தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், ஜூன் 18, 2018

புதிய ஏற்பாடு പുതിയ നിയമം नया नियम కొత్త నిజంథన


    ட்பூக்களே எனக்கு சிறு வயதிலிருந்தே உடம்புக்கு நலமில்லை என்றால் கலங்கியதே கிடையாது கோடரியில் வெட்டினால்கூட சுண்ணாம்பை தடவி விட்டு போய் விடுவேன் அதேநேரம் ஊசி போடுவதை கண்டாலே எனக்கு அலர்ஜியாக இருக்கும் அபுதாபியில் இருக்கும் பொழுது இது மேலும் வலுவடைந்தது அதற்கு காரணம் ஆரம்ப காலங்களில் அங்குள்ள மருத்துவமனைகளில் ஊசி மிகவும் தடிமனாக இருப்பது மட்டுமல்ல, மனிதாபிமானமே இல்லாமல் நம் ஊரில் மாட்டுக்கு சொருகுவார்களே அதைப் போலவே குத்துவார்கள் அதைவிட முக்கியம் அங்கு மருத்துச் செலவு மிகவும் அதிகமாக இருந்தது.

எனது சம்பளத்தில் காய்ச்சல் வந்தால் பார்ப்பது மிகவும் கஷ்டமாக இருந்தது இதன் காரணமாக என்னைப் போன்ற தொழிலாளிகள் மாத்திரையை வாங்கி விழுங்குவதோடு முடித்துக் கொள்வார்கள் நான் அதைக்கூட செலவு என்று நினைத்து மறுத்து விடுவேன் முக்கிய காரணம் பணம் சேர்க்க வேண்டும் என்ற வெறி ஆனால் இந்நொடிவரை தவறான வழிகளிலோ, பிறகுக்கு துரோகம் செய்தோ பணம் சேர்த்ததில்லை. காரணம் அது எனது சந்ததிகளுக்கு சேர்க்கும் பாவமாக கருதினேன். மேலும் மன உறுதியோடு காய்ச்சல்தானே என்று எனக்கு நானே பேசிக்கொள்வேன். அதிலிருந்து விடுபட ஓடுவேன், உடல் பயிற்சி செய்வேன். ஆனால் இப்பொழுது இன்சூரன்ஸ், மெடிக்கல் கார்டு என்று பல வழிமுறைகள் வந்து விட்டது.

சமீபத்தில் கோவையில் இருக்கும் பொழுது எனக்கு காய்ச்சல் வந்தது வழக்கம் போல சாதாரணமாக உதறி விட்டுக் கொண்டே இருந்தாலும் வீட்டில் உள்ளவர்கள் மருத்துவமனை போகச் சொல்லிக் கொண்டே இருந்ததாலும் என்னாலும் தாக்குப் பிடிப்பது கஷ்டமாக இருந்தது மேலும் சைனாவிலிருந்து இந்திய கன்றி எங்கும் பன்றிக் காய்ச்சலை பரவிக் விட்டுக் கொண்டு இருப்பதாக தகவல் எனக்குமா பன்றிக் காய்ச்சல் வரும் ? நல்ல மனதுடன் வாழ்ந்ததற்கு இறைவன் நன்றிக் காய்ச்சல்தானே கொடுக்க வேண்டும் வேறு வழியின்றி வீட்டருகில் இருக்கும் மருத்துவமனைக்கு பையர் அழைத்துக் கொண்டு போனார் (வார்த்தை உதவிக்கு நன்றி சகோ திருமதி. கீதா சாம்பசிவம் அவர்கள்) தம்பதியினர் இருவரும் மருத்துவர்கள் அவர்களிருவரும் தமிழக-கேரளா கூட்டமைப்பு என்பதை பார்த்ததில், பேசியதில், உணர்ந்ததில் அறிந்து கொண்டேன். அவர்களுக்கான தட்சிணையுடன் வழக்கமான எல்லா மருத்துவர்கள் போலவே அவர்களுடைய மருத்துக்கடையிலேயே வாங்க வைத்தார்கள். எல்லாம் முடிந்த பொழுது அங்கு இருந்த பெரியவர் எனக்கு கையில் ஒன்று கொடுத்தார் வாங்கிப் பார்த்தேன் புதிய ஏற்பாடு


என்ன சொல்லலாம் ? நானிரிந்த நொம்பலத்தில் மனம் ஆயிரம் சொல்ல நினைத்தது, நாக்கு இரண்டாயிரம் வார்த்தைகளை தயார் செய்தது, விரல்கள் மூவாயிரம் வரிகளை டைப்பி விட்டது ஆனால் உடல் தளர்ந்து இருந்தது சட்டென எதிர்க்கட்சி வழக்கறிஞரைப் போல் மனம் சொல்லியது மீண்டும் இங்கு வரும் சூழல் வரலாம் அப்பொழுது ஏதாவது ஊசியைப் போட்டு உன் கதையை முடிச்சாலும் முடிச்சுடுவாங்கே நாட்டை ஆண்ட முதல்வருக்கே அந்நிலை நீ எம்மாத்திரம் அதனால் அடங்கு... அடக்கு... என்றது. உடன் டங்கு அடங்கியது. மேலும் மதங்கள் அனைத்தும் அன்பைத்தானே போதிக்கிறது மதவாதிகள் படிக்க மாட்டார்கள் நாம் மிதவாதியாயிற்றே... இதையும் படிப்போமே என்று உள்மனம் சொல்ல வாங்கி கொண்டேன். சரியென்று வெளியேறி வந்தால் வரவேற்பறையில் பையர் நின்றிருந்தார் கையைப் பார்த்தேன் அவரது கையில் புதிய ஏற்பாடு நான் அந்த மருத்துவமனையில் முதலில் கண்டதே அந்த மேஜையும் அதன் மேலிருந்தவைகளையும்தான் சட்டென மீண்டும் உள்ளே போனேன் எனது கையிலிருந்ததை வைத்து விட்டு மற்றதை எடுத்தேன் அது പുതിയ നിയമം


அவர் என்னை முகமலர்ச்சியுடன் பார்த்து கேட்டது...
மலையாளியானோ ?
இல்லையே...
பின்னே மலையாளம் எடுக்குனது... ?
இனிமே எழுத்துக்கூட்டி படிச்சுக்கிற வேண்டியதுதான்.
அவரது முகத்தில் ஈயாட விட்டு வெளியேறி வீட்டுக்கு வந்தேன்.

