தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், செப்டம்பர் 07, 2015

கண்கள்


சமீபத்தில், கோல்கொண்டாவுக்கு திருமணம் ஒன்றிற்கு சென்று வந்தேன், மணமகளை அலங்கரித்து கொண்டு வந்து நிறுத்தினார்கள். எப்படித் தெரியுமா ? கோவில் திருவிழாக்களில் யானையை அலங்கரிப்பது போலிருந்தது ஒட்டு மொத்த கண்களும் அந்தப்பெண் அணிந்திருந்த நகைகளைத்தான் பார்த்துக் கொண்டு இருந்தன, இதில் எத்தனை கண்கள் அதை வேறு விதமாக பார்த்திருக்கும் ?

பெருமூச்சுடன் ஹூம், எனநிறுத்தி விடும் கண்கள்,
கொடுத்து வைத்தவள், எனமறந்து விடும் கண்கள்,
நம்ம, அப்பனும்தான் இருக்கானே, தகப்பனை சபிக்கும் கண்கள்,
பார்த்துக்கொண்டே, கள்ளத் திட்டமிடும் கண்கள்,
ஒரு துளி கிடைச்சா நாம, கரையேறிடலாமே என ஏங்கும் கண்கள்,
ஒரு மாலைய அத்தா துபாய் விசாவுக்கு, ஆகுமே என்ற கண்கள்,
அழகுக்கு அழகு, எனரசித்து மகிழும் கண்கள்,
நகையை பார்த்ததினால், விரக்கியாகும் கண்கள்,
ஒரு செட் கிடைச்சா நம்ம லைப் செட்டாகுமே, என்ற கண்கள்,
நல்ல வேளைப்பாடா இருக்கே ஆராய்யும், ஆச்சாரியின் கண்கள்.

அப்பறம், வீட்டுக்கு வந்து எம் புள்ளைக்கு, கண்ணுபட்ருச்சு, காது பட்ருச்சுன்னா எப்பூடி ?

இந்தப் பணக்காரர்கள், இருப்தால்தான் வரதட்சணை கொடுக்கிறார்கள், நம் மகள், நல்ல முறையில் வாழவேண்டும் என்றுதான் கொடுக்கிறார்கள் அதை இப்படி உலகறிய வெளிப்டுத்துவதின் நோக்கமென்ன ? தற்பெருமை நம்மிடம் இவ்வளவு இருப்பது தெரியட்டுமென்ற அகம்பாவம்.

அதுக்குத்தானே, திருட்டுப்பயல்க வக்கிறாங்கே ஆப்பு, அப்புறம் குத்துதே, கொடையுதேன்னா எப்பூடி ? 

நாட்டில் திருட்டும், கொலைகளும், கொள்ளைகளும், கடத்தல்களும் பெருகிப் போவதற்கு இவர்களும் ஒருமுக்கிய காரணமே... இவர்களிடம், கொள்ளையடிப்பதால் ஒன்றும் குறையப் போவதில்லை, இதில் நடுத்தரவர்கமும், ஏழைகளும் சேர்ந்து பாதிக்கப்படுகிறார்களே !   

62 கருத்துகள்:

  1. நல்லப் பதிவு ஆனால் திருடினால் நிச்சயம் தண்டனை.

    இதைப் படியுங்கள், பேசாமல் உங்கள் பதிவுக்கு பதில் எழுதினாலே போதும் போல......

    தினம் ஒரு சட்டம் - இ.த.ச 379, 380 & 381 - திருட்டிற்கான தன்டனைகள்
    http://vriddhachalamonline.blogspot.in/2015/09/379-380-381.html

    மற்றும்

    தினம் ஒரு சட்டம் - இ.த.ச - 382 - திருடுவதற்காக கொலை மிரட்டல்
    http://vriddhachalamonline.blogspot.in/2015/09/382.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே இதோ போகிறேன் தங்களின் தொடர் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  2. கோல்கொண்டாவிற்கு எப்ப போனீங்க? சொல்லவே இல்லை!

