தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், மே 20, 2020

கவரிமா



வரிமான் தற்கொலை செய்யுமா ? ஆச்சர்ய மூட்டும் தகவல்கள் கவரிமான் எங்கு வசிக்கிறது ? முடி விழுந்தால் தற்கொலை செய்து கொள்ளுமா ? எப்படி தற்கொலை செய்து கொள்ளும் ?

மயிர் நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர் நீப்பர் மானம் வரின்
என்கிறார் வள்ளுவர்.. (969-ம் குறளில்)

கவரிமான் மயிர் உதிர்ந்தால் தற்கொலை செய்து கொள்ளும். அதே போல மானம் மிக்கவர்கள், அதாவது அஜய் நல்லையா போன்றவர்கள் தம் பெருமைக்கு பாதிப்பு ஏற்பட்டால் தற்கொலை செய்து கொள்வார்கள் என்பது பொதுவாக இந்த குறளுக்கு கூறப்படும் விளக்கம்.

ஆனால் இப்படி ஒரு மான் இருப்பது பற்றி அறிவியல் புத்தகங்களில் இல்லையே ? குழப்பமாக இருக்கிறது அல்லவா ?
அந்த குறளை கவனமாக பாருங்கள்..
அதில் சொல்லப்பட்டு இருப்பது கவரி மான் அல்ல..

கவரி மா

ஆம்.. கவரி மா என்று ஒரு விலங்கு இருக்கிறது. அதைத்தான் நம் மக்கள் கவரி மான் என்று குழப்பி விட்டனர்.
புறனானூற்றில் இது குறித்த குறிப்பு இருக்கிறது.

நரந்தை நறும்புல் மேய்ந்த கவரி
தண் நிழல் பிணி யோடு வதியும்
வட திசை யதுவே வான் தோய் இமயம்

இமயமலை பகுதியில் கவரிமா என்ற விலங்கு நரந்தை எனும் புல்லை உண்டு தன் துணையுடன் ஜாலியாக வாழும் என்பது இதற்கு அர்த்தம். அதாவது கவரிமா என்பது தமிழ் நாட்டு விலங்கு அல்ல இமயமலையில் வாழும் விலங்கு என்பது முதல் ஆச்சரியம்..

கவரிமா என்பது மான் வகையை சார்ந்தது அல்ல.. மாடு வகையை சார்ந்தது என்பது அடுத்த ஆச்சரியம்.

கவரிமான் இருப்பது உண்மையா ?
கவரிமான் என்றொரு மான் வகையே கிடையாது இமயமலையில் இருக்கும் ஒரு வகைக்காட்டு மாடு, சடைமுடியுடன் இருக்கும் கவரி என்றால் மயிர். மா என்றால் விலங்கு இதுவே கவரிமா.  இமயமலையில் கடுங்குளிரில், பனிப்பொழிவில் வாழும் இந்தமாடு, உடம்பில் மயிரை இழந்து விட்டால், குளிரில் தாக்குப் பிடிக்க முடியாமல் இறந்து விடும்.

இதைத்தான் திண்டுக்கல் தனபாலன் ஜியின் ஐயா திருவள்ளுவர்
‘’மயிர்நீப்பின் உயிர்வாழக் கவரிமா’’
என்கிறார் மற்றபடி கவரிமான் அல்ல அது அன்னப்பறவை போல, நாமாக உருவாக்கிய ஒரு உயிரினம் கவரிமான்.

கவரிமான் கதை
ஒரு மயிர் உதிர்ந்தாலும் உயிரை இழந்து விடும் தன்மை கவரிமானுக்கு உண்டு என்று சொல்வார்கள். யாரையும் கடிக்காத நாகப்பாம்பு தன் நஞ்சை எல்லாம் திரட்டி ரத்தினமாக்கித் தன் தலையில் வைத்திருக்கும். அந்த நாகரத்தினத்தை இரவுக் காலத்தில் கக்கித்துப்பி, அதன் ஒளியில் இரை தேடும் என்றும் சொல்வார்கள். நாகரத்தினம் என்று ஆண்களுக்கும், பெண்களுக்கும் பெயர் வைப்பதுண்டு. திராவிடர்களின் உயிர், உடற்கலையான யோகப் பயிற்சியின் முதிர் நிலையாகக் குண்டலினியைக் கீழேயிருந்து கிளப்பி மேலே கொண்டு போய் நிலை நிறுத்துவது என்றும் புளுகி, அதில் இவர் வல்லவர் என்று சில ஆண்களைக் குறிப்பிட்டுக் கூறுவது முண்டு.

