தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், அக்டோபர் 20, 2022

நித்தியானந்தன் நினைவில் நித்யா

 
நித்யபவம், நித்யதவம், நித்யசவம்.
 
என் உள்ளமெல்லாம் நிறைந்தவரே
எமது விழியை விட்டு மறைந்தவரே
ஓவியமாய் வாழ்வை வரைந்தவரே
ஒளிந்தோடி காற்றில் கரைந்தவரே

கண்ணுள் உனை வைத்திருப்பேன்
காலமெல்லாம் நினைத்திருப்பேன்
நம் செல்வங்களை காத்திருப்பேன்
வாழ்வு கரையில் சேர்த்திருப்பேன்
 
உன்னை நானும் மறக்க முடியுமா
உனது வழியே எனக்கும் விடியுமா
உமது மடியில் என்னுயிர் மடியுமா
இனியும் எனக்கு கண்ணீர் வடியுமா
 
நல்வாழ்வை பிள்ளைகளுக்கு கொடு
பிள்ளகளின் கெட்ட பாதைகளை தடு
விசா கிடைத்ததும் அழைத்து விடு
நலமாய் நிகழ்த்தி என்னைத் தொடு
 
ன்றும் நின் ஐலேசா, ஐலேசா,. என்ற கைலாசா திருமந்திரத்தோடு உன் நினைவில் உறங்கும்.


நித்யா-ஆனந்தன் (Your Sweet)
நித்தீஷ் (Son)
நித்யஸ்ரீ (Daughter)
நிம்மி (Dog)
நிம்மு (Cat)
நித்யபவனம் (Home)
நித்யகல்யாணிபுரம் (Area)
நிலக்கோட்டை (City)
 
தேவகோட்டை கில்லர்ஜி

Share this post with your FRIENDS…

40 கருத்துகள்:

  1. உட்கருத்து உடனடியாக புரியவில்லை என்றாலும் கவிதை உருவில் கருத்து நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  2. உறவை பிரிந்த உயிரின் ஓலம் கவிதை அருமை.
    விசா கிடைத்ததும் அழைத்துவிடு//
    பிரிந்த உறவு கேட்கும் தான்.

    வளர்ந்த பிள்ளைகளை விட வள்ர்த்த செல்லங்கள் இன்னும் வருந்தும் உற்றவர் பிரிவை நினைந்து.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ எப்படியாயினும் இதில் சொந்த வாழ்வு பிரச்சனை கவிதையில் வந்து விடுகிறது. நான் மறந்தாலும் நீங்கள் சரியாக கோர்த்து கருத்தை பதிவு செய்து விடுகிறீர்கள். வருகைக்கு நன்றி.

      நீக்கு
  3. கிராமத்தில் சில வயதான பாட்டிகள் (தாத்தாவை பிரிந்தவர்கள்)சொல்வார்கள்
    "இன்னும் மகராசன் ஓலை அனுப்பவில்லயே! என்று .
    அது போல நீங்கள் விசா கிடைத்ததும் அழைக்க சொல்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் பண்டையகால ஓலைதான் இன்றைய நவீன விசாவாகி விட்டது.

      நீக்கு
  4. பிரிவின் துயரம் தெறிக்கும் கவிதை வரிகள் அருமையாக எழுதியிருக்கிறீர்கள் கில்லர்ஜி.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு
  5. கில்லர்ஜி தலைப்பு பார்த்ததும் சரிதான்....நித்தி மாட்டிக்கிட்டார்னு நினைச்சேன்...இது மெய்யாலுமே நித்யானந்தனா இல்லை நித்தியா!!! ஹிஹிஹிஹி

    பாருங்க நான் நினைச்சது சரியா போச்சு கடைசில அந்த சிவப்பு வரிகள் அதைத்தானே சொல்லுது!!!!!

    கவிதை நல்லாருக்கு கில்லர்ஜி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் சொந்தக் கதையை கவிதையாக எழுதினால் நீங்க தேவையில்லாமல் நித்தியோடு ஒப்பீடு செய்வது முறையல்ல...

      நீக்கு
  6. அது சரி இவுகளுக்கே கைலாச விசா கிடைக்கலையா ?!!!!!!

    இதுல பாவம் நிம்மியும் நிம்முவும் வேறயா....!!!!?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கைலாசாவுக்கு, கப்பலில்தானே போவார்கள் அதனால் விசா கிடைக்கலாம்.

      நீக்கு
  7. நித்யமும் நிலைத்து நிற்கும் கவிதை

    பதிலளிநீக்கு
  8. சொந்தக்கதை. சோகக்கதை. விரைவில் இறைவன் அருள் கிடைக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு
  9. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. முகப்பு படம் நன்றாக உள்ளது. கவிதை நன்றாக உள்ளது. நானும் இது ஏதோ கைலாசபுரி கவிதை என்றுதான் நினைத்தேன். "உனது வழியே எனக்கும் விடியுமா"என்ற வரிகள் வேறு ஊர்ஜிதபடுத்தின. ஆனால் கொஞ்சம் அது அல்லவோ என்ற குழப்பமாகவும் இருந்தது. குடும்ப பெயர்கள் ஆரம்ப பெயர்கள் "நி"யில் ஆரம்பித்திருந்தாலும், நிரந்தரமாக அதற்குரிய ர" வரவில்லை. அதனால் இது அதுவல்ல என்று தெளிவு பிறந்து விட்டது. ஹா ஹா ஹா.. நன்றாக யோசிக்கிறீர்கள். கவிதைக்கு பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ கவிதை அலசி, ஆராய்ந்து கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.

