தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, செப்டம்பர் 20, 2024

நான் ரசித்தவை (3)

    ணக்கம் நண்பர்களே... முன்பு நான் ரசித்த திரைப்பட வசனங்களை தங்களுடன் பகிர்ந்து கொண்டேன், இப்பொழுது பாடல் வரிகளில் சில பகிர்ந்து கொள்கிறேன். தாங்களும் இரசிக்கலாம். பாடிய பாடகர்-பாடகிகளையும் குறிப்பிட்டுள்ளேன் கில்லர்ஜி
 
வருடம் - 1967
திரைப்படம் நெஞ்சிருக்கும் வரை
பாடலாசிரியர் கண்ணதாசன்
இசை விஸ்வநாதன்-ராமமூர்த்தி
பாடியவர் – பி.சுசீலா
 
பாடல்-
வாசலிலே உன் காலடி
ஓசை கேட்டிருப்பேன்
வந்தவுடன் உன் ஆசை
முகத்தைப் பார்த்திருப்பேன்
-----------01-----------
 
வருடம் - 1957
திரைப்படம் சக்கரவர்த்தி திருமகள்
பாடலாசிரியர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
இசை ஜி.ராமநாதன்
பாடியவர் – சீர்காழி எஸ்.கோவிந்தராஜன்
 
பாடல்-
பொறக்கும் போது பொறந்த குணம்
போகப் போக மாறுது – எல்லாம்
இருக்கும் போது பிரிந்த குணம்
இறக்கும் போது சேருது
-----------02-----------
 
வருடம் - 1956
திரைப்படம் நான் பெற்ற செல்வம்
பாடலாசிரியர் கா.மு.ஷெரீப்
இசை ஜி.ராமநாதன்
பாடியவர் – டி.எம்.சௌந்திரராஜன்
 
பாடல்-
பண்பாடு இன்றி பாதகம் செய்யும்
பணத்தாலே யாவும் மறைத்திட
நினைக்கும் குணத்தோடு வாழும்
குடும்பத்தை அழிக்கும்
-----------03-----------
 
வருடம் - 1965
திரைப்படம் விளக்கேற்றியவள்
பாடலாசிரியர் ஆலங்குடி சோமு
இசை டி.ஆர்.பாப்பா
பாடியவர் – டி.எம்.சௌந்திரராஜன்
 
பாடல்-
ஆத்திரம் கண்ணை மறைத்திடும் போது
அறிவுக்கு வேலை கொடு – உன்னை
அழித்திட வந்த பகைவன் என்றாலும்
அன்புக்குப் பாதை விடு
-----------04-----------
 
வருடம் - 1957
திரைப்படம் நீலமலைத் திருடன்
பாடலாசிரியர் அ.மருதகாசி
இசை கே.வி.மகாதேவன்
பாடியவர் – டி.எம்.சௌந்திரராஜன்
 
பாடல்-
எத்தனையோ மேடு பள்ளம் வழியிலே....
உன்னை இடற வைத்து தள்ளப் பார்க்கும்
குழியிலே... அத்தனையும் தாண்டி
காலை முன் வையடா...
-----------05-----------
 
வருடம் - 1989
திரைப்படம் அபூர்வ சகோதரர்கள்
பாடலாசிரியர் வாலி
இசை இளையராஜா
பாடியவர் – எஸ்.பி.பாலசுப்பிரமணியம்
 
பாடல்-
அந்த வானம் அழுதாத்தான்
இந்த பூமியே சிரிக்கும்
வானம் போல் சில பேர் சொந்த
வாழ்க்கையும் இருக்கும்
-----------06-----------
 
வருடம் - 1985
திரைப்படம் சிந்து பைரவி
பாடலாசிரியர் வைரமுத்து
இசை இளையராஜா
பாடியவர் – கே.எஸ்.சித்ரா
 
பாடல்-
என் விதி அப்போதே தெரிந்திருந்தாலே
கர்ப்பத்தில் நானே கரைந்திருப்பேனே
தலையெழுத்தென்ன என் முதல்
எழுத்தென்ன சொல்லுங்களேன்...
-----------07-----------
 
வருடம் - 2004
திரைப்படம் ஆடேடோகிராப்
பாடலாசிரியர் சேரன்
இசை பரத்வாஜ்
பாடியவர் – உன்னி மேனன்
 
பாடல்-
மொழிகள் எல்லாம் முடமாகி என்
மௌனத்தைக் கூட எரிக்கிறதே சுவாசிக்க
கூட முடியவில்லை எனை வாசிக்க  மண்ணில்
எவருமில்லை என்னை எனக்கே பிடிக்கவில்லை
காரணம் கேட்டால் தெரியவில்லை
-----------08-----------
 
வருடம் - 2019
திரைப்படம் விருமாண்டி
பாடலாசிரியர் கமல்ஹாசன்
இசை இளையராஜா
பாடியவர் – கமல்ஹாசன் – ஷ்ரேயா கௌஷல்
 
