தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், ஜூன் 14, 2017

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ணன்


அண்ணே... கர்ணன் தானம் கேட்டதுக்காக மார்போடு இருந்த கவசத்தையே அறுத்துக் கொடுத்தாராமே ?
அதைவிட நம்ம ஆளு கேட்டதுக்காக ஆறு மில்லியன் அமெரிக்கன் டோலர் மதிப்புள்ள மூளையவே செதுக்கி கொடுத்தாரே...
அவரு.. யாருண்ணே ?
கீழே பாருமோய்...


10


09


08


07


06


05


04


03


02


01

இந்த அப்பாவிதான்.

பர்ஹானா அபுதாபி-
நம்ம மீசை மாமா மாதிரி இருக்கே...


ChivasRegal சிவசம்போ-
…….. ? ? ?

நன்றி திரு. ஸ்ரீராம் ஜி (புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்)
பதிவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

திங்கள், ஜூன் 12, 2017

தலை விதியா ? தலையில் மிதியா ?


திரைப்படம் கண்டு பிடித்து 100 ஆண்டுகள் கடந்து விட்டது.

திரைப்படங்களில் நம்பத்தகாத காட்சிகள் வரும்போது நாம் ஏதாவது குறை சொன்னால் ? சினிமாதானே சும்மா பொழுது போகத்தானே கதைக்கு கால் உண்டா ? என்று மேதாவியைப் போல் கேள்விகள் வேறு. திரைப்படஙகளை பொழுது போக்காக பார்க்கிறவன் படங்களைப் பார்த்து...

01. அன்பு செலுத்துவது ஏன் ?
02. கண்ணீர் சிந்துவது ஏன் ?
03. காதல் செய்வது ஏன் ?
04. கொலை செய்வது ஏன் ?
05. கடத்திச் செல்வது ஏன் ?
06. வெடிகுண்டு வைப்பது ஏன் ?
07. திருடுவது ஏன் ?
08. திருந்துவது ஏன் ?
09. மது அருந்துவது ஏன் ?
10. புகை பிடிப்பது ஏன் ?
11. பகை வளர்ப்பது ஏன் ?
12. விலைமாதரிடம் போவது ஏன் ?

உணர்ச்சிகள்தானே ? அப்படியானால் அந்த உணர்ச்சிகளை, கொடுப்பதில் உண்மை வேண்டாமா ?

நாம் கடந்த 86 ஆண்டு காலமாக, திரைப்படங்களை பொழுது போக்காக மட்டும் பார்த்திருந்தால் ? திரைத்துறையினரில் பலருக்கும் சம்பள நிலை இன்றைக்கு கோடிகளை தொட்டு இருக்குமா ? இந்நிலைக்கு யார் காரணம் ? அறியா மடந்தைகளாய், ஆட்டு மந்தைகளாய், சிந்திக்க மறுத்த நாம்தானே காரணம். ஒரு கைவண்டித் தொழிலாளி நமது சிறந்த அரசாங்கத்தின் விலைவாசி உயர்வால் சிறிய அளவுதான் இரண்டு ரூபாய், உயர்த்தி கேட்பார் உடனே இந்த மேதாவிகள் சட்டம் தெரிந்தவர்கள் போல், பேசுவார்கள். திரைப்பட நடிகர்களுக்கு மட்டும் சம்பளம் கூடுகிறதே அது எப்படி ? யாருடைய பணத்தில் ? அவர்கள் கேட்டதும் கூடுகிறதே இதன் பின்னணி என்ன ? என்றாவது நீ சிந்தித்ததுண்டா ?

கேட்டால் இறைவன் அவர்களுக்கு விதித்த விதி என்கிறாய், இறைவன் இருக்கிறான் என்பது உண்மையானால் ? விதி என்பது உண்மையானால் ? அந்த இறைவன் படைப்பில் எல்லோரும் மனிதர்தானே ஏனிந்த ஏற்றத்தாழ்வு ? இந்த ஏற்றத்தாழ்வை நிர்ணயித்தது இறைவனென்றால் ? திரைப்பட நடிகர்களுக்கும், கைவண்டித் தொழிலாளிகளுக்கும் சம்பளம் நிர்ணயித்தது யார் ? எல்லாம் அறிந்த இறைவனா ? ஏதும் அறியாத மனிதனா ? மனிதன்தானே பிறகு ஏன் இறைவன் விதித்த விதி என்கிறாய் ? இவர்களெல்லாம் உழைப்பால் உயந்தவர்கள் அல்ல காரணம் இதே போல்தானே நாடக நடிகர்களும் உழைக்கிறார்கள் அவர்கள் ஏன் உயரவில்லை ? இவர்கள் உழைப்பிற்கேற்ற ஊதியம் பெற்றிருந்தால் இந்நிலைக்கு வருவது சாத்தியமும் அல்ல ! ஆகவே இவர்கள் நமது அறியாமையால் உயந்தவர்கள்.

நமது அறியாமையால் இன்று வளமாய் வாழ்வது இவர்கள்.
நாளை வறுமையில் வீழ்வது நமது சந்ததிகள்.

சாம்பசிவம்-
நாளை உமது சந்ததிகளில் யாராவது திரைப்பட நடிகர்களாக வந்தால் ?

கில்லர்ஜி-
நான் சுவாசிக்கும் காணக் கிடைக்காத காற்றின் மீது சத்தியம் அவர்களும் இதில் உட்பட்டவர்களே.

CHIVAS REGAL சிவசம்போ-
ஹூம் உருவமா இருக்கிற தலையில அடிச்சு சத்தியம் செய்யிறதுலயே நம்பிக்கையில்லை இதுல காத்துல சத்தியமாம், காத்துல நல்லா ஊத்துறாங்கய்யா காதுல...


