தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, அக்டோபர் 08, 2023

ஆயிரம் ஆண்டுகள் வேண்டும்

ணக்கம் நட்பூக்களே... நான் பெரும்பாலும் பிறருடைய எழுத்துகளை எனது தளத்தில் வெளியிடுவதில்லை இந்த கருத்து புலனத்தில் (What-app) வெளி வந்தது. எனது எண்ண ஓட்டத்தை பிரதிபலிப்பது போலிருந்தது ஆகவே இதனை தங்களுக்கு பார்வைக்காக வைக்கின்றேன் – கில்லர்ஜி
 
இதோ அந்த விபரங்கள்.
 
   01.            தமிழ் நடிகர்களின் சம்பளம் ஒரு படத்திற்கு ஐந்து கோடி முதல் ஐம்பது கோடி வரை. சராசரியாக பத்து கோடி என்று வைத்துக் கொள்வோம்.
 
   02.            மாதம் எழுபது ஆயிரம் ருபாய் சம்பளம் வாங்கும் ஒரு IT ஊழியர் பத்து கோடி சம்பாதிக்க நூற்றி இருபத்து ஐந்து வருடங்கள் பணியாற்ற வேண்டும்.
 
   03.            மாதம் முப்பது ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் ஒரு தனியார் நிறுவன ஊழியர் பத்து கோடி சம்பாதிக்க இருநூற்று ஐம்பது வருடங்கள் பணியாற்ற வேண்டும்.
 
   04.            மாதம் இருபத்து ஐந்து ஆயிரம் சம்பளம் வாங்கும் ஒரு அரசு ஊழியர் பத்து கோடி சம்பாதிக்க முன்னூற்றி முப்பத்து மூன்று வருடங்கள் பணியாற்ற வேண்டும்.
 
  05.            நம் அனைவருக்கும் உணவளிக்கும் விவசாயி பத்து கோடி சம்பாதிக்க எழுநூற்றி அருபது வருடம் உழைக்க வேண்டும்.
 
  06.            ஒரு நாளைக்கு முந்நூறு ரூபாய் வருமானம் பெறும் கூலி தொழிலாளி பத்து கோடி சம்பாதிக்க ஆயிரம் ஆண்டுகள் உழைக்க வேண்டும்.
 
  07.            திரைப்பட நடிகர்/ நடிகைகள் பயன்படுத்தும் கார்களின் விலை ஐம்பது லட்சத்திலிருந்து ஐந்து கோடி வரை.
 
  08.            படப்பிடிப்பு தளங்களில் இவர்களது சொகுசு வாழ்க்கை என்பது நமது கேளிக்கை கடவுள் இந்திரன் கூட அனுபவிக்காது. வெளிநாட்டு மது, நட்சத்திர ஹோட்டல் உணவு, இரவு நேர கேளிக்கை, ஒப்பனைக்கு இருவர், உடை அணிவிக்க இருவர், குடை பிடிக்க ஒருவர், கொஞ்சம் வியர்த்தால் கேரவேனில் ஓய்வு.
 
  09.            இவர்கள் ஒரு நேரம் நட்சத்திர ஓட்டலில் உணவு உண்ணும் தொகை நம் விவசாயிகளின் ஒரு மாத உணவுச்செலவு.
 
  10.            ஒரு ஆண்டில் மூன்று படங்களில் நடித்து ஐம்பது கோடி ரூபாய் சம்பாதித்து பத்து கோடி வரி ஏய்ப்பு செய்து ஐயாயிரம் ரூபாய்க்கு ஏழை குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள் வாங்கி கொடுத்து விளம்பரம் தேடுபவர்கள்.
 
  11.            பல முன்னணி கட்டுமான நிறுவனங்கள் பல கோடிகளில் கட்டிடங்கள் கட்டுவது இவர்களிடம் விற்பதற்காக தான்.
 
  12.            நாம் திரைப்படம் பார்க்க செலுத்தும் பணம் தான் இவர்களுக்கு சம்பளமாக செல்கிறது.
 

