தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, நவம்பர் 11, 2017

இது சிரிப்பதற்கு அல்ல !

 இனியாவது திருந்தணும் தலைவர்கள் அல்ல மக்கள்.
 பிரதமர் பதவி நாங்கள் உனக்கு கொடுத்த வேலை.
 நம்ம ஊரில் வார்டு கவுண்சிலர்கூட செய்யமாட்டார்.
 உமக்கு ஒரு சல்யூட் திரு. கெஜ்ரிவால் அவர்களே...
உங்களுக்கும்தான் திரு. ரங்கசாமி அவர்களே... 
 எளிமையானவர்கள் என்றும் சரித்திரத்தில் நிற்பார்கள்.
மனிதனை மனிதனாக மதிக்கத் தெரிந்த மாமனிதர்.
 திரு. மாணிக் சர்க்கார் இவரும் மனிதருள் மாணிக்கமே.
 மாநில முதல்வரின் எளிமையை பாருங்கள்.
 இவர் சம்பாரிக்கவில்லை என்பதற்கு இதுகூட சான்றுதான்.
முதல்வராக ரயில் நிலையத்தில் திரு. அச்சுதானந்தன். 
 தியாகத்துக்கு மரியாதை கொடுப்பது நம்மிடமில்லை.
 முதல்வராக ஸர்ச்சில் இடமில்லாமல் திரு. உம்மன் சாண்டி
முதல்வர்தான் எளிமையின் திருஉருவம்.
வளமையின் பெரு உருவங்கள்.
 
 மண்ணின் மைந்தன் தமிழனுக்கு கிடைக்கவில்லையே...
 வாழ வைத்தவர்களை வாழ்த்தி உறங்க வைப்போம்.
என் இந்தியா வீழ்கிறது என்பதில் பெருமை உடைகிறேன். 
பொம்மலாட்டம் நடக்குது இங்கே புதுமையாக இருக்குது.
பதவி வரும்போது துணிவும் வரவேண்டும் தோழா !
(காலடியை கூர்ந்து காணவும்)

Chivas Regal சிவசம்போ-
மதுரைக்கு வந்த சோதனை போல... இது எம்ஜிஆருக்கு வந்த சோதனையா ?

58 கருத்துகள்:

 1. படங்கள் பார்த்துக் கையை வாயில் வைட்த்ஹுப் பொத்தியபடி ஓடுகிறேன் உங்கள் புளொக்கை விட்டு:) ஏனெனில் நீங்கதான் இது சிரிப்பதற்கு இல்லை எனச் சொல்லிட்டீங்க.. அந்தப் பயத்தில்:)..

  பதிலளிநீக்கு
 2. வெளிநாட்டு சில முறைகள் பற்றி எழுதோணும் என நினைப்பேன்.. நினைவோடு நின்று விடுகிறது..

  இங்கே பொருட்கள் வாங்கினால், பொலீஸ், ஆமி கூட மக்களின் பின்னால் கியூவில் நின்றுதான் பணம் கொடுத்து வாங்கிப் போவார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்க பஜ்ஜி சுட்டு தின்னுக்கிட்டு இருந்தால் எப்படி எழுதுவது

   நீக்கு
  2. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. அது சுட்டதில்லை:) அவணில வச்சதாக்கும்:) ஹா ஹா ஹா.

   நீக்கு
  3. வழக்கமாக இந்த தளம் முதல்முறை வருபவர்களுக்கு விரிப்பதுதான்.

   நீக்கு
  4. முதல்தரம் வருவோருக்கு சிவப்புக் கம்பளம் எல்லாம் விரிப்பீங்க.. முதலாவதா வருவோருக்கு ஒரு பிங் கார்பெட் கூட விரிக்க மாட்டீங்க:).. இதுக்கு என்ன நியாயம் ஜொள்ளுங்கோ.. என் இப்பொன்னான கருத்தை சிறீ சிவசம்போ அங்கிள் பார்வையில் பட வைக்கும்படி வேண்டுகிறென்.

