தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, அக்டோபர் 03, 2021

பிஞ்சிருக்கும் பிறை

ணக்கம் நண்பர்களே... ‘’முத்துக்களோ கண்கள் தித்திப்பதோ கன்னம்’’ என்ற கவியரசர் கண்ணதாசனின் அற்புதமான பாடலை எமது பாணியில் மாற்றி எழுதி இருக்கிறேன் கீழே யூட்டியூப்பின் இணைப்பும் கொடுத்துள்ளேன். 
 
இதோ எனது பாடல்... 

ஆண்
தொன்னையிலே வெண்ணை
சென்னையிலே உன்னை
பண்ணையிலே வைத்து
கண்ணையன் மகன் என்னை
தந்து விட்டேன் கண்ணே

ஆண்
தொன்னையிலே வெண்ணை
சென்னையிலே உன்னை
பண்ணையிலே வைத்து
கண்ணையன் மகன் என்னை
தந்து விட்டேன் கண்ணே

பெண்
எனை பிடித்த பிடிதான் என்ன
உன் வெறித்த பார்வை என்ன
இந்த சாமந்திப்பூவை நீயும்
நடுச்சாமத்தில் அழைப்பதென்ன

பெண்
தொன்னையிலே வெண்ணை
சென்னையிலே என்னை
பண்ணையிலே வைத்து
கண்ணையன் மகன் நீயும்
எடுத்து விட்டாய் கண்ணா

ஆண்
கள்ளி உன்னை மெல்ல மெல்ல
கிள்ளி நான் பாட
பெண்
வள்ளி நானும் நெளிந்து வழிந்து
தான் ஆட

ஆண்
மகிழ்ந்த மகிழ்ச்சி என்ன
நீயும் மறைந்து பார்த்ததென்ன
பெண்
மருந்து கொடுத்ததென்ன அதையும்
மறைத்து கொடுத்ததென்ன

ஆண்
தொன்னையிலே வெண்ணை
சென்னையிலே உன்னை
பண்ணையிலே வைத்து
கண்ணையன் மகன் என்னை
தந்து விட்டேன் கண்ணே

பெண்
பாலும் கொஞ்சம் பழமும் கொஞ்சம்
பருக கேட்பதென்ன
ஆண்
அருகில் வந்தும் ஆசை இருந்தும்
ஆவலை மறைப்பதென்ன

பெண்
இந்த மலரை மொய்ப்பதென்ன
உன் கால்கள் சரசம் செய்வதென்ன
ஆண்
வானவேடிக்கை தோரணத்தோடு
நாளை பூமி அதிர்வதென்ன

பெண்
தொன்னையிலே வெண்ணை
சென்னையிலே என்னை
பண்ணையிலே வைத்து
கண்ணையன் மகன் நீயும்
எடுத்து விட்டாய் கண்ணா

….. ஹா…… …………. ஆஅ…… …. …. ஹா…..
….. ஹா…… ………….ஆஅ…… …. ….. ஹா…..
 
பாடல்-ஆச்சி-ரியர்-கில்லர்ஜி
வருடம்: 1967
திரைப்படம்: நெஞ்சிருக்கும் வரை
பாடலாசிரியர் : கவிஞர் கண்ணதாசன்
இசை : எம். எஸ். விஸ்வநாதன்
பாடியவர்கள் : டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
 
இதோ கவியரசர் கண்ணதாசனின் பாடல் வரிகள்
 
ஆண் : 
முத்துக்களோ கண்கள்
தித்திப்பதோ கன்னம்
சந்தித்த வேளையில்
சிந்திக்கவே இல்லை
தந்து விட்டேன் என்னை
 
ஆண் : 
முத்துக்களோ கண்கள்
தித்திப்பதோ கன்னம்
சந்தித்த வேளையில்
சிந்திக்கவே இல்லை
தந்து விட்டேன் என்னை
 
பெண் : 
படித்த பாடம் என்ன
உன் கண்கள் பார்க்கும்
பார்வை என்ன
பாலில் ஊறிய ஜாதிப் பூவை
சூடத் துடிப்பதென்ன
 
