றுகள் நடக்கத்தான் செய்கிறது.
நீக்குகில்லர்ஜி காரை நன்றாகச் செக் செய்தீர்கள் தானே? இங்கு எக்ஸ்ட்ரா கேட்பதில்லை ஆனால் நன்றாகப் பளபளப்பாகத் துடைத்துத் தருவார்கள் நம் முன்னிலையிலெயே. இதுவரை இப்படி அனுபவம் இல்லை.
பதிலளிநீக்குதுளசிதரன்
புதியகார் பளபளப்பாக இருப்பதுதானே முறை.
நீக்குஇப்படி எல்லாம் கேள்விகளைக் கேட்டுவிட்டு வில்லங்கம் பிடிச்சவங்கனு அவங்க நினைக்கத் தானே செய்வாங்க. ஆனால் நமக்கெல்லாம் வாய் சும்மா இருக்காதே! நீங்க கேட்டதெல்லாம் சரியே! அவங்க கூடுதலாகப் பனிரண்டாயிரத்துக்கு வழி செய்யப் போய் மாட்டிக் கொண்டாங்க. இனி இப்படிக் கேட்க மாட்டாங்க என நம்புவோம்.
பதிலளிநீக்குவருக சகோ இயன்றவரை விலையை ஏற்றுவதற்கு வழி.
நீக்குஎல்லாம் வாய்ச்சொல் வீரர்களே...
சரியாக கேட்டு இருக்கிறீர்கள் கில்லர்ஜி. வாடிக்கையாளரை எப்படி எல்லாம் ஏமாற்றலாம் என்பதை மட்டுமே அங்கே பணிபுரிபவர்களுக்குச் சொல்லித் தருகிறார்கள். எந்த விற்பனையாக இருந்தாலும், வரும் வாடிக்கையாளர்களை ஏமாற்றுவதே குறியாக இருக்கிறார்கள்.
பதிலளிநீக்குவாங்க ஜி முடிந்தவரை எவ்வகையிலாவது வாடிக்கையாளர்களை ஏமாற்றப் பார்க்கிறார்களே...
நீக்குஅப்போது மீசை வைத்து இருந்தீர்களா
பதிலளிநீக்குவாங்க ஐயா கடந்த 2018-தான்.
நீக்குபுதிதாக மகிழுந்து வாங்குபவர்கள், அந்த மகிழ்வில், சிறு சிறு செலவினங்களைப் பொருட்படுத்தமாட்டார்கள் என்னும் உளவியல் கருத்தினைக் காசாக்க முயன்றிருக்கிறார்கள்
பதிலளிநீக்குபுதிய மகிழுந்திற்கு வாழ்த்துகள் நண்பரே
ஆம் நண்பரே இதுதான் கடைகாரர்களின் திட்டம். தங்களது வருகைக்கு நன்றி.
நீக்குசரியான கேள்விகள் சார்.
பதிலளிநீக்குஇதற்கு எங்களள் வங்கிகளில் 'cross selling and up selling" என்பார்கள்.
எங்களிடம் கடன் கேட்டு வருபவர்களுக்கு காப்பீடு சேர்த்து விற்கச்சொல்லி மேலிடத்திலிருந்து அழுத்தம் வரும்.
அந்த காப்பீட்டை எப்படி பிற்காலத்தில் விண்ணப்பித்து வாங்குவது என்பது விற்கும் எவனுக்கும் தெரியாது.
வருக நண்பரே எல்லா வியாபாரமும் வாடிக்கையாளர்களை முட்டாளாக்கிதான் வைத்து இருக்கிறது.
நீக்குநீங்க எங்கட சிவாஸ் றீகல் சிவசம்போ அங்கிளை விட, அதிகமாக கொஸ்ஸன் கேய்ப்பீங்க போல இருக்கே கில்லர்ஜி:))
பதிலளிநீக்குவாங்க எனக்கு அதெல்லாம் தெரியாது நானொரு ஊமை.
நீக்குபுதிய காருக்கு காற்றடிக்க தனியாக காசு கேட்கவில்லைபோலும். பாவம் அந்த சேல்ஸ்மேன், ஆழம்(ஆளை) தெரியாம காலை விட்டுவிட்டார்.
பதிலளிநீக்குவருக நண்பரே விட்டால் காசு கேட்டு இருப்பார்கள் போலயே....
நீக்குசரியாகத்தான் கேட்டிருக்கிறீர்கள். பாவம் அவர் இதை எதிர்பார்த்திருக்க மாட்டார்.
பதிலளிநீக்குவாங்க மேடம் வருகைக்கு நன்றி.
நீக்கு