நான் ஏற்கனவே சொன்னது போல் மீண்டும் அங்கு போக வேண்டிய நிலை இம்முறை எனக்கல்ல எனது அம்மாவுக்கு நலமில்லாமல் அழைத்துப் போனேன். வழக்கம்போல் தண்டம் கட்டி விட்டு வெளியே அழைத்து வரவும் அதேநபர் எனது அம்மாவுக்கு கொடுத்தார் அது புதிய ஏற்பாடு எனது அழகு முகத்தை ஒருமுறை பார்த்தால் மறுமுறை மறந்தவர் உண்டோ ? சற்றே யோசித்தபடியே எனக்கும் கொடுத்தார் புதிய ஏற்பாடு மறுக்காமல் வாங்கி அதே மேஜையில் வைத்து விட்டு வேறு எடுத்தேன் அது नया नियम


சொன்னால் அதிரா நம்புவார்களோ... என்னவோ... அடுத்த வாரமே எனக்கு விரலில் நகச்சுத்தி வேறு வழி ? அங்குதான் போனேன் பரிபாடிகள் முடிந்து வெளியே வந்து மேஜையருகே நின்ற என்னை பார்த்துக் கொண்டே இருந்தார் பிறகு நானே எடுத்துக் கொண்டு வீட்டுக்கு புறப்பட்டேன் அது  కొత్త నిజంథన

அவருக்கு என்னமோ புரிந்து விட்டது என்பது மட்டும் எனக்கு புரிந்தது என்பதை நீங்களும் புரிந்து கொள்வீர்கள் என்று நானும் இந்நொடி புரிந்து கொள்கிறேன். மீண்டும் இங்கு வரும் நிலையை இறைவன் கொடுக்கலாம் காரணம் அந்த மேஜையில் தமிழ்நாடு சுடுகாடாகும் என்று சாபமிட்ட விஸ்வாமித்ரனின் மொழியான கன்னடம் மற்றும் ஆங்கிலம் மொழிகளிலும் இவைகள் இருக்கின்றனவே...

நட்பூக்களே... இவ்விடத்தில் நான் ஒரு பழைய சம்பவத்தை உங்களுக்காக நினைவு கூர்கிறேன் சுமார் முப்பது வருடமிருக்கலாம் நானும், நண்பன் ராமச்சந்திரனும் இரயிலில் பயணித்துக் கொண்டு இருக்கும் பொழுது அவன் படித்துக் கொண்டு இருந்த நூலிலிருந்து ஒரு விடயத்தை சொல்லி தமிழ் மொழியைப்பற்றி பெருமையாக சொன்னான். சற்றே யோசித்த நான் பிறகு அவனிடம் சொன்னேன். இது பெருமையே கிடையாது மொழிக்கு வேண்டுமானால் நீ சொல்வது போல் பெருமையாக இருக்கலாம் ஆனால் தமிழன் என்று பார்த்தால் இது அவமானப்பட வேண்டிய விடயம் காரணம் இதன் தொடக்கத்திற்கு தமிழன்தான் சரியானவன் என்று ஆங்கிலேயன் அன்றே கணித்து இருக்கின்றான் என்றேன்.

நண்பர்களே... அந்த விடயம் என்ன தெரியுமா ?
ஆங்கிலத்திலிருந்த பைபிளை இந்தியாவில் நுழைத்து மக்களை படிக்க வைக்க முதன் முதலில் தேர்வு செய்து அச்சடித்த மொழி தமிழ் அதன் பிறகுதான் மற்ற அனைத்து மொழிகளிலும் வந்து இருக்கிறது

111 கருத்துகள்:

 1. மீண்டும் வருகிறேன்...
  வாழ்க நலம்....

  பதிலளிநீக்கு
 2. ஆகா...

  அந்த அளவுக்கு
  நம் மக்கள் அந்தக் காலத்திலேயே
  புன்னகை மன்னர்களாக இருந்திருக்கிறார்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. "புன்னகை மன்னர்கள்" ஆஹா இப்படியும் சொல்லி பெருமைப் படலாமோ...

   நீக்கு
 3. விஸ்வாமித்திரரின் கால் தூசிக்குக் கூட ஈடாகாது!...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஜி இதையே ஏற்க மறுக்கின்றீர்கள்...

   ஒரு அறிவுக்கொழுந்து டிவியில் சொல்கிறது. தமிழ்நாட்டில், தலைவனை எதிரக்க கடவுளுக்கு மட்டுமே தகுதி இருக்கிறது என்று...

   நீக்கு
  2. கில்லர்ஜி அது எந்தக் கடவுள் என கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்கோ ஹா ஹா ஹா.. ஹையோ ஹையோ.. கடவுளுக்கும் இனி இன்சூரன்ஸ் எடுத்து வைக்கோணும் போல:)

   நீக்கு
  3. சொன்னவன் பொதுவாக கடவுள் என்றுதான் சொன்னான்.

   நீக்கு
 4. இரட்சணிய யாத்திரிகம் என்றொரு தமிழ் நூல்.. ஜீசஸ் புகழ் பாடுவது.

  இதனை இயற்றியவர் வைணவ சம்பிரதாயத்தைச் சேர்ந்தவர்..

  இவர் இந்துவாக இருந்தபோது வயிற்று வலியால் கஷ்டப்பட்டார்..

  அவருக்கு வைத்தியம் செய்த கிறிஸ்தவர்கள் இவரை மத மாற்றிய பிறகே சிகிச்சையை தொடங்கினர்..

  அவரும் பிழைத்துக் கொண்டார்..

  அவர்தான் -
  H.A.கிருஷ்ணப் பிள்ளை...

  ஹென்றி ஆல்பர்ட் கிருஷ்ணப் பிள்ளை..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி
   வியப்பான அரிய தகவல் அறிந்தேன் நன்றி.

   "குருவி உட்கார இளநீர் விழுந்துச்சாம்" என்ற பழமொழி நினைவில் வந்து போனது...

   நீக்கு
  2. நல்லவேளை, குருவி உட்கார வழுக்கை (தேங்காய் வழுக்கை) விழுந்துச்சாம் என்று சொல்லவில்லை.

   நீக்கு
  3. ஹையோ இளநீர் விழவில்லையாம் பனம்பழமெல்லோ விழுந்ததாம்:) கில்லர்ஜி பயமொயியை டப்பாச் சொல்றார்:) எனக்கு டமில்ல டி ஆக்கும்:)

   நீக்கு
 5. பழைய ஏற்பாட்டுக்கும்
  புதிய ஏற்பாட்டுக்கும் இடையே
  பட்டறிவு (அனுபவம்) தான்
  வழிகாட்டுமே!

  பதிலளிநீக்கு
 6. தமிழருக்குப் பிறந்ததால் தமிழ் பேசுகிறேன். அவ்வளவுதான்.

  தமிழ் பழமையானது என்பதால் தமிழ் பேசுறவங்க எப்படி உய்ர்வாவங்கனு எனக்குப் புரியாதது. தமிழர்களீல் பல வகை பார்த்து இருக்கேன், நல்லவன் கெட்டவன், கழிவுபட்டவன், கூட்டிக்கொடுக்கிறவன், பிச்சைக்காரன், திருடன், இரக்கமே இல்லாதவன், சிறூமிகளீடம் மிருகமாக நடந்துக்கிறவன். இவன் எல்லாருமே தமிழந்தான், தமிழைத் தாய்மொழியாக பேசுபவன் என்றூ எனக்கு நானே சொல்லிக்கொள்வதுண்டு.

  தமிழர் என்பது ஒரு இனம் கிடையாது. அது தவறான புரிதல். உங்கள நீங்க முடிந்தால் சரி செய்து கொள்ளூங்கள். ஒரு மொழியைப் பேசுறவங்க தமிழர்கள்.

  மறூபடியும் சொல்றேன் தமிழர் ஒரு இனம் இல்லை. தமிழ் மொழி பேசும் திராவிட இனத்தவர், தமிழர். ஏன் தமிழ் பேசுறாங்க என்றால், அவங்க அம்மா அப்பா பேசும் மொழி, அதனால். தமிழ் பேசுவதால் எந்தப் பெருமையும் இல்லை.

