தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, மே 05, 2023

பொம்மை மனிதர்கள்

ணக்கம் நட்பூக்களே... ஒருமுறை திருமண நிச்சயதார்த்த விழாவுக்கு என்னை அழைத்திருந்தார்கள், சிறிய பேருந்து அமைத்து இருந்த காரணத்தால் நானும் அதிலேயே சென்று வந்தேன். எந்த ஊர் ? பெயரைச் சொன்னாலும் ஊரைச் சொல்லக் கூடாது என்பார்கள் ஆகவே தமிழகத்தின் உள்ளேதான் போன விடயம் சுபமாக நிகழ்ந்தது.
 
நிகழ்வு முடிந்தது அடுத்த இரண்டு மாதத்தில் திருமண தேதியும் குறிக்கப்பட்டது. புகைப்படங்களும் எடுத்து தள்ளப்பட்டன... நிகழ்வு முடிந்து மாலை நான்கு மணிக்கு நல்ல நேரத்தில் புறப்படுவதாக உத்தேசம். மதிய உணவு முடிந்து கடலை போட்டுக் கொண்டு இருந்தோம். நம்ம வாய்தான் சும்மா இருக்காதே நாறவாயாச்சே...
சரி பெண்ணைக் கூட்டிக்கிட்டு கிளம்புங்க நேரமாச்சு... என்றேன்
 
அதற்கு அனைவரும் ‘’கொல்’’ என சிரித்தார்கள், அதற்கு மாமா மகன் என்னிடம் மாப்ளே நீதானா சொல்லு பொண்ணோட தாய்மாமனிடம்
அப்புறம் என்ன நாங்க கூட்டிக்கிட்டு கிளம்புறோம்.
என்றேன், இது முழுக்க, முழுக்க வேடிக்கை பேச்சுதான் என்பது அனைவரும் அறிந்ததே... நிச்சயமாக பெண்ணை அழைத்துக் கொண்டு வரமுடியாது விடவும் மாட்டார்கள். அதற்கு பெண்ணின் தாய்மாமன் என்னிடம் சொன்னார்.
நீங்க வேணும்னா மாப்பிள்ளையை விட்டுட்டு போங்க... அதான் முறை.
 
இதைக் கேட்டு மற்றவர்கள் சிரித்தாலும் எனக்கு மனதில் அரித்துக் கொண்டே இருந்தது. காரணம் சிறிய தமாசு பேச்சு இதற்கு அவரும் தமாசாக
அதனால என்ன அழைச்சுட்டு போங்க...
என்று சொல்லி இருக்கலாமே... ஏனிந்த பேச்சு இதிலேதும் உள்குத்து இருக்குமோ... அந்நிய சம்பந்தம் இணைய வழி ஏற்பாடு யாரை யார் அறிய இயலும் ? காலமே பதில் தரும் என்று நினைத்துக் கொண்டேன்.
 
இன்றைய பெண் வீட்டார்கள் அனைவருமே இதே கோணத்தில்தானே காரியங்களை செய்ய காய்களை நகர்த்துகின்றார்கள். எனக்கு இதில் சுமையொன்றுமில்லை நானொரு விருந்தாளி அவ்வளவுதான். மனதுள் ஒன்று கணித்தேன். அடுத்த இரண்டாவது மாதத்தில் இனிதே திருமணமும் மாப்பிள்ளை ஊரில் நிகழ்ந்தது. காலம் உருண்டோடியது.
 
எனது கணிப்பு தவறவில்லை இன்று மாப்பிள்ளை பெண் வீட்டாரின் எடுப்பார் கைப்பிள்ளை காலம் எல்லோரையும் கணக்கு வைத்தே காய்களான மனிதர்களை நகர்த்தி விளையாடுகிறது. காரணம் இறைவனின் பிடியில் மனிதர்கள் யாவரும்...
 