   [அவசரத்தில் ஒரு வரியை மாத்தி எழுதிவிட்டேன், அது என் மனதுக்கு கொஞ்சம் கஸ்டமாக இருந்தது தப்பாக எழுதிவிட்டேனோ என, அதனால் டிலீட் பண்ணி திரும்ப அனுப்புகிறேன் இதை]..:).

   நீக்கு
 3. இங்கு குப்பை அள்ளுபவரும், பெரும் அதிகாரியாக இருப்பவரும்.. பொது இடத்துக்குப் போனால் இருவரும் ஒரே அந்தஸ்துப் போலவே இருப்பார்கள்.. பெருமை சிறுமை கிடையாது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் அரபு நாட்டிலும் இந்த மரியாதையை கண்டு இருக்கிறேன்
   மனிதனை, மனிதனாக மதிக்கத் தெரிந்தவனே மனிதன்.

   நீக்கு
 4. எல்லாம் அருமை கடைசியில் வளமையின் தெரு உருவங்களையம் அந்த உடன் பிறவா க்களையும் போட்டு விட்டீர்களே :)

  இங்கே சாமான்ய மக்களா இருந்தாலும் பிரதம மந்திரி அமைச்சராக இருந்தாலும் ஒரே நீதி தான் .நம்ம ஊரில் தான் எல்லாருக்கும் கொம்பு முளைச்சி போகுது ..ஆனாலும் பயங்கர துணிவு தான் காலடியில் வைச்சிட்டாங்களே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உடன்பிறப்புகளை பிரிப்பது பாவமில்லையா ?

   கொம்பு சீவி விட்டது மக்கள்தானே... இப்பொழுது குத்தினால் வாங்கி கொள்ளணும்.

   நீக்கு
 5. இந்த பதிவை எழுதியவர் பாகிஸ்தானிடம் இருந்து பணம் பெற்றுக் கொண்டு எழுதி இருக்கிறார் இவர் ஒரு ஆண்டி இண்டியன் அதனால்தாம் மோடியின் ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி மிக குறைவு என்று பதிவிட்டு இருக்கிறார்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் யாரிடமும் //கை நீட்டி பணம் வாங்கி கொண்டதில்லை//

   அந்தப்படத்தை மின்னஞ்சலில் அனுப்பிய ஆண்டிப்பட்டி ஆண்டியப்பன் எனது ஸ்விஸ் கணக்கு எண் கேட்டார் கொடுத்தேன் அவ்வளவுதான்.

   நீக்கு
 6. Well said Mr. Killergee. Prayer and efforts are two steps towards change for India. Sorry to write in english.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. திரு. குமார் ராஜசேகர் அவர்களின் முதல் வருகைக்கு சிவப்பு கம்பளம் விரிக்கிறேன்.

   திறமைசாலிகள் இந்தியாவில் நிறைய உண்டு அவர்கள் நல்ல மனங்களை பெற பிரார்த்திப்போம் நன்றி நண்பரே

   நீக்கு
 7. உலக வங்கியிடம் மூன்று வருடங்களாகக் கடனே வாங்காத ஒரே இந்தியப்பிரதமர் என்ற ஒரு தகுதியே மோதிக்குப் போதும்! மற்றபடி மற்றவை எல்லாம் அருமை! நன்கு ரசித்து எழுதி உள்ளீர்கள். ஜிடிபி பற்றி எழுதப் போனால் பெரிய பதிவாகிவிடும். அவரவர் கருத்து அவரவருக்கு! :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தங்களுக்கு ஒரு பதிவு எழுத நான் காரணமாகி விட்டது அறிந்து மகிழ்ச்சி.

   நீக்கு
 8. உண்மையிலேயே வருத்தப்படவைக்கும் விஷயங்கள். ஏங்க வைக்கும் செய்திகள். நம்மூர் தலைவர்கள் தானாகவே பெட்ரோல் போட்டுக்கொண்டால் ரெண்டு லிட்டர் கூடவே போட்டுக் கொள்வார்கள். அல்லது சரியாக நிரப்பத் தெரியாமல் பாதியைக் கீழே விடுவார்கள்.