பெண் : 
முத்துக்களே பெண்கள்
தித்திப்பதே கன்னம்
சந்தித்த வேளையில்
சிந்திக்கவே இல்லை
தந்து விட்டேன் என்னை
 
ஆண் : 
கன்னிப் பெண்ணை மெல்ல மெல்ல
தென்றல் தாலாட்ட
பெண் : 
கடலின் அலைகள் ஓடி வந்து காலை நீராட்ட
 
ஆண் : 
எழுந்த இன்பம் என்ன
என் எண்ணம் ஏங்கும் ஏக்கமென்ன
பெண் : 
விருந்து கேட்பதென்ன
அதையும் விரைந்து கேட்பதென்ன
 
ஆண் : 
முத்துக்களோ கண்கள்
தித்திப்பதோ கன்னம்
சந்தித்த வேளையில்
சிந்திக்கவே இல்லை
தந்து விட்டேன் என்னை
 
பெண் : 
ஆசை கொஞ்சம்
நாணம் கொஞ்சம்
பின்னிப் பார்ப்பதென்ன?
ஆண் : 
அருகில் நடந்து மடியில் விழுந்து
ஆடக் கேட்பதென்ன
 
பெண் : 
மலர்ந்த காதல் என்ன
உன் கைகள் மாலையாவதென்ன
ஆண் : 
வாழை தோரண மேளத்தோடு
பூஜை செய்வதென்ன
 
ஆண் : 
முத்துக்களே கண்கள்
தித்திப்பதே கன்னம்
சந்தித்த வேளையில்
சிந்திக்கவே இல்லை
தந்து விட்டேன் என்னை

….. ஹா………………. ஆஅ……….…. ஹா…..
….. ஹா……………….ஆஅ……….….. ஹா…..
 
இதோ யூட்டியூப் இணைப்பு
https://www.youtube.com/watch?v=H-Pw9ZDhcMw
நன்றி – கில்லர்ஜி தேவகோட்டை

32 கருத்துகள்:

  1. ஹா.. ஹா.. ஹா... ஆனால் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று இது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஸ்ரீராம்ஜி எனக்கு மட்டும் பிடிக்காதா... என்ன ?

      நீக்கு
  2. மிகவும் பொருந்தும் வரிகள் நண்பரே.
    ரீமேக் என்பது படங்களில் கண்டிருக்கிறேன்.
    பாடல் ரீமேக்கை உங்களின் பல பதிவுகளில் காண்கிறேன். பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.

      நீக்கு
  3. ஆகா
    அருமை அருமை
    கவிஞருக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே வாழ்த்துகளுக்கு நன்றிகள் பல...

      நீக்கு
  4. கண்ணையன் மகன் நீங்களா அன்பு தேவ கோட்டை ஜி!!!
    கண்ணதாசனின் வாரிசாகவே
    புனைந்திருக்கிறீர்கள்.
    அற்புதம் அற்புதம்.
    நல்ல கற்பனை வளம் மா.பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அம்மா ஹா.. ஹா.. எனது அப்பாவின் பெயர் கணபதி.

      தங்களது பாராட்டுகளுக்கு நன்றி அம்மா.

      நீக்கு
  5. கண்ணதாசனின் கவிதையை மாற்றி அமைத்தது அருமை.

    வாழ்த்துக்கள் .

    கண்ணதாசன் பாடலையும் கேட்டேன்.

    ஆசிரியர் பயிற்சி படிப்பவர்கள் பள்ளியில் வந்து பாடம் எடுப்பார்கள் முன்பு .கோவையில் அரசு பள்ளியில் நான் படித்த போது. இப்போது அப்படி எடுக்க வருகிறார்களா தெரியாது, நான் சொல்லும் வருஷம் 1970. ஒரு ஆசிரியர் இந்த பாடலை அருமையாக பாடினார் வகுப்பில். அவர் பயிற்சி வகுப்பு முடித்து திரும்பும் போது அவருக்கு நன்றி சொல்லும் விழாவில். நினைவுகள் வந்தது இப்போது நீங்கள் பகிர்ந்த பாடலால்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ எனது பதிவு தங்களுக்கு பழைய நினைவுகளை மீட்டியதில் மகிழ்ச்சியும், நன்றியும்...