  தமிழ்ப் பெருமை, தமிழர் பெருமை எல்லாம் அர்த்தமற்றது- சிந்திக்கத் தெரிந்தவர்களூக்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தமிழனுக்குத் தமிழ்ப்பற்று இல்லை[அரிதாகச் சில கிறுக்கர்கள் இருக்கலாம்] என்ற கசப்புணர்ச்சியின் வெளிப்பாடு வருணின் இந்தப் பதிவு. யோசித்தால், 'இது உண்மை' என்று ஒப்புக்கொள்ளத் தோன்றுகிறது.

   காலம் மாறும். காத்திருப்போம் வருண்.

   நீக்கு
  2. நண்பர் திரு. வருண் அவர்களுக்கு....
   எனது பதிவின் சாராம்சம் இந்தியர்களிலேயே தமிழன் மட்டுமே விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை என்ற பெயரில் ஏமாந்து கொண்டே வாழ்கிறான். என்பதை ஆங்கிலேயன் அன்றே சரியாக கணித்து இருக்கின்றான் என்ற கருத்தை மட்டுமே முன் வைத்தேன்.

   மேலும் நான் தமிழ் மொழியைப் பற்றியோ, தமிழரின் வரலாற்றைப் பற்றியோ சொல்ல வரவில்லை.

   அயோக்கியனும், நல்லவனும் தமிழனில் மட்டுமல்ல உலக அளவில் எல்லா நாடுகளிலும், எல்லா மதத்தினரிலும், எல்லா ஜாதியினரிலும், எல்லா மாநிலங்களிலும், எல்லா மொழியினரிலும் அமோக விளைச்சலைப் பெற்று மனிதநேயம் மறந்து, இழந்து வாழ்கின்றனர்.

   இனம் கிடையாது என்று சொல்கின்றீர்கள் உண்டு நண்பரே அவைகளை விளக்குவதற்கு பதிவுதான் இடவேண்டும்.

   இரண்டு இந்தியர்கள் திடீரென ஆஸ்திரேலிய நாட்டில் சந்திக்கின்றார்கள் என்று வைத்துக் கொள்வோம். ஆங்கிலத்தில்தான் உரையாடுவார்கள் இந்தியர் என்று தெரிந்தவுடன், அவர்களில் ஒருவர் கேட்பது நீ எந்த மாநிலம் ? என்பதே... காரணம் என்ன ?

   மற்றவன் எந்த மொழி என்பதை அறிந்தி கொள்ளவே... அவன் நான் குஜராத் என்றவுடன் இவனுக்கு இனம் புரியாத பற்றுதல் உருவாகும் காரணம் இவனும் குஜராத் உடனே குஜராத்தி மொழியில் பேசிக்கொள்வார்கள். இதுதான் ‘’இனம்’’ ‘’இனப்பற்று’’

   ஒருவேளை அவன் ஆந்திரா என்றால் ? சரி என்பதோடு மற்ற வார்த்தைகளை பகிர்ந்து கொள்வார்கள்.

   மொழிக்கு வரலாறு இல்லை என்றால் அகழ்வால் ஆராய்ச்சி எதற்கு ?
   கல்வெட்டுகளில் தேதிகளை குறிப்பிட்டு வைப்பதின் நோக்கமென்ன ?
   இந்த இனத்தின் ஆயுள் எவ்வளவு என்பதை இந்த சந்த்தியினர் உணர்ந்து கொள்ளத்தானே.... ?

   எனது தந்தையும், தாயும் தமிழர்கள் ஆகவே நானும் தமிழ் பேசுகிறேன்.
   ஒருக்கால் அவர்கள் மராட்டியர்கள் என்றால் ? நான் மராத்தியே பேசுவேன். தமிழ் எப்படிப் போனால் எனக்கென்ன ? எனது தாய்மொழி மராத்தி என்று மார்தட்டி பேசியிருப்பேன்.

   ///தமிழப் பெருமை, தமிழர் பெருமை எல்லாம் அர்த்தமற்றது///

   மொழியை வளர்க்க உயிரையே மாய்த்த பெரும் மாமனிதர்கள் வாழ்ந்த பூமி இது. எந்த மொழியிலும் இல்லாத நூல்கள் தமிழில் மட்டுமே உண்டு.

   தங்களது வருகைக்கு நன்றி.

   நீக்கு
  3. மொழியை வளர்க்க உயிரை மாய்த்தவர்கள், மதத்தை வளர்க்க உயிரை மாய்த்தவரெல்லாம் இருந்துட்டுப் போகட்டும்.

   உயிரோட இருந்தால்தான் மொழி வளர்க்க முடியும், பேசி, எழுதி..இறந்தால் எப்படி மொழி வளர்க்க முடியும்? புரியவில்லை!

   -------------------

   "எந்த மொழியிலும் இல்லாத நூல்கள் தமிழில் மட்டுமே உண்டு"

   அப்படியா நண்பரே? நமக்கு எத்தனை மொழிகள் தெரியும் நண்பரே? சீன மொழி தெரியுமா, லாட்டின் தெரியுமா? இல்லை சமஸ்கிரதம் தெரியுமா? அம்மொழியில் உள்ள நூல்கள் அனைத்தும் தெரியுமா? அவைகளீல் ஏதும் தனித்துவமில்லையா? தமிழில் இல்லாத தனித்துவும எதுவுமே இல்லையா???

   இதெல்லாம் தெரியாதபோது, எனக்குத் தெரிந்த ஒரே மொழியில்தான் பல தனித்துவம் வாய்ந்த நூல்கள் இருக்கின்றன என்பது எப்படி சரியாகும்?

   அதை எப்படி "அனலைஸ்" பண்ணூவது? எனக்குத் தெரிந்தது தமிழும், கொஞ்சம் ஆங்கிலமும். அதனால், இது போல், பலமொழி நன்கு தெரிந்தவன்போல் பேசுவதில்லை. அப்படியே இருந்தாலும் அது சரியா இல்லை தவறான கருத்தா என்றூ என்னால் பார்க்க முடியாது.

   -------------------

   நண்பரே!

   ஒருவர் பணக்காரக் குடும்பத்திலோ, அல்லது ராயல் குடும்பத்திலோ பிறந்ததால் அவர் உயர்ந்தவர் என்பதை என்றூமே நான் ஏற்பதில்லை. நீங்கள் யார் அல்லது நான் யார் என்பதே முக்கியம். அதேபோல், ஒருவர் தமிழைத் தாய்மொழியாக பெற்றவருக்கு பிறந்ததால், தமிழ் மொழிக்கான பெருமை அவருக்கும் சாரும் என்பது விவாதத்துக்குரியது.

   "அயல்நாட்டில் தமிழன் தங்களூக்குள் தமிழில் பேசுவதில்லை"

   எனக்குத் தெரிய மலையாளீகள் பலர் தமிழில் பேசுவார்கள். அதேபோல் தமிழர்கள் கேரளாவில் வாழ்ந்தால்கூட மலையாளத்தில் பேசுவதில்லை. அதேபோல்தான் கர்னாடகாவில் வாழும் தமிழர்களூம்.