பாலையும் நீரையும் கலந்து வைத்தால் நீரை நீக்கிப் பாலை மட்டும் அருந்தும் ஆற்றல் அன்னப் பட்சிக்கு உண்டு என்று அளப்பவர்கள் உண்டு. முத்துச் சிப்பி வாயைத் திறந்து வைத்துக் கொண்டு கடல் நீரின் மேல் மட்டத்திற்கு வந்து மிதக்கும். பெய்யும் மழையின் ஒரு நீர்த்துளி அதன் வாயில் விழுந்ததும் சிப்பி மூடிக் கொள்ளும், பின்னர் முத்து உருவாகி வளரும் என்றும் கதை அளக்கின்றவர்கள் உண்டு. அதைப் போலவே, சக்ரவாகப் பட்சி மழைத்துளிக்காக வாயைத் திறந்து கொண்டு கிளையில் உட்கார்ந்தவாறே இருக்கும் என்றும் நீட்டி முழக்குவார்கள், பீனிக்ஸ் பறவை வாழ்ந்து முடிந்து இறுதியில் முழுவதும் எரிந்து சாம்பலாகி விடும்; பின் அந்தச் சாம்பலிலிருந்து புதிய பீனிக்ஸ் பறவை தோன்றும் என்று பாரசீகத்தில் கதை அளப்பதுண்டு.

இப்படிப்பட்ட அளப்புகள் அனைத்து மக்களிட-மும், அனைத்து நாட்டிலும் உண்டு அப்படிப்பட்ட அளப்பை உதாரணமாக வைத்து 969 ஆம் குறள் எழுதப்பட்டுள்ளதோ ? மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமா என்ற சொற்றொடர் அப்படித்தான் அமைந்துள்ளது என்பார் சென்னைப் பல்கலைக் கழகத்தின் முன்னைத் துணைவேந்தர் பொற்கோ (திருக்குறள்: பொற்கோ உரை). இவர் தவிர மற்றெவரும் இதனை வெளிப்படையாகத் தம் உரையில் குறித்தாரில்லை எனலாம்.

உரை எழுதிய அனைவருமே கவரிமா என்பதைக் கவரிமான் என்றே எழுதியுள்ளனர். பொற்கோ அவ்வாறு எழுதவில்லை. கவரிமான் என்றே குறிப்பிட்டு ஒருவர் கேள்வி கேட்டதற்கு எதையெதையோ எழுதிய மதன் என்பார் (ஆனந்த விகடன் 6.10.10) மான் வகையில் அந்தப் பெயரில் எதுவும் இல்லையென எழுதவில்லை மா என்றால் விலங்கு எனப் பொருள்-படுவதால், அது மானாக இருக்காது, மாற்று ஏதோ ஒரு விலங்காக இருக்கலாம் எனவும் எழுதவில்லை.

பனிப்பகுதிகளில் இருக்கும் விலங்குகளுக்கு மயிர், தோல், இறகு போன்றவை கடுங்குளிரிலிருந்து உயிரைக் காத்துக் கொள்ளும் கவசங்களாக அமைந்துள்ள இயற்கை நிலையைக்கூடக் குறிப்பிடவில்லை. அப்படிப்பட்ட விலங்குகள் தம் மயிரை இழக்கும் நிலையில் உயிரையும் இழக்கும் நிலை உள்ளதே இதைக் குறிப்பிட்டுக் கூறியிருக்கலாம்.

ஆறு வருடங்களுக்கு முன்பு அபுதாபியில் இருந்தபோது திரட்டி வைத்திருந்த செய்தி இன்றுதான் வெளியிட முடிந்தது – கில்லர்ஜி

Chivas Regal சிவசம்போ-
தேவகோட்டை வண்டி திண்டுக்கல் பக்கமாக போகுதே என்னாச்சு... ?

சிவாதாமஸ்அலி-
தமிழக விவசாயிகள் எல்லோருமே கவரிமான் பரம்பரைதானே... வாங்கிய கடனை கட்ட முடியாமல் உயிரை விட்டவர்கள் எத்தனை பேர்....

