தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, ஆகஸ்ட் 21, 2015

போலி‘’ஸ் ஸ்டேஷனில்....

 
நேரம் மதியம் 02.10 ஐ.ஜி ஐயப்பன் வெளியிலிருந்து அலுவலகத்தின் உள்ளே நுழைய... பின்னாலேயே வந்தார் அஸிஸ்டெண்ட் கமிஷனர் அஜித்குமார்.
ஷ்ஷ் அப்பாடா என்ன ? வெயிலு... கார்ட்ஸ் பட்டுனு  A/Cயைப் போடுங்க...
சொல்லி விட்டு தனது இருக்கையில் அமரும்போது.... ட்டுமீல்... மிரண்டு போய்ப் பார்த்தால் பக்கத்தில் அஸிஸ்டெண்ட் கமிஷனர் அஜித்குமார் நெற்றிப் பொட்டில் குண்டு பதிந்து விழிகள் விரிய கீழே விழுந்து கிடந்தார் அனேகமாக இறந்திருப்பார்...
யோவ்... எதுக்குயா.....? இவரை சுட்....டே.... ?
நீங்கதானே ஸார் A/Cயை போடுனு.... சொன்னீங்க..
? ? ?
* * * * * * * * * * 01 * * * * * * * * * *
 
வெளியிலிருந்து உள்ளே நுழைந்த இன்ஸ்பெக்டர் இளமாறன் கேட்டார்.
ஏய்யா ? அவனைப்போட்டு அடிக்கிறீங்க ?
ஸார், இவன் வீட்டுல மான் கறி பதுக்கி வச்சு இருக்கான் கேட்டதுக்கு எம்பேரும் சல்மான்தான் உங்களுக்கு தைரியம் இருந்தால் அவரையும் இந்த மா3 அடிக்க முடியுமா ? அப்படினு திணாவட்டா கேட்கிறான் ஸார்.
? ? ?
* * * * * * * * * * 02 * * * * * * * * * *
 
கான்ஸ்டபிள் அங்கே என்ன ? பிரட்சினை
பிளேடு பிச்சை முத்து 5 ம்-நம்பர் லாக்கப்புக்குள்ளே போக மாட்றான் ஸார்.
ஏன் ?
இவனுக்கு ஒத்தப்படை நம்பர் ராசி இல்லையாம் மற்ற லாக்கப் எல்லாமே ஃபுல்லா இருக்கு ஸார்.
? ? ?
* * * * * * * * * * 03 * * * * * * * * * *
 
ஸார் எவ்வளவு அடிச்சாலும், ரௌடி ராக்கப்பன் வாயிலிருந்து எதையுமே புடுங்க முடியலை.
ஏன் ? பல்லைக்கூடவா ? புடுங்க முடியலை.
? ? ?
* * * * * * * * * * 04 * * * * * * * * * *
 
ஸார் இவன்தான் அருணா தியேட்டருக்கு பாதுகாப்புக்கு போயிருந்தபோது என்னை கவுண்டருல விட்டு அடிச்சவன்.
அப்படினா.... என்கவுண்டருல போட்ரு...
? ? ?
* * * * * * * * * * 05 * * * * * * * * * *

ஏட்டு, என்னய்யா ? விஷேசம் எல்லோருக்கும் ஸ்வீட் கொடுக்குறே...
என்னோடது இல்லை ஸார் கைதி கண்ணாயிரம் இன்றைக்கு லாக்கப்புக்கு வருவது1000 வது முறையாம் அதான் அவனோட ட்ரீட்...
? ? ?
* * * * * * * * * * 06 * * * * * * * * * *
 
ஏன்டா, உன்னை எத்தனை தடவை பிடிச்சு உள்ளே போட்டாலும் பிட்பாக்கெட் அடிக்கிறதை நிறுத்த மாட்டியா ?
ஸார்... ஸார்... இந்த ஒருதடவை மட்டும் விடுங்க ஸார் தீபாவளி நேரம் ஆஃப்பர் தாரேன்....
? ? ?
* * * * * * * * * * 07 * * * * * * * * * *
 
