தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், அக்டோபர் 13, 2021

தமிழ்ச்சூடி

 

துரையிலிருந்து அலைபேசி அழைப்பு (நண்பரின்) தங்கையிடமிருந்து...
 
அண்ணா மகளோட பள்ளி ஆண்டு விழாவுக்கு தமிழிலும், ஆங்கிலத்திலும் கவிதை எழுதி வரச்சொல்லி இருக்கின்றார்கள். நான் ஆங்கிலத்தில் எழுதி விட்டேன் தமிழைக் குறித்து தமிழில் கவிதை வேண்டும். உங்கள் ஞாபகம் வந்தது நீங்கள் எழுதி தாருங்கள் அவசரம் அண்ணா. 
சரிம்மா என்மீது நம்பிக்கை வைத்து விட்டாய் இயன்றவரை முயல்கிறேன்.
சரிண்ணா நன்றி.
 
உடன் தமிழைக் குறித்து எழுதினேன் தங்கை சொல்லி சரியாக அரை மணி நேரத்தில் இந்த மூன்று கவிதைகளையும் எழுதி புலனத்தில் (WhatsApp) அனுப்பி விட்டேன். அதன் பிரதி தாங்களுக்கும்...
 
தமிழ்ச்சூடி
 
ன்னை தந்த தமிழே...
சையாய் பேசும் சுவையே...
ன்பத்தேனாய் கனியே...
ன்றாய் எனை மணியே...
லகம் போற்றும் தமிழே...
க்கம் தரும் மொழியே...
ங்கள் குலத்தின் வழியே...
ற்றம் தருவாய் வாழியே...
யன் தந்த அமுதமொழியே...
ன்றே முக்காலடி குறளே...
ங்கியொலித்தாய் குரலே...
டதம் தருவாய் தினமே...
 
ஆத்திச்சூடி போன்று எழுதினேன்.
 
தமிழ் நா’’வின்சுவை
 
நானறிந்த தமிழே...
நாடறிந்த மொழியே...
நாணல் போல நதியே...
நாங்கள் பேசும் தமிழே...
 
நாதம் மீட்டும் சுவையே...
நாளும் கேட்கும் இசையே...
நாடாளும் கன்னித்தமிழே...
நாடார் உண்டோ உனையே...
 
நாவில் சுழலும் தமிழே...
நாவூரும் நற்கனியே...
நாவல் பழத்தின் சுவையே...
நாவால் சுவைப்பேன் உனையே...
 
நா கொண்டு எழுதினேன்.
 
தமிழே... தமிழே...
 
நான் பேசும் தமிழே...
எனை வளர்த்த தமிழே...
உம்மால் பேறு தமிழே...
நானறிந்த தமிழே...
 
நானறிந்தேன் தமிழே...
தரணி போற்றும் தமிழே...
தவழும் தங்கத் தமிழே...
சங்கம் வளர்த்த தமிழே...
 
பண்பு மொழித் தமிழே...
பன்மொழித் தமிழே...
எட்டுத்திசையும் தமிழே...
ஏட்டில் சென்ற தமிழே...
 
வீட்டில் சுழலும் தமிழே...
விண்ணைத் தொட்ட தமிழே...
திருக்குறள் தந்த தமிழே...
மனக்குரல் தந்தேன் தமிழே...
 
தமிழ் கொண்டு எழுதினேன்.
 
இரசித்தால் கருத்து சொல்லுங்களேன்
கில்லர்ஜி தேவகோட்டை

40 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. முனைவர் அவர்களின் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  2. தங்கையின் நம்பிக்கை பொய்க்கவில்லை.
    மிக அருமையாக இருக்கிறது மூன்று கவிதைகளும்.
    அரை மணி நேரத்தில் மூன்று கவிதை !
    அற்புத திறமைக்கு பாராட்டுக்கள்
    வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ பாராட்டுகளுக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி.

      நீக்கு
  3. கன்னித் தமிழ்!
    காலத்தை வெல்லும் தமிழ்!
    கவிதையில் சிறந்த தமிழ்!
    கில்லர்ஜியைக்
    கவிஞர் ஆக்கிய தமிழ்!
    தமிழ் வாழ்க!
    தமிழ்க் கவிஞர் கில்லர்ஜி வாழ்க!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது கருத்தை கவிதை வழியாக பதிவு செய்தமைக்கு நன்றி.

      நீக்கு
  4. சுறுசுறுவென சூப்பராய் எழுதி விட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  5. கவிதைகள் அருமை...நக்கீரன் இல்லாமல் இருக்கவேண்டும் ....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.. ஹா.. வந்தால் என்ன ? எவ்வளவு பிழைகள் இருக்கிறதோ... அதற்கு தகுந்த பரிசைத் தரட்டுமே...

      நீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    மூன்றும் அழகான கவிதைகள்.தங்கள் தங்கை தங்களது திறமை தெரிந்துதான் அவசரமாக கவிதை கேட்டுள்ளார். பள்ளி ஆண்டு விழாவில் இக்கவிதைகள் சிறப்பு பரிசை கண்டிப்பாக பெற்றிருக்கும் என்பதில் ஐயமில்லை. உங்களது கவி புனையும் திறமைக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளும், பாராட்டுகளும்.பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ நலமா ? தங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. கவிதைகள் மூன்றும் கவி மெய்கள்.

    பதிலளிநீக்கு
  8. கவிதைகளை ரசித்தேன். பாராட்டுகள் கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.

      நீக்கு
  9. நல்ல கவிதைகள் மூன்றும். மனம் நிறை வாழ்த்துகள்
    அன்பு தேவகோட்டைஜி.

    நக்கீரனாகச் சொல்ல வில்லை. நன்மைக்காகச் சொல்கிறேன்.
    ஔடதம் என்று இருக்க வேண்டும் அப்பா.
    தங்களுக்கும் குழந்தைக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அம்மா பிழைகள் இருப்பின் உடன் தயங்காமல் சொல்லுங்கள். இதில் தவறாக நினைப்பதற்கு ஒன்றுமில்லை இதோ மாற்றி விட்டேன்.

      வருகைக்கு நன்றி அம்மா.

      நீக்கு
  10. மிகவும் அருமை... பாராட்டுகள்... வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  11. மூன்று கவிதைகளும் சிறப்பாகவே இருக்கின்றன. பாராட்டுகளும் வாழ்த்துகளும் கில்லர்ஜி.

    பதிலளிநீக்கு
  12. நானும் ரசித்தேன் தமிழை நண்பரே.
    உங்க கவிதை அந்த பள்ளியில் பரிசு பெற்றதா இல்லையா.
    சொல்லுங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே ஆமாம்ல... இதுவரை நானும் கேட்கவேயில்லை.

      நீக்கு
  13. மிகச் சிறப்பான கவிதைகள். அதுவும் அரை மணி நேரத்தில். உங்கள் தங்கை கொடுத்து வைத்தவர். பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது பாராட்டுகளுக்கு நன்றி.

      நீக்கு
  14. கில்லர்ஜி மிக மிக அருமையாக அதுவும் அரை மணி நேரத்தில் மூன்று கவிதைகள் எழுதிக் கொடுத்துவிட்டீர்களே! ரசித்து வாசித்தேன்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தங்களது ரசிப்புக்கும், பாராட்டுகளுக்கும் நன்றி.

      நீக்கு
  15. கில்லர்ஜி நான் வழக்கமாகச் சொல்லுவது...நீங்கள் கவிதையில் பின்னி எடுக்கின்றீர்கள்!! மிக மிக நன்றாக எழுதியிருக்கிறீர்கள். மனமார்ந்த பாராட்டுகள்! கில்லர்ஜி

    தமிழ் நா' வின் சுவை...நல்ல தலைப்பு. நா என்று தொடங்குவதால்....நாடாளும் என்பதற்கு பதில் நாநிலம் (உலகம் என்பதற்கு இருநிலம் என்று ஒரு சொல் இருப்பதாக அறிகிறேன்) உலகம் முழுவதும் என்பதன் அர்த்தமாகக் கொள்ளலாமோ என்று தோன்றியதால்....

    மிகவும் ரசித்தேன் கில்லர்ஜி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றிகள் பல....

      நீக்கு
  16. கில்லர்ஜி, இந்தப் பதிவில் ஒரு கருத்து குறித்து நான் ஏற்கனவே கல்வி பற்றி எழுதும் ஒரு பதிவில் சொல்லியிருக்கிறேன் என்பதால் இங்கு அது பற்றி எழுதவில்லை.

    பள்ளிக்குச் சென்றதில்லை என்று சொல்லும் உங்கள் திறமை பளிச் கில்லர்ஜி. ஆனால் பாருங்கள் இப்போது பள்ளி செல்லும் குழந்தைகளின் நிலைமை ஸ்பூன் ஃபீட்!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் எனது பார்வையில் இன்றைய மாணாக்கர்கள் எழுத்தை படித்து அறிந்து கொல்''கிறார்கள் என்பது மட்டுமே...

      இந்நிலைக்கு ஆசிரியர்கள் மட்டும் காரணமல்ல... முதல் காரணம் பெற்றோர்களே... அவர்கள் தொடங்கியதை ஆசியர்கள் வழி நடத்துகின்றார்கள் இங்கு யாருக்கும் சமூகபொருப்பு என்பது கிடையாது அரசு உள்பட....

      நீக்கு
  17. அருமை
    அருமை
    கவிஞருக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  18. மிகவும் ரசித்தேன் !!!

    vannasiraku.blogspot.com

    பதிலளிநீக்கு

  19. "கில்லர்ஜி நல்ல சொல்லர்ஜி"

    பதிலளிநீக்கு