      நீக்கு
  10. நித்தியானந்தம் நினைவில் ..கில்லர்ஜி ஹா ஹா ஹா.. நித்தியா நினைக்கிறாவோ இல்லையோ கில்லர்ஜி நினைச்சுக்கொண்டிருக்கிறார் நித்தியானந்தத்தை.... ஹையோ எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்:))..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நித்யா நினைப்பில் நான் இருக்கிறேன்''னு சொல்ல வேண்டியதை ஜொள்ளிப்புட்டு எனக்கு எதுக்கு ஊர் வம்பா ?

      நீக்கு
    2. கில்லர்ஜி.. இதேபோல கவித.. ஒன்று எங்கட பொ.செ.. புகழ்.. த்ரிசாவுக்கும் எழுதலாமெல்லோ:))

      நீக்கு
    3. நான் கூத்தாடிகளுக்கு கவிதை எழுதுவதில்லை.

      நீக்கு
  11. ஆனா கவிதை சூப்பராக இருக்குது கில்லர்ஜி.. ரசிக்கிறேன். பொதுவா நீங்கள் இப்படியான விசயத்துக்கு ஏடாகூடமாகத்தானே கவி வடிப்பீங்கள் அல்லது கதை சொல்லுவீங்கள் ஆனா இம்முறை உண்மையிலேயே பிரிந்து தவிப்பதுபோலவே எழுதியிருக்கிறீங்கள் அதுதான் நம்பமுடியவில்லை, ஏனெனில், நித்தியானந்தன் அவர்கள் இருக்கிறாரா இல்லையா எனவும் தெரியவில்லை, அதே நேரம் அவரை இந்நிலைக்கு ஆளாக்கியது , சொத்தைப் பறிக்கவென நித்தியா செய்தவேலை எனவும் சொல்கிறார்களே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிதையை இரச்த்தமைக்கு நன்றி அதிரா...
      எங்க சகலையைத்தான் இலங்கைக்கு கொண்டு போய் ரீட்மெண்டு கொடுக்கிறேன்''னு மெண்டலாக்கி விட்டுப்புட்டீங்களே....

      கொழுந்து ரஞ்சிதா சாபம் சும்மா விடாது...

      நீக்கு
    2. என்னாது இலங்கையோ.. இதென்ன புது வம்பாக்கிடக்கூஊஊ.. இலங்கையிலயா கைலாசம் இருக்குது அது எங்கோ சைனாவுக்குப் பக்கமாக எண்டெல்லோ கேள்விப்பட்டேன்.... இதில ஜாபம் வேறையோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. ஹா ஹா ஹா..

      நீக்கு
    3. சகலைக்குத்தான் உடல் நலமில்லாமல் இலங்கையில் சிகிச்சை அளிப்பதாக, செய்தி தொலைக்காட்சி பார்ப்பது இல்லையா ?

      நீக்கு
  12. "நித்தியானந்தன் நினைவில் நித்யா" என்ற தலைப்பை பார்த்த உடன் கைலாச அதிபரின் "வெளிஉறவு" கொள்கையைப்பற்றி உங்கள் பாணியில் விரிவாக விவரித்திருப்பீர்கள் என்று ஆர்வமாக வந்து பார்த்தால்... நித்தியை நினைத்து இன்னும் நித்தியா புலம்பிக்கொண்டிருப்பதைச் சொல்லி ஏமாற்றிவிட்டீர்கள்... ஆனாலும் கவிதை மிகவும் அருமை... ஆயிரம்தான் இருந்தாலும் "நித்தியமே சத்தியம்... நித்தியானந்தமே பரபிரம்மம்.... ஓம் சத்... சித்... ஆனந்தம்..."

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே...
      நித்யானந்தா'வை நான் மிகவும் மரியாதைக்குரிய மா(மா)மனிதராக மதிப்பவன். அவரைப்பற்றி அவதூறாக சொல்லாதீர்கள்.

      கவிதாவை Sorry கவிதையை, ரசித்தமைக்கு நன்றி.

      நீக்கு
  13. தத்துவக் கடலாகத் தலைப்பு..
    அருமை...

    பதிலளிநீக்கு
  14. இந்தச் சின்ன வயதில் ஏன் இப்படியெல்லாம் எண்ணங்களை ஓட விடுகின்றீர்கள்?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி இது நித்யாவின் எண்ணங்கள்தானே...

      நீக்கு
  15. சாதிக்க வேண்டிய நீங்கள் நேர்மறை எண்ணத்திலேயே இருக்கலாம். பிறிதொரு பாதை பற்றி சிந்திக்க வேண்டாமே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவர் அவர்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  16. மிக அருமை. கில்லர்ஜியின் வரிகள் என்றும் வித்தியாசமானதாகவே இருக்கும். கவிதை வரிகள் மனதை கனக்கச் செய்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது வருகைக்கு நன்றி.

      நீக்கு