தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, ஆகஸ்ட் 19, 2022

நெடும் பயணம்

 

நானும் பயணிக்க தொடங்கி விட்டேன்
என்னுடன் எனது நண்பனும் வருகிறான்
பெட்ரோலின் விலை நாளும் உயர்கிறதே
 
இந்த மோசடி அரசை கேட்பார் உண்டோ
இதோ நண்பனோடு புறப்பட்டு விட்டேன்
டெல்லியின் பாராளுமன்றத்தை நோக்கி
 
அங்கு போய் நாக்கை புடுங்குவது போல்
நான்கே நான்கு கேள்வி நானே கேட்பேன்
பிறகு நான் நாயடிபட்டு நாடறியப்படலாம்
 
ஊனமான ஊடகங்களே என்னோடு வரலாம்
என்னை உசுப்பி விட்டு விவாதமாக்கலாம்
எனக்கு என்ன ஆனாலும் சரி என் நண்பனை
 
பாதுகாப்பாய் இல்லத்தில் நிறுத்தி விடவும்
உம்மிடம் ஒரு கோரிக்கை நண்பர்களே
என் நண்பனை கழுதை என சொல்லாதீர்கள்
 
கில்லர்ஜி தேவகோட்டை
 
Chivas Regal சிவசம்போ-
இவரு யாரை கழுதைனு சொல்லக் கூடாதுனு சொல்றாரு ?
 

40 கருத்துகள்:

  1. 'சத்தியமே லட்சியமாய் கொள்ளடா' என்று பாடாத குறையாய் கழுதையில் பார்க்கிறார்களே... பின்னணியும் சூப்பர்!



    அதற்கான கவிதையும் நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஸ்ரீராம்ஜி கவிதையை ரசித்தமைக்கு நன்றி.

      நீக்கு
  2. // அங்குபோய் நாக்கைத் புடுங்குவதுபோல் 
    நான்கே நான்கு கேள்வி நானே கேட்பேன்..//

    உங்கள யார் உள்ளே விடுவார்கள்?  வாட்ச்மேனிடம் தான் கேட்கோணும்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாட்சுமேனை தனியாக நாலு கேள்வி கேட்போம்.

      நீக்கு
  3. நடராஜா வாகனம்தான் நல்லது. இல்லைனா பேட்டரி கார். எதுக்கு பெட்ரோல் டீசல் வாகனத்தை தனிப்பட்ட உபயோகத்துக்கு வைத்துக்கொள்ளணும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே தங்களது கருத்து சரியே....

      நீக்கு
  4. கவிதை நன்று. அந்த நாலு கேள்வியோடு ஏன் அரசியல்வாதிகள் மாத்திரம் பெட்ரோல் பங்க் வைத்திருக்கிறார்கள் என்பதையும் கேளுங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லது நிச்சயம் கேட்கிறேன்... தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி

      நீக்கு
  5. ஆகா
    தங்களின் பயணம் வெல்லட்டும் கவிஞரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி.

      நீக்கு
  6. படிப்பறிவில்லா தற்குறி வெங்கோலன் வர மாட்டான்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி கடுதாசியாவது கொடுப்போம். தங்களது வருகைக்கு நன்றி

      நீக்கு
    2. இப்போதைய ஆய்வில் உலகின் பாராட்டப்பட வேண்டிய தலைவர்களில் முதலிடம் இவருக்குத் தான். இதைச் செய்தது எந்த இந்திய ஜால்ராப் பரிவாரக் கூட்டங்கள் அல்ல. வெளிநாட்டினரின் ஆய்வு. போன வருஷத்தைத் தொடர்ந்து இந்த வருஷமும் முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கார். கண்களைத் திறந்து கொண்டே மற்றவர்களைப் போல் குற்றம் கண்டு பிடிப்பவர்களால் அல்ல.

      நீக்கு
  7. அருமை.. இன்னும் இரண்டு கேள்வி சேர்த்துக் கேளுங்கள்..

    பதிலளிநீக்கு
  8. கவிதை அருமை. பயணம் நன்றாக இருக்கிறது.
    காணொளி நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. நல்ல கவிதையோடு பயணிக்கும் தங்களுக்கு வாழ்த்துகள். கவிதையை படித்து ரசித்தேன். தங்களுக்கு என்ன ஆனாலும், கூட வரும் நண்பனின் பாதுகாப்பை வலியுறுத்தும் தங்களின் மனிதாபிமானம் வாழ்க. பாராட்டுக்கள். காணொளியம் நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு
  10. உடன் வரும் நண்பன் உதை வாங்குபவன் அல்ல.உதை கொடுப்பவன்.பயப்பட வேண்டாம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா ஹா.. ஹா.. நண்பனை விட்டு உதைக்க விடலாமோ... ?

      நீக்கு
  11. பயணப் போட்டி அருமை

    பதிலளிநீக்கு
  12. கில்லர்ஜி....நல்லாருக்கு உங்க கவிதை. அது சரி நாக்கைப் பிடுங்கிக் கொள்றாப்ல உள்ள அந்த நாலு கேள்விகள் என்னனு சொல்லாம விட்டுட்டீங்களே!!! ஹாஹாஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அதை நேரடியாக பார்ட்டியிடம் சொல்லணும்.

      நீக்கு
  13. கடைசி வரியை ரசித்தேன் ஆமாம் கில்லர்ஜி கழுதை என்று யாரையுமே எதையுமே சொல்லக் கூடாது. அது பாவம் நல்ல புத்தியுள்ள ஜீவன்.

