தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், அக்டோபர் 17, 2023

ஒரு கொலை மோகம்

ணக்கம் நண்பர்களே... ‘’என் கதை முடியும் நேரம் இது என்பதை சொல்லும் ராகம் இது’’ என்ற டி.ராஜேந்தரின் எனக்கு மிகவும் பிடித்தமான பாடலை எமது பாணியில் மாற்றி எழுதி இருக்கிறேன் கீழே யூட்டியூப்பின் இணைப்பும் கொடுத்துள்ளேன்.
 
இதோ எனது பாடல்...

உன் சதை கிழியும் நேரம் இது
என்பதை சொல்லும் வாரம் இது
அடியினில் துவளும் உடலும் இது
அடிதடியில் தவழும் சடலம் இது

இடுப்பினில் கத்தி இருக்கின்றது அது
இதயத்தை கிழிக்க துடிக்கின்றது
உன்னை என் மனம் வெறுக்கின்றது
உனை வெட்ட என் கை மறுக்கின்றது

போதனை குறைந்தது என் வாழ்வு அதில்
சோதனை நிறைந்தது சிலர் சாவு
பொத்தென்று விழுவது உன் நினைவு அதில்
மெத்தென்று மறைவது என் கனவு

கருவுகள் அறுத்தது எனக்குள்ளே
அதில் உறவுகள் என்பது அடையாதே
எனை அழித்திட நினைப்பது உன் மனது
அதை ஒழித்திட மறுப்பது என் நினைவு

தயிர் சாதத்தை எனக்கு அவள் தந்தாள் அதில்
உயிர் பிரிந்திட எனை கொன்றாள்
குயில் குரலினை மறக்க வழி தந்தாள்
மயில் அழகினை துறக்க விழி மறந்தாள்

துயர் படகினை செலுத்த நீர் தந்தாள்
வெயில் பயணத்தில் வினையாய்
அவள் வந்தாள் உயிர் மரணத்தில்
நிலையாய் காவல் நின்றாள்.

பாடல்-ஆச்சி-ரியர்-கில்லர்ஜி
 
வருடம்: 1980
படம்: ஒரு தலை ராகம்
பாடலாசிரியர்: டி.ராஜேந்தர்
இசை: டி.ராஜேந்தர்
பாடியவர்: டி.எம்.சௌந்திரராஜன்
 
இதோ டி.ராஜேந்தரின் பாடல் வரிகள்
 
ன் கதை முடியும் நேரம் இது
என்பதை சொல்லும் ராகம் இது
அன்பினில் வாழும் உள்ளம் இது
அணையே இல்லா வெள்ளம் இது
 
இதயத்தில் ரகசியம் இருக்கின்றது அது
இதழினில் பிறந்திட தவிக்கின்றது
உலகத்தை என் மனம் வெறுக்கின்றது அதில்
உறவென்று அவளை நினைக்கின்றது
 
பேதமை நிறைந்தது என் வாழ்வு அதில்
பேதையும் வரைந்தது சில கோடு
பித்தென்று சிரிப்பது உள் நினைவு அதன்
வித்தொன்று போட்டது அவள் உறவு
 
உறவுகள் வளர்ந்தது எனக்குள்ளே அதில்
பிரிவுகள் என்பது இருக்காதே...
ஒளியாய் தெரிவது வெறும் கனவு அதன்
உருவாய் எரிவது என் மனது
 
ரயில் பயணத்தின் துணையாய் அவள் வந்தாள்
உயிர் பயணத்தின் முடிவாய் அவள் நின்றாள்
துயில் நினைவினை மறக்கும் விழி தந்தாள்
 
துயர் கடலினை படைக்கும் நீர் தந்தாள்
ரயில் பயணத்தின் துணையாய் அவள் வந்தாள்
உயிர் பயணத்தின் முடிவாய் அவள் நின்றாள்
 
இதோ யூட்டியூப் இணைப்பு
https://www.youtube.com/watch?v=_9R91nOcdD0
நன்றி கில்லர்ஜி தேவகோட்டை
 
இப்பாடலின் படமான முந்தைய பாடலின் சுட்டி மறு கலை தாகம்

Share this post with your FRIENDS…

19 கருத்துகள்:

 1. சிவ சிவா...  காலையில் பார்க்கும் முதல் பதிவில் இப்படியா?!!  ஜீ..  நீங்கள் மாற்றியதிலாவது நல்ல வார்த்தை போட்டிருக்கக் கூடாதா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி "இது குழந்தை பாடும் தாலாட்டு"பாடலை போட்டு இருக்கலாம். அது உங்களுக்கு பிடிக்கும்.