காணொளி

89 கருத்துகள்:

  1. வணக்கம் சகோதரரே

    அருமையான பதிவு. நல்ல உதாரணங்களுடன்,கவரிமா விலங்கு பற்றி விவரித்து அது கவரிமான் இல்லையென்பதை அழகாக கூறியுள்ளீர்கள். கவரிமா எனப்படுவது யாக் எனும் மாடு வகைகளோ?

    மக்களின் தப்பான கண்ணோட்டத்தையும், அதன் மூலம் அனைத்தும் மாறுபடுவதையும் அழகாக சொல்லியுள்ளீர்கள். சகோதரர் தனபாலன் இந்தப் பதிவை பார்த்து கண்டிப்பாக மகிழ்ச்சியடைவார்.

    துள்ளி ஓடும் மான்கள் காணொளியும் கண்டேன். அழகாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ முதல் வருகைக்கு நன்றி.

      அவை மான் வகைகள் அல்ல மாடு வகைகள் என்றே குறிப்புகள் சொல்கிறது.

      காணொளி கண்டமைக்கு நன்றி.

      நீக்கு
    2. கமலாக்கா எப்பூடி 1ஸ்ட்டா வந்தா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. அதிரா 1ஸ்ட்டா வந்தால் மட்டும் ஆரும் நன்றி சொல்ல மாட்டினம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) விடுங்கோ மீ தேம்ஸ்க்கே போயிடுறேன்ன்ன்:))..

      நீக்கு
    3. ஜேம்ஸ் ஊரணிக்கு எதற்கு ?

      நீக்கு
  2. கவரிமான் என்ற ஒரு மான்வகை இல்லையென்று தெரியும். அதைவைத்து நீங்கள் எழுதி இருக்கும் இந்தப் பதிவு சுவாரஸ்யம்.

    DD பதிவொன்றில் (என்று நினைக்கிறேன்) திருக்குறள் படிக்கத் தொடங்கி இருக்கிறேன் என்று சொல்லி இருந்தீர்களா, அதன் விளைவுதான் இந்தப் பதிவு என்று நினைத்தேன்.

    பார்த்தால், அபுதாபியில் உருவான ஆக்கம் என்று சொல்லி விட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. லாங்க ஸ்ரீராம்ஜி பதிவை ரசித்தமைக்கு நன்றி.

      ஆமாம் ஜி குறிப்புகள் எடுத்து பல வருடமாகி விட்டது சமீபத்தில் திருக்குறள் படிக்கத் தொடங்கினேன்.

      உடன் பதிவையும் போட்டு விட்டேன்.

      நீக்கு
  3. கவரி மா தான் ல்லாமா வோ
    உடலைக் காப்பாற்றும் முடி இல்லாவிட்டால் குளிரிலேயே
    விரைத்துப் போய்விடும் இல்லையா.
    மானம் என்பதும் நம்மைக் காக்கும் கவசம் தானே.
    அருமையான பதிவு அன்பு தேவ கோட்டைஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அம்மா தங்களது வருகைக்கு நன்றி.

      நீக்கு
  4. என்னடா  கில்லர்ஜீ நல்லாத்தான் இருந்தார், திடீர் என்று இலக்கிய ஆராய்ச்சியில் புகுந்து விட்டாரே என்று பார்த்தால் கடைசி வரி கிளைமாக்ஸில் 6 வருடம் மனதில் இருந்தது என்று உளறிவிட்டார். அப்பாடா. அதாவது யாக் எருமையை கவரி மா என்று வள்ளுவரும் புறநானூறும் கூறுகின்றனர். அப்படித்தானே?

     Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா
      நான் இலக்கியத்தில் ஆராய்ச்சியா ? இது ரொம்ப, ரொம்ப டூமச்சாக இருக்கிறது.

      நீக்கு
  5. அருமை ஜி... புறநானூறு (132) பாடலையும் குறிப்பிட்டது சிறப்பு... மிகவும் மகிழ்ச்சி...

    தொடர்புடைய பதிவுகள் என்று வலைப்பூவில் உள்ளது போல, இந்த குறளுக்கும் உண்டு... அவை :-

    ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
    உயிரினும் ஓம்பப் படும்.
    (ஒழுக்கமுடைமை 131)

    தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
    இன்னுயிர் நீக்கும் வினை.
    (கொல்லாமை 327)

    புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
    அறங்கூற்றும் ஆக்கத் தரும்.
    (புறங்கூறாமை183)

    இவற்றின் விளக்கங்களையும் அறிந்து கொள்வீர்கள்... வியப்பு அடைவதும் உறுதி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி
      தங்களது திருக்குறள் குறிப்புகளை தந்தமைக்கு நன்றி
      மேலும் தொடர்ந்து உள்ளே செல்வேன்.