மேற்கூறிய இந்த ஏழைகளின் நடிகர் சங்கம் இருபத்தி இரண்டு கோடி ரூபாய் கடனில் தவிக்கிறதாம். அதை அடைக்க இவர்கள் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தி ஒரு டிக்கெட் ஆயிரம் ரூபாய்க்கு நம்மிடம் விற்று கடனை அடைத்த வரலாறு உண்டு. புயல் வெள்ளத்தில் நம் மக்கள் அனைத்தையும் இழந்து நிர்வாணமாய் நின்ற போது நடிகர் சங்கம் உதவி செய்யாது என்று வெளிப்படையாக சொன்னது. அரசியல்வாதிகளிடம் ஏமாறுகிறோம். இந்த கூத்தாடிகளிடமும் ஏமாற வேண்டுமா ? சற்றே சிந்தியுங்கள் உறவுகளே.... இவ்வளவு சம்பளம் பெறும் நடிகர்களின் ரசிகர்கள் யார் தெரியுமா.... ? இலவச அரிசிக்கு ரேஷனில் சண்டை போடும் அப்பாவி ஏழை மக்களின் பிள்ளைகள்தான். சிந்திக்க வேண்டும், இன்றைய இளைய தலைமுறை முதல் தலை நரைத்தவர் வரை...
 
வெளியிட்டவரின் பெயர் – மோகன் எழுதியவரின் பெயர் தெரியாது.

Share this post with your FRIENDS…

30 கருத்துகள்:

 1. கருத்துகள் போகலை. நடிகர்கள் கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகளைவிட லட்சம் மடங்கு உயர்ந்தவர்கள்.

  பதிலளிநீக்கு
 2. ஒரு கவுன்சிலரின் சொத்து, விவசாயியைவிட ஆயிரம் மடங்கு அதிகம். நேற்று ரெய்டு விடப்பட்ட அமைச்சரின் சொத்தை, உலகத்திலுள்ள எந்த விவசாயியும் அடைய, லட்சம் ஆண்டுகள் ஆனாலும் முடியாது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பயிர்த் தொழிலாளர்கள் இல்லை எனில் உலக வாழ்க்கையே கிடையாது.

   நீக்கு
 3. பத்து கோடியா?  ஒவ்வொரு உச்சநடிகரும் நூறு கோடிக்கு மேல் சம்பளம் வாங்குகிறார்கள்.  எங்கு வைத்துக் கொள்வார்கள், என்ன செய்வார்கள் என்பதெல்லாம் வியப்பாக இருக்கும்.  நெல்லை சொல்லி இருப்பது போல அரசியல்வாதிகள் இவர்களைவிட மிகப்பெரிய கொள்ளைக்காரர்கள்.  நடிகர்கள் படத்தில் நடித்தால்தான் கொள்ளை அடிக்க முடியும்.  அரசியவாதிக்கு நாட்டின் ஒவ்வொரு செயலிலும் வாய்ப்பு.  வாய்ப்புகளை அவர்கலேயும் உருவாக்கிக் கொள்வார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரீராம்ஜி இது பழைய கணக்கை வைத்து எழுதியதாக இருக்கும்.

   எனக்கு கிடைத்தே இரண்டு வருடங்கள் இருக்கும்.

   ரசிகர்கள் என்ற வட்டத்தை விட்டு வெளியேறினால் இவர்களுக்கு கரகாட்டம் கோஷ்டிகளுக்கு உள்ள மரியாதை தான் கிடைக்கும்.

   நீக்கு
 4. வணக்கம் சகோதரரே

  பதிவு அருமை. விபரங்கள் அறிந்தேன். தங்கள் ஆதங்கமும் புரிகிறது. பணத்திற்கும் மனிதர்களின் தராதரம் அறிந்து செயல்படும் எண்ணம் உள்ளதென்பதும் ஏற்கனவே நமக்கு தெரிந்ததுதானே...! என்ன செய்வது? அவரவரின் விதிப்பயனை நல்லதோ , கெட்டதோ அனுபவித்துதானே ஆக வேண்டும். இனியேனும் மனிதர்கள் உணர்ந்து திருந்த இறைவன் அருளினால் நன்றாகத்தான் இருக்கும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

   நீக்கு
 5. நான் இப்போது வெளி வரும் திரைப் படங்கள் எதையும் பார்ப்பது இல்லை...