   நீக்கு
 2. இது என்ன ஒரே அறச் சொல்லா இருக்கு? உங்களிடமிருந்தா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தமிழரே புகைப்படம் இப்படி எழுத வைத்தது.

   நீக்கு
 3. டி எம் எஸ், இந்தப் பாடலைப் பாடிய பிறகுதான் தன் கேரியரே முடிவுக்கு வந்தது என்று புலம்பிக்கொண்டிருந்தார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதே டி ஆர் இசையில் இதே போல இன்னொரு நெகட்டிவ் பாட்டும் டி எம் எஸ் பாடினார்.  "நானொரு ராசியில்லா ராஜா.."

   நீக்கு
  2. ஆமாம் ஜி
   திரு. டி.எம்.எஸ். அவர்கள் விருப்பமின்றி பாடிய பாடல்.

   நீக்கு
 4. ஓ ! தயிர் சாதம் தந்ததில் விச(ய)ம் இருக்கு...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் ஜி தயிர்தான் உயிரை பிரித்தது.

   நீக்கு
 5. கில்லர்ஜி - ஜாலியா எழுதுங்க கில்லர்ஜி. முன்ன எல்லாம் கும்மிப் பாடல், ஏலேலோ பாடல்கள், கிராமியப் பாடல்கள் என்று எழுதினீங்க. அதாவ்து பாட்டை உருமாற்றாமல் உங்கள் வார்த்தைகளில் என்ற நினைவு. அவை ரொம்ப நல்லா இருந்தன கில்லர்ஜி. அப்படி எழுதுங்களேன். சுப்பு தாத்தா கூட ஒரு பாட்டை பாடியிருந்தார் இல்லையா?

  அப்படி ஜாலியா எழுதுங்க கில்லர்ஜி!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக இணையத்தில் யாரோ உலாவ விட்ட புகைப்படமே இப்படி எழுத வைத்தது.

   அடுத்து ஜாலியாக பாடல் எழுதி விடலாம்.

   நீக்கு
 6. மனசே சரியில்லை. இது வேறேயா? உங்களீடமிருந்தா/ எத்தனை சோதனைகள் எதிர்கொண்ட பின்னுமா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ மன்னிக்கவும் இனிமேல் இப்படி பதிவுகள் வராது.

   நீக்கு
 7. ஏன் இப்படி சோகப்பாடல்?
  நம் மனதில் சோகங்கள் இருந்தாலும் , மகிழ்ச்சியான ஏதாவது செய்திகளை வாசித்து, பார்த்து கவலைகளை மறக்க வேண்டும் ஜி. நீங்கள் இப்படி எழுதினால் படிக்கும் போது மனம் கனத்து போகிறது.
  யாரும் யாரையும் கொல்ல வேண்டாம்.

  குழந்தைகளின் சிரிப்பை , மலர்களின் அழகை, இயற்கையின் அழகை எழுதுங்கள் கவிதையாக. கவிதை நன்றாக எழுத வருகிறது, படம் நன்றாக எடுப்பீர்கள் இரண்டையும் இணைத்து அழகிய கவிதை படைத்திடுங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ மன்னிக்கவும் இனிமேல் தங்களது ஆலோசனைப்படி கவிதை எழுதுகிறேன் நன்றி.

   நீக்கு
 8. வணக்கம் சகோதரரே

  இந்தப் பாடல் புனைவு நன்றாக உள்ளது. ஆனால், கொஞ்சம் வார்த்தைகள் பயங்கரமாக இருக்கிறதென்று அனைவரும் சொல்லியிருக்கின்றனர். நான் இந்த பாடலை இதுவரை கேட்டதில்லை. பிறகு கேட்கிறேன். பொதுவாக எந்தவொரு பாடலுக்கும் ஏற்றபடிதான் நீங்கள் வார்த்தைகளை கோர்ப்பீர்கள். உங்கள் திறமையை நான் எப்போதும் ரசிக்கிறேன். பாராட்டுக்கள் சகோதரரே. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  இந்தப் பதிவுக்கு வர கொஞ்சம் தாமதமாகி விட்டது. மன்னிக்கவும். நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது வருகைக்கு மிக்க நன்றி.

   நீக்கு