பாடல்-
நிலவில் காயும் வேட்டி சேலையும்
நம்மை பார்த்து ஜோடி சேருது
சேர்த்து வைச்ச காத்தே
துதி பாடுது சுதி சேருது
-----------09-----------
 
வருடம் - 1992
திரைப்படம் சின்னக் கவுண்டர்
பாடலாசிரியர் ஆர்.வி.உதயகுமார்
இசை இளையராஜா
பாடியவர் – எஸ்.பி.பாலசுப்பிரமணியம் – பி.சுசீலா
 
பாடல்-
கொலுசுதான் மௌனமாகுமா
மனசுதான் பேசுமா
மேகம் தான் நிலவை மூடுமா
மவுசு தான் குறையுமா
-----------10-----------
 
கில்லர்ஜி புதாபி
 
இது தொடர்பான முந்தைய பதிவின் சுட்டிகள் கீழே...
ரசித்தவை ஒன்று ரசித்தவை இரண்டு
 
Chivas Regal சிவசம்போ-
இவரு எதுக்கு திடீர்னு சினிமாவுக்குள்ளே போறாரு.... ?
 
சிவாதாமஸ்அலி -
இவருக்கு சினிமா தெரியாதுனு மண்டபத்துல ஸ்ரீராம்ஜி சொல்லிட கூடாதுல...

24 கருத்துகள்:

  1. நல்ல பாடல்கள், வரிகள்.  ஒன்றிரண்டு  பாடல்களைக் கேட்டதில்லை நான்.  சட்டென சில வரிகள் மனதில் வந்து அமர்ந்து விடுகின்றன.

    பதிலளிநீக்கு
  2. நானும் பல ரசித்த வரிகளை எழுதி வைத்துள்ளேன். 

    உதாரணமாக "மையெழுதும் கண்ணாலே பொய்யெழுதி போனாளே.." "புல்லாங்குழலில் காற்று நுழைந்தால் புதுப்புது இசையாகும்" "இளநீரைச் சுமந்து வரும் தென்னை மரம் அல்ல..."  

    பதிலளிநீக்கு
  3. "இவரு எதுக்கு திடீர்னு சினிமாவுக்குள்ள போறாரு?"


    அங்கேயும் நிறைய முத்துகள் இருக்கே சிவசம்போ.....!

    பதிலளிநீக்கு
  4. //,மண்டபத்துல ஸ்ரீராம் ஜி சொல்லிடக் கூடாதுல்ல..//

    இதுக்கும் பாடல் வரியிலேயே பதில் சொல்ல வேண்டும் என்றால் "உன்னை நானறிவேன்...ஏனையன்றி யாரறிவார்"  MKT பாடல்கள் உட்பட பல பாடல்களின் ரசிகராயிற்றே நீங்கள்...!

    பதிலளிநீக்கு
  5. AVM ராஜன் நடித்த படத்தின் பாடல் ஒன்று தொண்டைக்குழியிலேயே நிற்கிறது..  பாடல் நினைவுக்கு வந்ததும் வரிகளை சொல்கிறேன்.

    பதிலளிநீக்கு
  6. மூச்சிரைக்க நினைவுக்கு குளத்துக்குள் மூழ்கி தேடி எடுத்து விட்டேன்!

    மை வடித்தக் கண்ணிரண்டும், மண் பார்க்கும் பாவனையில், கை பிடித்த நாயகனின், கட்டழகு கண்டு வர, மெய் சிலிர்த்து, முகம் சிவக்கும், மெல்லிடையாள் கூந்தலிலே, தேவி நடமாடுகின்றாள், தேவன் வந்து பாடுகின்றான்

    பதிலளிநீக்கு
  7. நீங்கள் ரசித்த அனைத்து பாடல்களும் மிகவும் பிடித்த பாடல்கள் எனக்கு.
    //வாசலிலே உன் காலடி ஓசை கேட்டு இருப்பேன்
    வந்தவுடன் உன் ஆசை முகத்தைப் பார்த்து இருப்பேன்//

    சிறு வயதில் கே.ஆர் . விஜயா ரசிகை நான்
    இந்த பாடல் பள்ளி பருவ பாடல் .
    வானொலியில் அடிக்கடி கேட்ட பாடல்.
    இந்த பாட்டின் வரிகள் அனைத்தும் அருமையாக இருக்கும்.

    இப்படி அடிக்கடி ரசித்தவை பகிருங்கள் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த பாடல் எனக்கு வெகுகாலமாக பிடித்தமானது.

      தங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சகோ.

      நீக்கு
  8. அனேகமாக எல்லாப் பாடல்களையும் கேட்டிருக்கிறேன். பழைய பாடல்கள் நெஞ்சைவிட்டு நீங்காதவை. எங்கே நீயோ, வாழ்ந்தாலும் ஏசும், முத்துமணி மாலை, உன்னை நினைத்தேன், நானொரு சிந்து போன்ற பாடல்கள் மறக்க இயலாதவை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே தங்களது ரசிப்புக்கு மிக்க நன்றி.

