தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, ஜூன் 14, 2014

முடிவாரம்பம்...

S’TOP*STAR’T
(May be Tomorrow)

மனிதன் முடிந்து விட்டதென நினைக்கும் போது ஆரம்பமாவதும்..... ஆரம்பமாக போகிறதென நினைக்கும் போது முடிந்து போவதும்தான் வாழ்க்கை. 

சில திறமைசாலிகள் வெளியே தெரியாமலேயே மறைந்து விடுகிறார்கள், சிலர் திறமை இல்லாமலேயே நிலைத்து(்) விடுகிறார்கள், உலகறியப்பட்டவர்கள் கிறுக்கியதும் கவிதை, அறிமுகமில்லாதவன் கவிதை எழுதியாலும் கிறுக்கன்.

(இல்லாதவள் கிழிந்ததைப் போட்டால் கிறுக்கச்சி, இருப்பவள் கிழித்துப் போட்டாலும் புதுமை என்பதுபோல) 

இந்த ஏற்றத்தாழ்வின் முரண்பாடு எங்கே தொடங்குகிறது ? எல்லாம் ''விதி'' என இரண்டெழுத்தில் முடித்துக் கொள்ளும் விரிந்த மனம் இல்லாத மனிதனிடத்திலா ? இல்லை ஏற்றத்தாழ்வு இல்லையெனில் மனிதன் எல்லோருமே முதலாளி என்ற நினைப்பில் உழைக்காத சோம்பேறி ஆகி விடுவானென இறைவன் அமைத்த கோட்பாட்டிலா ? மனிதனுக்குள் வயிறு என்ற சூழ்ட்சியை அமைத்து ''பசி'' என்ற ஒன்றை கொடுத்து உள்வாங்கி வெளியேற்றும் சுழற்சியை அமைத்ததனால்தான் மனிதன் உழைக்க தொடங்கினான், இந்தத் தொடக்கம் சிந்தனையின் விரிவாக்கத்தால் ஆசைகளும் விரிந்து பறவையை கண்டு அதனைப் போலவே பறக்கவும் ஆரம்பித்தான், தொடரத்தொடர விஞ்ஞானமும் வளர்ந்தது.

வெற்றியாளன் மேலும் தொடர்கிறான், தோல்வியாளன் சோர்ந்து போகிறான், சிலர் விரக்தி கொள்கிறான், பலரது வாழ்வில் மரணம் நெருங்கும்போது விலகி விடும் விலகும்போது நெருங்கித் தொடும், சிலரது வாழ்வில் கிடைத்தது தொலைந்து விடும் சிலருக்கு தொலைந்ததுகூட கிடைத்து விடும், இதைப்போல பலர் படிக்க நினைப்பார் படிக்க வைக்க முடியாது, சிலர் படிக்க வைப்பர் படிக்கத் தெரியாது, இதைப்போல சிலர் பிறருக்கு உதவ நினைப்பர் உதவ முடியாது, சிலருக்கு உதவ முடியும் ஆனால் உதவ மறுப்பர், சிலர் மறப்பர்.

முயற்சி கொண்டால் வெற்றிநாள் முயற்சியின்மை வெட்டிநாள். முயன்றிடு நண்பா முயன்றிடு நாளையல்ல ! இன்றே... இப்பொழுதே.... ஓடு, ஓடு முடிவு தெரியும்வரை ஓடு, உனக்கு ஒருவிடிவு காலம் வரும்வரை ஓடு நண்பா...

மனிதன் முடிந்து விட்டதென நினைக்கும் போது ஆரம்பமாவதும்.... ஆரம்பமாக போகிறதென நினைக்கும் போது முடிந்து போவதும்தான் வாழ்க்கை


காணொளி

சனி, ஜூன் 07, 2014

பவானியில், பவனிவரும் பவானி.