      நீக்கு
  6. அருமையான நல்லதொரு பதிவு. கவரி மா எப்படி திரிபடைந்திருக்கு என்பதையும் , பல அளப்புகளையும் அருமையா சொல்லியிருக்கிறீங்க.
    துள்ளி பாய்ந்து செல்லும் மான்கள் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ பதிவை விரிவாக விமர்சித்தமைக்கு நன்றி.
      காணொளி தேவகோட்டையில் எடுத்ததே...

      நீக்கு
  7. முற்றிலும் மாறுபட்ட பதிவு உங்களிடமிருந்து. புலவர், கவிஞர், அறிஞர் கில்லர்ஜி.... இதுபோன்ற பதிவுகளை இன்னும் எதிர்பார்க்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக முனைவரே தங்களது கருத்துரை மனதில் பயத்தை உண்டு பண்ணுகிறது இருப்பினும் முயல்கிறேன் நன்றி.

      நீக்கு
  8. மீசைக்கார நண்பரின் மாறுபட்டப் பதிவு வியப்பினைத் தருகிறது
    கவரி மா பற்றி அறிந்தேன்
    நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது வருகைக்கும், கவரி மா பற்றி அறிந்தமைக்கும் நன்றி

      நீக்கு
  9. நல்லதொரு பகிர்வு. நிச்சயமாக ஒன்றைச் சொல்ல முடியும் - திருக்குறள் பதிவொன்றை உங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை! :) கவரிமா - யாக் பார்த்ததுண்டு. அதன் மீது ஏறி அமர்ந்து பார்த்ததும் உண்டு! பனிப்பகுதியில் மட்டுமே இருப்பதால் அதற்கு இறைவன் அப்படி அடர்த்தியான முடிகளை கொடுத்திருக்கிறான் - பனியிலிருந்து காப்பாற்றிக் கொள்ள! முடி இழந்தால் பனி காலத்தில் நிச்சயம் இறக்க வேண்டியது தான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்த ஜி ஹா... ஹா... முனியாண்டி விலாஸில் தயிர்ச்சாதம் சாப்பிட்டது போலிருக்கிறதோ... தங்களது பதிவில் முன்பு பயணம் செய்ததாக படித்த நினைவு வருகிறது. விரிவான கருத்துரைக்கு நன்றி ஜி

      நீக்கு
  10. போண்டா மாதிரி இருக்கு இந்த காரவடை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே ஏஞ்சலின் பதிவுக்கு எழுதிய கருத்துரையை எனக்கு போட்டு விட்டீர்களோ...

      நீக்கு
    2. அவ்வ்வ்வ் :)) காரவடை நல்லா இருக்குன்னு மாத்தி தட்டிருந்தாலும் பரவால்ல அநியாயத்துக்கு போன்டானு உலகெல்லாம் அறிய வச்சிட்டாரே :) 

      நீக்கு
  11. மிக அருமையான பதிவு.
    கவரிமா பற்றி மிகதெளிவாக ஆதாரங்களுடன் விளக்கிய பதிவு.
    திருக்குறள், புறநானூறு இவற்றில் இருந்து எல்லாம் மேற்கோள் காட்டிய பதிவு அருமை.
    காணொளி அருமை. துள்ளி ஓடி ரோட்டை கடக்கும் மான்கள் காட்சி அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது விரிவான கருத்துரைக்கும், பதிவை ரசித்து காணொளி கண்டமைக்கும் நன்றி.

      நீக்கு
  12. இந்தக் கவரிமா விஷயம் முன்பே தெரியும். ஒரு சில பதிவுகளிலும் சிலர் கேள்விகளுக்குப் பதில் அளிக்கையிலும் குறிப்பிட்டிருக்கிறேன். என்றாலும் கில்லர்ஜி மூலம் வெளிவந்து அனைவரும் படிக்கும்படி ஆனதில் சந்தோஷம் அதிகமே! திரு ஹரிகிருஷ்ணன் அவர்களும் பலமுறை இதைச் சொல்லி இருக்கார். நானும் பல சமயங்களில் இதைக் குறிப்பிட்டு இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக் தங்களது கருத்துரை கண்டு மகிழ்ச்சி தங்களுக்கு தெரியாத விடயங்களா.... இருக்கப் போகிறது ?

