தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், ஆகஸ்ட் 01, 2022

அண்ணன் நாகேந்திரன் (1)


உண்மைச்சம்பவம் 1996 அபுதாபி அல் முனியாண்டி மருத்துவமனை.
 
வார்டு மூன்று பேஷண்ட் ரூம் லேபர்கள் நான்கு பேருக்கும் ஏற்கனவே பிலிப்பைன்ஸ் (பெயர் லூஸ்வி மிண்டா) லேடீஸிடம் (Yours Hero) சொல்லி விட்டுச் சென்றதால் அவள் ட்ரேயில் கொண்டு வந்து தந்த ஐந்து தேநீரில் நான்கு பேரும் எடுத்துக் கொள்ள மீதம் ஒன்று இருக்க.... சூப்பர்வைசர் திரு. நாகேந்திரன் வந்து விடுகிறார் அவளிடம் ஆங்கிலத்தில் கேட்கிறார்...

This is for whom ?
This is for.......
சூப்பர்வைசர் மிரண்டு போய் பிலிப்பைனி வாயிலிருந்து இனிய தமிழ் வார்த்தையா... அதுவும் இப்படியா ? குழம்பி போய் மீண்டும் கேட்கிறார்.
Who ?
For.......
 
ராஜமாணிக்கம் (நால்வரில் ஒருவர்) இவ என்ன சொல்றா ?
இல்லை சார் அவ சொல்றது நம்ம, கில்லர்ஜியைத்தான்....
என்ன.........து..... கில்லர்ஜியவா ?
ஆமா..... சார்.
ஆமா கில்லர்ஜி எங்கே ?
 
அவரு பதினேழாவது வார்டுல டிஸ்சார்ஜ் இருக்குனு சிஸ்டர்ஸ் பிலிப் பண்ணுனாங்க கேட்க போயிருக்காரு இப்ப வந்துடுவாரு...
கில்லர்ஜியை இவளுக இப்படித்தான் சொல்லுவாளுகளா ?
(தலையை சொறிந்து கொண்டே) ஆமா சார்...
என்ன விளையாடுறீங்களா... இது எவ்வளவு நாளா ?
ஆரம்பத்திலிருந்தே... இப்படித்தான் சார்..
ஆரம்பத்திலிருந்தா ? ? ?
 
பிலிப்பைனியிடம் சற்றே கோபமாக... Next time don’t tell like that
Why ?
That’s not good
That’s the name correct ?
No, his name is Killergee, so u have to call Killergee
What is the meaning of...........
.............. That’s not good.
What is the meaning ? சற்றே கோபமாக
Ok I am talking to Mr. Killergee so I will come back later (சூப்பர்வைசர் வெளியேற)
Mr. மனிக்காம் (புரிந்து கொள்க மாணிக்கம்) what is the meaning of.......... கோபமாக
Sorry, that meaning…..
 
What meaning ? don't tell me now I will page to manager
No no need please it will be a problem for Mr. Killergee
Ok tell…
that's  not a bad word, this meaning is son of uncle and aunty as you say for husband….
Sure ?
Yes..
 
But Why does supervisor tell why that the meaning is bad ?
No no that is meaning this if u have any doubt, ask any Indian who knows Tamil
Confirm me, whether the meaning is husband ?
Yes confirmed.
It’s ok no problem, thank you. Inform my ……………….. To come to my kitchen
Ok thanks please don’t tell to manager
It’s ok……………. is my best friend
 
நான் ஜாலியாக ’’போக்கிரிக்கு போக்கிரி ராஜா’’ பாட்டை கவனமாக சத்தமில்லாமல் முணு முணுத்துக் கொண்டே..... ராஜநடை போட்டு வரும்போதே... லூஸ்வி மிண்டா என்னைப் பார்த்து விட்டு கையசைத்தாள் நான் கிச்சனுக்குள் நுழைந்தேன்... உள்ளே இருவர் ஒருத்தி லூஸ்வி மிண்டா மற்றவள் கேத்ரின். கேத்ரின் வரவேற்றாள் என்னை இப்படி...
ஹலீக்கா, அஷாவா லலாக்கி
வாங்க, புருஷனே
ஒரு நிமிடம் ஆடிப்போய் விட்டேன்...
அனோ ?
என்ன ?
அஷாவா லலாக்கி.
புருஷன்
பாகெட் ?
ஏன் ?
 
A/c யிலும், எனக்கு வியர்க்கத் தொடங்கியது
கேட்டுக் கொண்டிருக்கும்போதே ‘’டங்’’ என ஒரு சத்தம் லூசு முண்டே (லூஸ்வி மிண்டாவை இப்படித்தான் அழைப்பேன்) எனது தலையில் கொட்டிய சத்தமே அது.
பாகெட் ?
ஏன் ?
லகாத், அலம்கோ
எல்லாம் தெரியும்
 
கொமஸ்த்தா ?
எப்படி ?
சட்டென சொன்னேன் அவர்(ள்)களிடம்....
நாக்ஸிஸிஸி, அஹோ மமயா தராத்தின்
மன்னிக்கவும் நான் அப்புறம் வருகிறேன்
 
உடன் நான் வெளியேறக் காரணம் தூரத்தில் சூப்பர்வைசர் நாகேந்திரன் வந்து கொண்டிருந்தார்....
 
தொடரும்... நாளை மறுதினம்

31 கருத்துகள்:

  1. இந்தப் பகுதியை முழுமையாக ரசிக்க அடுத்த பகுதி வரை காத்திருக்கணுமா?

