தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், அக்டோபர் 18, 2021

நீடாமங்கலம், நீட் நீலாம்பரி


 கொரோனா காலத்தில் கணவனும், மனைவியும் வீட்டுக்குள் சிறை வாழ்க்கை வாழும்போது பொழுது போகாத அர்சனா தனது கணவன் அர்ச்சுனனை அர்ச்சணை செய்ய ஆரம்பித்தாள்.

ஏங்க நான் ஒண்ணு கேட்டால் தப்பா நினைக்க மாட்டீங்களே... ? 
முதலில் கேளு பிறகு பார்க்கலாம்.

எனக்கு ஏதாவது ஆகிட்டா என்ன செய்வீங்க ? 
மருத்துவமனைக்கு அழைத்து உன்னை கூட்டிக்கிட்டு போகச் சொல்லுவேன்.

அப்படீனாக்கா... உங்களுக்கு வருத்தமே இல்லையா ? 
எதுக்கு வருத்தப்படணும் இது உலகம் முழுவதும் நடக்கிறதுதானே ? 

நான் போயிட்டா... உடனே வேற கல்யாணம் செய்வீங்களா ? 
உனக்காக டாக்டருக்கு படிக்கிற உன்னோட தங்கச்சி நீலாம்பரியை கல்யாணம் பண்ணி என்னோட வாழ்க்கையை தியாகம் செய்துருவேன்.

ஓஹோ துரைக்கு இப்படியொரு நினைப்பு இருக்குதா... இதுக்குத்தானே நான் அம்மா வீட்டுக்கு போனாலும் மறுநாளே கிளப்பி விடுறேன்.
உன் தங்கச்சிக்கு என்னோட வாழ கொடுத்து வைக்கலை என்ன செய்யிறது ? 

எனக்கு கொரோனா வரணும்னு நினைக்கிறீங்க... அப்படித்தானே ? 
என்னடி வம்பாப் போச்சு நீயா கேட்டு பிறகு என்னை குறை சொல்றே ? 

உங்களுக்கு என் மேலே பாசமே இல்லை.
பாசம் இல்லாமலா... நமக்கு மகன் பிறந்து இருக்கான்

க்கும்... நாம மட்டும்தான் குழந்தை பெத்து இருக்கோமா ?  எல்லோருக்கும் கல்யாணம் ஆனால் குழந்தைதானே பிறக்கும்.
இப்போ என்னதான்டி சொல்ல வர்றே... இதுக்குத்தான் மகனை இங்கேயே படிக்க வைப்போம்னு சொன்னேன். நீதான் எங்க அம்மா வீட்லதானா படிக்கட்டும்னு அங்கே விட்டுப்புட்டு பொழுது போகாமல் என்னோட வம்பு இழுக்கிறே... ? 
இனிமேல் நீலாம்பரிக்கு கல்யாணம் ஆகும்வரை... எங்க அம்மா வீட்டுக்கு போகவே கூடாது.
மகனை எப்படி பார்க்கிறது... இல்லைனா சொல்லு அடுத்து ஒரு குழந்தை பிறக்க ஏற்பாடு செய்வோம் பிறக்கிற குழந்தை கொரோனா நேரத்துல ஜனிச்சதால குழந்தை பிறந்தவுடன் கொரோனா என்று பெயர் வைப்போம். எப்படி என் யோசனை ? 

உள்ள குழந்தைக்கே ஸ்கூல் பீஸ் கட்ட முடியலை இதுல இன்னொண்ணு வேறயா ?  போயி ரேசன் கடையில் கொரோனாவுக்காக காய்கறி கொடுக்கிறாங்களாம் வாங்கிட்டு வந்து குளிங்க...
காலையிலயே ஆரம்பிச்சுட்டயா ?  பஸ்ஸு விட்டாலும் ஒரு எட்டு போயி மகனை பார்த்துட்டு வந்துறலாம்.

மகனைப் பார்க்கப் போற லட்சணம் இப்பத்தானே புரியுது... எங்க அப்பாக்கிட்டே சொல்லி நீலாம்பரியை இந்த வருசம் நீடாமங்கலம் விடுதியில் தங்கிப் படிக்க வைக்கணும்.
ஏண்டி காலம் கெடக்குற கோலத்துல பொம்பளைப் புள்ளையை விடுதியில தங்க வைக்கலாமாடி ? 