  சமீபத்திய செய்தி ஒன்றை விட்டு விட்டீர்கள். திரு குமரி அனந்தன் அவர்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக ஸ்ரீராம்ஜி இரண்டு லிட்டர் கூடுதலாக போட்டுக்கொள்வது இருக்கட்டும் போட்டதுக்கு முதலில் பணம் கொடுப்பாரா ?

   நான் அறியவில்லை ஜி இது தெலுங்கிசைக்கு தெரியாதோ ?

   நீக்கு
 9. படங்கள் மூலம் நம் தலைவர்களை தோலுரித்து காட்டிவிட்டீர்கள். சிந்திக்க வைத்த பதிவு!
  த ம +1

  பதிலளிநீக்கு
 10. ராஜா என்பவன் கடவுளுக்கு நிகரானவர்கள் என்று கற்பித்த சமூகம் நம்முடையது.அதனால் விளைந்த கோளாறு தான் நம் தலைவர்கள் நடந்து கொள்ளும் விதம். மக்கள் மனப்பான்மை மாற வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ நாம் புதிதாக புத்நி படிக்க வேண்டாம் நமது கலாச்சாரங்கள் சொல்லி வந்ததை உணர்ந்து நடந்தால் போதுமானதே...

   நீக்கு
 11. தலைவர்-ன்னா "பந்தா" - என்று மக்களே ஏற்றுக் கொண்ட நிலை உள்ள போதும், சாதரணமாய் இருக்கும் தலைவர்களை வாழ்த்தியே ஆகவேண்டும் !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களின் கருத்துரைக்கு நன்றி

   நீக்கு
 12. கில்லர்ஜி... இதுக்குக் காரணம் நாமதான். வெறும் வேட்டி சட்டையோட ஓட்டுக்கேட்டு வந்தால் நாம (தமிழ் இனம்) ஓட்டுப்போட மாட்டோம். நல்லக்கண்ணு கடைசி வரைல நமக்காகப் போராடணும். பாராட்டுவோம் ஆனால் தேர்ந்தெடுக்க மாட்டோம். கேரளாவில் தலைவர்கள் மக்களோடு மக்களாக இருக்கிறவர்கள்.

  வெளிநாடுகள்ல கேட்கவே வேண்டாம். மக்கள் குவாலிட்டி அதிகம். அவர்களுக்கு நல்ல தலைவர்கள் கிடைக்கிறார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே...
   கேரளாவில் அரசியல் தொண்டனாக இல்லாதவனும் அரசியல் விடயங்களை அறிந்து வைத்திருப்பான்.

   தமிழகத்தில் அரசியல் தொண்டன் என்று மூன்று தலைமுறைகளாக சொல்லிக்கொள்வான் ஆனால் அரசியலின் அரிச்சுவடிகூட தெரியாது.

   கேரளாவில் தலைவன் தவறு செய்தால் மனதிலிருந்து தூக்கி எறிவான்.

   தமிழகத்தில் தலைவனுக்காக தன்னையே எரிப்பான்.

   கேரளாவில் பெரும்பாலானோர் ஏமாற்றுக்காரர்கள் ஆனால் நேர்மையானவர்களை தேர்ந்து எடுக்கத் தெரிந்த அறிவாளிகள் அதிகம்.

   தமிழகத்தில் பெரும்பாலானோர் ஏமாறுபவர்கள் ஆகவே நேர்மையானவர்களை தேர்ந்து எடுக்கத் தெரியாத முட்டாள்கள் அதிகம்.

   இந்த சாபக்கேட்டை நீக்க அனைத்து கட்சி தொண்டர்களையும் கூண்டோடு அழிக்க வேண்டும் அதனுள் எனது குடும்பத்தினர் இருந்தாலும் இதுவே என் கருத்து.

   இது வன்முறையல்ல! நன்முறை.