      நீக்கு
  6. தலைவா....அற்புதம்...அற்புதம்....

    பதிலளிநீக்கு
  7. வலையுலக பாடலாசிரியரே உமது பாடல் அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே தங்களது வருகைக்கு நன்றி.

      நீக்கு
  8. நான் ரசித்த பாடலில் ஒன்றை, உங்கள் பாணியில் படித்து, ரசித்து மகிழ்ந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக முனைவர் அவர்களே தங்களது ரசிப்புக்கு நன்றி.

      நீக்கு
  9. ஹாஹாஹா! கண்ணதாசன் பாடலை உங்கள் இஷ்டத்திற்கு சுலபமாக மாற்றி விட்டீர்கள், இப்போது வரும் பாடல்களுள் ஒன்றை இப்படி மாற்றுங்கள் பார்க்கலாம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா ...பானுக்கா! கில்லர்ஜி, இதென்ன பிரமாதம்னு மீசையை முறுக்கிக் கொண்டு எழுதிடுவார் பாருங்க!!!

      கில்லர்ஜி விடாதீங்க. பானுக்கா கொடுத்திருக்கும் சவாலை ஏற்றெடுத்து எழுதிருங்க!

      கீதா

      நீக்கு
    2. வாங்க மேடம் இன்றைய பாடல்களின் வரிகளில் தமிழ் வார்த்தைகள் இருந்தால் ??? சொல்லுங்களேன் முயற்சி செய்கிறேன்.

      நீக்கு
    3. இப்படியே உசுப்பேத்திதான் ரத்தக்களரி ஆகிப்போனது...

      நீக்கு
  10. கில்லர்ஜி அருமையாக எழுதியிருக்கிறீர்கள். ஒரிஜினல் மிகவும் பிடித்த பாடலும் கூட. நீங்கள் இட்டுக்கட்டிய வரிகளையும் ரசித்தேன்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தங்களது ரசிப்புக்கு மிக்க நன்றிகள்.

      நீக்கு
  11. புகழ் பெற்றவரின் பாடலைப் போலவே தரமான பாடல் எழதுவது எளிதல்ல. உங்களால் முடிகிறது. பாராட்டுகள் கில்லர்ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது பாராட்டுகளுக்கு மிக்க நன்றி.

      நீக்கு
  12. கில்லர்ஜி நிஜமாகவே சிரித்துவிட்டேன்...நல்ல உல்டா!!!

    ரசித்தேன் கில்லர்ஜி!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிரித்து ரசித்தமைக்கு மிக்க நன்றிகள் பல!

      நீக்கு
  13. ஹாஹாஹா...
    நகைச்சுவை வரிகளாய் பாடல்;
    அருமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.

      நீக்கு
  14. காலை வேளையில் முதலில் உங்க பதிவைப் படிச்சுட்டு வாய் விட்டு , மனம் விட்டுச் சிரித்தேன். கூடவே இந்தப் படம் பார்த்த நினைவுகளும் வந்தன. சின்னமனூர் புகழேந்தி திரை அரங்கில் இந்தப் படம் பார்த்தேன் என் சித்தி குழந்தைகள், பெரியம்மா பெண் ஆகியோருடன். எல்லோரும் ரசித்துப் பார்த்துக் கொண்டு இருக்க எனக்கு மட்டும் சிப்புச் சிப்பாய் வர, சித்தி பெண் என்னைக் கோவிக்க, சோகக் காட்சிகளில் அனைவர் கண்களிலும் நீர் ஆறாய்ப் பெருக! இஃகி,இஃகி,இஃகி, அதன் பிறது மறுபடி மதுரை வந்ததும் சித்ராயலா கம்பெனி பாஸில் மறுபடி ஒரு தரம் பார்த்தேன் அம்மா, அண்ணா, தம்பியோடு! :)))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களுக்கும் இப்பதிவு பழைய நினைவுகளை மீட்டியதில் மகிழ்ச்சி.

      நீக்கு