தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், டிசம்பர் 05, 2024

குத்து விளக்கு

 

ணக்கம் நட்பூக்களே... ஒரு விழா நிகழ்கிறது என்றால் மங்கலகரமாக குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைப்பார்கள். இது கூலித் தொழிலாளர்கள் முதல் கூத்தாடிகளின் திரைப்படத் தொடக்க விழாக்கள் வரையில் இப்படித்தான் நிகழ்கிறது. இதோ இங்கொரு விழாவுக்கு குத்து விளக்கு ஏற்றும் பெண்மணியின் அவலட்சணத்தை பார்த்தீர்களா ? இப்பெண் தொடங்கி வைக்கும் இது விளங்குமா ?
 
பொதுவாக இந்த மாதிரி நிகழ்வுகளில் முதியவரோ, இளையவரோ, விளக்கு ஏற்றினால் பட்டுச்சேலை உடுத்தி, கூந்தலில் பூ முடித்து, காலில் கொலுசு போட்டு பார்ப்பதற்கு மகாலட்சுமி (திரு.ரவீந்தர் சந்திரசேகர் அவர்களின் மனைவி அல்ல) மாதிரி இருப்பார்கள் அல்லவா... அல்லது குழந்தையாக இருந்தால் பட்டுப்பாவாடை உடுத்தி எவ்வளவு அழகாக நிறுத்தி வைப்பார்கள். மேலேயிருக்கும் பெண்மணியை முகநூல் நண்பர் கேட்டிருக்கும் கேள்விகள் எல்லாம் நான் கேட்கவில்லை.
 
இப்பெண்மணி உடைகள் இன்றைய காலப்போக்கில் டூப்-பீஸ் என்றாகி விட்டது அதனுள் நாம் நுழையக்கூடாது, காலில் உள்ள செருப்பை கழட்டிப் போடச் சொல்லக்கூட இங்கு யாருக்கும் அறிவு இல்லையா ? அல்லது அப்பெண்ணை கேள்வி கேட்கும் திராணி இல்லையா ? என்னாங்கையா இது மானங்கெட்ட வீட்டுல மகராசனுக்கு வாழ்வுனு நம்ம சிவசம்போ சொல்றது போல இருக்கு. கொஞ்சமாவது அறிவைத் திறக்கா விட்டாலும் பரவாயில்லை வாயையாவது திறங்கையா ?
 
ஒருவேளை சுற்றத்தினருக்கு இது விளங்காமல் போகட்டும் என்ற குருட்டு எண்ணமாக இருக்குமோ ? காரணம் இன்றைய மக்களின் மனது கேவலமாக போய்க்கொண்டு இருக்கிறதே... சற்றே நினைத்துப் பாருங்கள் அடுத்த இரண்டு தலைமுறைகளின் சடங்கு நிலைப்பாட்டை... உடல் சிலிர்க்கிறதா ? இதற்கு காரணம் கேட்டால் இவர்தான் சீஃப் கெஸ்ட் என்ற வார்த்தையை தயாராக வைத்து இருப்பார்கள். இந்த சடங்கு முறைகளை செய்வதற்கு நேரம் விரையமாவதால் இவைகளை ஒழித்து விடலாமே...
 
கில்லர்ஜி அபுதாபியிலிருந்து...
 
சிவாதாமஸ்அலி-
மத உணர்வுகளை மதிக்கணும் அல்லது அவைகளை விட்டு வெளியேறணும், இதுதான் இரண்டும் இல்லாத பொன்னலந்தான் வேலை. நம்ம நாட்டான் இருபக்கமும் காலை அகட்டி வைப்பான்.

4 கருத்துகள்:

  1. ​செருப்பு அணிந்த காலுடன் விளக்கேற்றக் கூடாது\என்கிற அடிப்படை அறிவு கூட இல்லாதவரிடம் வேறு எதை எதிர்பார்க்க! சிலர் மேடை மீது ஏறவேண்டும் என்றாலே செருப்பை கீழே கழற்றி வைத்து விட்டு ஏறுவார்கள்.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. தங்களின் கேள்விகள் நியாயமானவைதான்..! செருப்பை அணிந்து கொண்டு விளக்கேற்றுவது தவறுதான்..! என்ன செய்வது? கால மாறுதல்கள் நம் வாழ்க்கை யிலும் இப்படியான மாறுதல்களை கொண்டு வந்துள்ளது ஒரு வேதனைதான்..! பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  3. கில்லர்ஜி அவங்களே குத்துவிளக்கு இதுல வேற நீங்க!!! கேள்வி கேட்டுக்கிட்டு.... ஹாஹாஹாஹா...

    ஒரு விழாவுக்கு யாரைக் கூப்பிட வேண்டும் யார் சீஃப்கெஸ்ட்டாக இருக்க வேண்டும் தலைமை தாங்க வேண்டும் என்று பலருக்கும் தெரிவதில்லை. விழாவுக்குச் சம்பந்தமில்லாதவங்களை சும்மா கூட்டம் கூட்டவும் கவரவும் வேண்டி அழைப்பது பெரும்பாலும் நடக்கிறது. அதைவிடக் கொடுமை அவங்களை அதுல பேசச் சொல்லுவாங்க பாருங்க!! அது காமெடி.

    இந்தப் படத்தை எங்கேயோ நெட்டில் ஏதோ செய்தியில் பார்த்த நினைவு டக்கென்று நினைவுக்கு வரவில்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
  4. கேள்விகள் நம்முள் படத்தைப்பார்த்தவுடன் எழும் தான். புடவை கட்டி இருக்கலாம், சடை பின்னி இருக்கலாம், செருப்பை கழற்றி இருக்கலாம் என்று.
    இதை வெளியில் சொன்னால் நம்மை ஒரு மாதிரியாக பார்ப்பார்கள்.

    பதிலளிநீக்கு