பஞ்சனூர் மச்சான்
பஞ்சவர்ணத்தோடு மணப்பாறை சந்தைக்கு பஞ்சு வியாபாரத்துக்குப் போய் வரும் பைங்கிளி மொடிச்சியம்மாள் நாற்று நடும்பொழுது அந்த நினைவோட்டங்களை பாட நாற்று
நடும் கூட்டமும் சேர்ந்து பாடுகிறது.
ஏலே... ஏலோ.. ஏலே...
ஏலோ... ஏலோ, ஏலோ ஐலசா...
ஏலே... ஏலோ.. ஏலே... ஏலோ...
ஏலோ, ஏலோ ஐலசா...
ஏலே... ஏலோ.. ஏலே...
ஏலோ... ஏலோ, ஏலோ ஐலசா...
ஏலே... ஏலோ.. ஏலே... ஏலோ...
ஏலோ, ஏலோ ஐலசா...
மாட்டு வண்டி பூட்டி
வந்தார் மாமன் மகன் ஐலசா...
மாட்டு வண்டி பூட்டி வந்தார்
மாமன் மகன் ஐலசா...
மணப்பாறை சந்தைக்கு
நானும் போறேன் ஐலசா...
மணப்பாறை சந்தைக்கு நானும்
போறேன் ஐலசா...
பஞ்சு மூடை எல்லாத்தையும்
கூவி விற்ப்போம் ஐலசா...
பஞ்சு மூடை எல்லாத்தையும்
கூவி விற்ப்போம் ஐலசா...
பொழுது சாயும்
நேரத்துக்குள் முடிச்சிடுவோம் ஐலசா...
பொழுது சாயும் நேரத்துக்குள்
முடிச்சிடுவோம் ஐலசா...
ஏலே... ஏலோ.. ஏலே...
ஏலோ... ஏலோ, ஏலோ ஐலசா...
ஏலே... ஏலோ.. ஏலே... ஏலோ...
ஏலோ, ஏலோ ஐலசா...
பணத்தை எல்லாம்
சுருக்குபையில் சுருட்டி வச்சு ஐலசா...
பணத்தை எல்லாம்
சுருக்குபையில் சுருட்டி வச்சு ஐலசா...
மாம்பழமும் வாங்கி
தருவார் மாமன் மகன் ஐலசா...
மாம்பழமும் வாங்கி தருவார்
மாமன் மகன் ஐலசா...
ராட்டிணத்தில் நாங்கள்
ஏறி ரவுண்டடிப்போம் ஐலசா...
ராட்டிணத்தில் நாங்கள் ஏறி
ரவுண்டடிப்போம் ஐலசா...
பஞ்சு மிட்டாய் வாங்கித்
தருவார் பஞ்சு மச்சான் ஐலசா...
பஞ்சு மிட்டாய் வாங்கித்
தருவார் பஞ்சு மச்சான் ஐலசா...
ஏலே... ஏலோ.. ஏலே...
ஏலோ... ஏலோ, ஏலோ ஐலசா...
ஏலே... ஏலோ.. ஏலே... ஏலோ...
ஏலோ, ஏலோ ஐலசா...
மச்சான் தந்த
சந்தோசத்தில் முழுகாம ஐலசா...
மச்சான் தந்த சந்தோசத்தில்
முழுகாம ஐலசா...
பேறுகாலம் பார்க்க போனேன்
பேரையூர் ஐலசா...
பேறுகாலம் பார்க்க போனேன்
பேரையூர் ஐலசா...
பேரு சொல்ல பிறந்தானே
பேச்சி முத்து ஐலசா...
பேரு சொல்ல பிறந்தானே பேச்சி
முத்து ஐலசா...
மச்சானோடு சந்தோசமாய்
திரும்பி வந்தேன் ஐலசா...
மச்சானோடு சந்தோசமாய்
திரும்பி வந்தேன் ஐலசா...
ஏலே... ஏலோ.. ஏலே...
ஏலோ... ஏலோ, ஏலோ ஐலசா...
ஏலே... ஏலோ.. ஏலே... ஏலோ...
ஏலோ, ஏலோ ஐலசா...
நினைச்சு பார்த்து நான்
சிரிப்பேன் ஐலசா...
நினைச்சு பார்த்து நான் சிரிப்பேன்
ஐலசா...
பார்த்து பார்த்து மகன்
சிரிப்பான் ஐலசா...
பார்த்து பார்த்து மகன் சிரிப்பான்
ஐலசா...