    பதிலளிநீக்கு
  3. ஆம் நண்பரே... 'கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது' என்று படிக்காத பாமர மக்கள் கூறும் உண்மை மொழி பகட்டான படித்த மக்களுக்கு ஏளனமாகவும், இகழ்ச்சியாகவும் தான் இருக்கும். பின் பட்டு தெளியும் போது தான் பளீரென புரியும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே மிகச்சரியாக சொன்னீர்கள் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  4. அழகுப் பெண்ணின் ஆடையாக
    தங்க நகைகளின் அணிவகுப்பா
    "பார்ப்பவர் கண்ணில்..."

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே பார்ப்பவர் கண்ணில் வேலாயுதமே இருக்கும்.

      நீக்கு
  5. நீங்கள் சொல்வதிலும் உண்மை இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் கருத்துக்கு நன்றி நண்பரே...

      நீக்கு
  6. தாங்கள் சொல்வது முற்றிலும் உண்மைதான் நண்பரே
    இப்படியோ வளர்ந்துவிட்டோம்
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே... இதில் மாற்றம் கொண்டு வரக்கூடிய நிலையில் இருக்கிறோம்.

      நீக்கு
  7. அழியும் ஆடம்பரத்தை உணர வேண்டும் ஜி... ஆனால் ம்ஹீம்...!

    பதிலளிநீக்கு
  8. ஒரு பெண்ணை ஒரு பொருளாகவே நாம் பார்த்துக்கொண்டு வருகிறோம்.

    இது மட்டும் அல்ல. பெண்ணும் தான்சமூகத்தில் அந்தஸ்தும் மதிப்பு மிக்கவள் என அறியப்படுவது தான் அணியும் நகைகளைப் பொருத்தது தான் என்று நினைக்கிறார்.

    இந்த நினைப்பு மாறி வருகிறது . ஒரு பெண் தன் கால்களில் நிற்கமுடியும் பொருளாதார ரீதியில் என இப்போதைய பெண்கள் சமூகம் மெய்ப்படுத்திக் கொண்டு வரும் நிலை இன்று. தன அறிவால் ஆற்றலால் உயர்நிலை பெற்றிருக்கும் பெண்களிடையே தங்கத்துக்கு மதிப்பு இல்லை. அவர்கள் இது போன்ற ஆபரணங்களை விரும்புவதும் இல்லை.


    அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
    பண்பும் பயனும் அது

    என்று தானே வள்ளுவர் சொன்னார் !!

    சுப்பு தாத்தா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க தாத்தா உண்மையான வார்த்தை சொன்னீர்கள்.

      ஒரு வேதத்தில் சொல்லப்பட்டது பெண்களுக்கும், குதிரைக்கும் மதிப்பு போய் விட்டால் உலகம் அழியும் வரை திரும்பக் கிடைக்காது என்று உண்மையே குதிரைக்கு மதிப்பு போய் விட்டது இனி திரும்ப வழியில்லை காரணம் அதைவிட 100 மடங்கு வேகத்தில் செல்லும் மின்னல் வேக சீரூந்துகள் வந்து விட்டது.
      பெண்களும் தங்களது மதிப்பை இழந்து கொண்டுதான் இருக்கின்றார்கள் அதேநேரம் தாங்கள் சொல்வதுபோல சொந்தக்காலில் நிற்கும் வல்லமையை பெற்று விட்டதும் உண்மையே அதுவே அவர்களுக்கு ஆ10தாகி கொண்டும் இருக்கிறது.

      வள்ளுவனின் குறளை முன் மொழிந்தமைக்கு மிக்க நன்றி தாத்தா.

      நீக்கு
  9. செல்வச்செருக்கை காட்டும் இது போன்று நிகழ்வுகள் பார்ப்பவர்கள் மனதில் அருவருப்பையும் பொறாமையும் உண்டாக்கும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புரிந்து கொள்கின்றார்கள் நண்பரே தனக்கு இழப்பு வந்தவுடன் வருமுன் காப்பவனே அறிவாளி இதை இல்லாதவன் உடன் உணர்ந்து கொள்கிறான் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  10. அன்பின் ஜி!..
    நியாயமான கருத்து..

