தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், மார்ச் 21, 2023

காலனி நிலம் வேண்டும்


காணி நிலம் வேண்டாம்
ஆம் எனக்கு காலனியே
வேண்டும். நான் உருண்டு
விளையாட ஓர் காலனி
வேண்டும், எனது ஏழேழு
சந்ததிகள் கூடிக் கழித்திட
காலனி வேண்டும் ஆகவே
நான் தேர்தலில் நிற்பேன்.
* * * * * * * 01 * * * * * * *
 
தனியாக இருக்கும் எனது
சின்ன வீட்டுக்கு உணவு
இல்லையெனில் ஊரையே
கொளுத்துவேன், ஆமாம்
அவளது ஆடம்பர வாழ்வு
சிறப்புடன் இருந்திட நான்
எவனையும் கொல்லுவேன்
நான் பெரிய அரசியல்வாதி
* * * * * * * 02 * * * * * * *
 
காக்காவுக்கும் சாதிப்பெயர்
சூட்டுவேன், அவைகள் கக்கா
போனாலும் அதில் திட்டம்
தீட்டுவேன், குருவி எங்கள்
சாதி என்று கூட்டம் கூட்டி
ஆட்டம் காட்டுவேன், அதில்
காலம் ஓட்டுவேன் ஏனெனில்
நான் எதிர்க்கட்சி தலைவன்.
* * * * * * * 03 * * * * * * *
 
பள்ளியில் படிக்கும் சிறுமி
நீ காலமெல்லாம் இருமி
எச்சிலை உமிழ்ந்து விடு
நானெழுதிய கொரோனா
கவிதையை பாடத்தில் இடம்
பெற வைப்பேன், நாளைய
வரலாற்றில் நானும் இருக்க,
காரணம் நான் ஆளுங்கட்சி.
* * * * * * * 04 * * * * * * *
 
ஓடி உழைத்திட வைப்பேன்
ஆம் உனக்கு ஓய்வூதியம்
கிடைக்கும் வரையில் நாடி
தளர்ந்து போகும் வரையில்
உனை வேலையில் வதக்கி
எடுப்பேன், நீ ஓய்வெடுக்க
விடமாட்டேன் காரணம்
நீ உழைப்பாளர் வர்க்கம்.
* * * * * * * 05 * * * * * * *
 
கன்னத்தில் முத்தமிடுவேன்
நான் எவர் கன்னத்திலும்
முத்தமிட அதிகாரமுண்டு
பொன்னம்மா என்றாலும்
நீ வண்ணமாக நின்றாலும்
கண்கள் சிவக்கலாம் உமக்கு
எம்மிடம் ஒன்றும் இயலாது
காரணம் நான் கொடுங்கோலன்.
* * * * * * * 06 * * * * * * *
 
இந்தி தீயாய் பரவ வேண்டும்
இந்தியாவிலே... அதைக்கண்டு
தேன் வந்து பாய்ந்தது போல்
நான் மகிழ்ந்திட வேண்டும்
BAR-னிலே... குறள் சொல்லி
குரல் கொடுப்பேன், பின்பு
உன் குரல்வளை நெறிப்பேன்
நான் முதல் நீதி நெறியாளன்.
* * * * * * * 07 * * * * * * *
 
கில்லர்ஜி தேவகோட்டை
 
சிவாதாமஸ்அலி-
ஆடி அடங்கும் வாழ்க்கையடா... ஆறடி நிலமே சொந்தமடா...
 
Chivas Regal சிவசம்போ-
ஏன்... ஆவணியில் அடங்க மாட்டாரா...?
 
சாம்பசிவம்-
இவெய்ங்களுக்கு, நல்ல வார்த்தையே கிடைக்காதா ?

Share this post with your FRIENDS…

28 கருத்துகள்:

  1. இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  2. இது மாதிரி ரொம்பவும் கோபப்பட வேண்டாம்...

    பூச்சியம் ஆனாலும் ராச்சியம் ஆனாலும்
    நம்மை நாமே புகழ்ந்து கொள்ள வேண்டும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி
      "நமக்கு நாமே" என்பது மாதிரியா ?

      நீக்கு
  3. காலணி என்றால் காலில் போட்டுக்கொள்ளும் செருப்பு.  காலனி என்று சொன்னால் நீங்கள் சொல்ல நினைக்கும் பொருள் வரும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா மிகப்பெரிய பிழையான விடயம்.

      திருத்(ந்)தி விட்டேன் நன்றி ஜி

      நீக்கு
  4. நான்காவது கண்ணி எனக்குப் பிடித்து விட்டது - நான் அந்த நிலையில் இருப்பதால்!

    பதிலளிநீக்கு
  5. மனகுமறல் அதிகமாக இருக்கே!
    காணி நிலம் வேண்டும் படம் நன்றாக இருக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ
      பாரதீயைப்போல் ரௌத்திரம், அறச்சீற்றம் இல்லா விட்டாலும் அவனது நிழல் அளவாவது முயற்சிப்போம்.

      நீக்கு
  6. // குறள் சொல்லி
    குரல் கொடுப்பேன், பின்பு
    உன் குரல்வளை நெறிப்பேன்
    நான் முதல் நீதி நெறியாளன் //

    அட நம்ம படிக்காத தற்குறி வெங்கோலன் ஜி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி
      அட... அப்படியா ?
      எனக்கு அம்புட்டு அரசியல் அறிவு ஞானம் கிடையாது ஜி

      நீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    கவிதை பதிவு நன்றாக உள்ளது. தங்களின் ஆதங்கமும் புரிகிறது. நீங்கள் சொல்வது போல் மன ஆதங்கத்தை இப்படியாவது கொட்டித் தீர்க்க வேண்டியதுதான். இப்போது பாரதியார் இருந்திருந்தாலும் இப்படித்தான் சொல்வார் .

    முகப்புப் படம் நன்றாக உள்ளது. தேர்ந்தெடுத்தமைக்கு பாராட்டுக்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.

      நீக்கு
  8. வெந்து தணியலையா காடு!!!! ஹாஹாஹாஹாஹா....புகைந்து கொண்டேதான் இருக்கும் இல்லையா..

    உழைக்கும் வர்கம்.....உண்மை..

    உங்களுக்குப் படத்துல இருக்கறாப்ல நடுக்கடல் ல காலனி வேணுமா ...சரி சரி ...தேர்தல்ல நில்லுங்க...நாங்க வாங்கிக் கொடுத்துடறோம்!!! ஹிஹிஹிஹிஹி......இது அங்க கீழ இருக்கற முதல் ரெண்டு பேரும் சொல்லிக்குதுங்க...சாம்பசிவம் சொல்றார்....உருப்படமாட்டாய்ங்க!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக இப்படி இடத்தில்தான் மனுஷப்பயல்க பயக்க, வயக்கமே இல்லாமல் வாழலாம்.

      நீக்கு
  9. ருத்திர தாண்டவம்தான் :) நல்லாக கொட்டி விட்டீர்கள் .

    பதிலளிநீக்கு
  10. உங்கள் ஆதங்கம் புரிகிறது. நல்லதே நடக்கும் என்று நம்பிக்கை கொள்வோம்.

    பதிலளிநீக்கு
  11. நாட்டு நிலைமையை விளங்க வைக்கும் பாட்டு .

    பதிலளிநீக்கு
  12. தங்களின் ஆதங்கம் புரிகிறது

    பதிலளிநீக்கு
  13. நாமெல்லாம் கோபப்பட்டு என்ன நடக்கப் போகிறது? வேதனையைத் தவிர வேறே ஏதும் மிச்சமில்லை.

    பதிலளிநீக்கு