ஆ...... ஆ....
ஆ....
ஆட்டுக்குட்டி முட்டையிட்டு கோழி குட்டி வந்ததுன்னு...
டேய் ஆட்டுக்காரா...
டோய்...
வாங்க ஆளவந்தான் ஐயா.
ஆட்டை எல்லாம்
வயல்ல விட்டுப்புட்டு பாட்டு பாடிக்கிட்டு இருக்கே...
இல்லையா... இதோ கெளப்பிட்டேன் ஆத்தங்கரை பக்கம் போவணும்.
ஆலமரத்து காத்து
சிலு சிலுனு வருதேடா...
ஆமாய்யா இப்புடி திண்டு மேலே ஒக்காருங்கய்யா...
இது நம்ம ஆண்டக்கா
வயல்ல பார்த்தா, உன்னை தோலை உரிச்சுடுமே...
இருக்கட்டும்யா... என்ன ஆடியசைஞ்சு இந்தப்பக்கம் ?
ஆந்தைமடை போயிட்டு
வாறேன்டா...
சின்ன மகளை ஆடிக்கு அழைக்கவா ?
மகளை அழைச்சாச்சு
நம்ம பூவலிங்கம் ஆச்சாரியை பார்த்துட்டு வாறேன்.
அட ஆமாவுல... பேத்தியாளுக்கு காது குத்துனு கேளிப்பட்டேன் எப்போ ?
ஆவணி மாசம்தான்
செய்யணும்.
நல்லா ஆடம்பரமா செய்யுங்கய்யா...
ஆமாடா நம்ம
கிராமம் மொத்தம் சொல்லி செய்யணும்டா...
ஒங்களுக்கென்னயா... ஆஸ்திக்கா கொறவு ?
மூத்த மருமகன் ஆறுமுகம்தான்
கொஞ்சம் கிராக்கி பண்ணுறாரு...
யாரு ஆண்டிப்பட்டிகாரரா ?
ஆமாடா...
அவருதான்.
நல்லாத்தானே இருந்தீக... அவருக்கு என்ன ஆச்சு ?
எல்லாம் புதுசா
பணத்தை கண்டதும் ஆணவம்தான்.
ஒங்களைப்போல ஆண்ட பரம்பரையைப்பத்தி அவுகளுக்கென்னயா தெரியும் ?
ஆமா... நீ
கல்யாணம் செஞ்சியே தெற்கே அந்த ஊருப்பேரென்ன ?
ஆலந்தூருங்கய்யா... என்ன வெசயம் ?
அங்கே ஆடியபாதம்னு
ஒரு மில் முதலாளி இருக்காரோ.. ?.
ஆமா இருக்காரு யேன், மாமனாருக்கு வேண்டப்பட்டவருதான்.
அவருக்கு ஒரு
மகன் இருக்கானாம் பேரு ஆசைத்தம்பி உன் மாமனாருட்ட விசாரிக்கணும்.
அதானே பாத்தேன் ஆதாயம் இல்லாமயா... இப்புடி ஒக்காந்து யேங்கிட்ட பேசுவீங்க...
அடச் சொல்லுடா...
ஆக்கங்கெட்டகூவை.
சரி, ஆரவல்லிகிட்டே வெசாரிப்போம். அவளுக்கு அவரு மகனே தெரியும்.
ஆகா நல்லதாப்போச்சு
பொழுது சாய பொண்டாட்டிய வீட்டுக்கு கூட்டி வா..
சரிங்கய்யா, ஆமா என்ன பொண்ணு வெசயமா ?
நம்ம ஆலங்குளம்
ரைஸ்மில் மச்சான் வீட்ல பொண்ணு கேட்டு போயிருக்காக... அதான் விசாரிக்கிறேன்.
சரிங்கய்யா நான் ஆறு மணிக்கெல்லாம் வூட்டுக்கு வந்துடுறேன்.
சரிடா நான்
கிளம்புறேன் ஆண்டவா தொடங்குன காரியத்தை நல்ல விதமா முடித்து வையப்பா.
எல்லாம் நம்ம பனை மரத்து மொக்கச்சி ஆத்தா தொணையிருப்பா. போயிட்டு வாங்கய்யா நானும் கெடைய கெளப்புறேன்.