    அத்தனை கண்களையும் வேறு இரு கண்கள் ஆராய்ந்து கொண்டிருக்கின்றன - என்பதை அறியாத கண்களும் அங்கு இருந்திருக்கின்றன!..

    ஏ.. சாமீ.. சதாசிவோம்!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி
      அந்தக் கண்கள்தானே இதை எழுதத் தூண்டியது சரியான இடத்தில் அடிக்கின்றீர்களே... ஜி ஹா ஹா நன்றி.

      நீக்கு
  11. அப்படியே உங்கள் கருத்தே என் கருத்து சகோதரரே!

    அப்படி இதில் என்ன மயக்கமோ சிலருக்கு..:(

    த ம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களின் கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  12. எனக்கு முகத்தின் வெள்ளையடிக்கப் பட்டப் பகுதி தான் சகோ தெரிந்தது,
    அருமையான பகிர்வு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா உடம்பு முழுவதும் நகை இருந்தால் அப்படித்தான் தெரியும்

      நீக்கு
  13. டாம்பீகத்தை வெளிப்படுத்தி பின்னர் வருத்தப்படுவோர் பலருண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் முனைவரே சரியாக சொன்னீர்கள்

      நீக்கு
  14. கொடுத்து வைத்தவர்கள் பணமுள்ளவர்கள்.... கொடுத்து வைக்காதவர்கள் பணமில்லாதவர்கள்.. என்றுசொல்ல லாம் நண்பரே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யாரு யாரிடம் கொடுத்தார்கள் நண்பரே...

      நீக்கு
  15. இது மாதிரி அலங்காரம் சில கேரளத் திருமணங்களிலும் விளம்பரங்களிலும் பார்த்திருக்கிறேன் யானையை இப்படி அலங்கரிப்பார்களா. நீங்கள் எந்தக் கண்களால் பார்த்தீர்கள்.?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா தேவகோட்டை கோயில்களில் இப்படித்தான் யானைகளுக்கு அலங்காரம் செய்வார்கள் ஐயா.

      நீக்கு
  16. ஜி முதலில் பெண்களும் நகை அணிவதால்தான் அந்தஸ்து என்ற எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். பெண்கள் இன்னும் தொலை நோக்குப் பார்வை அதாவது அடுத்த லெவலுக்குச் சென்று விட்டால், இவை எல்லாம் ஆடம்பரம், நகை மட்டுமே வாழ்க்கை அல்ல...அழிவும் அதை விட முக்கியம் சுயமரியாதை என்று எண்ணும் அடுத்த கட்டத்திற்குச் சென்றுவிட்டால் இவை எல்லாமே மாறிவிடும்.....அடுத்து சமூகத்தின் பார்வை மாற வேண்டும். ஜி....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உலகிலேயே தங்க நகைகள் மீது ஆசைப்படுவது தமிழ் நாட்டு் பெண்கள்தான் வரதட்சிணை உயர்வுக்கு அவர்களும் ஒரு காரணமே....

      நீக்கு
  17. வணக்கம் ஜி! நம்ம ஊர்ல காய்கறி பருப்பு விலை உயர்ந்துட்ட அய்யோ னு? குதிப்பாங்க! அந்த நகை 100குறைஞ்சுட்டா? அடடா என்னமா? குதிப்பாங்க தெரியுமா? நகைகடையில கூட்டம் குறையிறதே இல்ல? அதிலும் விவசாயி கூலிதொழிலாளி எல்லாம் பார்க்கமுடியாது? எல்லாம் கத்தையாக உள்ளவர்கள்தான்!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பா எனக்கும் இது புரியாத புதிராகவே இருக்கின்றது ஏதோ ஒரு மாயை.