   நம் மொழிப் பற்றூ அல்லது வெறீ நமக்குத் தெரிவதில்லை. தமிழர் மொழிப்பற்றூ பற்றீ பிற மொழி பேசுபவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளூங்கள்! அப்போதுதான் உங்களூக்கு உண்மை விளங்கும்.   நீக்கு
  4. முதலில் இந்த மொழிப் பிரச்சனையை எதற்காக கிளப்புகின்றீர்கள் ?

   நான் மருத்துவமனையில் நிகழ்ததை நகைச்சுவையாக சொல்ல நினைத்தபோது... பழைய சம்பவம் ஒன்று நினைவில் வந்தது. அதனைக்குறித்து முடிவில் சொன்னேன்.

   மற்றபடி பதிவில் மொழிப்போரோ, மதவாதமோ நான் சொல்லவில்லை.

   சைனா மொழியை சற்று முயன்றவனும்தான்.லத்தீன் மொழி பழக இதுவரை தொடர்பே இல்லை.

   எனக்கு எல்லா மொழியும் முழுமையாக தெரியும் என்று சொல்லவும் இல்லை, அப்படி நினைக்கவும் இல்லை.

   நீக்கு
  5. நண்பரே: உங்க பதிவில்.."தமிழ் மொழியைப் பற்றி பெருமையாக உங்க நண்பர் சொன்னதாகவும்..அதற்கு நீங்கள் தமிழன் என்று அவமானப்படனும் னு ஏதோ சொல்லி இருக்கிறீர்கள் என்று போகிறது..

   உங்க பதிவில் மேற்கோள் காட்ட வசதியில்லாதது என் தவறல்ல! சரி விடுங்க!

   நீக்கு
  6. இதற்கு முதலிலேயே சொல்லி விட்டேன். தமிழன் எதையும் விட்டுக் கொடுப்பான் என்பதை ஆங்கிலேயன் சரியாக கணித்து இருக்கிறான் என்று...

   நீக்கு
 7. எனக்குத் தெரிந்து இந்தியாவில்தான் மருத்துவச் செலவு குறைவு என்று நினைக்கிறேன். சரியா? எனக்கும் ஊசி என்றால் பயம். அதுவும் இடுப்பில் போடும் ஊசி என்றால் கடும் அலர்ஜி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான் ஸ்ரீராம்ஜி அரேபியர்கள் பலரும் இந்தியா வந்து சிகிச்சை பெறுவது குறைந்த செலவு என்பதற்காக மட்டுமல்ல, திறமையான மருத்துவர்கள் நிறைந்த நாடு என்பதாலும்தான்.

   நீக்கு
  2. ஸ்ரீராமுகு எதுக்கு இடுப்பில ஊசி?:)) ஹா ஹா ஹா..

   நீக்கு
  3. அதானே... இடுப்பு ஊசி எதற்கு ?

   நீக்கு
  4. சில ஊசிகளை இடுப்பில்தான் போடணுமாம். சில ஊசிகளை கையில் போடணுமாம். இடுப்புல போடற ஊசியை கையில போடக் கூடாதாம்... கையில போடற ஊசியை இடுப்புல போடக்கூடாதாம்... தெரியாதா உங்களுக்கு?

   நீக்கு
  5. ஹாஹா :) இப்போ நான் சிரிச்சே மூச்சடைச்சி செத்தா அதுக்கு இவங்க ரெண்டுபேருந்தான் காரணம் :))

   நீக்கு
  6. கில்லர்ஜீயும் அதிராவும்தான் :) இப்போ விழுந்து புரண்டு சிரிக்கிறேன் கண்ணுக்குள்ள அனுஷ் வேற வந்து வந்து போது

   நீக்கு
  7. ஹா ஹா ஹா எனக்கொரு உண்மை தெரிஞ்சாகோணும் ஜாமீஈஈஈஈஈஈ:) செல்லப்பிராணிகள் கடிச்சாக் கூட வயிற்றிலதான் ஊசி:).... ஆனா ஸ்ரீராமுக்கு எதுக்கு இடுப்பில் ஊசி போய்ட்டாங்க:)).. ஹா ஹா ஹா

   கில்லர்ஜி இதில என்னா டவுட்டூஊஊஊஊஉ அந்த ரெண்டு பேரில் ஒன்று நீங்க :) மற்றது ஸ்ரீராம் தேன்ன்ன்:)) மீ இல்லை மீ இல்ல ஹா ஹா ஹா:))... எதுக்கும் நியூயோர்க் மாரி அம்மனுக்கு கூழ் ஊத்துவதாக நேர்த்தி வையுங்கோ:))

   நீக்கு
  8. அனுஷ் இதை மொழி பெயர்த்தால் ஸ்ரீராம் என்று வருகிறதே...

   நீக்கு
  9. அதிரா நான் எதற்கு செலவு செய்து கூழு ஊத்தணும் ?

   நீக்கு
 8. பன்றிக்காய்ச்சல் - நன்றிக்காய்ச்சல் = ஹா... ஹா... ஹா...

  பதிலளிநீக்கு
 9. ​மதத்தைப் பரப்புவதை ஒரு தொழிலாகவே செய்து வருகிறார்கள் போலும்!

  //அவருக்கு என்னமோ புரிந்து விட்டது என்பது மட்டும் எனக்குப் புரிந்தது ///

  ​என்னவாக இருக்கும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களுக்கு புரிந்து விட்டதை வெளியில் சொல்ல வேண்டாம் அதிராவுக்கு தெரிந்தால் ஆபத்து.

   நீக்கு
 10. இறுதியாகச் சொன்னது புதியதகவல் நான் பைபிள் கொடுப்பவராய் இருந்திருந்தால் நிச்சயம் எனக்குப் பைத்தியம் பிடித்திருக்கும்.சுவாரஸ்யமான பதிவு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா கவிஞர் எனது காலை வாறிவிடுவது எனக்கு புரிந்து விட்டது. என்பதை பலரும் புரிந்து கொண்டார்கள் என்பது உங்களுக்கு புரிந்து விட்டது போல...

   நீக்கு
 11. உண்மைதான் நண்பரே தங்களுக்கு நன்றிக் காய்ச்சல்தான் வரவேண்டும்
  தற்பொழுது நலம்தானே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே நலமே காய்ச்சல் பறந்து போய் விட்டது.

   நீக்கு
 12. பிழைக்க வந்த இடத்தில்கூடத்[தமிழ்நாட்டில்] தமிழை அலட்சியப்படுத்துகிறார்களே?

  உள் மனதில் கொதிப்பு. இதைத் தணிக்க மருந்து ஏதும் இல்லை.

  அனுபவத்தைப் பதிவாக்கியதற்கு நன்றி கில்லர்ஜி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் நண்பரே இது காலம் காலமாக உள்ளது வருகைக்கு நன்றி

   நீக்கு
 13. பதில்கள்
  1. வாங்க ஜி மறுபடியும் எனக்கு ஜலதோஷம் பிடித்து மீண்டும் அதே மருத்துவமனை போய் கன்னடமும், ஆங்கிலமும் வாங்கி வந்து பதிவு போட சொல்வீர்கள் போலயே....

   நீக்கு
 14. கடைசியில் இவ்வளவு புத்தகங்களை வாங்கிக்கொண்டுபோய் என்ன செய்தீர்கள்?

