வெட்கம் என்றும் எனக்கில்லையே
வெட்கப்படும் வெங்கலச்சிலையே
வெள்ளை நிற வெள்ளிச்சிலையே
வெண்ணை வனப்பு வண்ணகலையே
மஞ்சள் நிறத்து மரகதச்சிலையே
மரிக்கொழுந்து மண முல்லையே
மந்திரப்புன்னகை மருதாணியே
மகிழம்பூ மண மல்லிகையே
தங்க ரதத்து தங்கச்சிலையே
தளதளக்கும் தளிர்க்கொடியே
தனம் தரும் தண்ணீர்க் குடமே
தஞ்சாவூரு தந்த தம்புராட்டியே
முல்லை வனத்து கொடியே
முகம் காட்டி விடு கிளியே
முத்து மாமாவின் சொத்தே
முத்தமிட்டால் எனக்கு பித்தே
கில்லர்ஜி தேவகோட்டை
Chivas Regal சிவசம்போ-
தங்கச் சிலையை எவனும் அடகு வச்சிடப் போறான்...
வெட்கப்படும் வெங்கலச்சிலையே
வெள்ளை நிற வெள்ளிச்சிலையே
வெண்ணை வனப்பு வண்ணகலையே
மரிக்கொழுந்து மண முல்லையே
மந்திரப்புன்னகை மருதாணியே
மகிழம்பூ மண மல்லிகையே
தளதளக்கும் தளிர்க்கொடியே
தனம் தரும் தண்ணீர்க் குடமே
தஞ்சாவூரு தந்த தம்புராட்டியே
முகம் காட்டி விடு கிளியே
முத்து மாமாவின் சொத்தே
முத்தமிட்டால் எனக்கு பித்தே
தங்கச் சிலையை எவனும் அடகு வச்சிடப் போறான்...
கவிதை அருமை.... ஆனால் அந்த காலத்து ஸ்டைலாக இருக்கு கில்லர்ஜி... இந்த காலத்திற்கு ஏற்றற் போல எழுதுங்க ஐடியா வேணும் என்றால் தனுஷ். சிம்பு இவர்களை தொடர்பு கொள்ளவும் ஹீஹீ
பதிலளிநீக்குவருக தமிழரே...
நீக்குஅப்படீனாக்கா என்னை இங்கிலீஷ் பாட்டு எழுதச் சொல்றீங்க...
இங்கிலீஸ் பாட்டு எழுத சொல்வதுபோல் தெரியவில்லையே... சிம்புவிடம் ஐடியா கேட்க சொல்வதைப் பார்த்தால் ஏதோ "Beep Song" எழுத சொல்வது போல தெரிகிறதே...
நீக்குஹா.. ஹா.. அப்படியும் இருக்கலாமோ...
நீக்குவெட்கம் எப்பவுமே அழகுதான். அருமை ஜி.
பதிலளிநீக்குவருக ஸ்ரீராம்ஜி வருகைக்கு நன்றி
நீக்குபடமும் அருமை, கவிதையும் அருமை.
பதிலளிநீக்குவருக சகோ பதிவை ரசித்தமைக்கு நன்றி
நீக்குபடத்தோடு போட்டிப் போடும் கவிதை. ரசித்தேன் நண்பரே
பதிலளிநீக்குவருக நண்பரே தங்களது வருகைக்கு நன்றி.
நீக்குஅழகிய பெண்ணின் படத்தைப் பார்த,து கவிதை ஊற்று பிரவாகமாக வருகிறதே. ரசித்தேன்.
பதிலளிநீக்குவருக தமிழரே கவிதையை ரசித்தமைக்கு நன்றி
நீக்குஅழகிய பெண், மனதைச் சலனப்படுத்தி, உங்களுக்குள் கவிதையூற்றைப் பொங்கச் செய்திருக்கிறாள். நன்று.
பதிலளிநீக்குவருக தமிழரே சயனநிலைக்கு போற நேரத்திலா... சலனப்படப் போறோம் ?
நீக்குஆகா..
பதிலளிநீக்குஇது தான் அழகு..
அழகே அழகே அழகு..
அன்பின் நிலையில்
பழகு..
அமுதக் கலையாய் நிலவு
அழகிய விழியால் குலவு..
வாங்க ஜி தங்களது கவிதை வழி கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.
நீக்குசும்மா தகர டப்பா பாட்டெல்லாம் எழுதாமல்
பதிலளிநீக்குஇப்படி அழகாய் எழுதி தேவ கோட்டையின் புகழை நிலைநாட்டுங்கள்..
வாங்க ஜி அந்த தகர டப்பா பாடல் இன்னும் பத்து இருக்கிறது. அதையும் வெளியிட்டு விடுகிறேன் ஜி. தங்களது ஆலோசனைகளுக்கு நன்றி.