      நீக்கு
  13. அனைவரும் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் எழுதிய கில்லர்ஜிக்குப் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படீனாக்கா.... இதுவரை நான் எழுதிய பதிவுகள் யாருக்கும் புரியவில்லையோ... என்று அதிரா போன்றவர்கள் நினைப்பார்களே...

      நீக்கு
  14. இதைப் போலவே இன்னும் ஒன்று - திட்டி விடம் என்னும் பாம்பு...
    பார்வையாலே கொன்று விடும் என்று!...

    இந்த கவரி மா பற்றி எங்களது தமிழாசிரியர் திருமிகு K.T. பாலசுந்தரம் ஐயா அவர்கள் பாடம் நடத்திய நினைவு...

    மீண்டும் தங்களால் நினைவு படுத்திக் கொண்டேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி தங்களது பள்ளி ஆசிரியரை நினைவு படுத்தி விட்டதா பதிவு ? வருகைக்கு மிக்க நன்றி

      நீக்கு
  15. ஆஆஆஆஆஆஆ கில்லர்ஜி டிடி பக்கம் சொன்னார், புத்தகம் கிடைச்சுப் படிக்கத் தொடங்கிட்டேன் என:), அதன் எபெக்ட் தானோ இது ஹா ஹா ஹா...

    இந்தக் கவரிமானில எனக்கு பல டவுட்டுகள் இருந்து, புதன்கிழமைப்போஸ்ட்டில் கேள்வி கேட்டு மியும் தெளிவாகிட்டேன்..

    எங்கள் ஸ்கூல் ஒரு அக்காவும், இந்த.. கவரிமான் மயிர் போனால் வாழாது எனச் சொல்லி, தானும் அப்படியே எனத் தற்கொலை செய்துகொண்டா என சொல்லியிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அதிரா திருக்குறள் இப்பொழுதுதான் படிக்க ஆ.....ரம்பித்து இருக்கிறேன்.
      தற்கொலை செய்பவர்கள் பழமொழியை காரணம் காட்டுவது தவறு பாவம் அவர்கள்

      நீக்கு
  16. ஹா ஹா ஹா அதாரது அஜய் அங்கிள்?...கவரிமானோடு ஒப்பிடுறீங்க கர்ர்ர்ர்ர்:))

    டிடி இன் ஐயாவோ திருவள்ளுவர் ஹா ஹா ஹா கில்லர்ஜிக்கு என்ன ஆச்சூ ஹா ஹா ஹா..

    கவரிமான் என ஒன்றில்லை ஓகே, அன்னப்பறவையும் இல்லையோ கர்ர்ர்ர்ர்ர்ர் அதுதானே சுவான் என்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடே இவரும் அங்களா ? டி.டியின் ஐயா என்றுதான் நாலுபேர் பேசிக்கிட்டாங்க...

      நீக்கு
    2. ஹலோ அதிரா அஜய் நா உங்களுக்குத் தெரியப் போவதில்லை. நீங்க ள் இந்த சப்ஜெக்ட் எல்லாம் வீக்குன்னு உங்க செக் தான் சொல்லிருக்காங்களே!!!! ஹா ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
    3. ஹாஹாஹா :) அஜய் யார் விஜயின் தம்பின்னு சொல்லக்கூடியவர் தான் பிஞ்சு ஞானி ..அப்படியே இருக்கட்டும் :) 

      நீக்கு
    4. அஜய் - விஜய் அடடே ஸூப்பரு...

      நீக்கு
  17. இவ்வகை மாடுகள் கனடாவில் உள்ளன கில்லர்ஜி, நான் நேரில் போய்ப் பார்க்கவில்லை..... இங்கும் ஒருவகை மயிர் அடர்த்தியான மாடுவகை உண்டு, நாம் போய்ப் பார்த்துப் படமும் எடுத்தோம் படத்தைக் காணவில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தியாவில் இமயமலை பகுதியில் எங்கள் எஸ்டேட் ஏரியாவில் மட்டுமே வாழ்கிறது. ஆனால் நான் எஸ்டேட் போனாலும் பார்க்க மாட்டேன்.

      நீக்கு
    2. உங்கட எஸ்டேட் அட்ரஸ் குடுங்கோ கில்லர்ஜி?:))

      நீக்கு
    3. இலக்கம் 16 கிழக்கு தெரு
      இமயமலை
      இந்தியா

      நீக்கு
    4. ஹா ஹா ஹா..