  காய்ச்சல் சரியாயிடுச்சா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்ன செய்வது எழுத்துக் கூட்டி படிக்க வேண்டியதுதான்.
   காய்ச்சல் போயிந்தி

   நீக்கு
 15. பன்றி காய்ச்சல் நன்றி காய்ச்சல் சிரிக்க வைத்தது.


  பையர் கீதா சாம்பசிவம் சொல்வது எல்லாம் நினைவாய் எழுதி விட்டீர்கள்.

  கூடுமானவரை ஊசி போடாமல் இருக்கலாம்.
  அவசியம் என்றால் போட வேண்டியதுதானே!
  எனக்கு இடது கையில் போட வேண்டும் வலது கையில் போட்டால் வலி மிக அதிகமாய் இருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ ஆமாம் பிறகு இது என்னுடைய வார்த்தை என்று நீதி மன்றம் சென்றால் என்ன செய்வது ?

   அவர்களோ மத்தியில் ஆளும்கட்சி நானோ சோத்துக்கட்சி

   நீக்கு
 16. காசு சேர்க்கும் எண்ணத்தில் மாத்திரை வாங்காமல் மனவலிமையால் காய்ச்சலை விரட்டிய மன உறுதி படிக்கும் போது மனது கலங்கி போனது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் சகோ பணம் சேர்க்க வைத்தது என்னை ஏளனப்படுத்தி பேசிய உறவுகளின் வார்த்தைகளால்தான்.

   இன்று அதே உறவுகள் வார்த்தையை மாற்றிப் பேசுகின்றார்கள்.

   ஆனால் நான் நானாகவே வாழ்கிறேன். இதுவே என்னிடம் எனக்குப் பிடித்த குணம்.

   நீக்கு
 17. நல்ல வழியில் குடும்பத்திற்கு என்று சேர்த்த பணத்தை வைத்து சந்தோஷமாய் இருங்கள் வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
 18. ஊசி போடுவதென்றால் எனக்கும் பயம்தான். ஆனால் சில சுகயீனங்களுக்கு ஊசிதான். மாற்றுமருந்தில்லை. நானும் ரசித்தேன் நன்றிகாய்ச்சல்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ எனக்கு காய்ச்சல் வந்ததை ரசிக்கலாமா ?

   நீக்கு
  2. ஆ..அண்ணா ஜீ நான் உங்க காய்ச்சலை ரசிக்கவில்லை. கர்ர்ர்ர்ர்
   எழுதின விதத்தை சொன்னேன். பன்றிகாய்ச்சல்..நன்றிகாய்ச்சல்.

   நீக்கு
  3. ஓ.... அப்படியா ?
   அதானே காய்ச்சலை யாராவது ரசிக்க முடியுமா ?

   நீக்கு
 19. /என்னைப் போன்ற தொழிலாளிகள்/ அபுதாபியில் தொழிலாளிகளுக்கு வில்லாவும் காரும் உண்டா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா அங்கு மேலாளர் போன்றவர்களுக்கு கம்பெனி கார் கொடுத்து விடும், தொழிலாளர்கள் மற்றும் அனைவருக்கும் வில்லா அல்லது கேரோன் போன்றவை கொடுக்கும்,

   தொழிலாளர்கள் சென்று வருதற்கு கம்பெனி பஸ் அல்லது வேன் இருக்கும்.
   நடந்து போககூடாது.

   பிரைவேட் கம்பெனி, அலுவலகம் அவர்கள் நடந்தோ, டாக்ஸியிலோ, பஸ்ஸிலோ போவார்கள்

   நீக்கு
 20. //ஆனால், இது நாள் வரை பிறருக்கு துரோகம் செய்தோ, தவறான வழியிலோ பணம் சேர்த்ததில்லை. அது என் சந்ததிகளுக்கு சேர்க்கும் பாவமாக எண்ணினேன.//
  ஆஹா! இந்த ஒரு எண்ணம் போதுமே உங்கள் சந்ததியை வளமாக வாழ வைக்க.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் மேடம் இதை நான் ஆத்மார்த்தமாக நம்புகிறேன்.

   இதனால் குடும்பத்தில்கூட சிலர் என்னை ஏளனமாக நினைப்பார்கள் எனக்கு அந்தக் கவலை கிடையாது.

   காரணம் நான் கடவுளை வணங்குவது கிடையாது ஆனால் நம்புகிறேன்.

   நீக்கு
 21. உடம்பை கவனித்துக்கொள்ளுங்கள். நீங்கள் அவர்களிடம் பெற்றதற்கு மாற்றாக, பிறிதொரு நூலை அவர்களுக்குக் கொடுத்தால் அவர்கள் ஏற்பார்களா என்று யோசித்துப் பார்த்தேன். நாம் பெருந்தன்மையானவர்கள் என்று நினைத்துக்கொண்டேன். அவர்களைப் பற்றிக் கூற மனம் வரவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக முனைவர் அவர்களே... உயல் நலமே, என்னைப் பொருத்தவரை வாங்கி கொள்வதில் தவறு இல்லை.

   அரபு நாட்டில் குர்ஆனை திருண தம்பதிகளுக்கு பரிசு பொருளாக கொடுக்கின்றார்கள்.

   நீக்கு
  2. நான் சபரிமலை பிரசாதம் உட்பட வாங்கி பல பிரசாதங்களை வாங்கி சாப்பிட்டிருக்கேன் .
   அன்போடு கொடுத்தா வாங்கிப்பேன் .
   சில வருடமுன் முகப்புத்தகத்தில் இஸ்லாமியர் ஒருவர் வெள்ளம் முடிந்த நிலையில் குரான் கொடுத்ததை ஒருவர் திட்டி போட நானும் ஜெயதேவ் என்பவரும் அதில் ஒரு தவறுமில்லைன்னு மணிக்கணக்கா சண்டைபோட்டோம் .எந்த ஒரு விஷயமும் நம் மனத்தால் ஏற்றுக்கொள்ள விரும்பினால் மட்டுமே ஏற்க முடியும் அவர் கொடுத்தா வாங்குவதில் தவறில்லை .
   இளவரசர் சார்லசுக்கு மினி குரான் கொடுத்தாங்க ஒரு பங்க்ஷனில் அவர் அன்போடு ஏற்றார் .ஒரு நம்பிக்கையில் தானே தராங்க .அதை வாங்கும்போது அவங்களுக்கு சந்தோஷம்னா நான் எத்தனை புக்ஸும் வாங்க தயார் .

   நீக்கு
  3. ஆமாம் எமது கருத்தும் இதுவே... இதை பெறுவதால் அவர்களது மனம் சந்தோஷமாக இருக்கிறது என்றால் இதை பெறுவதில் தவறில்லை.

   சந்தோஷத்திலேயே பெரிய சந்தோஷம் பிறரை சந்தோஷப்படுத்துவதே என்பது கீதை சொன்னது.

   தற்சமயம் நான்கு மொழியில் எனது வசம் இருக்கிறது ப்ரீயான நேரங்களில் எல்லாவற்றின் வார்த்தைகளையும் ஒப்பிட்டு பார்த்து தெரிந்து கொள்கிறேன்.

   இதில் தமிழ் மொழியில் இரண்டு கிடைத்து விட்டதால் ஒன்று சர்ச்சில் போய் கொடுத்து வந்தேன்.