ஆடு நனையுதுனு எதுவோ... அழுதுச்சாம் அந்தக்கதை போலத்தான் இருக்கு இந்தாங்க கட்டைப்பையும், மாஸ்க்கும் போயி சாமானை வாங்கிட்டு வாங்க...
ஹூம் எல்லாம் கொரோனாவால் வந்த வினை.

முனங்கி கொண்டே பைகளை வாங்கிக் கொண்டு முககவசத்தை மாட்டிக் கொண்டு ரேசன் கடைக்கு போனான் அர்சுனன்.

ChavasRegal சிவசம்போ-
சிலருக்கு கொழுந்தியாள் அமைவது கொள்ளை லாபம்தான் போல...

33 கருத்துகள்:

 1. அருச்சுனன் மன்மத அம்பு விடுவதிலும் சேட்டைக்காரனோ ஜி...?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி இருக்கலாம் எனக்கும் அப்படித்தான் தோணுது....

   நீக்கு
 2. என்னவோ டக்கு டக்குன்னு பொண்ணுஹ கிடைக்கிற மாதிரியில்ல இந்த அருச்சுனன் நினைக்கிறார்...

  எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம். எல்லாரும் ஏன் ஆம்பளைகளை மட்டும் சந்தேகப்படறாங்க?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தமிழரே நீடாமங்கலம் ஏரியாவில் கிடைக்கும் போல...

   ஆம்பளை கவலைப்படாமல் எதையும் பேசலாம்.பெண்கள் அப்படி பேசினால் வாழ்க்கையை மாற்றி விடுவதால் இருக்கலாம்.

   நீக்கு
 3. அன்பின் தேவகோட்டைஜி,
  சந்தேகம் மட்டும் இருந்தால் வாழ்வு வீணாகும்.
  தன்னையும் நம்பாமல், கணவனையும்
  தங்கையையும் வேற்றுக் கண்ணோடு பார்க்கும்
  பெண்கள் நன்மை தர மாட்டார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அம்மா ஆம் தங்களது கருத்து சரியே... வருகைக்கு நன்றிமா

   நீக்கு
 4. வணக்கம் சகோதரரே

  பதிவு அருமை. உண்மையோ பொய்யோ... "ஆத்து மணலை எண்ணினாலும் எண்ணி விடலாம். அர்ச்சுனன் பெண்டாட்டியை எண்ண முடியாது".. என்றொரு பழமொழி உண்டு. ஹா.ஹா.. வதந்திக்கு வழக்கில்லையே..! பதிவின் கதாநாயகனுக்கு பொருத்தமான பெயராக தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள்.ஹா. ஹா. கூடவே "சந்தேக கோடு அது சந்தோஷ கேடு" என்ற சொல் வழக்கும் உண்டு. எப்படியோ குடும்பத்தில் சந்தோஷம் குறையாமல் இருந்தால் போதுமென, வீண் கேள்விகளை கேட்டு வம்பு வளர்க்காமல் நீலாம்பரி நல்ல விதமாக நினைக்க வேண்டும். கூடவே அந்த அர்சுனனும்..(இந்த மாதிரி எடக்கு மடக்கான கேள்விகளுக்கு பதிலை பக்குவமாக சொல்ல கற்றுக் கொள்ள வேண்டும்.:)) பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ
   //"ஆத்து மணலை எண்ணினாலும் எண்ணி விடலாம். அர்ச்சுனன் பெண்டாட்டியை எண்ண முடியாது"//

   ஹா.. ஹா.. பழமொழி சூப்பர் பதிவை ரசித்தமைக்கு நன்றி சகோ.

   நீக்கு
 5. மனைவி கேள்வி கேட்கும்போது, வாய்திறந்து பதில் சொன்னாலும் வாயே திறக்கவில்லையென்றாலும் மனைவியிடம் கணவன் மாட்டிக்கொண்டு 'முழி'ப்பது நிச்சயம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா.. ஹா.. அனுபவம் உண்மையை பேசுது அருமை நண்பரே...

