தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், மே 17, 2023

திருகப்பட்ட மனங்களுக்கு திருமணம்


இதற்கு சாட்சிகள் ?
 
ஒன்று - மண்ணாங்கட்டி என்று சொல்லப்படும் அவனது மனசாட்சி.
 
இரண்டு - நிலக்கோட்டையிலிருந்து நிலத்தின் கோட்டைக்குள் சென்று விட்ட அவள் சாட்சி.
 
மூன்று - பொழுது போகாமல் அவனையும் அவளையும் படைத்து விட்டானே அந்த திருவாளியத்தவன் அவனே சாட்சி.
 
இந்த மூன்று சாட்சிகளும் ஓடுகின்ற தண்ணீரில் ஐஸ்கட்டி குச்சியால் எழுதப்பட்ட தீர்ப்புக்கு சமமானவை. அந்த தீர்ப்பு எழுதப்பட்ட பகுதியை தேடி அவனும் அவசியமின்றி ஓடிக் கொண்டிருக்கிறான்.
 
வாழ்வு முடியும்போது அவள் அவனை புரிந்து கொள்ள முயன்றதைப் போல அவன் வாழ்வு முடியும் போதுதான் அவன் அந்த தீர்ப்பு பகுதியை அடைவானோ...?
 
அன்றைய அவனது பொருளாதாரம் தாழ்வாரத்துக்கு போனதால் வாழ்வாதாரம் இந்நிலையில்... இன்றைக்கும் எத்தனை நண்பர்களோ... நண்பிகளோ... அந்நிலையில்... யாமறிவோம் பராபரமே...

வாழ்வு இவ்வாறு இருந்திருப்பினும் அவனுக்கும் ஒரு சந்தோஷம் இன்றைய காலகட்டத்தில் காண்பது அரிதாகி விட்ட சூழலில் அவனுக்கு ஒரு முழுமையான கற்புக்கரசி கிடைத்திருந்தாள் அதற்கு அவன் நன்றி சொல்வான்.

ஆனால் அந்த நன்றி எவனுக்கு என்பதில்தான் குழப்பம் காரணம் அவனது வாழ்வை கெடுத்தது இறைவனா ? மனிதனா ?

 
சாம்பசிவம்-
அவன்தாய்யா...

CivasRegal சிவசம்போ-
? ? ?

கில்லர்ஜி தேவகோட்டை

Share this post with your FRIENDS…

16 கருத்துகள்:

 1. வாழ்வைக்க கெடுத்தது விதி, அல்லது கர்மா.  பணமோ வசதியோ சந்தோஷத்தை கொடுத்து விடுவதில்லை.  அது மனதில் இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 2. கில்லர்ஜி, கற்புக்கரசி கிடைத்த சந்தோஷத்தில் இருக்கட்டும் அவன். இறைவன் ஒரு நாளும் கெடுதல் செய்வதில்லை. நாம் செய்வதற்கு எல்லாம் இறைவன் தான் காரணம் என்று நாம் நினைத்துக் கொண்டிருப்பதுதான் இந்தக் குழப்பங்களுக்குக் காரணம்.

  எதுவானாலும் அது நம்மிடம் தான் நல்லது செய்தாலும் சரி, கெட்டது செய்தாலும் சரி. நாம் தான் பொறுப்பு.

  வருத்தம் சந்தோஷம் எல்லாம் நம் மனதில்தான் இருக்கிறது. எந்த ஒரு வெளிப்பொருளும் காரணமாகிடாது. காரணமாகும் அவை எல்லாம் நிரந்தரமும் இல்லை. நம் மனதை நம்மிடம் அடக்கி வைத்துக் கொண்டால் எல்லாம் சுகமே!

  இது யார் கீதநந்தான்னு நினைச்சுடாதீங்க கில்லர்ஜி!!!! ஹிஹிஹிஹிஹி

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தங்களது விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி

   நீக்கு
 3. வணக்கம் சகோதரரே

  பதிவு அருமை. தலைப்பு நன்றாக உள்ளது. திருகப்பட்ட மனமென்றால், மற்றவர்களால் நிறைய உபதேசிக்கப்பட்டு நிர்பந்தபடுத்தலுக்கு உட்பட்ட மனங்களா?

  எதுவுமே ஊழ்வினை பயன்களால்தான் நடக்கிறது. கண்ணுக்கு தெரியாத அதை இறைசக்தி என நம்புகிறோம். இரு மனங்கள் கூடும் திருமணமும் அவ்வாறே... வாழ்வில் எப்போதும் சந்தோஷங்கள் நின்று நிலைப்பதில்லை. செல்வம் போல் மாறி, மாறி வருவதுதான் இயல்பு. இதில் யாருக்கு நன்றி கூறி, யாரை வெறுப்பது? நற்செயல்கள் பல நடக்க கடக்க செய்வதும் நாராயணன் செயல். தீவினைகள் சூழ படுக்கப் படுக்க வைப்பதும் பரந்தாமன் செயல்.

  யோசிக்க வைக்கும் பதிவுகளின் பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் நன்றி

   நீக்கு
 4. நிறைய திருமணங்கள் இப்படி நடந்து கொண்டு தான் இருக்கிறது.
  இறைவன் சேர்த்து வைக்கிறான். சேர்ந்து வாழ்வதற்கும், பிரிந்து வாழ்வதற்கும் மற்றவர்கள் காரணமாக அமைவதும் விதிபடிதான்.

  கோவில் பணிகள் நல்லபடியாக நடந்து கொண்டு இருக்கும் என்று நினைக்கிறேன்.

  நல்ல காரியங்களில் மனதை செலுத்தி கொண்டு இருக்கிறீர்கள் அப்படியே இருங்கள்.
  இனி வரும் காலங்களை மன அமைதியாக கழிக்க உதவும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது வருகைக்கு நன்றிகள் பல!

   நீக்கு
 5. நடப்பதெல்லாம் நம்மால் தான்...

  பதிலளிநீக்கு
 6. எதில் கேட்டாலும் கணவன், மனைவி விஷயத்தில் மத்தவங்க பேச்சைக் கேட்கக் கூடாது. அவங்களே சண்டை போட்டுக் கொண்டு அவங்களே சமாதானமும் ஆகிக்கணும். அதான் நல்லது.

  பதிலளிநீக்கு
 7. கும்பாபிஷேஹப் பணிகளில் மூழ்கி இருப்பதால் பதிவுகள் வராதோனு நினைச்சேன். எப்போக் கும்பாபிஷேஹம்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்பதிவுகள் ஆல்ரெடி செட்யூல்ட்.

   24.05.2023 புதன் வைகாசி 10 தேதி கும்பாபிஷேகம்.

   நீக்கு
 8. கும்பாபிஷேகத் திருப்பணிகள் சிறப்புறட்டும்!...

  பதிலளிநீக்கு