இதம்பாடல்
எங்கள் அய்யா ஞானி ஸ்ரீபூவு அவர்கள் மிராசுதாராக வாழ்ந்த
அழகிய கிராமம். இராமநாதபுரம் மாவட்டம், உத்திரகோசமங்கை 8 கி.மீ ஏர்வாடி 5 கி.மீ, சிக்கல் 5 கி.மீ, மூன்று
திசைகளில் இங்கிருந்து செல்கிறது.
இங்கு காலச்சூழலில் எல்லோரும் இடம் பெயர்ந்த காரணத்தால் இங்கிருந்த
எங்களது பூர்வீக பங்களா இடம் முழுவதும் மொத்தமாக எங்களது குலதெய்வமான ஸ்ரீ தென்கரை
மஹாராஜா கோயிலை கட்டி இருக்கிறோம் 1995-ல் முதல் கும்பாபிஷேகம் தற்பொழுது கோயில் மராமத்து வேலைகள்
செய்து வண்ணம் தீட்டி நேற்று 24.05.2023 வைகாசி 10 தேதி புதன்கிழமை மறு
கும்பாபிஷேகம் சிறப்பாக நடத்தினோம்.
இக்கோயிலின் மூலஸ்தனம் திருநெல்வேலி மாவட்டம்
வள்ளியூரிலிருந்து 16 கி.மீ. தொலையிலுள்ள சித்தூர்
தென்கரை மஹாராஜா கோயில். அங்கு உள்ளது எங்களுக்கு தொலைவு காரணமாக இதம்பாடலில்
கோயிலை எழுப்பியுள்ளோம். கோயிலின் பிற தெய்வங்கள் வீரமணி, தளவாய் மாடசாமி,
பேச்சியம்மன், தொட்டிச்சியம்மன், விநாயகர், முருகன் கோயில்
மேலும் கோயிலின் இறைப்பணியில் நானும் இணைந்துள்ளேன். இனி
இறுதி காலம் வரையில் செல்லலாம் என்ற எண்ணங்களோடு இருக்கிறேன். ஹைடெக் சிட்டியான
எத்தனையோ நாடுகளுக்கு நான் சென்று இருந்தாலும், இந்தக் கிராமம்தான் எனது மனதில்
நிறைந்து இருக்கிறது. மேலும் எங்கள் அய்யாவையும் இங்குதான் அடக்கம் செய்து
இருக்கிறோம். இதை மனதில் கொண்டு இத்தீர்வை எடுத்து இருக்கிறேன்.
ஒவ்வொரு வருடமும் பங்குனி உத்திரம் திருவிழா நடத்துவோம்
செலவு பங்காளிகள் மட்டும். இதோ கும்பாபிஷேக புகைப்படங்களும், காணொளியும் தங்களது
பார்வைக்கு வைத்துள்ளேன் கண்டு தரிசித்துக் கொள்ளுங்கள்.
எனது வார்த்தைகளுக்கு மதிப்பளித்து கோயிலுக்கு நன்கொடை தந்த
அனைத்து உறவுகளுக்கும், நட்புகளுக்கும் எமது நன்றி.
கும்பாபிஷேக விழாவை பதிவாக வெளியிட சொன்ன சகோ கோமதி அரசு அவர்களுக்கு எமது சிறப்பான நன்றி.
கில்லர்ஜி தேவகோட்டை
காணொளிகள்
கில்லர்ஜி, இதம் பாடல் கிராமத்தின் பெயர் எனக்கு ரொம்பப் பிடிக்கும். என்ன அழகான பெயர். உங்கள் எண்ணங்கள் கண்டிப்பாக ஈடேறும் கில்லர்ஜி. படங்கள் பார்த்துவிட்டு வரேன்
பதிலளிநீக்குகீதா
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நோஓஓஓஓஓஓஓஒ மீதான் இங்கின 1ஸ்ட்டூஊஊஊஊஊஊஊஉ:)
நீக்குவருக தமிழரே தங்களது பிரார்த்தனைகளுக்கு மிக்க நன்றி
நீக்குஎன்னாது தமிழரே ஆஆ?? கீதா எப்போ தமிழரானார்ர்?:)) நெ.தமிழன் நினைப்பிலேயே இருக்கிறார் கில்லர்ஜி.