      நீக்கு
  9. அழகான பாடல் வரிகள். நீங்கள் ரசித்த வரிகள் நாங்களும் ரசிப்பதை. இங்கே பார்க்கத் தந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு
  10. ஹோ 1956 முதல் இப்போதைய காலம் வரை அலசியிருக்கிறீர்கள். ஒரு சில கேட்டதில்லை ஆனால் நீங்கள் ரசித்த வரிகள் அருமை. தத்துவ வரிகள் எனலாம். விருமாண்டி 2019 ஆ? இல்லை என்று தோன்றுகிறது.

    கவிஞர் மருதகாசி முதல் கமலஹாசன் வரை நல்ல தேர்வு. ரசித்தேன்

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தங்களது அலசல்களுக்கு மிக்க நன்றி.

      நீக்கு
  11. கில்லர்ஜி இங்க நீங்க சொல்லியிருக்கற பாடல்களில் சிந்துபைரவி மட்டும்தான் டக்கென்று முதல் வரி என்ன என்று தெரிந்தது. மற்ற பாடல்கள் கேட்டால்தான் தெரியும்.

    எனக்கு வரிகள் பிடிபடுவதே கடினம். அது அபூர்வம். இங்கு நீங்க கொடுத்த வரிகளை ரசித்தேன். அதில் சிந்துபைரவியின் அந்த வரிகள் ரொம்பவே அருமையான ஒன்று அந்தக் காட்சிக்கு அந்தக் கதாபாத்திரத்தின் உணர்வுகளைப் பிழிந்து வெளிப்படுத்தும் வரிகள்.

    அது சரி விருமாண்டி வெளி வர கஷ்டப்பட்டு அப்புறம் வெளி வந்துச்சுன்னு எங்கியோ வாசித்த நினைவு ஆனா வெளி வந்த வருடம் 2019 இல்லை நான் அப்ப சென்னையில் இருந்தேன். மகன் கல்லூரியில் சேருவதற்கு முந்தைய வருடங்கள் என்று நினைவு. ஆனால் சரியா தெரியலை. நான் படம் பார்க்கலைனாலும் வீட்டில் சிலர் பார்த்துவிட்டு வந்து சொன்ன நினைவு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தங்களது விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.

      நீக்கு
  12. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை நீங்கள் ரசித்துப் பகிர்ந்த பாடல்கள் அனைத்தும் சூப்பர். முதல் பாடல் எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம். எனக்கு அவ்வளவு பிடித்தமான பாடல். 2வதும், 3ஆ வதும், பாடல் பிறந்த போது, நான் பிறக்கவேயில்லை. ஆனாலும் பிறகு கேட்டிருக்கலாம். எனினும் பாடல்களின் முதல் வரிகள் நினைவுக்கு வரவில்லை.

    4ம் பாடல் நினைவில்லை. 5ஆவது நல்ல பாடல். "சத்தியமே லட்சியமாய் கொள்ளடா" பாடலை மறக்க முடியுமா?

    6ம், 7ம் அற்புதமான பாடல் மனதை கரைய வைக்கும் வரிகள்.

    8ம் 9ம் கேட்ட நினைவில்லை. ஒருவேளை முதல் வரியிலிருந்து கேட்டால் தெரியுமோ என்னவோ..! இங்கு பகிர்ந்த வரிகள் நன்றாக உள்ளது.

    10 ஆவது நல்ல பாடல் அடிக்கடி கேட்டுள்ளேன். இப்படி நல்ல வரிகளை குறிப்பிட்டு தொகுத்த விதத்திற்கு தங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் சகோ. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    இன்று மண்டபத்தில் சகோதரர் ஸ்ரீராம் அவர்கள் உங்களுக்கு மட்டுமில்லை..! எ. பி குடும்பமாகிய நம் எல்லோருக்குமே நேற்றைய தலைப்பை கொண்டு உருவான ஒரு பாடல் நினைவுக்கு வர(தெரிய) வில்லை என்றுதான் சொல்லியிருந்தார். ஹா ஹா ஹா. (நகைச்சுவையாக சொன்னேன். தவறாயின் மன்னிக்கவும் ஸ்ரீராம் சகோதரரே.)

    காலையில் பார்த்ததும் அந்தப்பாடல் நினைவுக்கு வர நினைவுக்கு வந்த வேறொரு பாடலையும் சென்று குறிப்பிட்டேன். அது வேறு வரிகள் என தெரிந்து கொண்டேன். பாட்டு வரிகளில் நீங்கள் இருவருமே இன்று போட்டி போட்டுக் கொண்டு கலக்குகிறீர்கள். இருவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ பதிவை பிரித்து மேய்ந்து தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.

      நீக்கு