காணொளி

வெள்ளி, ஜூன் 09, 2017

சாதா’’ரணம்


01. அதிகாலை வேளையில் விமானம் வடக்கு திசையிலிருந்து தெற்கு நோக்கி பறக்கும் பொழுது ஜன்னலோரம் இருந்து கொண்டு கிழக்கு திசையை ரசித்து இருக்கின்றாயா ?

02. மழலை உனது மீசையைப்பிடித்து இழுக்கும்போது வலிப்பதுபோல் பாவித்து குழந்தையை சிரிக்க வைத்து ரசித்து இருக்கின்றாயா ?

03. அறியாத்தனமாக பிறருக்கு கொடுத்து விட்ட கஷ்டத்திற்கு தனிமையில் உட்கார்ந்து ஆத்மார்த்தமாய் வேதனைப்பட்டு பிறகு மனம் இலவம் பஞ்சுபோல் பறப்பதை உணர்ந்து இருக்கின்றாயா ?

04. இத்தனை காலம்வரை நம் குழந்தைகளுக்கு சரியான தந்தையாக வாழ்ந்திருக்கின்றோம் மீதமுள்ள காலமும் அப்படியே இருப்போம் என நினைத்து இருக்கின்றாயா ?

05. பூந்தோட்டத்துக்குள் புகுந்து நின்று கொண்டு பூக்களை அணைத்தபடி சிரித்துக்கொண்டு புகைப்படம் எடுத்து இருக்கின்றாயா ?

06. எவ்வளவோ தர்மம் செய்திருக்கலாம் ஒரு நாளாவது பிச்சைக்காரர் ஒருவரை உணவகத்தில் உட்கார வைத்து உணவு வாங்கி கொடுத்து இருக்கின்றாயா ?

07. என்றாவது ஒருநாள் அனாதை குழந்தைகளின் ஆஸ்ரமம் சென்று ஏதாவது ஒரு குழந்தையின் தலையை ஆதரவாக தடவிக்கொடுத்து இருக்கின்றாயா ?

08. வீடில்லாமல் சாக்கடையோரம் படுத்துக்கிடக்கும் மனிதனிடம் இந்த போலிச் சமூகத்துக்கு பயப்படாமல் 2 வார்த்தை பேசி இருக்கின்றாயா ?

09. தாழ்த்தப்பட்ட சாதியினர் பகுதியில் சென்று தண்ணீர் கொடுங்கள் எனக்கேட்டு வாங்கி குடித்து இருக்கின்றாயா ?

10. நாளை இறைவனை கண்டால் ? ? ? பயப்படாமல் நான் எந்த தவறும் செய்யவில்லை என்று வாதிட முடியும் எனநினைத்து இருக்கின்றாயா ?

நண்பர்களே.... இவையனைத்தும் நான் உணர்ந்து செய்திருக்கின்றேன்.

குறிப்பு – இதில் உள்ள முதல் இலக்கத்தை தவிர்த்து பாக்கி அனைத்தும் சாதாரணமானவர்கள் செய்யக்கூடியதே என்பது எமது பனிவான கருத்து.

புதன், ஜூன் 07, 2017

அங்கீகாரம்

वनदे मातरम्

இந்த தமிழன் இந்தியாவை விட்டுப் போனதற்கு காரணம் யார் ? திறமைக்கு அங்கீகாரம் கிடைக்காததனால்தானே ! அமெரிக்க விண்வெளி ஓடத்தில் உயிரைத் துறந்தாரே நம் இந்தியப் பெண்மணி கல்பனா ஜாவ்லா அவரது மரணத்திற்கு நாமும் ஒரு காரணம் தானே ! இவர்களை எல்லாம் மக்களுக்கு அறிமுகமானதால் உலகிற்கு தெரிகிறது வெளியே தெரியாமல் திரையின் மறைவில் இருட்டுக்குள் வாழ்பவர்கள் எத்தனைபேர் எல்லாமே அரசியல்வாதிகளின் சித்து விளையாட்டு இதன் நஷ்டம் யாருக்கு ? நம் இந்தியாவுக்குத்தானே ! நாட்டுப்பற்று இல்லாதவர்களிடம் நாட்டையாளும் அதிகாரத்தை கொடுத்தது யார் ? கல்பனாவை இந்தியாவுக்கு உழைக்காமல் போனதற்கு குற்றம் சொல்பவர்களே... பின்னணி என்ன ?

திங்கள், ஜூன் 05, 2017

பாடகன்


கானா பாட்டு பாடுனவன் காணாம போயிட்டான்...
தானா பாட்டு பாடுனவன் தன்னால போயிட்டான்...
வீணா பாட்டு பாடுனவன் வீணாப்போயிட்டான்...

அந்தப்பாட்டு பாடுனவன் அம்போனு போயிட்டான்...
எப்படியோ பாடுனவன் எங்கிட்டோ போயிட்டான்...
பணத்துக்கு பாடுனவன் பார்க்குள்ளே போயிட்டான்...

பதநிச பாடுறவன் பாருக்குள்ளே நிற்பான்.
தாலாட்டா பாடுறவன் தரணியில நிற்பான்.
நெகிழ்வா பாடுறவன் நெஞ்சுக்குள்ளே நிற்பான்.

இதமா பாடுறவன் இதயத்திலே நிற்பான்.
மனமா பாடுறவன் மனசுக்குள்ளே நிற்பான்.
உணர்வா பாடுறவன் உயிருக்குள்ளே நிற்பான்.

இது நானா... எழுதலே... தானா... வருது...
இப்படிக்கு
சூனாபாணா.
(Subbiramani)