நீக்கு:-))
நீக்கு? ??
நீக்குஇதில என்ன கொயப்பம் கில்லர்ஜி க்கு கர்ர்ர்ர்ர்ர்ர்:))
நீக்குநான் குசம்பிட்டேன்.
நீக்குகில்லர்ஜியை எங்கயும் காணம், கார் மட்டும் வீதியில் தனியாக நிற்குதே... கோயில் பணியில் இணைந்திருப்பது மிகவும் நல்லது, மனதுக்கும் உடலுக்கும் உற்சாகம் இருக்கும். இங்கு வெளிநாடுகளில் நம்மவர்கள் இப்படியான பணிகளில் அதிகம் ஈடுபடுகின்றனர், முக்கியமாக வேலையில் ஓய்வெடுத்தபின், இது மனதுக்கு நல்லது பொழுதும் போகும் எனும் எண்ணத்தில்.
பதிலளிநீக்குவாங்க அதிரா
நீக்குநான் மகிழுந்து உள்ளே இருந்து படம் எடுத்தேன் ஆகவே தெரிந்து இருக்காது.
மேலும் படம் எடுத்தால் ஆயுள் கூடுமாம் ஆகவே என்னை படம் எடுக்கவில்லை.
என்னாதூஊஊஉ ஆயுள் கூடுமோ?:)).. எல்லாம் புயுக் கதையா இருக்கே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. இதைப் படிச்சுப் பலரும் படமெடுத்துப் பாதியில போயிடப்போகினமே.. முச்சந்தி முருகா:))
நீக்குதேவகோட்டை ஜி... ஹா ஹா ஹா .. அதிரா வலையுலகில் மறுபடி உற்சாகம் பிறக்க வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.
நீக்குவாங்க அதிரா ஸ்ரீராம்ஜி சொல்லி விட்டார் உண்மை என்று...
நீக்குப்டங்கள் காணொளிகள் எல்லாமே ரொம்ப நல்லாருக்கு கில்லர்ஜி. நிச்சயமாக இறைவன் உங்களோடுஇருப்பார்!!!!
பதிலளிநீக்குகீதா
வருக தங்களது கருத்து மகிழ்ச்சி அளிக்கிறது.
நீக்குகோயில் பணியில் உங்களை இணைத்துக் கொண்டது ரொம்பநல்லது கில்லர்ஜி.அதுவும் உங்கள் மனதிற்கு இதம் தரும் விஷயம். தொடர்ந்து செய்யுங்கள்!
பதிலளிநீக்குகீதா
வருக மிக்க நன்றியும், மகிழ்சியும்.
நீக்குகோவில் படங்கள் பிரமாதம். கிராமங்களில் கிடைக்கும் அமைதியும் நிம்மதியும் பெரிய நகரங்களில் கிடைக்காது.
பதிலளிநீக்குவாங்க ஸ்ரீராம்ஜி தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி
நீக்குஐயா மாடசாமி எங்களுக்கும் குலதெய்வம்.. எல்லாரையும் காத்தருள்வார்..
பதிலளிநீக்குஇறைப்பணி என்றும் மகிழ்ச்சி.. நிறைவு..
வாழ்க நலம்..
வருக ஜி மிக்க மகிழ்ச்சி
நீக்குப்டங்கள் காணொளிகள் அழகு..
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி ஜி
நீக்குசகோ உங்களுக்கும் நம் ஊர் பக்கம்தான் பூர்வீகமா? வள்ளியூரில் மாமியார், அம்மாவழி தாத்தாவுக்கு சொந்தங்கள் உண்டு.
பதிலளிநீக்குஇதம் பாடல் ஊர் மிகவும் அழகாய் இருக்கிறது.