ஐ.ஜி வீட்டுக்குள்ளே எதுக்குடா ? சுவர் ஏறிக்குதிச்சே ?
இல்லை ஸார் இன்ஸ்பெக்டர் வீடுதானே... அப்படினு நினைச்சேன் ஐ.ஜி வீடுனு சத்தியமா தெரியாது ஸார்.
? ? ?
* * * * * * * * * * 08 * * * * * * * * * *
 
ஏன்டா, உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா... போலீஸ் ஸ்டேஷனிலேயே வந்து 2 நாளைக்கு துப்பாக்கியை வாடகைக்கு கேட்பே ?
நான் படிக்காதவன் ஸார் அதெல்லாம் வேணும்னா ? லைசென்ஸ் எடுத்து வா’’னு சொல்றாங்க.. ஸார்.
? ? ?
* * * * * * * * * * 09 * * * * * * * * * *
 
உட்காருமா.... அழாமல் சொல்லு கான்ஸ்டபிள் இந்த அம்மாவுக்கு ஒரு டீ சொல்லு உன் புருஷன் எதுக்காக ? உன்னை அடிச்சுக் கொடுமைப் படுத்துறான்.
எங்க மச்சான் கில்லர்ஜி சினிமாவுக்கு கூப்பிட்டாருனு போனேன் இதுக்குப்போட்டு அடிக்கிறான் கூறுகெட்ட மனுஷன்.
? ? ?
* * * * * * * * * * 10 * * * * * * * * * *
 
தொடர் வருகை தந்து நல்ல கருத்துரைகளை வழங்கி எனது சிந்தனையை (கேசரியைப்போல்) கிளறி விடும் அனைத்து நண்பர், நண்பிகளுக்கும் நன்றி.
– கில்லர்ஜி.
காணொளி.



புதன், ஆகஸ்ட் 19, 2015

கெட்டவனுக்கு 8


01. ஆதரவற்று ஒதுக்கப்பட்ட இவரை பார்த்த பிறகும் பெற்றோர்களை அழைக்க மறுக்கும் மடையனா நீ ? இல்லை, அறிவாளி நீ

திங்கள், ஆகஸ்ட் 17, 2015

சென்னையில், ஒருநாள்

பெருந்தகை ஐயா புலவர் திரு. சா. இராமாநுசம் அவர்களுடன் நான்தாங்கோ கில்லர்ஜி.
என்னை சென்னைக்கு வரவழைத்த புலவரின் வரிகள்.


புகைப்படத்தை பெரிதாக காண புகைப்படத்தில் ஒருமுறை சொடுக்கவும்.


அன்பு நண்பர்களே வணக்கம்...
சிங்காரச் சென்னையில் ஒருநாள் அது திருநாளே... ஆம் ஐயா புலவர் திரு. சா. இராமாநுசம் அவர்கள் தனது கருத்துரையில் சொன்ன ஒரேயொரு வரிகளே என்னை சென்னை நோக்கி பயணிக்க வைத்தது அதற்காக பிற பதிவர்கள் தவறாக நினைக்க வேண்டாம் தில்லை அகத்து நிறுவனர்களில் ஒருவரான சகோ திருமதி. கீதா அவர்களிடம் சொன்னேன் சொன்னதுதான் தாமதம் மற்ற அனைத்து வேலைகளையும் தெளிவாக அமைத்து அனைத்து சென்னைப் பதிவர்களிடமும் சொல்லி விட்டார்கள்.


திரு. ஆரூர் மூனா அவர்கள், திரு. இராய. செல்லப்பா அவர்கள், கவிஞர் திரு. மதுமதி அவர்கள், திரு. அரசன்.சே அவர்கள் மற்றும் ஐயா புலவர் திரு. சா. இராமாநுசம் அவர்கள்.


ஐயாவுடன் அன்பேசிவம் திரு சக்தி அவர்கள்.

