தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், அக்டோபர் 03, 2017

பாளையங்கோட்டை, பாட்டி பார்வதி


1986 என்று நினைவு அன்று ஒரு எவர்சில்வர் கம்பெனியில் வெல்டராக வேலை செய்து கொண்டு இருந்தேன் கம்பெனி ஓனரின் அம்மா வயது 90-க்கும் மேலிருக்கும் திடகாத்திரமானது கம்பெனியை ஒட்டிய சிறிய வீட்டில் கம்பெனியை பாதுகாத்துக் கொண்டு தாத்தாவும், பாட்டியும் இருந்தார்கள் மற்ற லேபர்கள் டிங்கர்கள் என்பதால் அடுத்த கூடாரத்தில் வேலை செய்து கொண்டு இருப்பார்கள் பத்து டிங்கர் லேபர்களை ஒரு வெல்டர் சமாளித்து விடலாம் நான் வெல்டிங் வைத்துக் கொண்டு உட்கார்ந்து இருக்கும் கூடத்தில் பக்கத்திலேயே உட்கார்ந்திருக்கும் இருவரும் பேசிக்கொண்டே இருப்போம் எனக்கும், பாட்டிக்கும் அடிக்கடி ஏதாவதொரு பிரச்சனையில் வாக்கு வாதமாகி விடும். 

இதில் அடிக்கடி உறவு முறைகளை கேட்டு என்னை திணறடித்து விடும் எப்படியோ சமாளித்து சொல்லிக் கொண்டே படித்தும் கொண்டேன் என்பதும் உண்மையே ஒருநாள் முழுவதும் யோசித்து பாட்டியை சுற்றி வளைத்து பாட்டிக்கு கணவராக வருவதுபோல் சுமார் ஆறு உறவுகளை வளர்த்து விட்டு உனக்கு முறை என்ன ? என்று கேட்டேன் பாட்டியும் ஒருநாள் முழுவதும் யோசித்தும் விடை சொல்ல முடியவில்லை பிறகு விளக்கம் சொல்லி உனக்கு கணவர் முறை என்று சொன்னேன் அதிர்ந்து விட்டது அதன் பிறகு பாட்டி என்னுடன் வார்த்தைகளை அளந்து பேசும். பாட்டி தற்போது இல்லை அந்த நினைவுகளை வைத்து எழுதிய பதிவு இதைப்படித்து விட்டு பாட்டியைப் போல் என்னிடம் அளந்து பேசாதீர்கள்.

ஏண்டா செல்லத்துரை கல்யாணம் செய்யப் போறீயே.... உனக்கு உறவு முறையெல்லாம் தெரியுமாடா ?
ஏய்... கிழவி எனக்கென்ன முறை தெரியாதுனு நினைச்சியா ?
சரி நான் ஏழு உறவுமுறை கேள்விகளை கேக்குறேன் சொல்லுடா பாப்போம் ?
சரி கேளு..

01. உன் பொண்டாட்டியோட நாத்துனா மக புருசன் உனக்கு என்ன முறை வேணும் ?

02. உன் கொழுந்தியாளோட, அக்கா புருசனோட சகலையோட மாமனாரோட தங்கச்சி புருசன் உனக்கு என்ன வேணும் ?

03. உன்னோட கொள்ளுப் பேரனோட தாத்தாவோட ஆத்தாவோட நாத்துனா புருசனோட கொழுந்தியா உனக்கென்ன வேணும் ?

04. உன் மகளோட மாமனாரோட ரெண்டாம் தாரத்து மகனோட பொண்டாட்டி உனக்கு என்ன வேணும் ?

05. உன் மச்சினனோட பொண்டாட்டியோட கொழுந்தன் மாமனாரோட மூத்த தாரத்து மகன் உனக்கு என்ன வேணும் ?

06. உன் மகன் பொண்டாட்டியோட ஆத்தாளோட மருமகனோட மகனோட அப்பத்தா உனக்கு என்ன வேணும் ?

07. உன் மாமனாரோட தங்கச்சி புருசனோட கொழுந்தியா புருசனோட மகளோட புருசன் உனக்கு என்ன வேணும் ?