தூரத்து கழுகு பார்வையாக ஊரை காட்டி இருப்பது மிகவும் அழகு. ஊறணி, கோவில் சாலை, சாலையில் போகும் பேருந்து என்று பார்க்கவே அருமையாக இருக்கிறது.
நீங்கள் அடிக்கடி உங்கள் கோவிலுக்கு போய் வாருங்கள் மனதுக்கு இதமாக இருக்கும். இறைபணியில் ஈடுபட்டு அதை நன்றாக செய்து விட்டீர்கள்.
உங்கள் மகன், மகள் மற்றும் சுற்றம் எல்லோரும் வந்தார்களா?
எல்லோருக்கும் உங்கள் குலதெய்வம் நல்ல வாழ்க்கையை அருள்வார். உங்கள் அய்யாவும் அனைவருக்கும் அருள்வார்.
எங்கள் குலதெய்வம் கோவிலில் மாடசாமி உண்டு. வீரபத்திரர் உண்டு. உங்கள் கோவில் வீரமணி. சிவலிங்கம் போல அலங்காரம் செய்து இருப்பதுதான் மூலவரா? அய்யனார் தானே! மூலவர். நானும் வணங்கி கொள்கிறேன்.
உங்கள் தளத்திற்கு உறவினர் நண்பர்கள் எல்லாம் வருகை தர அழைக்கும் அறிவுப்பு விளம்பர பலகை அருமை. உங்கள் சுற்றம் நிற்கும் படங்கள் நன்றாக இருக்கிறது.
பதிவில் என்னை குறிபிட்டதற்கு நன்றி.
தொடர்கிறேன் அடுத்த பதிவை.
வருக சகோ
நீக்குவள்ளியூரில் இருந்து எங்களது தலைமுறை தொடங்கி இருக்கிறது ...
அதாவது எனக்கு முந்தைய ஆறு தலைமுறைகள் இந்த ஆறு நபர்களின் பெயர்கள் எனக்கு தெரியும்.
சிறு அகவையில் எனது அய்யா எனக்கு சொல்லி இருந்தார். அனைவரது பெயரும் என்னால் கட கட வென்று சொல்ல முடியும்.
பிறகுதான் தெரிந்தது எங்கள் கூட்டத்தில் எனக்கு மட்டுமே இந்த விடயம் தெரிந்து இருக்கிறது.
மகாராஜேஸ்வரர் ஐயப்பனின் பிரிவு அவதாரம், வீரமணி காவல் தெய்வம் அதாவது முன்னோடி.
அந்த பதாகையில் நடப்பில் உள்ள ஐந்தாவது தலைமுறையின் குழந்தைகள் புகைப்படங்களை வரிசையாக ஒழுங்கு படுத்தி இருக்கிறேன்.
இதற்கான முயற்சி சில மாதங்களானது. உறவுகள் இதை இணையத்தில் காணட்டும் என்று அடுத்த இரண்டு தினங்களில் எனது தளம் செல்க என்று எழுதி இருந்தேன்.
தங்களது விரிவான கருத்து கண்டு மகிழ்ச்சி.
இறை பணியில் அந்த இறைவனே உங்களை ஈடுபட வைத்திருப்பதுபோலத் தோன்றுகிறது.
பதிலளிநீக்குபடங்கள் நன்று. கும்பாபிஷேகப் பணியில் ஈடுபடுத்திக்கொண்டது மனதுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. தொடர்ந்து உங்கள் கோவிலின் பணிகளில் உங்களை இணைத்துக்கொள்ளுங்கள்.
வருக தமிழரே
நீக்குதங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க மகிழ்ச்சியும், நன்றியும்.
காணொளியைக் கண்டு ரசித்தேன். கோவில் அமைவதற்காக எத்தனை பேர் பாடுபடுகிறார்கள். கும்பாபிஷேகத்தில், உளி கொண்டு எதற்கு அடிக்கிறார் என்று தெரியவில்லை. ஊரின் பறவைப் பார்வை மிக அழகு. இதம்பாடல் அழகிய இடம்.