 
ஆவணியில், தாவணி போட்ட பவானி
ஆத்தோரமாய், ஏனின்று வரவில்லை பவனி

 
ஆசையாய், காத்திருக்கேன் கொஞ்சம் கவனி
ஆத்திரப்பட்டு, சொல்லாதே என்னை களவாணி

 
என்மனதில், வீற்றிருக்கும் கலைவாணி
உன்மனதை, விரைந்து தந்திடு மகராணி

 
சலசலத்து, செல்கிறதே இந்த தாமிரபரணி
நம்காதலை, சொல்லட்டுமே இந்த தரணி

 
வரும்போது, எதற்கு உன்அப்பா தண்டபாணி
காரணம், நானிங்கு நிராயுதபாணி

 
சர்க்கரை செய்தியோடு உன் சக்கரபாணி
கவலைப்படாதே, நானும் ஒருநாள் அம்பானி

 
அதன்பிறகு, என்னிடமிருப்பாய் அன்பாய் நீ
காத்திருக்கிறேன், வருவாய் அம்பாய் நீ
 
CHIVAS REGAL சிவசம்போ-
அவ, அப்பன் தண்டபாணி அம்போட வராம இருந்தா பொழைச்சே நீ.
 
தெருக்குரல்
அகராதி (36) ஆணவம் (19) அகங்காரம் (147)4
 
  எவரெல்லாம், இதை காப்பி தொடுப்பர்
அவரெல்லாம், ரத்த வாந்தி எடுப்பர்
 
   தெருநல்லவர்-                                                                                 



ஞாயிறு, ஜூன் 01, 2014

களத்தூர், கண்ணம்மா

வாங்களேன், சிரிப்போம்.
You want see big size ? Just click one time Photo inside.
களத்தூர் இங்கே, கண்ணம்மா எங்கே ?

திங்கள், மே 26, 2014

மோகனாவின், மோகினியாட்டம்

27.10.1986
வெட்டுட்டையாள் காளி துணை. 
 