புகைப்படத்தை பெரிதாக காண புகைப்படத்தில் ஒருமுறை சொடுக்கவும்.
திரு. ஆரூர் மூனாவுடன், திரு. இராய. செல்லப்பா அவர்கள்.


அன்று காலை 10.00 மணிக்கு சந்திப்பு என்பது முடிவாயிருந்தது எப்பொழுதுமே நான் காலம் தவற விடுவதில்லை சொன்ன நேரப்படி ஆஜராகி விடுவது எனது விபரம் அறிந்த 2 ½ வயது முதல் என்னிடம் உள்ள பழக்கம் அதிலும் தெரியாத புதிய இடமென்றால் முன்கூட்டியே போய் விடுவதும் எனது சிறப்பு அம்சம் அதைப்போல புலவர் ஐயா வீட்டின் கோடம்பாக்கம் ஏரியாவுக்கு சரியாக காலை 09.00 மணிக்கே போய் விட்டேன் கிடைத்த தகவல்படி ஐயாவின் திருவேங்கடம் அபார்ட்மெண்டை கண்டு பிடித்து விட்டு அந்த ஏரியாவின் ஒரு பகுதியில் நின்று கொண்டு கவனித்ததில் நிறைய பதிவுகள் எழுத விடயங்கள் கிடைத்தது குறிப்பாக என்னுள் கொழுந்து விட்டு எரிந்த கோபம் காரணம் என்றோ எவனோ சொல்லி விட்டு போனானே //வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்// அந்த வார்த்தைகள் மட்டும் எமது செவிகளில் ஒலித்துக்கொண்டே இருந்தது காரணம் நான் காணும் முகங்களில், செல்பேசி வழிகளின் மொழிகளில் என் இனிய தமிழ் இல்லை பேசிய தமிழும் //இன்னாபா சவாரி கீதா// //அந்த கஸ்மாலம் புட்டுகிச்சுபா// என்ற வகையில் இருந்தது சென்னையின் உயர்வகை மனிதர்கள் வாழும் கோடம்பாக்கத்தில் தமிழ் வாழ்வது இப்படித்தானா ?

பின்புறம் நிற்பது திரு. ஸ்கூல் பையன், திரு. ஆரூர் மூனா, அன்பேசிவம் திரு. சக்தி, திரு. போலி பன்னிக்குட்டி ராம்சாமி, திரு. தளிர் சுரேஷ் உட்கார்ந்திருப்பவர்கள் திரு. இராய. செல்லப்பா, திரு. டி.என். முரளிதரன், மற்றும் ஐயாவுடன், உங்கள் கில்லர்ஜி.

  புகைப்படத்தை பெரிதாக காண புகைப்படத்தில் ஒருமுறை சொடுக்கவும்.
 
திரு. அரசன்.சே மற்றும் திரு. இராய. செல்லப்பா அவர்கள்.

 திரு. அரசன்.சே, திரு. கில்லர்ஜி, ஐயா புலவர். திரு. சா. இராமாநுசம், திரு. இராய. செல்லப்பா அவர்களுடன் கவிஞர் திரு. மதுமதி.


 
  புகைப்படத்தை பெரிதாக காண புகைப்படத்தில் ஒருமுறை சொடுக்கவும்.

  ஐயா புலவர். திரு. சா. இராமாநுசம், அன்பேசிவம் திரு. சக்தி, திரு. தளிர் சுரேஷ், திரு. கில்லர்ஜி, திரு. டி.என். முரளிதரன் மற்றும் திரு. போலி பன்னிகுட்டி ராம்சாமி அவர்கள்.

 புலவர் ஐயாவுடன், திரு. ஸ்பை.