என்ற ஆவுடையப்பன்
ஆடுகளை மார்கழிக்கு அடுத்த மாசத்தை சொல்லி பத்திக் கொண்டு வடக்கு பக்கமாக
செல்ல, ஆளவந்தான் ஐயா பனை மரத்து ஆத்தாளை வணங்கி விட்டு ஊருக்குள்
சென்றார். தூரத்தில் ஆட்டுக்காரனின் பாட்டு மெலிதாக கேட்டது இப்படி... அதன்
பிறகு நமக்கும் காது கொஞ்சம் கேட்காததால் தொடர்ந்து கேட்க முடியவில்லை, அதனால்
எழுதவில்லை.
ஆத்தோரம்
ஆலமரம்...
ஆசை வச்சேன்
ஆரவல்லி...
ஆனந்தமாய்
ஆனதடி...
ஆரவாரம்
ஆகிப்போச்சு
ஆடி மாசமாச்சு
ஆரம்பமுமாச்சு
ஆதிலட்சுமி தாயே...
ஆதாரம் நீயே...
மாலை ஆறரை
மணியளவில் மகன் ஆராவதமுதனை வீட்டிலிருக்க சொல்லி விட்டு ஐயா வீட்டுக்கு
தனது மனைவியோடு வந்தான் ஆவுடையப்பன், வாசலின் வராண்டாவில்... கயிற்றுக்
கட்டிலில் பெரியவர் அமர்ந்து இருந்தார்.
வாடா.. வாத்தா, ஆரவல்லி
நல்லா இருக்கியா ? இப்படி
உட்காருங்க...
நல்லா இருக்கேன்யா ஆத்தா நல்லா இருக்காகளா ?
ஆனந்தவள்ளி யாரு
வந்துருக்கா பாரு... குடிக்க காப்பித்தண்ணி கொண்டு வா.
உள்ளேயிருந்து பித்தளை டம்ளர்கள், சொம்பில் காப்பியோடு வந்தார் ஆனந்தவள்ளி அம்மாள்.
வாடா, ஆரவல்லி
நல்லா இருக்கியா ? கொழந்தைங்க
நல்லா இருக்குதுகளா ?
ஒங்க புண்ணியத்துல நல்லா இருக்கோம் ஆத்தா.
ய்யேன் நாத்துனா ஆண்டாளு
மவளைத்தான் ஒங்கூரு மாப்புள்ளே வந்து பாத்தாகளாம்... ஒனக்கு தெரியுமாமே...
நல்ல பையன் ய்யேந்தம்பி ஆனந்தன்கூட படிச்சுச்சு, வூட்டுக்கு வரும், போகும் தங்கமான தம்பித்தா...
கொஞ்சம் ஆச்சாரமான
குடும்பம்னு கேளிப்பட்டோம்.
ஆமா ஊருல நல்ல செல்வாக்கான குடும்பந்தேன்.
சொந்த ஊரே ஆலந்தூருதானா ?
பூர்வீகம் வடக்கே.... ஆத்தூர்.
வீடு, காணி,
நெலம், தோப்பு, தொறவு, ஆஸ்தி எல்லாம் எப்படி ?
அந்த ஊருல பாதி நெலம் ஆளவாயன் பரம்பரைக்கு சேந்ததுதான்.
அப்ப
குடுக்கலாங்கிறே... ஆரவல்லி சொன்னா சரியாத்தான் இருக்கும்.
நம்பி குடுங்க ஆத்தா, பொண்ணு போட்டா இருக்கா ?
அந்தா நடுவுல
தொங்குது பாரு அதுல ரெட்டைச்சடை போட்டுருக்கா... அதை கழட்டுடா ஆவுடு.
நல்லா ஆசைத்தம்பிக்கு பொருத்தமாத்தான் இருக்குது பேரென்ன ?
ஆதிரா
நல்ல பேரு... எங்க ஆனந்தம் அத்தாச்சி மவளுக்கும் இந்தப் பேருதேன்.
சரிங்கத்தா, ஐயா
நாங்க கெளம்புறோம் ஆட்டெ கெடையில அடைக்கணும்
சரி நல்லபடியா போயிட்டு வாங்க. ஆத்தா மகமாயி இந்த சம்மந்தத்தை நல்லபடியா நடத்தி வெய்க்கட்டும்.