நீக்கு//தகர டப்பா பாடல் இன்னும் பத்து இருக்கிறது///
நீக்குஆஹா மோடிஜியை பற்றி நீங்கள் எழுதிய பாடல்களாகத்தான் அந்த பாடல்கள் இருக்கும் மோடிஜியின் பேச்சு வெற்று தகரடப்பாவில் எழும் ஒசையை போலத்தான் இருக்கும் சத்தம் பலமாக இருக்கும் ஆனால் உள்ளே ஒன்றும் இருக்காது
தங்களது கணிப்பு சரியே ஹி.. ஹி.. ஹி..
நீக்கு// தஞ்சாவூரு தந்த தம்புராட்டியே..//
பதிலளிநீக்குஇது ஏது வம்பா இருக்கு!
ஹா.. ஹா.. தத்துவம் சொன்னால் இரசிக்கணும் இப்படி கேள்வி கேட்கப்படாது.
நீக்குதஞ்சாவூர் தந்த இளவரசியே என்று சொல்வதில் துரை சாருக்கு ஏன் வம்புபோலத் தெரியுது? தஞ்சாவூரு தந்த தங்கப் பதுமையே என்றால் இன்னும் இரசித்திருப்பாரோ?
நீக்குதம்புராட்டி மலையாளம் என்பதால் ஏதும்... பிணக்கா ?
நீக்குஹையோ கில்லர்ஜி நான் அதைத்தான் சொல்ல வந்து இக்கருத்துகண்ணில் பட்டதால் இங்கு வந்துவிட்டேன்...நெல்லை சொல்லியிருப்பது போல் துரை அண்ணா அதை ரசித்திருப்பார்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
நீக்குகீதா
த.த.த. என்று ரைமிங்காக வந்தது அதற்காக தம்புராட்டிக்கு வாய்ப்பு கொடுத்தேன்.
நீக்குஅருமை ஜி... ரசித்தேன்...
பதிலளிநீக்குவாங்க ஜி மிக்க நன்றி.
நீக்குபம்பரக்கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே
பதிலளிநீக்குதங்கச்சிலைபோல் வந்து மனதை தவிக்கவிட்டாளே
வாங்க ஐயா சந்திரபாபு பாடலோடு வந்தமைக்கு நன்றி
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. அழகான படம் அழகான வெட்கம். அழகான கவிதை. அத்தனையுமே அழகாக உள்ளது. மிகவும் ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வருக சகோ பதிவை இரசித்து கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி
நீக்குஅழகான படத்திற்கு அருமையான கவிதை.
பதிலளிநீக்குவருக சகோ தங்களது வருகைக்கு நன்றி
நீக்குபோகிற போக்கைப் பார்த்தால் கவியரசு வைரமுத்துவை ஓரம் கட்ட வைத்துவிடுவீர்கள் போலிருக்குதே!!.. ம்..ம்ம்... கள்ளிக்காட்டு இதிகாசத்தை போல விரைவிலேயே தேவகோட்டை இதிகாசத்தையும் எதிர்பார்க்கலாமோ?!...
பதிலளிநீக்குவருக நண்பரே அவ்வளவு தூரம் வேண்டாம் இருப்பினும், முயன்றவரை முயல்வோம் நம்மை அடையாளப்படுத்தி விட்டு மறைவதே பிறப்பின் பயனாகும். தங்களது வருகைக்கு நன்றி
நீக்குகவிதை நல்லாருக்கு கில்லர்ஜி. ரசித்தேன்.
பதிலளிநீக்குகீதா
கவிதையை இரசித்த மைக்கு நன்றி
நீக்குமோனை ஒருங்கிசைய மொழிந்தகவி தேனூற
பதிலளிநீக்குதானைத் தலைவனெனும் தஞ்சாவூர் மாமாவின்
கானக் குயிலவளின் காதல் அசைவுகளை
மானத் தமிழனிவன் மனசுக்குள் சுமந்தானே!
அருமை ஜி தொடர்ந்து எழுதுங்கள்
வருக பாவலரே தங்களது வருகைக்கு நன்றி
நீக்குபெண்ணே!
பதிலளிநீக்குஇப்படியும்
"ஒரு உயிர்கொல்லியை"
எந்த ரசாயனத்தை வைத்துக்
கண்டுபிடித்தார்கள்?
__________________________________
ருத்ரா
தங்களது கவித்துவமான கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி நண்பரே...
நீக்குஅழகிய படத்தை பார்த்து எழுந்த கவிதையும்அழகு.
பதிலளிநீக்குவருக சகோ ஆம் படத்தால் எழுந்த கவிதைதான்.
நீக்கு