  சம்பாத்யம் இருந்த நேரத்தில கூட ஊதாரித் தனமாக இருந்தது இல்லை...

  இந்த நாதாரிகளைப் பற்றி நான் ஏன் நினைக்க வேண்டும்?..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி
   நானும் திரைப்படங்கள் பார்ப்பதை நிறுத்தி முப்பது ஆண்டுகள் ஆகின்றன ஜி

   நீக்கு
 6. கில்லர்ஜி, ரொம்ப சரியான பதிவு. ஆனா இன்னும் கூடுதல் ஆகிடுச்சுன்னு நினைக்கறேன். நாட்டைக் காக்கத் தன் உயிரையே அர்ப்பணிக்கும் இராணுவ வீரரை இந்த இடத்துல நினைச்சுப் பார்த்தா....மனம் ரொம்ப சங்கடமாகிடும் கில்லர்ஜி. அதே போல ஆராய்ச்சிகள் செய்பவர்கள், நல்லாசிரியர்கள் நினைச்சுப் பாருங்க....

  வணிகம்...

  புனீத் பற்றி இங்க மக்களிடையே...நிஜமாவே மக்கள் மனசுல அப்படி ஒரு மரியாதை அவர் மீது, நடிகர் என்பதை எல்லாம் தாண்டிய மரியாதை.

  நம்மூர் நடிகளிலும் சிலர் உண்மையாகவே நல்லது செய்கிறார்கள். அதிலும் உயர்ந்து நிற்பவர் பாலா. அந்தப் பையன நினைச்சா வியப்பாகவும் அதே சமயம் மரியாதையும் வருகிறது. உச்சக்கட்ட நடிகர்களை விட அவர்தான் உயர்ந்த நடிகர் என்று சொல்வேன். கண்டிப்பாக அவர் இன்னும் பெரிய நிலைக்கு வந்தாலும் அவர் மனம் மாறாது என்று உறுதியாகச் சொல்லும் அளவு அவரது செயல்பாடுகள் தெரிகின்றன.

  கீதா  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தங்களது விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.

   ஆம் இது பழைய கணக்கில் எழுதி இருக்கிறார்கள்.

   நீக்கு
  2. பாலாவுக்கு நல்ல மனைவி அமைந்தால்தான் அது சாத்தியம். உயர்வும் தாழ்வும் மனைவியால்தான் அமையும்.

   நீக்கு
  3. ஆம் இதுதான் உண்மை.

   நீக்கு
  4. நெல்லை, உயர்வும் தாழ்வும் மனைவியால்தான் அமையும்// என்பதைப் பார்த்து என் மனம் சங்கடமாகிவிட்டது. ஏற்க முடியவில்லை.

   என் நெருங்கிய உறவினர் என் கணவரிடம் சொன்னது - "நான் நல்லா இருக்கேன்னா அதுக்குக் காரணம் என் மனைவி. நீங்க கஷ்டப்படுறீங்கன்னா அதுக்குக் காரணம் கீதா"

   கீதா

   நீக்கு
  5. மனைவிகளும் கணவனைப் பார்த்து உன்னால்தான் கெட்டேன் என்று சுட்டிக் காட்டலாம். ஆனால் இந்த எண்ணம் ஒரு குடும்பத்திற்கு நல்லதல்ல. கணவன் நினைத்தாலும் சரி, மனைவி நினைத்தாலும் சரி.

   கீதா

   நீக்கு
  6. இருப்பினும் குடும்பத்தை மனைவி நினைத்தால்தான் மகிழ்ச்சியாக வழி நடத்த முடிகிறது.