   இவ்வகையில் எனக்கு நானே ஆசிரியன், சுயபரிசோதனையாளன்.

   இப்பொழுதும் சொல்கிறேன் நான் மதவாதி அல்லன் மிதவாதி.

   நீக்கு
  4. மிதவாதி:) எண்டால்ல் உங்கட ஜாம்ஸ் ஊரணியில் மிதப்பவர் என அர்த்தம்:)) ஹா ஹா ஹா:))

   நீக்கு
  5. அடடே புது தத்துவமாக இருக்கிறதே...

   நீக்கு
 22. கில்லர்ஜி .இப்போ உடல் நலமாகிவிட்டதா .
  மதவாதி மிதவாதி பன்றி நன்றிகாய்ச்சல் ரசித்தேன் :)
  இப்போ எத்தனை புதிய ஏற்பாடு தற்சமயம் இருக்கு உங்கள்கிட்ட .எனக்கு இந்த மாதிரி பைபிளை கையில் கொடுப்பதில் உடன்பாடில்லை .அந்த டாக்டர்ஸ் ஒரு டேபிளில் வைத்து .விருப்பமிருந்தால் எடுக்கலாம்னு எழுதி வைச்சிருக்கலாம் .
  என்னை பொறுத்தவரை மனிதர்கள் அவர்களின் நற்குணங்களாலே அவரிகளின் செயல்களால் பிறரை ஈர்க்க வேண்டும் .
  என் கணவர் ஹேர் கட்டிங் செய்ய ஒரு கடைக்கு போனார் அங்கே முடிதிருத்துபவர் இவரிடம் என்ன மொழி நாடு என வினவ இவர் தமிழ் என்று சொல்லவும் உடனே அவர் சொன்னது தமிழர்கள் கடின உழைப்பாளிகள் கொடுத்த வேலையை ஈடுபாட்டுடன் செய்வார்கள் .நம் நாட்டில் மாநிலவரியாக பிரிக்கப்பட்டுள்ளோம் வெளி நாட்டில் மொழி :) நம்மை அடையாளப்படுத்துகிறது இப்போதெல்லாம் :)
  மொழி நமது அடையாளம் .என்னதான் பாஸ்போர்ட்டில் ஜெர்மன் பிரிட்டிஷ் என இருந்தாலும் எத்னிசிட்டி என்று வரும்போது தமிழ் தான் வருது..எனக்கு இந்த தமிழன்டா கெத்துடா இதிலெல்லாம் நம்பிக்கையுமில்லை ...எனக்கு நல்ல மனுஷியாக இருக்க மட்டுமே விருப்பம் .எத்தனை தமிழர்கள் சக தமிழர்களை இங்கே ஏமாற்றுகிறார்கள் தெரியுமா ?.எழுதப்போனா பதிவே வரும் .தமிழன்தான் மற்றொரு தமிழனை எந்தளவுக்கு கேவலப்படுத்துவானோ அந்தளவுக்கு கீழ்த்தரமான செயல்களை செய்வான் .
  தமிழருக்கொரு குணமுண்டு என்று சொல்லியே வயதுக்கும் மரியாதை தராம எத்தனை பேர்கள் அரசியல்வாதிகளை கீழ்த்தரமான விமர்சிக்கிறாங்க ..இதுவா தமிழனின் குணம் ? என்னால் எக்ஸ்சாம்பில் கூட தர முடியும் இது அரசியல் பதிவாகிவிடும் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ மிதவாதியின் காய்ச்சலை ரசித்தது நன்று.

   உலகில் தமிழனை பெரும்பாலும் ஏமாற்றுவது தமிழனே... ஆனால் தமிழ்நாட்டில் தமிழனை ஏமாற்றுவது தமிழன் அல்லாதவனே...

   ஏமாற்றினான் என்று சொல்வதை நான் விரும்புவதில்லை. ஏமாந்தான் என்பதே உண்மை.

   அரசியலில் மக்களை ஆள்பவர்கள் மட்டுமல்ல, மக்களில் பெரும்பாலானோர் ஏமாற்றுக்காரர்களாகவே இருக்கின்றார்கள்.

   அதாவது இயன்றவரை பலரிடமும் பணம் வாங்கி கொண்டு உனக்கு ஓட்டு போடுகிறேன் என்று...

   இது தனது வாழ்வுக்கு மட்டுமல்ல தனது சந்ததிகளின் வாழ்வுக்கும் கேடு என்பதை அறியாத கேடுகெட்ட ஜென்மங்கள்.

   இவர்களோடு சேர்ந்து உயர்ந்த சிந்தனையாளர்களும், நல்ல மனிதர்களும் பாதிக்கப்படுகின்றார்கள்.

   இதன் அடிப்படை மனிதர்களுக்கு வேதநூல்களிலும், இறையிடமும் நம்பிக்கையும், பயமும் இல்லாததே...

   பார்ப்போம் எல்லாம் உலக அழிவுக்கே அழைத்துச் செல்கிறது.

   விரிவான கருத்துரைக்கு நன்றி.

   நீக்கு
 23. ஒரு தமிழ் பெண்ணின் கணவன் குடிகார தமிழ் ---------------- (கோடிட்ட இடங்களை விருப்பமான திட்டும் வார்த்தைகளால் நிரப்பிக்கொங்க ).நிறை மாத கர்பிணியா இருக்கும்போதே ரோட்டில் அடிக்கும் போட்டு அவளை அவள் இருந்த ஏரியாவில் பிற தமிழர் ஒருவரும் உதவலை அவளுக்கு உதவியது அங்குள்ள கேரள குடும்பம் .
  என் கணவர் நிறைய மாணவர்களை முன்பு காரில் ஏற்றி ட்ராப் செய்வார் வேலை ட்ரெயினிங்கில் .இதில் 10 பேர் சென்னை தமிழர்கள் ஒரு நாளைக்கு 6 பேர்தான் வேனில் ஏற்ற முடியும் அவர்களுக்குள்ளே பொறாமையில் என் கணவருக்கு போன் செஞ்சு இவன் இன்னிக்கு லீவ் வேலைக்கு வரமாட்டான்னு அவன் சம்பளத்தையும் மண்ணள்ளிப்போடுவாங்க ,இப்படி குறுக்கு குணங்களை தூக்கிட்டு திரிபவர் தமிழனு சொல்லிக்கறது பெருமையா ? இவனுங்களுக்கு ஆங்கிலமும் பேச வராது வேறு மொழி ஒண்ணுமே தெரியாது :(
  மொழியால் மட்டுமல்ல நல்ல குணங்களால் நாம் உயரத்தில் இருக்கணும் .


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பல இடங்களிலும் தமிழர்கள் ஒற்றுமை கிடையாது.

   குடிகாரர்களாக இருந்து அந்த இனத்தையே களங்கப்படுத்துவார்கள்.

   மனதால் உயர்ந்து நிற்கணும் பலரும் வயது கூடியும் பிரயோசனமற்ற ஜடங்களாக வீதிகளில் திறிகின்றனர்...

   நீக்கு
  2. ஹலோ அஞ்சு... கில்லர்ஜி.. எதுக்கு இப்போ தமிழரை திட்டுறீங்க?.. தமிழர்கள் என்றில்லை பொதுவாக மனிதர்களே அப்படித்தான்.. அதனால திட்டுவதாயின் மனிசரைத் திட்டுங்கோ:))..