வாரச்சந்தை எப்போ வரும்
எதிர் பார்ப்பேன் ஐலசா...
வாரச்சந்தை எப்போ வரும்
எதிர் பார்ப்பேன் ஐலசா...
மகனோடு நாங்க போவோம்
மணப்பாறை ஐலசா...
மகனோடு நாங்க போவோம்
மணப்பாறை ஐலசா...
ஏலே... ஏலோ.. ஏலே...
ஏலோ... ஏலோ, ஏலோ ஐலசா...
ஏலே... ஏலோ.. ஏலே... ஏலோ...
ஏலோ, ஏலோ ஐலசா...
ஏலே... ஏலோ.. ஏலே...
ஏலோ... ஏலோ, ஏலோ ஐலசா...
ஏலே... ஏலோ.. ஏலே... ஏலோ...
ஏலோ, ஏலோ ஐலசா...
புகைப்படம்
தந்த நண்பர் திரு. S.P. செந்தில்குமார் அவர்களுக்கும்,
இப்படியும் என்னை எழுத தூண்டிய கவிஞர். திருமதி. இளமதி அவர்களுக்கும் நன்றி.
நாம் கண்டு, கேட்ட வளர்ந்த இந்தவகை
பாட்டுகள் நாளைய சந்ததிகளுக்கு கிடைக்குமா ? என்பதை நினைத்தால்... வேதனையே மிஞ்சுகிறது
அவ்வருத்தத்தின் விளைவே இப்பதிவு.
– கில்லர்ஜி –
அருமை
பதிலளிநீக்குநன்றி நண்பரே...
நீக்குவணக்கம் கில்லர் ஜி !
பதிலளிநீக்குபாட்டு சும்மா அதிருதில்ல ...இப்படியும் எழுதும் ஆற்றலை வைத்துக் கொண்டா மௌனமா இருந்தீங்க இனி தொடர்ந்து எழுதுங்கள் பார்த்து மகிழ்கிறோம் நாங்கள் !
கில்லரின் பாட்டில் கிளர்ந்தெழும் ஞாபகங்கள்
சொல்லும் கதைகள் சுகம் !
தம !
வருக கவிஞரே நல்லாத்தான் பாராட்டுகின்றீர்கள் ஆனால் தொடர்வதில்லையே இனியெனும் தொடருங்கள்.
நீக்குவணக்கம் கில்லர் ஜி !
நீக்குநேரம் கிடைத்தால் நான் வரத் தவறுவதில்லை உங்கள் பக்கம் ஒருமாதமாக ஓய்வில்லா வேலை அதுதான் வலைப்பக்கமே வரவில்லை முடிந்தவரை முயற்சிக்கிறேன் நன்றி !
மீள் வருகை தந்து பதில் தந்தமைக்கு நன்றி பாவலரே...
நீக்குகில்லர்ஜியும் கவிஞர் ஆனாரே ஐலசா
பதிலளிநீக்குஅவரோட பாட்டைக்கேட்டு மகிழ்வோமே ஐலசா
ஹாஹ்ஹா வாங்க நன்றி ஐயா
நீக்குரசித்தேன்.
பதிலளிநீக்குரசிப்புக்கு நன்றி நண்பரே...
நீக்குஎதிர்காலச் சந்ததியினர் இதுபோன்ற பாட்டுக்களின் சுவையினை அறியாதவர்களாகத்தான் இருக்கப் போகின்றார்கள் நண்பரே
பதிலளிநீக்குநன்றி
தம +1
வாருங்கள் நண்பரே...அந்த வேதனையில்தான் எழுத முயற்சித்தேன்
நீக்குவணக்கம் ஜி! எங்க மணப்பாறை பாட்டு அருமை!! நான் சந்தைக்கு போனப்ப வெறும் சினிமா பாட்டுதான்?? முந்தய தலைமுறையில இது மாதிரி பாடியிருப்பாங்க!!! நன்றி!!!
பதிலளிநீக்குவாங்க நண்பா, இப்பொழுது மணவையார் வருவார் வந்து சண்டைக்கு வரப்போகிறாரோ... என்னவோ அதுவே பயமாக இருக்கிறது.
நீக்குநாட்டார் பாடல் எழுதி கவிஞராகவும் ஆகிவிட்டீர்கள். வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குஅப்படியெல்லாம் ஆகமுடியாது நண்பரே வருகைக்கு நன்றி
நீக்குஏலே.. ஏலோ.. ஏலே.. ஏலோ.. ஏலே.. ஏலோ.. ஐலசா!..