? ? ?
என்னடா... பேயறைஞ்சது மாதிரி முழிக்கிறே... பதிலைச் சொல்லு ?

நட்பூக்களே.. செல்லத்துரை உறவு முறைகளை சரியாக சொன்னானா ? அவன் சொல்வதற்கு முன் நீங்களும் வரிசைப்படி சொல்லுங்களேன் இந்திய நேரப்படி நாளை (04.10.2017) மாலை 05.00 மணிக்கு செல்லத்துரையின் பதில்களையும், தங்களது விடைகளையும் ஒரே நேரத்தில் திறந்து விடுவேன் மீண்டும் வந்து தெரிந்து கொள்ளுங்கள் நன்றி – அன்புடன் கில்லர்ஜி

அண்டாக்கா கஸம் அபு காக்கா கஸம் திறந்திடு தீஸே...

இதோ விடைகள்
01. மகன் முறை
02. பெரியப்பா அல்லது சித்தப்பா
03. அக்காள் அல்லது தங்கை
04. மகள் முறை
05. அண்ணன் அல்லது தம்பி
06. மனைவி
07. மச்சான்


சரியாக ஏழு விடைகளையும் சொன்ன திருமிகு. அதிராவுக்கு பூங்கொத்து.

நேற்று நள்ளிரவு கடைசியாக கிடைத்த தகவல்படி செல்லத்துரை தற்போது பாளையங்கோட்டையிலிருந்து வேலூருக்கு மாற்றப்பட்டானாம், காரணம் கிழவி தற்பொழுது சொர்க்கபுரியில்
மேலும் கூடுதல் தகவல். அறிய மண் டிவியில் இன்று இரவு 08:30-க்கு

எங்கள் ப்ளாக்கில் தற்பொழுது எனது கைவண்ணத்தில் உருவான சீராமவி

79 கருத்துகள்:

 1. ஏற்கெனவே எங்கள் உறவுகளில் நிறைய பேர்களை எப்படி அழைப்பது என்று தெரியாமல் இருக்கிறேன். இதில் இந்தக் கேள்விகள் வேறா? நான் அப்பால வாறன்!!​

  பதிலளிநீக்கு
 2. ஏ.. ஆத்தாடி..யோ!.. இம்புட்டு ஒறவு மொறையா???.. இதுக்கெல்லாம் சீரு செனத்தி செய்ய எங்கிட்டுப் போவேன்!!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முறைகளை முறையோடு செய்வதுதானே தமிழனின் பண்பாடு ஜி

   நீக்கு
 3. உண்மையிலேயே பேறரைஞ்ச மாதிரிதான் இருக்கிறது நண்பரே
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே இப்படி சொல்லிட்டீங்களே... ஹா.. ஹா... ஹா...

   நீக்கு
 4. ஙே! நான் வரலை இந்த விளையாட்டுக்கு! :)))) நீங்களே சொல்லிடுங்க. மெதுவா வந்து பார்த்துக்கறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதெப்படி உங்களுக்கு சுலபம் என்று நினைத்து இருக்கிறேன்.

   நீக்கு
  2. வந்தேன், பார்த்தேன், சிரித்தேன். :)

   நீக்கு
  3. மீள் வருகைக்கு நன்றி சகோ.

   நீக்கு
 5. துளசி: கில்லர்ஜி ஆளை விடுங்கப்பா...ஜூட்!

  கீதா: செல்லத்துரை...இங்க வாங்க...உங்க எள்ளுத் தாத்தாவோட நாலாவது மனைவியோட நாத்தனாரோட கணவரோட சகலையோட மருமகளின் கணவரோட சகலையோட மருமகளின் நாத்தானாருடைய பேரனின் மனைவியோட நாத்தனாரோட கணவரின் சகலையோட சித்திப்பாட்டியின் மருமகனோட பேரனோட பேரனுடைய மகளின் குழந்தை உங்களுக்கு என்ன உறவாகும்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹலோ இந்தக்கேள்வி முறையே தவறு என்னை குழப்ப முடியாது.