மோகனா எழுதுரேன் யேய்யா ஒனக்கு இப்பத்தான் நாபகம் வருதா  ஒனக்கு புள்ல நாபகம்குட வரலயா  மூனுமாச புள்லயா துக்கிட்டு வந்தென் போன வாரந்தேன் ஒரு வயசு முடிஞ்சிருச்சு எம் புள்லைக்கு பெரந்த நாளுக்கு ஒரு சட்டை எடுத்துக் குடுக்க தோனுச்சா ஒனக்கு முத்தமா குடுக்கிர முத்தம்நா நாண்  வர்ரேன் மொத்தமா குடுக்க எம் புள்ல  பெரந்த நாளுக்கூட பக்கத்து வீட்டு பருவதம் அக்கா புருசேன் மச்சக்காளைதான் சட்டை எடுத்து குடுத்தாரு வந்த எடத்துல யேன்ஆத்தாவையும் போயிலை வித்ததுக்கு கஞ்சா வித்தேன்னு சொல்லி போலிசுக்காரனுக கூட்டிட்டு போயிட்டானுக நானும் எம்புள்லயும் சோத்துக்கு என்ன செய்றது பக்கத்துவீட்டு பருவதம் அக்காதான் ஆறுவருசமா பக்கவாதம் வந்து படுத்த படுக்கையா கெடக்கே அதுதான் வீட்ல சோரு பொங்கிபோடு வீட்டப் பெருக்குன்னு சொல்லிடுச்சு வாடகை கொடுக்க முடியலே பருவதம் அக்கா புருசேன் மச்சக்காளை நல்லவரு அவருதான் எங்க வீடுதான் கடல்போல கெடக்கே ஒரு ஓரமா நீயும் ஒம்புள்லயும் இருந்துகங்கன்னு சொல்லிட்டாரு அந்த வீட்லதான் புள்லயா குட்டியா நானும் சரின்னுட்டேன் போன மாசம்கூட அவுங்க கல்யான நாலுன்னு எம்புள்லைக்கு சட்டை எடுத்து குடுத்தாரு அப்புடியே எனக்கும் ஒரு பட்டுப்பொடவை குடுத்தாரு பீரோவுல நகையெல்லாம் சும்மா கெடந்தா துருப்புடிச்சு போகும்னு ரெட்டவடம் செயினக்கூட போட்டுக்கன்னுட்டாரு அவரு ரொம்ப நல்லவரு எத்தனேவாட்டி கேட்டுப்பேன் ஒருகம்மலு வாங்கி குடுத்தியா நீ பத்து நாலுக்கு முன்னெ மதுரை மாட்டுதாவனி பஸ்டான்ட்ல பக்கத்து வீட்டு பவானி ஒங்கலப்பாத்து பேசுனாலாம் மோகனா கைப்புள்லய வச்சுகிட்டு கஸ்டப்படுறா இப்பகூட மூனு மாசம் முழுகாம இருக்கான்னு சொன்னாலாம் இதக்கேட்டு கூட எங்கல பாக்கனும்னு தோனலயா ஒன்னச் சொல்லி குத்தமில்லே ஒம்பொறப்பு அப்புடி உன்ஆத்தா கள்ள புருசன்கூட சேந்துகிட்டு உன்அப்பனை வெசம்வச்சு கொன்னதுக்குத்தானே ஆயுள் தன்டனையிலே கெடக்குரா உன் அக்காகூட சக்களத்திகள் சன்டைய வெளக்கப்போனவ அவளுகல தொரத்திட்டு தாலி கட்டாமயே தாசில்தாரோட வாளுரால்ல வெக்கங்கெட்ட வேசி சிருக்கி அவகூடப் பொரந்த நீ எப்பிடி இருப்பே நான் எதுக்கு யென்ஆத்தா வீட்டுக்கு வந்தேன் புள்லப் பெத்தவல்ல பச்ச ஒடம்புக்காரின்னு விட்டா வச்ச ஒந்தொந்தரவு தாங்கம ஆத்தா வீட்ல கொஞ்சநாலு இருப்பொமுன்னு வந்தா எங்கலை அம்போனு விட்டுட்டு நீ அந்த தூத்துக்குடிக்காரி தூ.......................ட்டு கெடகியா நான் வந்த ஒம்போது மாசத்துல அவலுக்கு அடுத்தது பத்து மாசமா ஏன்டா நாசமாப் போரவனெ இந்த லெச்சனத்துல அவலுக்கு பிரசவம் பாக்க நான் வரனுமா யேன்வயிரு பத்திகிட்டு எரியுதுடா இத்தனை நாளா ஒரு கடுதாசிகூட பொடாத நீ துபாய்க்கரன் 18 ந் தேதி வரவும் நான் ஒனக்கு 19 ந் தேதி வரனுமா அப்பன் இல்லாதவ ரென்டாவது வரைக்கும் படிச்சவதனெ அவலுக்கு ஒன்னும் தேரியாதுன்னு நெனைச்சிட்டியா சுப்ரிம்கோட்டு வரை போவென்டா யேந்தம்பி தாண்டவமுத்தி அடுத்தா வரம் பாலையங்கோட்டை இலேருந்து வந்துருவான் அவன் வரட்டும் நீ 19 ந் தேதி காலையிலே ரயில்வே டேசன்ல நிப்பியா அதே தேதி காலையியே ஒன்னை போலீஸ் டேசன்ல வச்சு ஒங்காலை ஒடிக்கலேயேன்ஆத்தா பவழவல்ளி யேன்அ அப்பன் அல்போன்சுக்கு முந்தி விரிக்கலைடா... 
 
சாம்பசிவம்-
ச்சே என்னங்கடா இது... குடும்பமா என்ன ? மொள்ளமாரிப் பயலுக்கும், முடிச்சவிச்ச சிரிக்கிக்கும் கல்யாணம் செஞ்சுவச்சு இருக்காங்கே, பாவம்டா கதுபாய்க்காரன் உங்க சண்டையிலே அவன் தலைய உருட்டிடாதீங்க, எப்படிப் பார்த்தாலும் எல்லாக் குழந்தைக்கும், இன்ஷியல் M தான் வரும் போலயே...