   நீக்கு
 7. கில்லர்ஜி, இவங்களாவது ஏதோ ஒரு வகைல உடைக்கறாங்க.....இடையிடையே நல்லது செய்யறாங்க கொஞ்சமாச்சும்....ஆனா நம்மை ஆள்றவங்கள பாருங்க....ஒரு நயா பைசா அவங்க சம்பாத்தியத்துலருந்து தராங்களா? நம்ம பணத்தை ஆட்டைய போடறாங்க கொள்ளையடிக்கறாங்க....உலகத்தையே விலைக்கு வாங்கற அளவு வைச்சிருக்காங்களாமே! இன்னொண்ணு படத்துல சம்பாதிச்சு அரசியலுக்கும் வராங்க......அரசியலுக்கு வந்துதான் நலல்து செய்யணுமா என்ன? அப்ப எதுக்கு வராங்க?

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அரசியல்வாதிகள் உழைக்காமல் கொள்ளை...

   கீதா

   நீக்கு
  2. இவர்கள் அரசியலுக்கு வருவது நல்லது செய்ய அல்ல! சம்பாரித்த பணத்தை பாதுகாக்க...

   நீக்கு
 8. கில்லர்ஜி, ஒரு ரீல் நு ரீலுக்கு ரீல் பார்க்க நேர்ந்தது. அதுல இளைய சமுதாயம் விஜயின் படம் - புதுசோ? -

  இப்படியான ஒரு தரப்பு இளைய சமுதாயம் நாட்டிற்குத் தேவையே இல்லை. வேறு வார்த்தைகளை இங்கு பொதுவெளியில் நான் தவிர்க்கிறேன். பெற்றோரையும் விட நடிகர்களை அதுவும் அவங்கதான் வளர்த்தாங்க எல்லாமே னு சொல்ற இந்தத் தரப்பு இளைஞர்களால் எந்தப் பயனும் இல்லை.

  ஆனா நாம சொல்லி எந்தப் பயனும் இல்லை. அரசியலாதிகள் ஒரு வகையில் இளைய சமுதாயத்தை தவறான பாதியில் கொண்டு போறாங்கனா நடிகர்கள் வேறு விதத்தில். தங்கள் ரசிகர்கள் என்பவர்களை நன்றாக வழி நடத்த முடியும். ஆனால் தங்கள் வணிகம் நன்றாக நடக்க வணிக ரீதியில்தான் நடத்துறாங்க.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விஜய்க்கு மட்டுமல்ல எல்லா கூத்தாடிகளுக்கும் ரசிகனாக இருப்பது அறியாமையே...

   இதில் ஒருவன் சொல்கிறான், அப்பா-அம்மா பெத்தாங்க எங்களை வளர்ப்பது விஜய் அண்ணாதான் என்று...

   இதை விஜயின் சொந்த மகன்கூட ஏற்பதில்லை.

   நீக்கு
 9. நல்லது செய்ய மனம் வேண்டும். 10 ரூபாய் சம்பளம் பெற்றாலும் அதில் ஒரு ரூபாயை ஏழைக்கு உதவும் உள்ளங்கள் உண்டு.
  வரிஏய்ப்பு செய்யாமல் இவர்கள் இருந்தாலே நாட்டுக்கு நன்மை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ ஆம் தங்களது வருகைக்கு மிக்க நன்றி

   நீக்கு
 10. பதில்கள்
  1. வாங்க ஜி சமீபத்திய நிகழ்வுகள் மிகவும் கேவலமாக இருக்கிறது.

   தமிழ் நாட்டுக்கு தண்ணீர் கொடுக்க கூடாது மும்முரம் காட்டுகிறான் கன்னட நடிகர் சிவராஜ்குமார் இவனது படங்கள் அடுத்து தமிழ் நாட்டிலும் ஓடும்.

   நீக்கு
 11. வேதனையான விஷயம் தான் நண்பரே. அண்டை மாநிலத்தை பார்த்தாவது நாம் திருந்த வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே
   தற்போதைய நிலையில் சாத்தியம் இல்லை போலவே தோன்றுகிறது.

   நீக்கு