 

சரியாக 10.00 மணிக்கு சகோ கீதா அவர்களை அழைத்தேன் வந்து கொண்டே இருக்கிறேன் என்று சொன்னார்கள் ஐயா வீட்டின் அழைப்பு மணி பொத்தானை அழுத்தினேன் திறந்த கதவின் வழியே முகம் மலர அழைத்தார் ஐயா திரு. புலவர். இராமாநுசம் அவர்கள் ஐயாவுடன் இதுவே முதல் சந்திப்பு என்னை காலை சிற்றுண்டி சாப்பிட வைத்தார் பிறகு பேசிக்கொண்டு இருக்கும் பொழுது சிறிது நேரத்தில் திருமதி. கீதா அவர்கள் வந்தார்கள், பிறகு வேலூரிலிருந்து வந்த அன்பேசிவம் திரு. சக்தி அவர்கள், தொடர்ந்து... வந்த பதிவர்கள் திரு. அரசன் சே அவர்கள், கவிஞர் திரு. மதுமதி அவர்கள், திரு. டி. என். முரளிதரன் அவர்கள், திரு. ஆரூர் மூனா அவர்கள், திரு. ‘’தளிர்‘’ சுரேஷ் அவர்கள், திரு. போலி பன்னிக்குட்டி ராம்சாமி அவர்கள், திரு. ஸ்கூல் பையன் அவர்களை ஸ்கூல் பையன் என்பதால் அவரின் துணைவியார் அழைத்து வந்தார் பிறகு அதிரடியாய் திரு. இராய. செல்லப்பா அவர்கள் வந்தார்கள் பேசிக்கொண்டு இருக்கும் பொழுது ஐயா திரு. சென்னை பித்தன் அவர்கள் புலவர் ஐயாவை செல்பேசியில் தொடர்பு கொண்டு தான் வரமுடியாத சூழலை சொல்லி என்னிடமும் பேசினார் தொடர்ந்து வந்த செல்பேசியில் குவைத் பதிவர் (சென்னை வந்திருக்கின்றார்) திருமதி. மஞ்சுபாஷிணி சம்பத்குமார் அவர்கள் என்னிடம் வழக்கம் போலவே அதட்டலாக பேசி என்னை பயமுறுத்தினார்.



குறிப்பாக திரு. இராய. செல்லப்பா அவர்கள் எனது வாழ்க்கை குறித்த பல விபரங்களை சொன்னார் அனைவருமே எனக்காக நல்ல எண்ணங்களோடு விவாதித்தனர் அந்த விவாதத்திற்கு எனது சிரம் தாழ்ந்த நன்றிகள் இருப்பினும் எனது தரப்பு வாதத்தை பகிர்ந்தாலும் அவைகளை குறித்த பதிவுகள் எழுதும் எண்ணங்களே என்னுள் ஒடிக்கொண்டு இருந்தது... இருக்கின்றது... 

வலைப்பூவைப்பற்றியே அனைவரும் பேசிக்கொண்டே இருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை பிறகு அனைவரும் பிரியாவிடை பெற என்னையும், திரு. ‘’தளிர்‘’ சுரேஷ், மற்றும் வேலூர் அன்பே சிவம் திரு. சக்தி அவர்களையும் திரு. இராய. செல்லப்பா அவர்கள் ஆட்டோவில் சரவணபவன் ஹோட்டலுக்கு அழைத்துப் போய் மதிய விருந்தளித்து மகிழ்சியுடன் அனுப்பி வைத்தார் பிறகு நண்பர்கள் ‘’தளிர்’’ சுரேஷும், சக்தியும் பிரியாவிடை பெற்றார்கள் நான் ஷேர் ஆட்டோவில் ஏறி //கோ ட்டூ தி கிரேட் தேவகோட்டை// என்றேன்.



எமது சந்திப்பு பதிவுகளைக் காண கீழே இணைப்புகளை சொடுக்கவும்.
வாழ்க வளமுடன்.
சந்திப்புகள் தொடரும்...

சனி, ஆகஸ்ட் 15, 2015

மன் ஆ....