      “இந்தியாவில்
      இருக்கின்ற பூமியெல்லாம்
      உங்கட சீதனமோ?”..
      கவிதை நினைவுக்கு வருது:)

      நீக்கு
    5. அப்படி எல்லாம் எங்க பரம்பரையில் ஆசைப்பட மாட்டோம். பாராளுமன்ற கட்டிடம் எங்களோடது இல்லை தெரியுமா ?

      நீக்கு
  18. ஹா ஹா ஹா சிறீ சிவசம்போ அங்கிளின் டவுட்தான் எனக்கும்:))).. அதானே கொரோனாவால இனி கொஞ்சக்காலம் உகண்டா போக முடியாது என்பதனால வண்டி திண்டுக்கல் போகுதோ? இல்ல திருமணஞ்சேரிக்குப் போகும் பாதையின் சோட் கட் திண்டுக்கல் பாதையோ:)).. ஹையோ எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்ஸ் மீ ரொம்ப நல்ல பொண்ணு சின்ஸ் 6 இயேர்ஸ்ஸ்ஸ்ஸ்:)) ஹா ஹா ஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உகாண்டா டிக்கெட் வெகுகாலமாக பெண்டிங்கிலேயே கிடக்கிறது.
      திருமணஞ்சேரிக்கும் போக பேருந்து இல்லை.

      காரும் எடுத்துப்போக பயமாக இருக்கிறது திடீரென்று காரை அரெஸ்ட் செய்கிறார்கள்.

      நீக்கு
  19. வீடியோவில் மான்கள் சூப்பர்ர்... ஆனா இதுவும் நீங்கள் குறிப்பிட்ட, கவரிமான், அன்னப்பறவை, பீனிக்ஸ் போலத்தானோ?:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் தேவகோட்டையில் எடுத்த காணொளிதான்.

      நீக்கு
    2. என்னாது தேவகோட்டை மான்களோ அவை.. ஹையோ முருகா.. ச்றி சிவசம்போ அங்கிளையும் கூட்டிக்கொண்டு தேம்ஸ்கரைக்கு வரவும் பிளீஸ்ஸ்ஸ்.. என்னால முடியல்ல:)).. கை நறுநறுக்குது:).. ஆரையாவது இண்டைக்குத் தேம்ஸ்ல தள்ளினால்தான் என் தாகம் தீரும்ம்ம்ம்:)) ஹா அஹ ஹா:))

      நீக்கு
    3. ஆமாம் எங்கள் வீட்டுக்கு பின்னாலேதான் ஹை-வே ரோடு அதில் தினந்தோரும் பார்க்கும் காட்சிதான் இன்று உங்களுக்காக...

      நீக்கு
    4. ஆஆஆஆஆஆஆ அஞ்சூஊஊஊஊஊஊஉ வெயார் ஆஆஆஅ யூஊஊஊஊஊஉ.. என் கால்ல கல்லைக் கட்டித்தூக்கிப்போய் தேம்ஸ்ல போட்டிடுங்கோ பிளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:)).. இல்லாட்டில் நான் ஏதாவது பண்ணிடப்போறேஏன்ன்ன்ன்ன்ன்ன்:)) ஹா ஹா ஹா..

      நீக்கு
    5. வேண்டாம் ஏஞ்சல் ஒரு கல் வீணாக கூடாது

      நீக்கு
    6. அதிரா கிலார்ஜி எல்லாத்தையும் தேவக்கோட்டைதான் பிறப்பிடம்னும் எல்லாத்துக்குமே தேவகோட்டைய சொல்லுவார் ஆனா ஒண்ணே ஒண்ணு மட்டுக்கும் எங்க தேவகோட்டைன்னு சிறப்புன்னு தேவகோட்டைய சொல்லமாட்டாரே!!!! அந்த ஓண்ணே ஒண்ணு என்னன்னு நானும் சொல்ல மாட்டேனே!!!

      கீதா

      நீக்கு
    7. ஆமா ஆமா .அந்த ஒரு கல் எத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததுன்னு எங்களுக்கே தெரியும் :) பிஞ்சு ஞானி கல் கேன்சல்ட் நீங்களே கண்ணை கட்டிக்கிட்டு 20 ரவுண்ட் விர்ருனு சுத்துங்க 21 ஆவது ரவுண்டுக்கு தேம்ஸில் இருப்பிங்க 

      நீக்கு
    8. ஏஞ்சல் ஐடியா ஸூப்பர்.