பதிலளிநீக்குஏலே.. ஏலோ.. ஏலே.. ஏலோ.. ஏலே.. ஏலோ.. ஐலசா!..
தேவகோட்டை மொட்டை முத்து மாமன் வந்தார் ஐலசா!..
தேடிவந்து பட்டுச்சேலை வாங்கித் தந்தார் ஐலசா!..
ஏலே.. ஏலோ.. ஏலே.. ஏலோ.. ஏலே.. ஏலோ.. ஐலசா!..
ஏலே.. ஏலோ.. ஏலே.. ஏலோ.. ஏலே.. ஏலோ.. ஐலசா!..
ஏலேலோ.. பாட்டு எல்லாரையும் போட்டுத் தாக்கிடும் போல் இருக்கின்றது..
அந்தப் பக்கம் - சாமி சதாசிவம் கட..கட..ன்னு பல்லைக் கடிக்கின்றார்!..
ஆள.. உடுங்க சாமியோவ்!...
வாங்க ஜி அதுயாரு ? முத்துராமன் ஹாஹ்ஹாஹா நீங்களும் நல்லாத்தான் மெட்டு போடுறீங்க ஜி
நீக்குஅட! இவ்ளோ சூப்பரா பாடுறிங்க பிறகென்ன அவ்வப்போது இப்படியான பகிர்வுகளையும் தாங்க.
பதிலளிநீக்குவருக கவிஞரே பாவலரே இப்டிச்சொல்லும் பொழுது உண்மையாகத்தான் இருக்கும் நம்பித் தொடர்கிறேன் இனியெனும் ஆதரவை நாடி....
நீக்குஆகா .....கவிஞர் கில்லர்ஜிக்கு ஐலசா......
பதிலளிநீக்குவாங்க நண்பா என்னது ஜலசாவா ? அவயாரு ?
நீக்குஐலசா ஐலசா ரசித்தேன் சகோ.
பதிலளிநீக்குரசிப்பிற்க்கு நன்றி சகோ.
நீக்குவணக்கம் சகோதரரே.
பதிலளிநீக்குநல்ல கிராமிய மணம் வீசும் பாடலொன்றை அருமையாக ரசித்து எழுதியிருக்கிறீர்கள். இதுவரை இதை அருகிலிருந்து கேட்டு ரசிக்க வாய்ப்பு கிடைத்ததில்லை. ஆனால் இதையெல்லாம் ரசிக்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருக்கும் என் மனதில், அழகிய கிராமத்தையும், அதன் பசுமையையும் ஆழமாக பாடலின் வரிகள் மூலம் அமர வைத்து விட்டீர்கள். தொடரட்டும் தங்களின் இந்த கவித்துவங்கள். பகிர்ந்தமைக்கு நன்றி.
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
சகோவின் வருகைக்கும் மனமார்ந்த ரசிப்புத்தன்மைக்கும் நன்றி
நீக்குநான் ஏதாச்சும் வலைத்தளம் மாறி வந்திட்டேனோ!...
பதிலளிநீக்குபாட்டு பட்டையைக் கிளப்புது!..:)
அருமை!.. அருமை!.. அசத்திப்புட்டீங்க சகோதரரே!
என்ன சொற்கோர்வை!.. நம்மையும் அறியாமல் பாட்டுத் தானாக
வாயில் நுழைந்து பாடவைக்கின்றது சகோ!
ஒரு பார்வையிலேயே மனதில் பதிந்திட வைக்கக்கூடிய அளவு
படைப்பு இருக்க வேண்டும்!
அவ்விடயத்தில் இங்கும் நீங்கள் வென்றுவிட்டீர்கள்!
அருமை உங்கள் திறமை! மிகச் சிறப்பு! உளமார்ந்த வாழ்த்துக்கள்!
என்னையும் இங்கு நினைவு கொண்டமைக்கு உளமார்ந்த நன்றி சகோதரரே!
வாழ்க பல்லாண்டு!
த ம +1
வருக கவிஞரே இந்தப்பதிவு எழுதியதே தங்களின்பால் கொண்ட பொறாமையே என்பேன் அதன் கன்னி முயற்சி ஆகவே நான்தான் தங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் தங்களின் வாழ்த்து இன்னும் இது போன்ற பாடல்களை எழுத தூண்டும் என்று கருதுகின்றேன் மீண்டும் நன்றி
நீக்குஒவ்வொரு வரியையும் இரண்டு முறை வாசிக்கச் செய்யும் உத்திக்குப் பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குவாங்க ஐயா இந்த வரிகளை இரண்டு முறை ஒருவர் பாட மற்றவர்கள் கோரசாக பாடினால் பொருத்தமாக இருக்கும் என்று கணித்தேன் ஆகவே அதையே செய்தேன் அது சரிதான் என்று தங்களின் கருத்துரை மூலம் அறிந்து மகிழ்ச்சி.