ஒங்க ஆசீர்வாதத்துல
எல்லாம் நல்லபடியா நடக்கும். வாறேன் ஐயா
சரி,, ஆரவல்லி போயிட்டு வா.
ஆவுடு, ஆரவல்லியை
கூட்டிக் கொண்டு வீட்டுக்கு கிளம்பினான். ஆசைத்தம்பி-ஆதிரா திருமணம்
சீரும், சிறப்பாய் ஆரவாரமாய் நல்லபடியாக நிகழ்ந்திட பனை மரத்து ஆத்தாவிடம்
நாமும் பிரார்த்திப்போம்.
கில்லர்ஜி
தேவகோட்டை
சிவாதாமஸ்அலி-
ஆதிரா திருமணத்திற்கு அதிரா வருவாரா ?
சாம்பசிவம்-
அதிரா வந்தால்... ஆச்சர்யம்தான்.
Chivas Regal சிவசம்போ-
தலைப்பு முதல் படங்கள், காணொளி வரை மொத்தம் நூறு ’’ஆ’’ வந்துருச்சே ?
ஆட்டுக்குட்டி முட்டையிட்டு கோழி குட்டி வந்ததுன்னு...
வாங்க ஆளவந்தான் ஐயா.
இல்லையா... இதோ கெளப்பிட்டேன் ஆத்தங்கரை பக்கம் போவணும்.
ஆமாய்யா இப்புடி திண்டு மேலே ஒக்காருங்கய்யா...
இருக்கட்டும்யா... என்ன ஆடியசைஞ்சு இந்தப்பக்கம் ?
சின்ன மகளை ஆடிக்கு அழைக்கவா ?
அட ஆமாவுல... பேத்தியாளுக்கு காது குத்துனு கேளிப்பட்டேன் எப்போ ?
நல்லா ஆடம்பரமா செய்யுங்கய்யா...
ஒங்களுக்கென்னயா... ஆஸ்திக்கா கொறவு ?
யாரு ஆண்டிப்பட்டிகாரரா ?
நல்லாத்தானே இருந்தீக... அவருக்கு என்ன ஆச்சு ?
ஒங்களைப்போல ஆண்ட பரம்பரையைப்பத்தி அவுகளுக்கென்னயா தெரியும் ?
ஆலந்தூருங்கய்யா... என்ன வெசயம் ?
ஆமா இருக்காரு யேன், மாமனாருக்கு வேண்டப்பட்டவருதான்.
அதானே பாத்தேன் ஆதாயம் இல்லாமயா... இப்புடி ஒக்காந்து யேங்கிட்ட பேசுவீங்க...
சரி, ஆரவல்லிகிட்டே வெசாரிப்போம். அவளுக்கு அவரு மகனே தெரியும்.
சரிங்கய்யா, ஆமா என்ன பொண்ணு வெசயமா ?
சரிங்கய்யா நான் ஆறு மணிக்கெல்லாம் வூட்டுக்கு வந்துடுறேன்.
எல்லாம் நம்ம பனை மரத்து மொக்கச்சி ஆத்தா தொணையிருப்பா. போயிட்டு வாங்கய்யா நானும் கெடைய கெளப்புறேன்.
ஆத்தோரம்
ஆலமரம்...
ஆசை வச்சேன்
ஆரவல்லி...
ஆனந்தமாய்
ஆனதடி...
ஆரவாரம்
ஆகிப்போச்சு
ஆடி மாசமாச்சு
ஆரம்பமுமாச்சு
ஆதிலட்சுமி தாயே...
ஆதாரம் நீயே...
நல்லா இருக்கேன்யா ஆத்தா நல்லா இருக்காகளா ?
உள்ளேயிருந்து பித்தளை டம்ளர்கள், சொம்பில் காப்பியோடு வந்தார் ஆனந்தவள்ளி அம்மாள்.
ஒங்க புண்ணியத்துல நல்லா இருக்கோம் ஆத்தா.
நல்ல பையன் ய்யேந்தம்பி ஆனந்தன்கூட படிச்சுச்சு, வூட்டுக்கு வரும், போகும் தங்கமான தம்பித்தா...
ஆமா ஊருல நல்ல செல்வாக்கான குடும்பந்தேன்.
பூர்வீகம் வடக்கே.... ஆத்தூர்.
அந்த ஊருல பாதி நெலம் ஆளவாயன் பரம்பரைக்கு சேந்ததுதான்.
