தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, அக்டோபர் 28, 2022

அகவை எட்டு

 
    னது முகவுரையில் நான் 300 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து வாழ்ந்து மறைந்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருப்பேன் இதெல்லாம் புதுமைக்காக சொல்லப்பட்டது அல்ல... என் அடி மனதின் ஆழத்தில் படிந்துள்ள உண்மையான படிமங்கள் ஆம் நண்பர்களே... எனக்கு சமூக அவலங்களை கண்டு பொறுக்க முடிவதில்லை இது விபரமறிந்து உலகையறிந்த நாள்முதல் உள்ளவை.
 
இதம்பாடல்1977-ல் எம்.ஜி.ஆர் தேர்தல் பிரச்சாரத்துக்கு திறந்தவெளி வேனில் உட்கார்ந்து கொண்டு வந்த வேனின் எதிர் புறமாக தார் சாலையில் திடீரென விழுந்து கும்பிட்டு இரண்டு கைகளும் சிராய்த்து ரத்தக்களரியாகி நின்ற திருமணமான 35 அகவை நிரம்பிய வாலிபன்.
 
திரு. கணேசனை விரல்களை அசைத்து தவறு என்று சொல்லி மாலையைத் தூக்கி வீசிய எம்.ஜி.ஆரை இதெல்லாம் நடிப்பு என்றும், அப்பொழுது கரகோஷம் எழுப்பிய மக்களை அறியாமைவாதிகள் என்றும், மாலையைப் பெற்றுக் கொண்ட வாலிபர் திரு. கணேசனை முட்டாள் (அமரராகி விட்டார்) என்றும் சொல்லி திரு. கணேசன் அவர்களிடம் திட்டு வாங்கினேன் என்று சொன்னால் நம்புவீர்களா ?
 
வேறு சமூகமாயினும் சகோதரர் உறவுமுறை ஆகவே அடிக்காமல் விட்டார். அப்பொழுது எனது அகவை எட்டு மட்டுமே இதெல்லாம் எனக்கு பிடிக்கவே இல்லை. இதையெல்லாம் தடுக்க நான் தமிழ்த் திரைப்படங்களின் கசாநாயகன் அல்ல... யதார்த்த மனிதன் எனக்கு அடிக்கடி ஒரு வேதத்தில் சொல்லப்பட்டது எமது நினைவுகளை மீட்டிச் செல்லும் அது.
 
//அநியாயங்களை தட்டிக் கேட்க முடியாதெனில்
மனதளவிலாவது வெறுத்து ஒதுங்கு//
 
கில்லர்ஜி தேவகோட்டை
 
Chivas Regal சிவசம்போ-
அன்றைக்கு விழுந்தவன்தான் தமிழன் இன்றுவரையில் எழுந்து வரவில்லையே...

Share this post with your FRIENDS…

22 கருத்துகள்:

  1. பதிவு ஒரு முழுமை பெறாதது போல ஒரு உணர்வு...

    பதிலளிநீக்கு
  2. அநியாங்களை தட்டி கேட்க முடியாது.
    நாம் ஒதுங்கி நல்லது நடக்க வாழ்த்தி கொண்டு இருப்பதே வழி.
    கோபம் ,கவலை பட்டால் உடல் நிலைதான் பாதிக்கப்படும்.
    வாழ்க வையகம்! வாழ்க வையகம் ! என்று காலையில் 10 தடவை சொல்லுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ பொதுநலமான நல்ல வார்த்தை. தங்களது வருகைக்கு நன்றி

      நீக்கு
  3. அநியாயங்களைத் தட்டிக் கேட்க முடியாதெனில் மனதளவில் முழுமையாக வெறுத்து ஒதுங்கு..

    ஒதுங்கி விட்டேன்...
    ஒதுக்கி விட்டேன்!...

    பிரியாணி புரோட்டா சால்னா பக்கம் போவதேயில்லை..

    தாய் மாமனின் பிரியாணி கடையாக இருந்தாலும் சரி.. நீதி - நீதி தான்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி நல்ல கொள்கை இதுவே வாழ நல்வழி.

      நீக்கு
  4. படம் ரசித்தேன். எதையும் ஆர்வத்தோடு செய்கிறீர்கள்.

    அநியாயம், தவறு செய்கிறார்கள் என்பதையெல்லாம் எப்போதும் தட்டிக்கேட்க முடியாது. வெறுத்து ஒதுக்குவதே சரி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே இனி நாட்டில் அநியாயமே வெல்லும், பிறகு தெய்வம் நின்று கொல்லும்.

      நீக்கு
  5. தங்களின் பதிவு நிறைவு பெறாதது போல் தோன்றுகிறது,
    அநியாயங்களை மனதளவிலாவது வெறுத்து ஒதுக்குவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.

      நீக்கு
  6. மனத்துக்கண் மாசிலன் ஆதல் - நல்லது...

    பதிலளிநீக்கு
  7. உணர்வுகள் புரிகிறது

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. உங்கள் உணர்வுகள் பதிவில் புரிகிறது. என்ன செய்வது? நாம்தான் ஒதுங்கிக் கொள்ள வேண்டுமென தாங்கள் எடுத்த முடிவு மிக நல்லது. முகப்புப் படம் அருமையாக உள்ளது. பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.

      நீக்கு
  9. வணக்கம் சகோதரரே

    உங்கள் தளம் மாறுபடுத்தி உள்ளீர்களா?அல்லது என் கைப்பேசியில்தான் பதிலளிக்க இயலவில்லையா? முன்பெல்லாம் சுலபமாக இருக்குமே... கருத்தைத் தெரிவித்து அதை சரி பார்ப்பதற்குள் எங்கெல்லோமோ ஓடி ஒளிந்து, சில சமயம் மறைந்தே விடுகிறது. விளம்பரங்களாலா ? தெரியவில்லை. நன்றி..

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விளம்பரங்கள் இடையூராக இருக்கிறதா ? அப்படியெனில் கணினி மாடலில் மாற்றுகிறேன்.

      நீக்கு
  10. அகவை 8லேயே இவ்வளவு மனமுதிர்ச்சியா ..... பாராட்டுகள் நண்பரே.
    அப்புறம் " எட்டு எட்டா மனுஷ வாழ்வை பிரிச்சிக்கோ" என்ற பாடலுக்கு
    நீங்கள் தான் முன் உதாரணமோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே ஆம் பிஞ்சில் பழுத்தது என்று கேள்விப்பட்டு இருப்பீர்களே...

      நீக்கு
  11. 8 வயது சிறுவன்.. எங்கிருந்து இந்த எண்ணம் முளைத்தது? Very interesting

    பதிலளிநீக்கு