நீக்குபாடல் படித்தவுடன் அலுப்பும், களைப்பும் போன இடம் தெரியவில்லை.
பதிலளிநீக்குஉழைப்போரும், உன்னித்து படிப்போரும் களிப்புற இது போன்று இன்னும் நிறைய பாடல்கள் தொடர்ந்து எழுதுங்கள் தோழரே...
ஆம் தோழரே உழைப்பாளிகளுக்கான சோர்வை இந்த வரிகள் நீக்கும் என்று நினைத்தேன் நன்றி தோழரே...
நீக்குஅசத்தலான பதிவு ஐலேசா
பதிலளிநீக்குஇதை லேசா நினைக்காதீங்க ஐலேசா
பாட்டோட படமும் அருகை ஐலேசா
முழு மனசோட மிக்க நன்றி ஐலேசா
முனைவரின் பாராட்டுகளுக்கு நன்றி
நீக்குஅன்புள்ள ஜி,
பதிலளிநீக்குமணப்பாறை சந்தைக்கு மாடு விக்கிறப்போ... இல்ல... இல்ல... பஞ்சு வித்து... மாமன் மகளை கல்யாணத்துக்கு அப்புறம்தானே முழுகாம..!மாமன சந்தேகக் கண்ணோடு பார்க்கக்கூடாது... நல்ல மாமன்தான்...
மாமன் மகள் பாட்டு ரொம்ப நல்லத்தான் பாடுது...!
தண்ணீயில பாடணும்... தரைமேல் பிறக்க வைத்தாய்...தண்ணீரில் (டாஸ்மாக் இல்ல) மிதக்க வைத்தாய்...வயலில் தண்ணி இருக்கவும்...படகோட்டும் ஞாபகமோ...? ஏலேலோ... ஏலஏலோ ஐலசா... வந்திருச்சோ...!
த.ம. 9.
வருக மணவையாரே... கல்யாணம் ஆனதால்தானே... பேறுகாலத்துக்கு பேரையூர் போய் வந்தாள் மொடிச்சியம்மாள் ஆகவே ஐயம் வேண்டாம் நண்பரே அவள் நம் இன தமிழச்சியே.... வருகைக்கு நன்றி
நீக்கு(நல்லவேளை சமாளிச்சுட்டோம் இனி கேள்வி கேட்க மாட்டார் மணவையார்)
கலக்கறீங்க!
பதிலளிநீக்குஹாஹாஹா வாங்க ஐயா
நீக்குபஞ்சு வியாபாரி பக்கத்தில் வந்தாலே பத்திக்கும் போலிருக்கே ,எதுக்கும் மொடிச்சியம்மாள் ஜாக்கிரதையாய் இருக்கட்டும் :)
பதிலளிநீக்குஜி பேச்சி முத்துவுக்கு துணையாக ஒரு முத்தாத்தாள் வரட்டுமே உங்களுக்கேன் பொறாமை ஜி
நீக்குசிறு வயதினில் கிராமங்களில் நேரடியாக பார்த்தது. ஆனால், இன்றைய நிலைமையே மாறிவிட்டது! வரும்காலம்....? நாட்டுப்புறப் பாடல்களும் மறந்தாச்சு! இயற்கை வாத்தியக் கருவிகளின் பயன்பாடும் குறைந்துபோச்சு! வருங்கால சந்ததிகள் இதனையெல்லாம் காணுகையில ( காணொ்ளியில் ) ஏக்கங்கொள்ள வைக்கலாயிற்று!
பதிலளிநீக்குஉண்மை நண்பரே இவை ஈடு செய்ய முடியாத இழப்புகளாகும் வருகைக்கு நன்றி
நீக்குஏலேலோ ஐலசா பாடலை நினைவூட்டிய தங்களைப் பாராட்டுகிறேன்.
பதிலளிநீக்குஇப்படி எத்தனையோ பாடலை நினைவூட்ட முடியாமல் இருக்கிறதே!
வருக நண்பரே உண்மைதான் இவ்வகை பாடல்கள் நிறைய புதைந்து போய் விட்டதே...