   தமிழரைத் தமிழரே திட்டினால் ஆர் தான் கை கொடுப்பார்கள் தமிழருக்கு....

   அஞ்சுவை எலக்‌ஷனில நிக்க வைக்கப் போறேன் நான்ன் இம்முறை:))

   நீக்கு
  3. எல்லா நாட்டிலும் நல்லவர், கெட்டவர் உண்டு.

   நீக்கு
  4. //அஞ்சுவை எலக்‌ஷனில நிக்க வைக்கப் போறேன் நான்ன் இம்முறை:)) //
   சாமீ என்னை கொல்ல பிளான் நடக்குதே :)) எதுக்கும் இன்சூரன்ஸ் எடுத்து வைப்போம்

   நீக்கு
  5. அதிராவுக்கு கெட்ட எண்ணம்தான் போலயே...

   நீக்கு
  6. அஞ்சுவை இதை வச்சே இப்போ மாட்டி விடப்போறேன்ன்:)) அப்போ உங்கட ஜித்தப்பாவும்:) கீசாக்காவின் ஃபேவரிட் ஹீரோவும்:) எலக்‌ஷனில் குதிச்சிருப்பது கொல்லப்படுவதற்கோ?:) ஹையோ ஜாமீஈஈஈஈஈஈஈ இனி அந்தக் கடவுளே வந்தாலும் என்னைக் காப்பாற்ற முடியாமல் போகப்போகுதே:))

   நீக்கு
  7. நாளைக்கு இப்படி நடந்தால் இதில் அதிராவுக்கும் பங்கு உண்டு போலயே...

   நீக்கு
  8. இருங்கோ கில்லர்ஜியை மோடி அங்கிளிடம் போட்டுக் குடுக்கிறேன்ன் கர்ர்ர்ர்:))

   நீக்கு
  9. மோடியும் அங்கிளா ? நான் தாத்தா முறையாக இருக்கும் என்று நினைத்தேன்.

   நீக்கு
 24. வீண் பெருமை உதவாது என்பதைத் தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும். :( அப்புறமா ரட்சணீய யாத்ரிகம் பள்ளீயில் படிக்கையில் பாடமாக இருந்திருக்கு. படிச்சிருக்கேன். பெத்லஹேம் குறவஞ்சியும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தங்களது கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

   நான் எங்கும் இப்படி சொல்லி இருக்கிறேனா ?

   நீக்கு
  2. என்ன சொல்றீங்கனு புரியலை. ஆனால் "பையர்" என்னும் சொல்லைப் பயன்படுத்தியதுக்கு ராயல்டி கொடுக்க மறந்துடாதீங்க! :)))))

   நீக்கு
  3. நான் தமிழரைப்பற்றி வீண் பெருமையடித்து இருக்கிறேனா ? என்று கேட்டேன்.

   இராயல்டி வாங்கி வைப்பது உங்களது செலவு. நான் நன்றி சொல்வதால் கடன் கழிந்து விடுகிறது.

   நீக்கு
  4. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ராயல்டி நீங்க தரணூமாக்கும்!:)))) தமிழர்கள் வீண் பெருமையில் பொழுதைப் போக்குவதைச் சொன்னேன். உங்கள் பதிவில் நீங்க சொல்லி இருப்பதாய்ச் சொல்லலை! பொதுவான குணம் அப்படி இருக்குனு சொல்றேன். எல்லோருடைய கருத்திலிருந்தும் புரிந்ததைப் பகிர்ந்தேன்.

   நீக்கு
  5. OK நல்லது...
   இராயல்டி வாடகை கிலோவுக்கு எவ்வளவு ?
   சொன்னால் அதிரா வங்கி கணக்கிலிருந்து வாங்கி கொள்லலாம்.

   நீக்கு
  6. ம்ஹீம்ம்.. நான் தான் பாங் எக்கவுண்டைப் பூட்டி கீயை தேம்ஸ்ல வீசிட்டனே:))..

   அதுசரி இப்போ கீசாக்காவுக்கு எதுக்காம் ராயல்டி ரோயல்டி:)).. எதையாவது எங்காவது பொறுக்க வேண்டியது:) பிறகு அது தன்னுடையது எனச் சொல்லிச் சொல்லி ரோயல்டி கேட்டு மாடி வீடும் கட்டிப்போட்டா கர்ர்:)).. சே..சே.. இந்த நேரம் பார்த்துக் காவேரியும் எல்லோ வத்தியிருக்குதாம்:))

   நீக்கு
  7. மாடி வீடு கட்டியது இப்படித்தானா ?

   நீக்கு
  8. ஏதோ ஒரு ஃபுளோ சொன்னா:)) ஏதோ தெரியாமல் சொல்லிட்டா என விடாமல்:)) போட்டுக் குடுக்கிறாரே கில்லர்ஜி கர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா:))

   நீக்கு
  9. இதெல்லாம் அவுங்களுக்கு சொல்லமாட்டேன்.

   நீக்கு
 25. வணக்கம் சகோதரரே

  பதிவையும், கருத்துகளையும் படித்தேன்.
  தற்சமயம் தங்கள உடல் நிலை பூரண குணமா? பதிவில் சரளமான தங்கள் எழுத்துகளை ரசித்தேன்.உடல் நிலையைக் கூட பொருட்படுத்தாது தாங்கள் பணி செய்த நாட்களைப் பற்றி கூறும் போது தங்களின் எதையும் தாங்கும் மனோதிடம் வியக்க வைக்கிறது. அனைத்தும் நலமேயாக ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ சிறிய காய்ச்சல்தான் தங்களது வேண்டுதலுக்கு மனம் நிறைந்த நன்றிகள்.

   நீக்கு
 26. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) நான் ராத்திரி கரெக்ட்டா என் பகுதியை ரீ பிரெஸ் பண்ணிப் பார்த்தேன் கில்லர்ஜி யின் போஸ்ட் வந்திருக்கோ என.. வரவில்லை எனத்தான் காட்டிச்சுது.. நீங்க எப்பவும் எங்கள் நைட்டில் போடுவதால்.. இன்று நைட்தான் போல என நினைச்சு செக் பண்ணவில்லை. இப்போதானே பார்க்கிறேன்.. நான் டி எடுத்த டமிலை:) வச்சு என்னமோ எல்லாம் நடக்குது:).. அதிரா வரவில்லை எனும் குஷியில் என் செக் உம் என்னமோ எல்லாம் தூள் பறக்கப் பேசுறா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க மூன்று தினங்கள் கடந்தாலே எனது பதிவு கண்டிப்பாக வருமே...

   நீக்கு
 27. ஆவ்வ்வ்வ் இப்போதான் போஸ்ட் படிச்சு முடிச்சேன்ன்.. முதலில் கடமை முக்கியம் என:) கொமெண்ட்ஸ் படிச்சு பதில்கள் கொடுத்து விட்டே:) போஸ்ட் படிச்சேன்:)).

