மாமன் மகனும், அத்தை மகளும்...
பெண்
கோணக்காலை
இழுத்து போகும்
கோதண்டம்
கருத்த மச்சான்
கோவிலூரு
சந்தைக்கா போறீக
கோவிக்காமல் கேளு கொஞ்சம்
ஆண்
கோகிலமே
சொல்லேன்டி
கோஹினூர்
வைரமே
கோவிக்க
என்ன இருக்கு
கோமுட்டி
மூத்த மகளே
பெண்
கோபால்
பல்பொடி தீர்ந்துருச்சு
கோலப்பொடியும்
வாங்கி வாயா
கோமதி
மகளுனக்கு வேணாமா
கோடாங்கி
மாமா எளைய மகனே
ஆண்
கோவிந்தன்
மகன் என்னை
கோழைப்பயலா
ஆக்கிடாதே
கோபம்
உனக்கு வேண்டாமடி
கோமயிலே
எளங்குயிலே
பெண்
கோளாறு
வேலையை காட்டாதே
கோணங்கித்தனமாக
செய்யாதே
கோடித்துணி
எடுத்து வாயேன்
கோடீஸ்வரனாகும்
மச்சானே
ஆண்
கோனார்
உரையும் உன் தங்கச்சி
கோமளந்தான்
வாங்கி கேட்டா
கோக்குமாக்கு
செஞ்சு வாங்கியாறேன்
கோபப்படாதே
நீயும் எனக்கு வேணும்.
இருவரும்
தன்னானே
தன்னானே தனனானே
தன்னானே
தன்னானே தனனானே
தன்னானே
தன்னானே தனனானே
தன்னானே
தன்னானே தனனானே
கோதண்டமும்,
கோகிலமும் ஆடிப்பாடி வாழ்க பல்லாண்டு.
என்னது "நீயும் எனக்கு வேண்டுமா...?'
பதிலளிநீக்குஇதான் கோக்குமாக்கு...!
،வாங்க ஜி எனக்கும் அப்படித்தான் தோணுது...
நீக்குவித்தியாசமா நீங்க முயற்சி பண்ணறீங்க. பாராட்டுகள்
பதிலளிநீக்குவருக தமிழரே தங்களது வருகைக்கு நன்றி
நீக்குஹாஹாஹா, பாடல் மட்டும் இல்லை, கடைசியில் சொல்லும் "நீயும்" கூட வித்தியாசமாத் தான் இருக்கு. எப்படி எல்லாம் சிந்திக்கிறீங்க!
பதிலளிநீக்குவருக சகோ தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.
நீக்குசப்பாணி மனக்கண்முன் வந்து நிற்கிறார்!
பதிலளிநீக்குவாங்க ஸ்ரீராம்ஜி யாரு... உலக்கை நாயகனா ?
நீக்குஎமக்குத்தான் பாடவும் ஆடவும்.. வராது என்பதால் பெருமையோடு வாழ்த்துகிறேன்.கோதண்டமும் கோகிலாவும் ஆடிப்பாடி வாழ்க! பல்லாண்டு!!
பதிலளிநீக்குவருக நண்பரே வாழ்த்துவோம்.
நீக்குஅங்கே தடை செய்யப்பட்டிருந்த தங்களது தளம் இங்கே கிடைக்கின்றது..
பதிலளிநீக்குவாழ்க நலம்..
கோதண்டம் வாழ்க..
கோகிலம் வாழ்க..
கோமளமும் வாழ்க..
வாங்க ஜி தங்களது வருகை கண்டு மகிழ்ச்சி
நீக்குதொடர்ந்தால்... மப்ஜூத் ஸ்யாதா...
கிராமத்து மக்கள் பேசுவது போல எழுதியிருக்கின்றீர்கள். இப்போதெல்லாம் கிராமத்து மக்களும் இப்படித்தான் என்று படம் சொல்கின்றதோ?
பதிலளிநீக்குதுளசிதரன்
வருக பாட்டோடு படமும் பொருந்த வேண்டுமே...
நீக்குகில்லர்ஜி! நீயும் ன்னு சொல்லி ...இத விடமாட்டீங்க போல!!
பதிலளிநீக்குமுன்னரே நீங்க இப்படியாக எழுதிய நாட்டுப்புற ஸ்டைல் பாடல்களுடன் ஒப்பிடும் போது இன்னும் அது போல எழுதியிருக்கலாமோ என்று தோன்றுகிறது
என்றாலும் உங்கள் பாடல் எழுதும் திறமை அசாத்தியம் தான் கில்லர்ஜி
கீதா
தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.
நீக்குபடத்தில் தாத்தா கில்லர்ஜி!!! அப்ப இது பழைய நினைவோ!! ஹாஹாஹா
பதிலளிநீக்குகீதா
ஆம் படத்தில் இருப்பது தாதாதான்.
நீக்குஉங்கள் புதிய சிந்தனைகளும், படைப்புகளும் ஆச்சர்யம்!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும், கருத்திற்கும் நன்றி மேடம்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குகோ எழுத்தில் ஆரபித்து பாடல் முடியும் வரை ஆரம்ப எழுத்து கோ என்ற எழுத்துடனே தொடரும்படி பாடலை அமைத்திருப்பது அருமையாக உள்ளது ரசித்தேன். பாட்டுப் படத்திற்கு பொருத்தமாய் உள்ளது பதிவும.
உங்களின் எழுத்து திறனை எண்ணி வியக்காத பதிவில்லை/நாளில்லை. பாட்டு எழுதுவது உங்களுக்கு கைவந்த கலையாகி விட்டது தொடருங்கள்.வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி. தாமதமாக வந்தமைக்கு மன்னிக்கவும். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வருக சகோ தங்களது விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.
நீக்குஆஹா... என்னவொரு பாட்டு! கலக்கல் தான் கில்லர்ஜி!
பதிலளிநீக்குவாங்க ஜி தங்களது வருகைக்கு நன்றி.
நீக்குகோதண்டமும், கோகிலமும் வாழ்க பல்லாண்டு!
பதிலளிநீக்குவருக சகோ தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.
நீக்குDifferent writing is your trade mark
பதிலளிநீக்குவாங்க ஐயா நலமா ?
நீக்கு