நம்பி குடுங்க ஆத்தா, பொண்ணு போட்டா இருக்கா ?
நல்லா ஆசைத்தம்பிக்கு பொருத்தமாத்தான் இருக்குது பேரென்ன ?
நல்ல பேரு... எங்க ஆனந்தம் அத்தாச்சி மவளுக்கும் இந்தப் பேருதேன்.
சரி நல்லபடியா போயிட்டு வாங்க. ஆத்தா மகமாயி இந்த சம்மந்தத்தை நல்லபடியா நடத்தி வெய்க்கட்டும்.
சரி,, ஆரவல்லி போயிட்டு வா.
ஆதிரா திருமணத்திற்கு அதிரா வருவாரா ?
அதிரா வந்தால்... ஆச்சர்யம்தான்.
தலைப்பு முதல் படங்கள், காணொளி வரை மொத்தம் நூறு ’’ஆ’’ வந்துருச்சே ?
காணொளி
ஆஹா... நூறு ஆ வா? ஆசையா பேசிக்கறாங்க.. ஆண்டவன் அவங்க ஆசையை ஆபத்து இல்லாம நிறைவேத்தணும். ஆனால் கீனால் என்று ஆச்சரியப்படும்படி வேறெதுவும் ட்விஸ்ட் வைக்காம இருக்கோணும்.ஆசீர்வாதம் பண்ணிப்போடுவோம்! ஆனைமலை ஆண்டவர் துணை இருப்பார்.
பதிலளிநீக்குவாங்க ஸ்ரீராம்ஜி அடடே நீங்களும் 11 முறைகள் சொல்லி விட்டீர்களே... நன்றி ஜி
நீக்குகாணொலியில் வரும் குரல் யாருடையது?
பதிலளிநீக்குநேற்றைய பதிவில் போட்டபடி டைட்டில் வாசிக்கும் பழக்கம் இல்லையோ... ஜி
நீக்கு:))
நீக்குகில்லர்ஜி காணொளியில் உங்க குரல்... ரொம்ப நல்லாருக்கு சூப்பர்...இப்படிப் பாடி பதியுங்க கில்லர்ஜி
பதிலளிநீக்குகீதா
வருக தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி
நீக்குஆவுடையார் கோயில்னு பார்த்ததும் கோயில் பத்தி சொல்லியிருப்பீங்கன்னு நினைச்சேன் அதுவும் எங்க ஊர்ப்பக்கம் உங்க குலதெய்வக் கோயில்னு தெரிஞ்சதும்...
பதிலளிநீக்குகீதா
இது உங்கள் ஏரியாவா ?
நீக்கு100 ஆ!! ஆஆஆஆஆஆஆஆஆ....சூப்பர்னு சொல்ற ஆஆஆ இதுங்க...!!! நல்ல கற்பனை. அதுவும் 100 ஆ வருவது போல் வார்த்தைகள் போட்டு..
பதிலளிநீக்குஅதிரா வந்தாக்க இது ஆஆஆஆரூஊஊஊஉ என் பெயரில ஆ ன்னு போட்டு கல்யாணப் பொண்ணுக்கு பெயர் வைச்சதுன்னு ...ஹாஹாஹாஹாஹா
கீதா
அடடே அதிரா மாதிரி கருத்துரை போட்டு இருக்கீங்களே...
நீக்குஆ!..
பதிலளிநீக்கு1 = 100
பதிலளிநீக்குஆ.. ஆ!..
வாங்க ஜி நன்றி
நீக்குநூறைத் தொட்டதற்கு வாழ்த்துக்கள் சார்.
பதிலளிநீக்குபேத்தி ஆதிராவை வாழ்த்த காவிரி மகள் அதிரா விரைவில் வருவார்.
வருக நண்பரே தங்களது வருகைக்கு நன்றி.
நீக்குசரி அதிராவுக்கு, ஆதிரா பெயர்த்தியா ? இந்த விடயம் எனக்கு இப்பத்தான் தெரியும்.
நூறு ஆ...!
பதிலளிநீக்குகிட்டத்தட்ட இதே வேலை தான் திருக்குறளில்...!
பதிலளிநீக்குவாங்க ஜி
நீக்குஉங்களது பாதை அறிவாற்றல், எனது பாதை நகைப்பாற்றல்.