   நீக்கு
 13. நல்ல ஒப்பீடு கில்லர்ஜி! நம்ம ஊர்ல ஆட்டைய போடத்தான் பார்த்திட்டிருப்பாங்க...23 ஆம் புலிகேசில வரா மாதிரி ராஜாதி ராஜ.......என்று தொடங்கி ஒரு மைல் நீளத்திற்கு அல்லக்கைகளுடந்தான் பவனி வருவார்கள். எளிமை என்பதெல்லாம் எம்புட்டுனு...வீட்டுக்கு எல்லாம் சும்மா போய்ட்டுருக்கும் போது நீங்க என்னடானா பெட்ரோல் இப்படு நமம்வங்க போடுவாங்களானு கேட்டுருக்கீங்க!!!

  படங்கள்ல ரெண்டே ரென்டு மட்டும் கொஞ்சம் ஏத்துக்க முடியலை. வெஸ்ட்பெங்கால், பாண்டிச்சேரி..பாண்டி ஆளு டீ குடிப்பாரா இருக்கலாம்..அதே போல வெஸ்ட்பெங்கால் புடவையில் எளிமை..ரைட்டு ஆனால் இருவருமே ...சரி வேண்டாம் விடுங்க...ஸோ இந்த ரெண்டும் எந்தவிதத்திலியும் ஏற்ற்றுக் கொள்ள முடியலை. பாண்டியில் நான் இருந்த பகுதிதான் அவர் இருந்ததும். அதே போப்ன்றுதான் வேளாண்மையும்....

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சில விடயங்களோடு தங்களது மனதில் பட்ட கருத்தை முன் வைத்தமைக்கு மிக்க நன்றி.

   நீக்கு
  2. கீதா, நானும் பாண்டிச்சேரியைப் பற்றியும், மேற்கு வங்காளம் பற்றியும் நீங்க சொல்றாப்போல் நினைச்சேன்! ஏனெனில் கல்கத்தா போனப்போ நேரிலே கேட்ட செய்திகள் அநேகம்! :( ஆனால் வேணாம்னு விட்டுட்டேன். :)

   நீக்கு
 14. இது சிரிப்பதற்கல்ல என்று சொல்லி சிந்திக்க வைத்துவிட்டீர்கள். மக்களாகப் பார்த்து நல்ல தலைவர்களை தேர்ந்தெடுத்தாலொழிய இந்த நிலைதான் நீடிக்கும்.

  We get the government we deserve, not the government we want. என்று சொல்வதுண்டு. எனவே நாம் முதலில் நம்மை திருத்திக்கொண்டு நமக்கு ஏற்ற தலைவரை தேர்ந்தெடுப்போம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே சரியான விட.ம் சொன்னீர்கள் வருகைக்கு நன்றி

   நீக்கு
 15. முதலில் வரும் எல்லா படங்களும் நம்பிக்கையை கொடுக்கிறது சரியாகிவிடுமென்று பின்னர் ஜெசி போட்டோக்கு பிறகு சே என்ற விரக்தியை கொடுக்கிறது இந்த தடவை சம்போ வந்துவிட்டார்...... இதையும் பிரமாண்டமாய் நிற்கும் அவர்கள் கைகளால வந்து வைத்துவிட்டு போனார்கள் மக்கள் தானே தொண்டர்கள் தானே ஏன் இப்படி மாறனும் இப்படி பச்சோந்தியாக யார் மாற சொல்கிறார்கள் நாமே நமக்கு எப்போதும் எங்கும் குழியை பறித்து வைத்துவிட்டு லெபோ திபோன்னு சீன் போடுகிறோம் நிறைய விஷயத்தில்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக மிகவும் கவனமுடன் கண்டு இருக்கின்றீர்கள் நான் நினைக்கவே இல்லை இதை யாரும் சொல்வார்கள் என்றும் நினைக்கவில்லை ஆனால் நான் கோர்த்த விதம் அதுவே மிக்க மகிழ்ச்சி

   நீக்கு
 16. என்ன சொல்வது என்று தெரியவில்லை. கொடுமை கொடுமை என்று போனால் அங்கும் ஒரு கொடுமை தலையை விரித்துப் போட்டுக் கொண்டு நிற்கிறது என்ற நிலமையில்தான் இன்றைய இந்திய அரசியல் நிலவுகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பரின் உண்மையான கருத்தைப் பகிர்ந்தமைக்கு நன்றி

   நீக்கு
 17. காலம் காட்டும் கடிகாரம் - அதுகூட
  உன் கையில் இல்லை..