மன்னா...
என்னா ?
எதிரி நாட்டு படையை தோற்கடிப்பதற்கு சிறந்த யோசனை ஒன்று நேற்று நள்ளிரவில் டாய்லெட் போகும் போது எமக்கு உதித்தது...
சொல்லுங்கள் மந்திரியாரே....
போர்க்களத்தில் திடீரென நமது அந்தப்புரத்து அழகிகளை ஆடவிட்டு வீரர்களின் கவனத்தை திசை திருப்பி விட்டு அவர்கள் மயங்கும் தருணத்தில் டாஸ்மாக்கில் விஷத்தை கலந்து கொடுத்து விட்டால் சுலபமாக வென்று விடலாமே...
ஹூம் மங்குனி அமைச்சரே, அவர்கள் மதுவுக்கு மயங்காமல் மாதுவுக்கு மயங்கி அழகிகளை அள்ளிக் கொண்டு பரியில் ஏறிப்பறந்து விட்டால் நாளை நான் என்ன சிங்கி அடிப்பதா ?
மன்னிக்கவும் மன்னா, நான் இந்த வழியை யோசிக்கவில்லை.
இன்று மாலை சூரிய அஸ்தமனத்திற்குள் வேறு நல்ல யோசனை கூறாவிடில் உமது வாயில் ¾ படி அமிலம் ஊற்றப்படும்.
? ? ?
***********************************************************************

மன்னா, சந்தோஷமான செய்தியொன்றை தங்களுக்காக தாங்கி வந்துள்ளேன்.
அப்படியா... உடன் அந்தச் செய்தியை சொல்லுங்கள் படை வீரரே...?
எதிரி நாட்டு மன்னருக்கு ஓலை அனுப்பினேன் உடன் மறு ஓலை வந்திருக்கிறது இனி சோழக்காட்டு திசையை நோக்கித் தலையை வைத்துக்கூட படுக்க மாட்டோம் என்று.
ஆஹா கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது படை வீரரே... அப்படி என்ன செய்தி சொல்லி அனுப்பினீர்கள் பாலக்காட்டு படைகளுக்கு ?
எங்கள் மீது போர் தொடுத்தால் ? போர்க்களத்தில் திரைப்பட முன்னணி, பின்னணி நடிகைகளை மேக்கப் இல்லாமல் நிறுத்தி வைப்போம் என்று.
ஆஹா அற்புதமான யோசனை, வெல்டன் படை வீரரே...
***********************************************************************

மந்திரியாரே, நொங்கு நாட்டு மன்னருக்கு படை உதவி அனுப்பினோமே... உடன் திருப்பி அனுப்பி விட்டாரே... ஏன் ?
மன்னரே படை வீரர்கள் 100 பேரும் சொறி, சிரங்கு, படை, பத்தோடு போனார்களாம் ஆகவே கோபப்பட்டு நம் மீது போர் தொடுப்பதாக அறிவித்துள்ளார் மன்னா.
அப்படியா... அறிவித்தார் உடன் நமது நாட்டு வீரர்கள் 1000 பேரை அந்த நாட்டுக்குள் ஊடுறுவி குடிபுக ஏற்பாடு செய்யுங்கள்.
மன்னிக்க வேண்டும் அரசே... அப்படிச் செய்யமுடியாது...
ஏன் ?
நம்மிடம் உள்ள 1000 படை வீரர்களுமே ஏற்கனவே அந்த நாட்டு ‘’குடி’’மகன்களே ஆகவே அவர்கள் பயந்து கொண்டு போக மறுக்கிறார்கள்.
? ? ?
***********************************************************************

மந்திரியாரே, மங்களதேசத்து மன்னர் தங்குவதற்கு நமது பங்களாவை தயார் செய்து விட்டீர்களா ?
இல்லை அரசே...
ஏன் ?
அந்தப் பங்களாவில்தானே பங்களாதேஷிலிருந்து வந்த தங்களது மங்களாவின் தாயார் தங்கி இருக்கிறார்கள்.
அப்படியானால், ராமாவரம் தோட்டத்தில் ஏற்பாடு செய்யலாமே...
அதில்தான் மன்னா, தங்களது புவனேஷ்வரம் புவனா தங்கி இருக்கிறார்கள்.
அப்படியானால், நமது நீலாம்பூர் அரண்மனையில் தங்க வைக்கலாமே...
நேற்றுதானே மன்னா, நீடாமங்கலம் நீலாம்பரியை தங்க வைத்தோம்.
? ? ?
***********************************************************************