  இன்னொன்று கில்லர்ஜி... நல்லவர்களுக்கும் நேர்மையானவர்களுக்கும் எந்த பொல்லாத நோயும் வராது என நினைச்சு நோய் வந்தால் அமைதியாக இருந்திடாதீங்க... எப்பவும் நோய் அதிகம் தாக்குவதே இப்படியானவர்களைத்தான்... இது பார்த்த கேட்ட அறிஞ்ச அனுபவம்.. இது என்னதான் டிசைனோ தெரியவில்லை ஆனா உண்மை அதுதான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்லவர்களுக்கு நோய் வராதா ?
   தங்களது ஆலோசனைக்கு மிக்க நன்றி

   நீக்கு
  2. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்* கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. நீங்க நித்திரைத்தூக்கத்திலயா கொமெண்ட்ஸ் படிக்கிறீங்க:) நான் என்ன ஜொள்ளியிருக்கிறேன்:))

   நீக்கு
 28. எனக்கு போஸ்ட்டில் என்ன சொல்ல வாறீங்க என்ப புரியவே இல்லை..

  தமிழ்நாட்டுக் ஹொச்பிட்டலில்.. புதிய ஏற்பாடு தமிழில் இருக்காமல் எதுக்கு கன்னடம் கிந்தியில் இருக்கு எனச் சொல்றீங்களோ?.. அது அவர்கள் தம் மொழி பரவட்டும் என நினைக்கிறார்களோ?..

  நீங்கள் கடைசியில் சொல்லியிருப்பது நானும் படிச்ச நினைவு.

  ஹா ஹா ஹா நகச்சுத்து வந்ததோடு 3ம் தடவை ஹொஸ்பிட்டல் பார்க்கப் போயிருக்கிறீங்க:) அதில ஒரு உண்மை இருக்கு கில்லர்ஜி.. நீங்க எந்த மொழியிலாவது புதிய ஏற்பாடு படிக்கோணும் என்பது கடவுளின் ஆசை போலும்:))

  அதை ஆரால் தடுக்க முடியும்.. :)..

  ஆனா எது எப்படியாயினும் .. போஸ்ட்டில் உங்கள் நகைச்சுவையை மிகவும் ரசிச்சுப் படிச்சேன்ன்.. நமக்குத் தேவை டமில் அல்ல:) முசுப்பாத்திதான் ஹா ஹா ஹா ஹையோ எதுக்கு இப்போ தமிழ் அறிஞர்கள் கலைக்கினம் கர்ர்ர்ர் அப்பூடி என்ன சொல்லிட்டேன்ன்ன்:).. எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்:))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவில் தத்துவத்தை சொல்லி விடவில்லை.

   கோவையில் எல்லா மொழியினரும் பரவலாக வாழ்கின்றார்கள்.
   ஆகவே எல்லா மொழியிலும் கொடுக்கின்றனர்.

   நான் மதவாதமோ, தமிழ் கலாச்சாரமோ பறைசாற்ற வரவில்லை.

   இதில் நகைச்சவையை சொல்ல முயன்றேன் அவ்வளவே...

   நீக்கு
 29. நல்ல ஏற்பாடு செய்யப்பார்த்தார்கள். நீங்களும் எடுத்து வந்து விட்டீர்கள்.

  எங்களுக்கும் இரட்சிண்ய யாத்ரிகம் இருந்தது.
  எல்லா ஏசுப்பாடல்களும் தமிழில் கேட்டூ மனசில் ஏற்றி மறந்தும் போயாச்சு.

  தமிழ் ,மதம் இவைகள் எல்லாம் நம்மை விட்டு பிரியாது.
  எல்லோருக்கும் அப்படித்தான். ஒருவரை ஒருவர் மதிக்கும் வரை மனக் கஷ்டம் இல்லை.
  அருமையான் நேர்மையான மனிதர் நண்பராகக் கிடைத்தது பெருமைக்கு
  உரிய விஷயம் தேவகோட்டையாரே.

  பதிலளிநீக்கு
 30. அந்த ஹாஸ்பிடல் ராசி உங்களுக்கு முன்னமே தெரிந்து விட்டது போல....அடிக்கடி வந்தால் என்ன செய்றதுன்னு....பல மொழில வாங்கி அவருக்கு நீங்க எந்த மொழிக்காரர்ர்ர்ர்ர்ன்னு....குழப்பம் வந்திருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் அவரது மண்டையை காயவைப்போம். வருகைக்கு நன்றி சகோ

   நீக்கு
 31. பன்றிக்காய்ச்சல், நன்றிக்காய்ச்சல் ஹா ஹா ஹா...உடம்பு சரியாகிப் போச்சுதானே...கேரளத்திலும் உண்டு இப்படிப் புத்தகம் தருவது. எல்லோரிடமும் இப்படிக் கொடுக்காமல் பொதுவாக வைத்து விருப்பம் உள்ளவர் எடுத்துக் கொள்ளலாம் என்று தோன்றும். மருத்துவருக்குக் கண்டிப்பாக நீங்கள் எந்த மொழிக்காரர் என்ற குழப்பம் வந்திருக்குமோ....

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நம்மால் இயன்றவரை குழப்புவோம். ஏதோ நமக்கு தெரிந்தது இவ்வளவுதான்.

   நீக்கு
 32. பதிவு வாசித்து கமென்டுகளும் வாசித்துவிட்டேன் ஜி. ஏஞ்சலின் கமென்ட்ஸ் டிட்டோ செய்யறேன். அது போல ஸ்ரீராம் சொல்லியிருக்கும் கமென்ட் இந்தியாவில் மருத்துவச் செலவு குறைவு....நல்ல மருத்துவமும் கிடைக்கும்...ஆனால் அதற்கு நல்ல மருத்துவர் கிடைக்கணும்...ஹா ஹா ஹா

  நலம் தானேஜி. இன்னும் விடுபட்ட பதிவுகள் எலலம் வாசிக்கணும்...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பிற நாட்டோடு ஒப்பிடும்போது, இந்தியாவில் மருத்துவ செலவு குறைவு, நல்ல மருத்துவமும்தான்.
   ஆனால் நல்ல மருத்துவர் ???

   நல்ல மருத்துவர் படைப்பை பிரம்மன் நிறுத்தி இரண்டு மாமாங்கம் ஆகிப்போச்சே...

   நீக்கு
 33. ஃபார் ஆண்ட தமிழகம் இல்லையா....அதனால் இருக்கலாம் நண்பரே...........

  பதிலளிநீக்கு
 34. ஊசி எனக்கும் அலர்ஜி ஆனால் ஊசி போல பேச்சால் குத்துபவர்கள் அதைவிட அலர்ஜி

  பதிலளிநீக்கு
 35. ஒவ்வொரு முறையும் நீங்கள் வேறுவேறு மொழிகளில் பைபிளை எடுத்துக்கொண்டதையும் கடைசியாக நீங்களே சென்று எடுத்துக்கொண்டதையும் பார்த்த அவர் நீங்கள் விரும்பி எடுக்கிறீர்களா அல்லது அவரை வெறுப்பேற்றவா என நினைத்து குழம்பியிருப்பார். அவர் மனதில் "இவர் நல்லவரா கெட்டவரா?" என நாயகன் பட வசனம் ஒலித்திருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா.. ஹா.. ஹா.. சரியான வசனம்தான் தேர்வு செய்து இருக்கின்றீர்கள் நண்பரே...

   நீக்கு