தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், அக்டோபர் 03, 2017

பாளையங்கோட்டை, பாட்டி பார்வதி


1986 என்று நினைவு அன்று ஒரு எவர்சில்வர் கம்பெனியில் வெல்டராக வேலை செய்து கொண்டு இருந்தேன் கம்பெனி ஓனரின் அம்மா வயது 90-க்கும் மேலிருக்கும் திடகாத்திரமானது கம்பெனியை ஒட்டிய சிறிய வீட்டில் கம்பெனியை பாதுகாத்துக் கொண்டு தாத்தாவும், பாட்டியும் இருந்தார்கள் மற்ற லேபர்கள் டிங்கர்கள் என்பதால் அடுத்த கூடாரத்தில் வேலை செய்து கொண்டு இருப்பார்கள் பத்து டிங்கர் லேபர்களை ஒரு வெல்டர் சமாளித்து விடலாம் நான் வெல்டிங் வைத்துக் கொண்டு உட்கார்ந்து இருக்கும் கூடத்தில் பக்கத்திலேயே உட்கார்ந்திருக்கும் இருவரும் பேசிக்கொண்டே இருப்போம் எனக்கும், பாட்டிக்கும் அடிக்கடி ஏதாவதொரு பிரச்சனையில் வாக்கு வாதமாகி விடும்.

ஞாயிறு, அக்டோபர் 01, 2017

ปล่อยขาทํามุม

கவிதை இதை எழுதுவதும், பிறர் கவிதைகளை ரசிப்பதும் ஒரு சுகமான அனுபவம் நான் ரசித்த என்னை மெய் சிலிர்க்க வைத்த ஒரு தாய்லாந்து நாட்டுக் கவிதை.

வெள்ளி, செப்டம்பர் 29, 2017

புரட்டாசி மாதம் 18 ஆம் தேதி


காயம்பட இதயத்தை கல்லால் அடித்து விட்டாயடி
காயல்பட்டணக்காரன் என்னை கோபப்பட வைத்தாயடி

காடு எங்கும் எங்கள் பாரம்பரிய சொத்து நிறைந்ததடி
வீடு தேடி வந்தவனை நாயை விட்டு விரட்டி விட்டாயடி

எங்கள் வீட்டில் யானை கட்டி போர் அடித்த குடும்பமடி
உங்கள் வீட்டில் பூனைக்குகூட சோறு போட முடியாதடி

சிங்கம் போல நடந்த என்னை அசிங்கப்படுத்தி விட்டாயடி
தங்கம் நிறைந்த குடும்பத்தை பங்கம் விளைய வைத்தாயடி

முப்போகமும் விளைந்தது எங்கள் வீட்டில் களஞ்சியமடி
முக்காடு போட வைத்து எங்களை மூழ்கிப்போக செய்தாயடி

வங்கிகளுக்கே கடன் கொடுத்த வள்ளல் பரம்பரை நாங்களடி
வாங்கி குடிக்க வழியில்லாத ஊர் சுற்றும் கூட்டம் நீங்களடி

அழகி என்று உன்மீது ஆசை வைத்தேன் நான் முட்டாளடி
அழுகிப் போனது உன் மனம் என்று தெரிய வைத்தாயடி

சொந்த மாமன் மகள் மாலா எனக்காகவே இருக்காளடி
இந்த சோமன் அவளுக்கு என்றும் பொருத்தமானவனடி

சோமனுக்கும், மாலாவுக்கும் 16 பொருத்தம் இருப்பதாக சோலந்தூர் சோசியர் சோனைமுத்து சொல்ல, வரும் புரட்டாசி மாதம் 18 ஆம் தேதி கோலாகலமாய் நடக்க இருக்கும் திருமணத்துக்கு நாமும் வாழ்த்துவோமே நட்பூக்களே...

புதன், செப்டம்பர் 27, 2017

ஔவை – யார் ?


ன்பைக்கொடு
சையை ஒதுக்கு
ன்முகம் காட்டு
கை குணம்கொள்
ண்மை பேசு
ரே போற்ற வாழ்
ண்ணம் நலமெனில்
ற்றம் காண்பாய்
யம் இல்லை இதில்
ன்றே குலமென
ங்கி குரலெழுப்பு
வை பாட்டி
சொன்ன நற்சொல்,
என மனதில் கொள்,
மகிழ்வுடன் வாழ்.
          - கில்லர்ஜி
 காணொளி

சாம்பசிவம்-
என்ன இவன்... இப்படி சொல்லிக்கிட்டு ஓடுறான், அப்படின்னா ஔவையார் நம்ம ஊடகழி ஜாதி இல்லையோ அப்ப ஔவை-யாரு ?

திங்கள், செப்டம்பர் 25, 2017

சிரித்து வாழவேண்டும்

 
இந்த படத்தை நுழைத்தது எதிர்க்கட்சிகளின் சதி.
முதலில் ஃபோட்டோ காப்பாற்றுவதை பிறகு பார்க்கலாம்.