    பிலிப்பைன்ஸ் மொழிலாம் கத்துக்க வாய்ப்பிருந்தும் கற்றுக்காமலிருந்துவிட்டேன். பிலிப்பைன்ஸ் மூன்று தடவை சென்றிருக்கிறேன். சுற்றிப்பார்த்துமிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே...
      ஓ... அப்படியா ? மகிழ்ச்சி மணிலாவில் "கொசுக்கள்" அதிகமாக இருந்திருக்குமே...

      நீக்கு
    2. அந்த ஊர் சூப்பர்.... எதுவுமே பெரிய விஷயமில்லை அங்கு. அந்த ஊரில் தங்கியிருந்தபோது ஹோட்டலில் இந்திய உணவு (காலையில்) பரிமாறினார்கள், உப்புமா, அவல் உப்புமா, பொங்கல், தயிர்சாதம், ஊறுகாய் என்பது போல. இதற்குக் காரணம், அங்கு மருத்துவம் படிக்க இந்தியர்கள் அதிகம் செல்வதுதான்.

      நீக்கு
    3. எல்லாம் சரிதான் உணவு விசயத்தில் கவனமாக இருக்க வேண்டும் பொரி அரிசி போல கொடுப்பார்கள். ஸ்நாக்ஸ் என்று வாங்கி கொரிப்போம் நன்றாகத்தான் இருக்கும்.

      இறுதியில் அது என்னவென்று கேட்டால்தான் தெரியும் அது பூனை (Cat) என்று...

      நீக்கு
  2. கோடிட்ட இடங்களில் என்ன வார்த்தை வந்திருக்கும்....?   மாமோவ்?  மச்சான்?  அயித்தான்?!!  என்னதான் வார்த்தை சொல்லித் தரப்பட்டிருக்கும் அந்தப் பெண்ணுக்கு?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஸ்ரீராம்ஜி அந்தப் பெண்ணுக்கா ?

      ஹா.. ஹா.. நமீதா மாதிரி சிந்தித்து இருக்கின்றீர்கள்.

      எத்தனை நபர்கள் என்பதை அடுத்த பகுதியில் அறிக...

      நீக்கு
    2. அதான் சொல்லிருக்காரே ஸ்ரீராம்....Son of uncle and aunti!!!! மாப்பிள்ளை??!! ஹாஹாஹா

      கீதா

      நீக்கு
    3. இல்லைனா...மாமா!!!

      கீதா

      நீக்கு
    4. இப்படி எல்லாம் குதற்கமாக யோசிக்கப்படாது.

      நீக்கு
  3. ஒண்ணுமே புரியலை. என்றாலும் ரசித்தேன். சிரித்தேன். உங்கள் மொழித்திறமை வியக்க வைக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ ஒருவேளை அடுத்த பாகத்தில் புரியலாம் வருகைக்கு நன்றி

      நீக்கு
  4. கோடிட்ட பகுதிகளை அடுத்த பகுதியில் அறிய முடியுமா...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி பார்க்கலாம் ? தங்களின் வருகைக்கு நன்றி

      நீக்கு
  5. நகைச்சுவையாகச் செல்கிறது. கணவன் என்ற அர்த்தம் என்று சொல்லி தமிழ் தெரியாத அப்பெண்ணை மாட்டி விடுகிறார்களோ?

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மாட்டி விட்டது யாரோ... யார் அறிவாரோ...

      நீக்கு
  6. ஹாஹாஹாஹா....அந்த லூஸ்வியையும் கில்லர்ஜியையும் நல்லா மாட்டிவிட்டுட்டாங்களே கில்லர்ஜியோட சகாக்கள்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தவறு யார் மீது என்பது இனிமேல்தான் தெரியும்.

      நீக்கு
  7. மொழி தெரியாதவர்களுக்கு ஏதாவது சொல்லி கொடுத்து சிரிப்பார்களே! அது போன்ற பதிவா?
    ரேவதி நடித்த ஒரு படத்தில் இந்தி மொழி பேசுபவருக்கு தமிழ் தப்பாக சொல்லி கொடுத்து அவர் பேசுவதை கேட்டு சிரிப்பார் . அது போல இருக்கிறது.
    உங்களுக்கு பல மொழி தெரிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.

      நீக்கு
  8. மருத்துவமனை பேர் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  9. பல்லு போன காலத்தில் பக்கோடாவா?..

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. நகைச்சுவையாக உள்ளது. ஒரு மொழிகளின் அர்த்தங்கள் சரியாக தெரியாவிட்டாலும், இல்லை, நாமே அதை மாற்றி சொல்லி விட்டாலும், அர்த்தம் அனர்த்தமாகி விடும். உங்களின் பெயர் நாவில் நுழையாது அந்த பிலிப்பைன்ஸ் பெண் மாற்றி சொல்லி விட்டார்களா? அடுத்தப்பதிவில் தெரிந்து விடும். காத்திருக்கிறேன். நீங்கள் அனைத்து மொழிகளும் கற்று தேர்ந்திருக்கிறீர்கள். வாழ்த்துகளுடன் பாராட்டுக்கள்.

    நேற்று எனக்கு நேரமின்மையால் பதிவுக்கு இன்று வந்து தாமதமாக கருத்து தருவதற்கு மன்னிக்கவும். பகிர்வுக்கு நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கும், பாராட்டியமைக்கும் நன்றிகள் பல!

      நீக்கு
  11. நகைச்சுவையாக செல்கிறது. அடுத்த பகுதிக்கு காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது காத்திருப்புக்கு நன்றி

      நீக்கு