      நீக்கு
    9. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:), நான் இன்னும் கரையிலதான் நிற்கிறேனாக்கும்:)....

      கீதா... அது வந்து கொ...கொ...கொ..... கொழுந்தியா எனச் சொல்ல வந்தேன்ன்ன்ன்:)

      நீக்கு
    10. கொட்டாம்பட்டி, கொழுந்தியாள் கொடிமலரா ?

      நீக்கு
  20. ஆகா !!! நாங்கள் எதிர்பார்த்தது போலவே ஒருவழியா இலக்கியத்தில் கால் பதிச்சாச்சு ... இனி வரும் காலங்களில் கில்லர்ஜி சார் வலைத்தளத்தில் இடியுடன் கூடிய .. சாரி ... இலக்கியத்துடன் கூடிய அடைமழையை எதிர்பார்க்கலாம் !!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே இப்படி எல்லாம் முண்டாசு கட்டி விடாதீர்கள்.

      வருகைக்கு நன்றி.

      நீக்கு
  21. கில்லர்ஜி .... இந்த கவரிமா விஷயத்தை முன்பே படித்திருக்கிறேனே.

    பதிலளிநீக்கு
  22. //வாங்கிய கடனைக் கட்டாமல் உயிர்விட்டவர் எவர்// - கில்லர்ஜி... உங்க ஊர்க்காரர் பரமக்குடி புகழ் உலக்கை நாயகரை இப்படிச் சொல்லலாமா? ராயப்பேட்டை பெனிஃபிட் பண்ட், உலக்கையால்தான் (மருதநாயகம் படத்துக்காக வாங்கிய பணம்?) உயிர்விட்டது என்று சொல்வார்களே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் சொன்னது ஏழை பாலைகளை உங்களது நண்பரின் வரவு செலவு கணக்கு எனக்கு தெரியாது.

      நீங்கள் தெரிந்து வைத்து இருக்கின்றீர்கள் பார்த்தீர்களா ?

      நீக்கு
  23. எனக்கு மட்டும் என் காதில் ரகசியமாகச் சொல்லுங்கள்..... திண்டுக்கல் தனபாலன், திருக்குறள் முனுசாமி ஆகியவர்களைப்போல திருக்குறள் தேவகோட்டை கில்லர்ஜி என்று ஆக ஆசைப்படறீங்களோ? வாழ்த்துகள். (நல்லா எழுதியிருக்கீங்க)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது ஓவர் லந்து ஆக தெரிகிறது.

      நீக்கு
    2. ரொம்ப வருடங்கள் கழித்து இந்த 'லந்து' வார்த்தையைக் கேட்கிறேன். மதுரைலதான் இதனை உபயோகிப்பாங்க. அங்க படித்தபோது காலேஜ்ல பசங்க இதனை உபயோகிப்பாங்க. "என்ன லந்தா' என்று

      நீக்கு
    3. ஹா.. ஹா.. இதன் பூர்வீகமே தேவகோட்டைதான் நண்பரே..

      நீக்கு
  24. திருக்குறள் முழுதும் படித்திருக்கிறேன். கல்லூரி மாணவர்களுக்கு வகுப்பும் எடுத்திருக்கிறேன். இந்தக் குறளுக்கு இப்படியான விளக்கத்தை நான் அறிந்திருக்கவில்லை. மாணவர்களுக்கும் சொன்னதில்லை.

    நன்றியோ நன்றி நண்பர் கில்லர்ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

      நீக்கு
  25. கவரிமா அறிந்திருக்கிறேன் . நாகரத்தினம் சிறுவயதில் நம்பியதுண்டு பின்பு அதுவும் தெளிந்துவிட்டது. நல்ல பகிர்வு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி

      நீக்கு
  26. மிக மிக ;அருமையான பதிவு கில்லர்ஜி. கவரிமா பற்றி தெரியும் என்றாலும் கூட உங்கள் பதிவில் இலக்கியச் சுவை கலந்து அம்சமாக எழுதிவிட்டீர்கள். பாராட்டுகள்! வாழ்த்துகள். இப்படி நிறைய தொடருங்கள்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தங்களது கருத்துரை ஊக்கத்தை தருகிறது மிக்க நன்றி.