    கழுதைமீது கூட சவாரி வேண்டாம். நடராஜா செர்வீஸ், இல்லைனா பொதுப் போக்குவரத்து. எங்கள் பகுதியில் பேட்டரி கார் கொஞ்சம் பேர் வைச்சிருக்காங்க...தனிப்பட்ட உபயோகத்துக்கு.

    எல்லோரும் ஆளுக்கு ஆள் வீட்டிலேயே உள்ள நாலு பேரும் நாலு, 5 கார் வைச்சுருக்காங்களே!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் பெட்ரோல் விலை ஏறினாலும் கார்கள் வாங்குவது குறையவில்லை.

      நீக்கு
  14. மற்றொரு கருத்தைக் காணலியே.....ஸ்பாம்ல இருக்கா பாருங்க கில்லர்ஜி

    காணொளியும் பார்த்தேன். பாவமா இருக்கு கழுதை....குழந்தையின் குரலில் பின்னணி சூப்பர்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் இதோ ஸ்ஃபாமில் இருந்தது.
      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி

      நீக்கு
  15. கழுதை மேல நீங்கதான் உக்காந்து போறீங்களோன்னு நினைச்சேன்!!! ஹாஹாஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த புகைப்படம் எஜிப்த்தில் எடுத்தது.

      அங்கு குதிரை போல் உபயோகிப்பார்கள்.

      நீக்கு
  16. சொல்றது என்னமோ பெட்ரோலும், டீசலும் விலை உயர்வுனு. ஆனால் அதுக்காக மக்கள் வாகனங்களின் பயன்பாட்டைக் குறைத்ததாகத் தெரியலை. ஒரு பக்கம் குற்றம்/குறை சொல்லுவது.இன்னொரு பக்கம் வாகனங்களைப் பயன்படுத்துவது குறைப்பதெல்லாம் இல்லை. வெளிப்படையான தாக்கம் என்றால் ஆட்டோ/ட்ராவல்ஸ்காரங்க விலையை ஏத்தி இருப்பது மட்டுமே. அப்படியும் மக்கள் பயணிப்பதில் குறைவில்லை. எல்லோரும் போய்க் கொண்டு தான் இருக்காங்க. உங்களில் மாநில அரசிடம் நெருங்கியவங்க இருந்தால் மாநில நிதி அமைச்சரிடம் சொல்லித் தமிழக அரசு தனியாக வசூல் செய்யும் வாட் வரியைக் குறைக்கச் சொல்லிக் கேளுங்க. அதை ஏன் யாருமே சொல்லுவதில்லை?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெட்ரோல் விலை உயர்வை கட்டுப்படுத்த சொன்னால் ? பயன்பாட்டை குறைக்க சொல்வது நியாயமா ?

      யாரும் அவசியம் இன்றி பயணிப்பது இல்லை.

      நீக்கு
    2. இன்னொரு கருத்து எங்கே போச்சு? தெரியலை. பயன்பாட்டைக் குறைக்கணும்னா என்ன அர்த்தத்தில் சொல்கிறேன் என்பதை யோசித்தால் புரியும். நண்பர்கள் நாலைந்து பேர்கள் சேர்ந்து வாரம் ஒரு முறை ஒருத்தர் வண்டியில் எனப் போய்க்கலாம். காய்கள் வாங்க, மாலுக்குப் போக, திரைப்படம் போகனு வண்டியை எடுப்பதைக் குறைச்சுக்கலாம். யோசிச்சுப் பார்த்தால் இப்படி எத்தனை அநாவசியமான செலவுகள் என்பது புரியும்.

      நீக்கு
    3. மத்திய அரசு பெட்ரோல் விலையைக் குறைத்ததும் அப்போ மாநில அரசுகளும் "வாட்" வரியைக் குறைக்கணும்னு சொன்னதும், அப்போ நடந்த வாத, விவாதங்களும் மறந்துட்டீங்க போல! ஜிஎஸ்டி கூட்டத்துக்கு அழைத்தால் போக மறுக்கும் நிதி அமைச்சர் மற்ற விஷயங்களில் மத்திய அரசைக் குறை கூறுவது மட்டும் நிற்கவில்லை.

      நீக்கு
    4. பணக்காரர்கள் சொகுசாகவே வாழ்ந்து பழகியவர்களுக்கு பெட்ரோல் விலை கூடியதால் தங்களது வசதிகளை குறைப்பது சாத்தியப்படுமா ?

      இதனால் ஏழைகளுக்குத்தான் மேலும் கஷ்டம்.

      நீக்கு
  17. மின்சாரமும் இதே கதை தான். பணம் கட்டவேண்டியது கோடிக்கணக்கில். ஆனால் குற்றம் சொல்லிக் கொண்டிருப்பது மத்திய அரசை. பல்லைக் கடித்துக் கொண்டு மக்களிடம் "மத்திய அரசு/சேச்சே/ ஒன்றிய அரசு தமிழகத்தை மட்டும் வஞ்சிக்கிறது என்று சொன்னால் தீர்ந்தது. மக்கள் கவனம் திசை திரும்பிடுமே! இவங்க தப்பிச்சுக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் சொல்வது இரண்டு அரசுகளும் வரியை நீக்கவேண்டும் என்பதே...

      நீக்கு
  18. படத்திலுள்ள கழுதையை விட நிஜ கழதையை தினமும்தான் நான் பார்க்கிறேன். யோகம் வந்தபாடில்லை.. இருக்கிறததையும் பறிகொடுக்கிற நிலைதான் ஏற்படுகிறது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனி நல்ல நேரம் பார்த்து கழுதையை பாருங்கள் நண்பரே...

      நீக்கு