நீக்குநீங்களும்---!!!? நாட்டுப்புற பாடலா நடக்கட்டும்! ஐயலசா
பதிலளிநீக்குஆசைப்பட்டேன் ஐயா கன்னி முயற்ச்சி வருகைக்கு நன்றி
நீக்குஆஹா... கவிஞரே...
பதிலளிநீக்குஅருமை அண்ணா...
வாழ்த்துக்கள்.
வாங்க நண்பரே.... வாழ்த்துகளுக்கு நன்றி
நீக்குஜாலியா இருந்தது படிக்க
பதிலளிநீக்குதம +
வருக தோழரே நன்றி
நீக்குரசித்தேன் ஜி...
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி ஜி
நீக்கு"ராட்டினத்தில் நாங்கள் ஏறி ரவுண்டடிப்போம் ஐலசா" எதிர்பாராத மோனை! அருமை!
பதிலளிநீக்குவருக நண்பரே வார்த்தைகள் பொருத்தமாக வந்தது எழுதினேன் வருகைக்கு நன்றி
நீக்குகில்லரும் பாட்டெழுதி விட்டாரே ஐலசா
பதிலளிநீக்குகிறுகிறுக்க வைச்சுப்புட்டார் என்ன சொல்ல ஐலசா
வாக்கும் போட்டு ஓடத்தை தள்ளிப்புட்டோம் ஐலசா
விரைசாவே முன்ன போச்சு முந்திக்கிட்டு ஐலசா!!
சூப்பர் ஜி!!! நல்லா எழுதிருக்கீங்க!!!
வாங்க வாங்க ஓடம் கரை திரும்பும் போது வந்துட்டு ஐலசாவா......ம்ம்
நீக்குசகோ, சூப்பர் கலக்குங்க, எனத்த கலக்குறது என்று கேட்பது எனக்கு கேட்கிறது,
பதிலளிநீக்குஅருமையாக இருக்கு பாட்டு, அது உண்மைதான் நாட்டுப்புற பாடல்கள் என்றால் என்ன என்பது வரும் தலைமுறைக்கு தெரியுமா? என்பது கேள்விக்குறியே,,,,,,,,,
வாங்க சகோ தாமதமானாலும் விடுபடாமல் பதிவுகளை படிப்பதற்க்கு நன்றி
நீக்குபாடல் நன்றாகவே வந்துள்ளது ஐலசாஇ
பதிலளிநீக்குதொடருங்கள் ஏலே..எலே....
வாங்க மேடம் மிக்க மகிழ்ச்சி.
நீக்குஅட சூப்பர் கில்லர்ஜி அடி ஆத்தாடி எங்க இம்புட்டு திறமை எல்லாம் ஒழிச்சு வைச்சுக் கொண்டு ஒவ்வொன்றா எடுத்து விடுகிறீர்களா ? wow நடத்துங்க நடந்துங்க பாடி மகிழ்ந்தேன் நன்றி வாழ்த்துக்கள் ...!
பதிலளிநீக்குவாங்க, வாங்க பதிவுக்கு இடைவெளி விட்டு வரனும்னு நேர்த்திக்கடன் ம்ம் நடத்துங்க,,,, நடத்துங்க,,,,
நீக்குஎவ்வளவுதிறமைகள் உங்களிடத்தில். மிக அருமையாக இருக்கு .இப்படியான பாடல்கள் மிக அருகி வருகிறது. நீங்கள் தொடர்ந்து முயற்சிக்கவும். வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குவாங்க சகோ புதிய பதிவை விட்டுப்புட்டு பழைய பதிவுக்கு வந்துட்டீங்க......
நீக்குஅண்ணாச்சி பாட்டெழுதி வச்சாரே ஐலசா
பதிலளிநீக்குஅதநான் பாக்காம விட்டதென்ன ஐலசா
கோவிக்காம சேதி சொன்ன அண்ணாச்சிக்கு ஐலசா
கோர்த்து வச்சேன் நன்றி நானும் ஐலசா
அதோட இன்னும் பல பாட்டு வேணுமின்னு ஐலசா
அப்படியே கேட்டு வைக்கிறேன் ஐலசா
எழுதத்தான் நேரமில்லையே ஐலசா
நீக்குநேரம் வந்தால் எழுதி வைப்பேன் ஐலசா
நாட்டுப்பாடல்கள் அனைத்தையும் சேமித்து வைக்க வேண்டும். பின் வரும் சந்ததிகளுக்குப் பயனாகும். அருமையான பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குவாங்க சகோ இதை நாட்டுப்புறப்பாடல் என்று ஒத்துக்கொண்டமைக்கு நன்றி
நீக்கு