ஞாயிறு, மே 18, 2014

மோகனின் மோகம், மோகனாவுடன்

20.10.1986

தொட்டிச்சியம்மன் துணை.
 
     என் மோகப்பசி மோகனாவுக்கு, உன் மோகமுள் மோகன் மோகத்துடன் எழுதுவது, நான் உன் நினைவால் வாடுகிறேன், நீ உன் அம்மா வீட்டுக்கு சென்று, இன்றோடு ஒன்பது மாதங்களாகி விட்டது, இதுவரை ஒரு லட்டர்கூட போடவில்லை, நானும் ஆபீஸில் வேலை கூடிவிட்டதால், போடலாமென இருந்து விட்டேன், அடுத்த அபார்ட்மெண்ட் அபர்ணாதான், எனக்கு சோறு சமைத்து வைக்கிறாள், அடுத்த மாதம் அவளுக்கு பிரசவமாம், மேலும் மூன்று வருடங்களாக லீவு கிடைக்காத அவளுடைய கணவன் மருதகாசிக்கு, லீவு கிடைத்து விட்டதாம் அதனால் அடுத்த மாதம் 18 ம் தேதி துபாயிலிருந்து வருகிறாறாம், ஆகையால் அடுத்த மாதம் முதல் சமைத்துப் போட முடியாத சூழ்நிலையில் இருக்கிறேன் என்று வருத்தப்பட்டு, உனக்கு கடிதம் போட்டு, 19 ம் தேதி உன்னை வரச்சொல்லச் சொன்னாள், காரணம் 20 அல்லது 21 ம் தேதி குழந்தை பிறக்கலாமென, நமது குடும்ப டாக்டர் காமினி சொன்னார், மேலும் அபர்ணாவுக்கும் உன்னை பார்க்க வேண்டுமென ஆவலாக இருக்கிறதாம், பாவம் அவளும் என்ன செய்வாள், அவள் அம்மா அலமேலுவையும், அடுத்ததெரு அழகர்சாமி கூட்டிட்டு ஓடிட்டான், துணைக்கு இருந்த அவள் தங்கச்சி சீமாவும் சீரியல்ல நடிக்கப்போயி சீரழிஞ்சு போயிட்டா, அவள் அப்பாவும் வேலூரிலிருந்து வர இன்னும் ரெண்டு மாசம் இருக்காம், அவளுக்கு நம்மை விட்டா யாரு இருக்கா... நம் அன்பு மகன் அன்பரசன், எப்படி இருக்கிறான் ? அவனைப் பார்க்காமல் என்னால் இருக்க முடியவில்லை, அதனால நீ கண்டிப்பா அடுத்த மாதம் 19 ம் தேதி வரவும், என் அன்பு மகனுக்கும், உனக்கும் என் ஆசை முத்தம்.19 ம் தேதி காலை, நான் ரயில்வே ஸ்டேஷனில் உனக்காக காத்திருப்பேன்.
 
                                  இப்படிக்கு
உன் ஆசை, மோகனாவின் மோகன்.
 
சாம்பசிவம்-
துபாய்க்காரன், எதுக்கு வர்றானாம்  புள்ளைக்கு பேர் வைக்கவா ? வச்சுட்டு, அப்படியே அவனை பாதயாத்திரையா, காசிக்கு போகச் சொல்லுஞங்க, அவன் கர்மமெல்லாம் தொலையட்டும், 
இன்ஷியல்ல கூட பிரச்சனை இல்லை போலயே !
 
குறிப்பு- 19 ம் தேதி மோகனா வருவாளா... அல்லது கடிதம் ஏதும் வருமா ? எப்படியும், அடுத்த வாரம் நமக்கு தெரிந்து விடும், நல்லதே நடக்கட்டுமென, நல்ல பெருமாளை பிரார்த்திப்போம்