பதிலளிநீக்குதென்கரை மகராஜர் கோவில்...அட நெல்லைத் தொடர்பும் உங்களுக்கு வந்துவிட்டதே.
வருக தமிழரே
நீக்குஉளி கொண்டு அடிப்பது "பாலாலயம்" அதாவது கும்பாபிஷேகம் நிகழ்ச்சிக்கு முன்பு கலசத்தை பெயர்த்து எடுக்கிறார் சிற்பி அதை புதுப்பித்து பிறகு அமர்த்த வேண்டும்.
எனது மூதாதையர்கள் ஆறு தலைமுறைக்கு முன்பு நெல்லையக்காரர்கள்தான்.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை கும்பாபிஷேக படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. தங்கள் ஊர் (இதம்பாடல் ஊர்) கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது குறித்து மிக்க மகிழ்ச்சியடைகிறேன். தாங்கள் இறைபணியில் முழு மூச்சாக ஈடுபட்டு சிறப்புற பணியாற்றியதற்கு பாராட்டுக்கள். வாழ்த்துகள். உங்கள் சொந்த கோவிலில் வழிபாட்டிற்காக அமைத்த அத்தனை தெய்வங்களையும் நானும் பக்தியுடன் வணங்கி கொள்கிறேன். இறைவன் அனைவருக்கும் நல்லருள் தர பிரார்த்தித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வருக சகோ தங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த நன்றிகள் பல!
நீக்குகாணொளியில் இதம்பாடல் கிராமம் அருமையான சூழலில் அமைந்துள்ளதை பார்க்க முடிகிறது... அனைத்து படங்களும் கும்பாபிஷேகத்தை நேரில் பார்ப்பது போன்ற பிரமிப்பை ஏற்படுத்தியது.
பதிலளிநீக்குவருக நண்பரே தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி
நீக்குகண்ணைக் கவரும் படங்கள்... மனதிற்கு இதம்...
பதிலளிநீக்குவாங்க ஜி இறுதியில் படங்களை திருத்தம் செய்ய நேரமில்லை.
நீக்குட்ரோன் பார்வை சிறப்பு...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி
நீக்குகாணொளிகள் படங்கள் என அனைத்தும் மிகவும் சிறப்பு. ட்ரோன் கொண்டு எடுத்தது ரசித்தேன். கோவில் விவகாரங்களில் ஈடுபடுத்திக் கொண்டது நல்லது. எல்லாம் வல்ல இறைவன் அனைவருக்கும் நல்லதையே தர எனது பிரார்த்தனைகள்.
பதிலளிநீக்குவாங்க ஜி தங்களது வருகைக்கு நன்றி
நீக்குஅழகான பெயர். உங்கள் மனதுக்கும் இதமாக இருக்கும். உங்கள் முடிவும் சரியானதே. எதிர்பார்ப்பு இல்லாமல் வாழப் பழகினோம் எனில் எல்லாம் தானே வந்து சேரும். கும்பாபிஷேஹ நிகழ்வுகள் எல்லாம் நன்றாக எடுத்திருக்கிறீர்கள். படங்களும் அனைத்தும் சிறப்பாக வந்துள்ளன.
பதிலளிநீக்குவருக சகோ தங்களது விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி
நீக்குகாணொளிகள் சிறப்பாக உள்ளன. ஊர் மிகவும் அழகு. என் மாமிக்கு (மாமா மனைவி) வள்ளியூர் தான். அங்கே டிவிஎஸ் காரங்க எஸ்டேட்டில் அவங்க அப்பா மானேஜராக இருந்தார். கல்யாணம் ஏர்வாடியில் அந்தக் கல்யாணத்துக்குப் போனதைப் பற்றி நேற்றுத்தான் மாமியுடன் பேசிக் கொண்டிருந்தேன்.
பதிலளிநீக்குஅப்படியா ? மகிழ்ச்சி வள்ளியூரில் அருகில் ஏர்வாடி இருப்பதுபோல் இதம்பாடல் அருகிலும் ஏர்வாடி (தர்ஹா) இருக்கிறது
நீக்கு