      நீக்கு
  18. கோல்கொண்டாவுக்குப் போய் கல்யாணத்தை பார்க்காமல் மணமகளை வகை, வகையாய் நோக்கிய கண்களைத் தான் பார்த்து வந்திருக்கிறீர்கள். கூடவே கொஞ்சம் கவலையும், அக்கறையுமாய் எங்களுக்குச் சொன்னதெல்லாம் சரி ஜி......கல்யாணத்துல என்ன சாப்பாடு போட்டாங்கன்னு சொல்லவே இல்ல!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பரே நின்றுக்கிட்டே தின்பது போல கட்டையாக , தட்டையாக ஒரு சாண்ட்விச் கொடுத்தாங்கே... வேரு வழி அதைத்தான் கடிச்சு தின்றேன்

      நீக்கு
  19. படத்தின் பின் புறம் உள்ள மல்லிகையைப் பார்த்தால்,கல்கத்தா பொண்ணு மாதிரி இல்லையே,.....என் கண்ணுக்கு தெரிந்தது :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் கண்ணுக்கு மட்டும் ஏதாவது தெரிஞ்சுடுதே.... ஜி

      நீக்கு
  20. தேவையில்லாத ஆடம்பரம் தான் பலருக்கும் பிடித்திருக்கிறது..... :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே 1000 கோடி ரூபாய் செலவு செய்து திருமணம் செய்தவர்கள்தானே நம்மவர்கள்

      நீக்கு
  21. படித்த பெண்கள் மனதில் கூட நகை மோகம் உள்ளது வருத்தமான ஒன்று .எது அழகு என்பதை இன்னும் ஆண்களும் பெண்களும் உணராத நிலைதான் இன்றும் சகோ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தப்பெண் கண்டிப்பாக படித்தவராகத்தான் இருக்க வேண்டும் காரணம் இது சமீபத்திய திருமணமே...

      நீக்கு
  22. அன்புள்ள ஜி,

    ‘கண்கள்’ -இந்தப் பொன் நகை என்ன விலை...?
    பொன்நகை எதற்கு? புன்னகை போதாதா...?

    கண்கள் இரண்டும் விடிவிளக்காக அப்புறம்..
    கட்டழகு மட்டும் வெட்ட வெளியாகஅப்புறம்..
    கைகளிரண்டும் தொட்ட சுகமாகஹா....
    கலந்திருப்போமே யுகம் யுகமாக...

    பாடல் ஒன்றே போதுமே...!

    த.ம. 15

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக மணவையாரே கண்ணைப் பார்த்து காதல் செய்தவர்கள் அந்தக்காலம் நண்பரே...

      நீக்கு
  23. ஆடம்பரத்தை பறைசாற்றுகின்றார்கள் இவ்வளவும் போட்டிருக்க அந்தக்கழுத்து தாங்கியிருக்குமோ))) சிந்திக்கவைக்கும் பகிர்வு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாவம் அந்தப்பென் வேறென்ன ? சொல்ல முடியும் நண்பா...

      நீக்கு
  24. சரியாகச் சொன்னீர்கள் சகோ ! நாம் என்ன செய்ய முடியும் சொல்லுங்க ....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாம் ஒன்றும் செய்ய வேண்டியதில்லை சகோ அவர்களை உயர்திரு. திருடர்கள் பார்த்துக் கொ(ல்)வார்கள்

      நீக்கு
  25. உங்கள் கருத்துடன் ஒத்துப் போகிறேன் சகோ..நகையிலும் பட்டிலுமா நம் மதிப்பு இருக்கிறது? இதை மக்கள் உணரும் நாளே பல நன்மைகளுக்கு வழி பிறக்கும் திருநாள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியாக சொன்னீர்கள் சகோ முதலில் இதை பெண்கள்தான் உணர வேண்டும்

      நீக்கு
  26. நகை மொகம் ஆபத்தானது. திருடர்களை அழையா விருந்தாளியாக வர வைக்கும். ஆனாலும் ஒரு சிலர் கல்யாணங்களில் நகைக் கடையாகத் தான் பெண்கள் மிதக்கின்றனர். :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் சகோ இன்றைக்கு கொலைகள் சர்வ சாதாரணமாக நடப்பதற்க்கு காரணம் இந்தவகை பெண்களும்தானே...

      நீக்கு
  27. சகோ இந்த பதிவை நான் படித்தேனே. அடடா கருத்திட மறந்து சென்று விட்டேன் போல...
    எனக்கு நகை மீது ஆசையில்லை அதனாலும் இருக்கலாம்.ஹஹ

    பதிலளிநீக்கு
  28. நியாயமான கருத்து அண்ணா...

    பதிலளிநீக்கு