என்ன மந்திரியாரே சொல்கிறீர்கள் நண்பர் அலிக்கு போர்க்களத்திற்கு அனுப்பி வைத்த உணவுகள் திரும்பி விட்டனாவா ?
ஆம் மன்னா அவர்கள் சொன்னபடிதான் கேப்பைக்களியும், புளிக்குழம்பும் வைத்து அனுப்பினோம் இப்பொழுது சொல்கிறார்கள் நாங்கள் கேட்டது புலிக்குழம்பு என்று குழப்புகிறார்கள்
அப்படியா... சொன்னார்கள், இது நமது நாட்டுக்கு ஏற்பட்ட அவமானம் தாங்கள் உடனடியாக 1000 எலிகளை பிடித்து ஆச்சி மசாலாவில் கலந்து எலிக்குழம்பு வைத்து புலிக்குழம்புதான் எனச்சொல்லி அவர்களை குழப்பி பழி வாங்கி விடுங்கள்.
நல்லது மன்னா, அப்படியே ஏற்பாடு செய்கிறேன்.
***********************************************************************

மறுநாள்....
மன்னரே நேற்று தாங்கள் சொன்னதைப்போலவே 1000 எலிகளை பிடித்து புலிக்குழம்பு எனக்குழப்பி விட்டோம் ஆனால் இப்பொழுது அதேபோல் கேட்கிறார்களே... தினமும் எலிகளுக்கு எங்கே போவது ? ஆச்சி மசாலாவாவது நிறுவனத்தை மிரட்டி ஓசி வாங்கி விடலாம்.
அப்படியானால் இன்று பல்லிகளை பிடித்து குழம்பு வைத்துக் கொடுங்கள்.
எல்லாம் சரி மன்னா, ஆனால்..... திடீரென்று பல்லிகளுக்கு....
உடன் மக்களுக்கு அறிவியுங்கள் வீட்டிலிருக்கும் பல்லிகளை இன்றே பிடித்து கொடுப்பவருக்கு ஒரு பல்லிக்கு 2 ½  குவைத் தினார் வரும் வைகாசி முதல் நாளில் கொடுக்கப்படுமென அறிவியுங்கள்.
மன்னா, அப்படிச் செய்தால்....... வீரர்கள் அனைவரும் இறந்து விடுவார்களே...
விளங்கா முடுமை அமைச்சரே நான் பல்லியை போடச்சொல்வதே... அவர்களை பலி கொடுக்கத்தானே... அந்த வீரர்களை வைத்துக் கொண்டுதானே மன்னன் அலி நம்மை எள்ளி நகையாடுகின்றான்.
சரி மன்னரே அப்படியே செய்து விடுகிறேன், உடனே தங்களது குவைத் நண்பர் தஞ்சையம்பதி திருவாளர். துரை செல்வராஜூ அவர்களுக்கும் ஓலை அனுப்பி விடுகிறேன் மன்னா.
அவருக்கு எதற்காக ?
வைகாசி முதல் தேதி மக்கள் கூடி விடுவார்களே, குவைத் தினார் வேண்டுமே....
மண்ணு முக்குழி அமைச்சரே அதெல்லாம் வேண்டாம் தினார் வேண்டும் என்பவர்கள் காளி கோயிலின் பலி பீடத்தில் வலது கையின் கட்டை விரலை பலி கொடுத்து விட்டு தினார் பெற்றுச் செல்லவும் என அன்று காலை அறிவியுங்கள் மறு நொடியே கூட்டம் காவல்துறை கண்ணீர் புகை விட்டது போல் கலைந்து விடும்.
? ? ?
***********************************************************************

சுகமான சுமைகள்.

அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.