   நீக்கு
 6. வீட்டில் கணவன், மனைவி நன்றாக பேசி கொண்டு இருந்தாலும் ஏதாவது சண்டை வந்து விடுவது சகஜம்.
  அதுவும் அர்ச்சுனன் மனவியின் தங்கையை பற்றி எப்போதும் பேசி கொண்டு இருந்தால் சண்டை வரத்தான் செய்யும்.
  நீலம்பாரி மிக அழகாய் இருக்கிறார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.

   நீக்கு
 7. அர்ச்சுனன்...   பேரு பொருத்தம்தான்.   அவரும் எவ்வளவோ வகையில் நூல் விட்டுப் பார்க்கிறார் பாவம்...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி ஹா.. ஹா.. அவங்க அப்பா, அம்மா என்ன நினைப்பில் வைத்தார்களோ...

   நீக்கு
 8. அது ஏனோ எல்லோருக்கும் ஒரு கொழுந்தியாள்! ஒரே பெண்ணாய் இருந்தால் என்ன செய்திருப்பாங்க? நல்லபடியாக் குடும்பம் நடத்தினால் சரி! அர்ச்சுனன் மாதிரி இல்லாமல்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதானே எனக்குகூடத்தான் கொழுந்தியாள் இல்லை என்ன செய்யிறது ?

   நீக்கு
  2. எனக்கு மூனு கொளுந்தியாள்கள். அப்போ ஒன்னுகூட முகம் காட்டிப் பேசினதில்ல. இப்போ நெருங்கி நின்னு பேசுறாங்க மூனு கிழவிகளும்!

   நீக்கு
  3. கொளுந்தி---கொழுந்தி.

   நீக்கு
  4. ஹா.. ஹா.. இப்பொழுதாவது பேசுகிறார்களே...

   நீக்கு
 9. அந்த அர்ச்சுனன் வில்வித்தையில் கில்லாடி. இந்த அர்ச்சுனன் சொல் வித்தையில்!

  பதிலளிநீக்கு
 10. கில்லர்ஜி அர்ச்சுனனை பேசாம நியூஜெர்சிக்கு அனுப்பி எப்படி சமாளிக்கற வழி இல்லேனா பூரிக்கட்டை அடி வாங்காம சமாளிக்கற வழி எல்லாத்துக்கும் ட்ரெயினிங்க்!!!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க மதுரைத்தமிழரிடம் சொல்லி விசாவுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

   நீக்கு
 11. ஆண்கள் சில நேரங்களில் படும் பாட்டையும், அதே நேரத்தில் அர்ச்சுனன் எப்படி எல்லாம் முயற்சிசெய்கிறார்! அர்ச்சுனன் ரொம்பவே யெஸ் மேடம் ஆசாமி போலும் ரேஷன் க்டைக்குப் போய் வந்தால் அவர் வேண்டுவது கிடைக்குமோ?

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //அவர் வேண்டுவது கிடைக்குமோ ?//
   ஹா..ஹா.. அவர் என்ன வேண்டினாரோ...

   நீக்கு
 12. ஹாஹா! அல்டிமேட்! வித்தியாசமாக கற்பனை செய்வதில் உங்களை மிஞ்ச முடியாது. கீப்.இட் அப்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி மேடம்...

   நீக்கு
 13. நல்ல கற்பனை.... ரசித்தேன் ஜி...

  பதிலளிநீக்கு
 14. ரொம்ப நேரமாகியும் ரேஷன் கடைக்கு சென்ற அர்ச்சுனன் வீட்டிற்கு வரவில்லையாம். தகவல் அவர் நீடாமங்கலத்தில் வீடு தேடி கொண்டிருக்கிறாராம் குடும்பத்தோடு(மனைவி, குழந்தையோடு,...) குடிபெயர்வத்திற்கு.

  எப்பூடி ...............

  https://vannasiraku.blogspot.com/

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களது கோணம் இரசிக்க வைத்தது.

   நீக்கு
 15. நீடாமங்கலம் விடுதிக்குச் சென்றால் அவர் தப்பிவிடுவாரா என்ன?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக முனைவர் அவர்களே...
   அதானே வாட்ச்மேன் வாட்ச் செய்துக்கிட்டே இருப்பாரே...

   நீக்கு