      நீக்கு
  27. கில்லர்ஜி பிடியுங்க பொக்கே! செம பதிவு போங்க! ரொம்ப நல்லா விளக்கியிருக்கீங்க. கவரிமா பற்றி தெரியும். ஆங்கிலத்தில் வஹந்த் என்பார்கள். இது திபெத்தில் காணப்படும் விலங்கு. நீங்கள் சொல்லியிருப்பது போல் இமயமலைப்பகுதி...இது யாக் எனப்படும் ஹிமாச்சல் போயிருந்தப்ப நானும் மகனும் இதைக் கொஞ்சி இருக்கோமே!!! மகன் இதன் மீது அமர்ந்து (அப்ப மிக மிகச் சிற்யவன் ) எஞ்சாய் செய்தான். கழுத்தைக் கட்டிக் கொண்டு தடவிக் கொடுத்து அதோடு பேச்சு வேறு. நல்லகாலம் அது ஒன்றும் செய்யவில்லை. என்சைக்ளோபீடியாவில் இதைப் பற்றி அப்போது தெரிந்து கொண்டு மகனுக்குச் சொல்லிக் கொடுத்தேன். கூடவே இந்த கவரிமான்/மா விஷயத்தையும் திருக்குறள் விளக்கத்தையும். அப்புறம் ஒருவர் பெயர் மறந்துவிட்டது அவர் சங்க இலக்கியத்தில் விலங்கிநங்கள் என்ற தலைப்பு என்ற நினைவு கட்டுரை ஒன்றில் இதைக் குறிப்பிட்டிருப்பதை அறிந்து மகனுக்குச் சொல்ல தேடினேன். அப்போது அந்தக் கட்டுரை கிடைக்கவில்லை.

    பதிவு மிகச்சிறப்பான பதிவு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக பொக்கே தந்தமைக்கு நன்றி.

      உங்களது அனுபவத்தை பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி.

      இந்த மாட்டை (கவரிமா) தொட்டு பேசியிருக்கிறீர்கள் நன்று.

      விரிவான கருத்துரை தந்தமைக்கு மீண்டும் நன்றி.

      நீக்கு
  28. மிகவும் அருமையாக விளக்கத்துடன் அமைந்த பதிவு .இத படிச்சிட்டு யாரும் நான்  கவரிமான் பரம்பரைன்னு சொல்லவே முடியாதது .எல்லா metaphor களையும் பழமொழியாக்கி உண்மைன்னே நம்ப வச்சிட்டாங்க .சிப்பியில் முத்து ...சிப்பிக்குள் எதிர்பாராம ஒரு பாரசைட்  போகும்போது அதில்  சுற்றி defense mechanism உண்டாக்கி சுற்றி உருவாவது இதுதான் இயற்கை ஒரிஜினல் முத்து.தொடர்ந்து எழுதுங்கள் இதுபோல் குறள்  விளக்கத்துடன்  .காணொளியும் அருமை 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ஏஞ்சல் பதிவை அழகாக விவரித்து விமர்சித்தமைக்கு நன்றி.

      நீக்கு
  29. கவரி மா பற்றி முன்பே அறிந்திருந்தாலும் தங்களது பதிவில் அது பற்றி படித்து பழைய தகவலைப் புதுப்பித்துக்கொண்டேன். பதிவிற்கு பாராட்டுகள்!

    அது சரி.நீங்கள் இவ்வளவு விளக்கமாக கவரி மான் என்று ஒரு இல்லை என்றுசொன்ன பிறகும் சிவதாமஸ்அலி அவர்கள் தமிழ்க்க விவசாயியிகள் ஆனைவரும் கவரி மான் என்று சொல்கிறாரே. ஏன்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே பாராட்டுகளுக்கு நன்றி.

      தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும் என்பது போல் சில பழக்கங்கள் தமிழ் மக்களிடம் மனதை விட்டு நீங்காது என்பதை மறைமுகமாக சொல்லியுள்ளேன்.

      நீக்கு
  30. ஆகா...ஆகா....அருமை நண்பரே! வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
  31. பதிவுகள் வயிலாக பலவிஷயங்ள் தெரிய வருகின்றன நன்றிஜீ

    பதிலளிநீக்கு
  32. சென்ற வருடமே கவரி மா பற்றி படித்தேன்.ஆனால் அதனை வலை பதிவில் ஏற்றும் பாராட்டத் தக்கது நண்பரே.

    பதிலளிநீக்கு
  33. கவரிமா பற்றி சிறப்பான தொகுப்பு. அருமை சகோ

    பதிலளிநீக்கு