விறு விறு உரையாடலில் சுபமாக முடிந்த கதை[கதைதானே?].
பதிலளிநீக்குகாணொலி[காணொளி] தயாரிப்பிலும் காலடி வைத்துவிட்டீகள். உங்களுக்கு நல்ல குரல் வளம். கலக்குங்கள் கில்லர்ஜி!
வருக நண்பரே காணொளி கண்டு கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.
நீக்குநல்ல குரல் வளம். நன்றாகப் பாடி இருக்கீங்க. ஆரவல்லியின் திருமணம் சிறப்பாக நடைபெறப் பிரார்த்திப்போம். ஆவுடையார் கோயில் என்றதும் மாணிக்க வாசகர் பற்றியோ என நினைச்சேன். :))))
பதிலளிநீக்குவருக சகோ தங்களது பாராட்டுக்களுக்கு நன்றி
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு ஆகா அருமை. பதிவை முழுதுமாக படித்து ஆனந்தப்பட்டு ஆச்சரியமாகிப் போனேன். ஆனந்தமடைந்தது நல்ல திறமையான எழுத்துக்களைப் பார்த்து.
ஆச்சரியபட்டது நூறு "ஆ"க்களும் எவ்வித ஆர்பாட்டமுமின்றி ஒழுங்கான வரிசையில் தங்களின் ஆஞ்கைபடி, எவ்வித கெடுபிடியான ஆளுமையும் இல்லாதவரிடம் சரணடைந்து விட்டது என்ற அதியசத்தில் எழுந்தது.
காணொளி கேட்டேன். நல்ல குரல் வளம் தங்களுக்கு. நன்றாக பாட்டுக்கள் எழுதும் திறன் பெற்ற நீங்கள் திரைப்படத்திற்காக பாட்டுக்கள் பாடவும் முயற்சி செய்யலாம். தங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் சகோதரரே. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வருக சகோ பதிவை ரசித்து படித்து தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சியும், நன்றியும்.
நீக்குவழக்கமான உங்கள் நகைச்சுவையையும், கிண்டலையும் காணவில்லையே?
பதிலளிநீக்குவாங்க மேடம் இது "ஆ" என்ற ஒற்றை எழுத்து விடயமாக போய் விட்டதால் இருக்கலாம்.
நீக்குகதை, வசனம், கவிதை என்று இப்போது பாடலும் நன்றாக பாடி விட்டீர்கள்.
பதிலளிநீக்குஆவுடையார் கோவில் அருமை.
நான் இன்னும் பார்க்காத கோவில். தரிசனம் செய்து கொண்டேன்.
புதுமையான அற்புதமான முயற்சி 100 ஆ. வாழ்த்துக்கள்.
வருக சகோ தங்களது பாராட்டுக்கு மிக்க நன்றி
நீக்குஆ... மீசைக்கார கவிஞருக்குள் ஒரு பாடகர் ஒளிந்திருப்பத கண்டு வியந்தேன்
பதிலளிநீக்குவருக நண்பரே தங்களது வருகைக்கு நன்றி
நீக்குகாணொளி கண்டேன் அதில் "ஆரவல்லி" அருமையாக இருக்கிறார்...
பதிலளிநீக்குகவனமாக பேசுங்கள் நண்பரே... ஆவுடையப்பனுக்கு தெரிந்தால் பிரச்சனை ஆகிப்போயிடும்.
நீக்குமுன்பு "பாடல்" மட்டும்தான் எழுதிக்கொண்டு இருந்தீர்கள்....
பதிலளிநீக்குஆனால் இப்பொழுது நேரடியாக பாடவும் செய்துவிட்டீர்கள்...
அடுத்து,.... காணோளியில் உங்களின் "குத்து டான்ஸ்" ஐ எதிர்பார்க்கலாமா?!!!....
"டான்ஸ்" பார்க்கும் ஆவலுடன் உங்கள் நண்பர் "நாஞ்சில் சிவா"
குத்து டான்ஸேதான் வேணுமா ?
நீக்குகுச்சிப்புடி, பரதம் வேண்டாமா ?
ஆஹா ஆனந்தமாய் ஆர்ப்பரித்தேன் (இப்பதிவின்) ஆசிரியரே.
பதிலளிநீக்குவருக நண்பரே தங்களது வருகைக்கு நன்றி
நீக்கு