  - என்று பெருந்தலைவர் காமராஜரைப் பார்த்து கவியரசர் பாடி வைத்தார்..

  அப்படிப்பட்ட காமராஜரை கவிழ்த்து விட்ட பெருமை நம்முடையதல்லவா!..

  ஏழைப் பங்காளரின் ஏழடுக்கு மாளிகையைப் பாரீர்.. ந்னு ,
  தொண்டை கிழியக் கிழியக் கத்தினார்கள்..

  கடைசியில் அந்த வீடு ஒரு தளமுடையது.. அதுவும் வாடகை வீடு..

  கும்பி கருகுது.. குடல் கொதிக்குது
  குளுகுளு கார் ஒரு கேடா!.. -.. ந்னு கூப்பாடு போட்டானுங்க..

  காமராஜர் கோடீஸ்வரர் - என்ற மாயையை ஏற்படுத்தி விட்டு,
  பொதுக்கூட்டங்கள்..ல மக்களிடம் துண்டு ஏந்திக்கிட்டு தகர டப்பா எடுத்துக்கிட்டு வசூல் வேட்டை ஆடினானுங்க!..

  ஆகா.. அன்னக் காவடி மாதிரி வர்றானுங்களேன்..ன்னு ஜனங்க காசு போட்டது மட்டுமில்லாம ஓட்டையும் போட்டானுங்க..

  இன்னைக்கு அந்தக் கட்சியோட கணக்கு வழக்கு என்ன?...

  ஓட்டு போட்ட ஜனங்களை ஆட்டைய போட்டானுங்க..

  கடைசில பாமர ஜனங்களுக்கு கிழிஞ்ச கோவணமும் தகர டப்பாவும்..ன்னு ஆயிடுச்சு..

  நீங்க அந்த புண்ணிய வரலாற்றையும் இங்கே கட்டம் கட்டியிருக்கலாம்!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி
   மிகவும் அழகிய கருத்துரை நிறைய விடயங்கள் தந்தீர்கள் இது எமக்கு அடுத்த பதிவு எழுத உதவுகிறது மனமார்ந்த நன்றி

   நீக்கு
 18. அரசியல் அவலம் இங்கே நிறையவே உண்டு. என்னத்த சொல்ல.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி இந்தியா முழுவதும் இந்நிலையே...

   நீக்கு
 19. படங்களின் தொகுப்ப அருமை!

  பதிலளிநீக்கு
 20. மக்கள் ஏற்றிவிட்ட தலைவர்கள்.
  மக்கள் விழித்துக் கொள்ள உங்கள் பதிவு உதவும் என்று நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 21. திருந்துவது மக்கள் மட்டும்மல்ல...தலைவர்களும்தான்...படித்தவனே முட்டாளாக இருக்கும்போது...அப்பாவி மக்கள் என்ன செய்வார்கள்....????

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்பாவி என்பதே முட்டாள் என்பதின் பிரதிபலிப்புதான் நண்பரே... மூளை உள்ளவனே ஏமாற்ற முடியும்.

   நீக்கு
 22. உங்கள் நேர்மைக்குப் பாராட்டுகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா இதில் எனது நேர்மை என்ன இருக்கிறது..... உள்ளதை சொன்னேன் வருகைக்கு நன்றி ஐயா.

   நீக்கு
 23. ரொம்ப சிந்திக்க வச்சு கடைசியில சிரிக்கவச்சிட்டிங்க தோழர்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க மேடம் இதில் சிரிப்பும் இருக்கிறதா....?
   வருகைக்கு நன்றி

   நீக்கு
 24. அருமையான தொகுப்பு. நன்றி அன்பரே

  பதிலளிநீக்கு