நீயும் பொம்மை நானும் பொம்மை நினைச்சு பார்த்தால் எல்லாம் பொம்மை
மேலே சொடுக்குக - கே.ஜே.யேசுதாஸின் முதல் பாடல்
               
கில்லர்ஜி தேவகோட்டை

Share this post with your FRIENDS…

22 கருத்துகள்:

  1. சில சமயங்களில் மனதில் இருப்பது இப்படி வெளியே வந்து விடுகிறது!  கிட்டத்தட்ட இது மாதிரி அனுபவம் எங்களுக்கு சென்ற வாரம் நிகழ்ந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஸ்ரீராம்ஜி தங்களது அனுபவத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி

      நீக்கு
  2. இப்போது இது உலக இயல்பு. இன்னொன்று... பையனிடம் பெற்றோர் கண்டிப்பு காட்டுவர், பெண் வீட்டார் மரியாதை காட்டுவர். இதுவும் ஒரு காரணம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே
      //பெண் வீட்டார் மரியாதை காட்டுவார்//

      இது போலியானதாகவே இருக்கும் பய உணர்வு இருக்காது. காரணம் தந்தையை சாராதது.

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. தங்கள் நினைப்பு உண்மையாகி விட்டதில் ஆச்சரியமில்லை. காலம் மாறி விட்டது. இப்போது மணமகன்கள் கைப்பாவையாக ஆட்டி வைக்கப்படுகின்றனர். இந்தப் பாடல் பதிவுக்கு பொருத்தமாக உள்ளது.. பாடல் நன்றாக இருக்கும். கேட்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ. ஆம் இன்றைய நிலைப்பாடு இதுதான் தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு
  4. இது யார் என்று தெரிந்து விட்டது.
    உங்கள் அன்பான வேடிக்கை பேச்சு பலித்து விட்டது.
    காலம் அவருக்கு உணர்த்தும், எது உண்மையான அன்பு,
    எது போலியான அன்பு என்று.
    இறைவன் கையில் எல்லோரும் பொம்மைதான் அவன் ஆட்டி வைக்கிறான்
    நாம் ஆடுகிறோம்.
    பாடல் மிகவும் நல்ல பாட்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ
      மன்னிக்கவும் தாங்கள் நினைப்பது இல்லை.

      அது இதைவிட வேறுநிலை. நான் கலந்து கொண்ட தூறத்து உறவினர் வீட்டு நிகழ்விது.

      இன்று எங்கும் இப்படித்தான்...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி

      நீக்கு
    2. நீங்கள் எதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் . தவறாக நினைத்தது நான்.
      மன்னிக்கவும்.
      நீங்கள் சொல்வது போல எங்கும் நடக்கும் நிகழ்வாகி விட்டது.
      பெற்றவர்கள் அவர்கள் நலமாக இருப்பதற்கு வாழ்த்தி கொண்டு இருக்க வேண்டியதுதான்.

      நீக்கு
    3. வருக சகோ
      தாங்கள் இறுதியாக சொல்வதுதான் உண்மை வேறு வழியில்லை.

      பெற்ற மனம் பித்து என்பதை நானும் கூட அனுபவப்பட்டு உணர்கிறேன்.

      மீள் வருகைக்கு நன்றி

      நீக்கு
  5. மிக சிறப்பு பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக கவிஞரே தங்களது வருகைக்கு நன்றி

      நீக்கு
  6. மணவாழ்க்கை அமைவதற்கோ மனைவி வாய்க்கவேண்டும்...

    குலமகளாய் கிடைப்பதற்கோ கொடுத்து வைக்கவேண்டும்...

    அருமைகளும் பெருமைகளும் நிறைவதுதான் இன்பம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீ அத்தனையும் பெற்று விட்டாய் ஆனந்தமாய் வாழ்க

      நல்ல மனம் வாழ்க நாடு போற்ற வாழ்க
      தேன் தமிழ் போல் வான் மழை போல்
      திகழ்ந்து என்றும் வாழ்க

      வருகைக்கு நன்றி ஜி

      நீக்கு
  7. இப்போதைய மாப்பிள்ளைகள் இப்படித்தான் இருக்க வேண்டி இருக்கிறது. இல்லை எனில் விவாகரத்துத் தான்! என்ன செய்ய முடியும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் சகோ இதுதான் உண்மை ஆகவே நாம் நமது பிள்ளைகளை குறை சொல்ல இயலாது.

      நீக்கு
  8. ஆக, பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது..

    அருமை..
    சிறப்பு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி உண்மையை வெகுகாலம் மறைக்க இயலாது.

      நீக்கு
  9. விளையாட்டு என்ற போர்வையில் சிலர் மனதில் இருப்பது வெளியே வந்து விடும்.

    பதிலளிநீக்கு