   நீக்கு
  2. இது கேள்வி! பதில் எங்கே?

   நீக்கு
  3. வாங்க இந்தக் கேள்வியில் பிழை இருக்கிறது ஆகவே சொல்ல இயலாது.

   நீக்கு
 6. பாட்டி ரொம்ப அழகா இருக்காங்க!!

  கீதா

  பதிலளிநீக்கு
 7. கேள்விகளைப் படித்தாலே தலைசுற்றுகிறது ,பாட்டியாச்சு ,செல்லத்துரையுமாச்சு ,ஆளை விடுங்க ஜி :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி செல்லத்துரை நிலைமையை பார்த்தீங்களா ?

   நீக்கு
 8. TM 7
  நல்ல வேளை தூரத்தில் இருந்து கேள்வி இப்படி கேட்குறீங்க? பக்கத்தில் இருந்திருந்தால் பாட்டி கையில் வைத்திருக்கும் உலக்கையால் பதில் சொல்லியிருப்பேன்..... தப்பிச்சுட்டீங்க கில்லர்ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நண்பரே எனக்கு இப்படி நிலை வரும் என்று தெரிந்துதான் பாட்டியை பாடிகார்டாக உலக்கையோடு நிறுத்தி வைத்துள்ளேன்.

   நீக்கு
 9. 03 - என் சகோதரிதான்.
  04 - சம்பந்தி மருமகள்

  பதிலளிநீக்கு
 10. 1. மருமகளின் கணவன் - மருமகன்/மாப்பிள்ளை..

  2. செல்வராஜின் மனைவிக்கு அத்தை ஹஸ்பென்ட் மாமா முறை...அப்போ செல்வராஜுவுக்கும் மாமா முறைதானே ஆகணும்..

  3. செல்வராஜுக்கு சகோதரி

  கீதா

  பதிலளிநீக்கு
 11. 4. உறவு முறை புரிகிறது ஆனால் இதற்கு என்ன பெயர் சொல்லுவீர்கள் என்று தெரியவில்லை. எங்கள் சமூகத்தில் இந்த உறவு இதற்குப் பெயர் இதுவரை நான் கேட்டதில்லை.

  5. செல்வராஜின் மற்றொரு மச்சினனின் மாமனாரின் மூத்த தாரத்து மகன் செல்வராஜுவுக்கு என்ன வேண்டும் என்பது குடும்பமே வேறு இல்லையா? இதில் உறவின் விளக்கம் புரிந்தாலும் இந்த உறவுக்கு எல்லாம் பெயர் உண்டா என்று தெரியவில்லை அதாவது செல்வராஜுவுக்கு இந்த உறவின் பெயர் இதுவும் ..மேற் சொன்னது போல் தான்....பெரியவராக இருந்தால் நாங்கள் அண்ணா என்போம்...சிறியவர் என்றால் பெயர் சொல்லி....ரொம்பப் பெரியவர் என்றால் மாமா ...

  6. இங்கு மருமகன் என்பது மாப்பிள்ளை என்ற பொருள் என்றால்...ஏனென்றால் சகோதரி அல்லது சகோதரனின் மகனையும் மருமகன் என்றுதானே சொல்வது இல்லையா. மருமகனின் அம்மா - மருமகனின் மகனின் அப்பத்தா - செல்வராஜுவுக்கு எப்படி நேரடி உறவாகும்? இப்படியான உறவுக்கு எல்லாம் என்ன பெயர் வரும் என்று தெரியவில்லை....மேற் சொன்னது போலவே

  7. செல்வராஜுவின் மாமனாரோட தங்கச்சி புருஷனோட கொழுந்தியா என்றால் மாமனாரின் மற்றொரு சகோதரி.அவரது புருஷனின் மகள் என்றால் மாமனாரின் மற்றொரு சகோதரிக்கும் மகள்...அப்போ மருமகள் மருமகளோட புருஷன் என்றால் மாப்பிள்ளை/மருமகன்....
  செல்வராஜுவின் மனவியின் அத்தை பெண்ணின் புருஷன்...நீங்கள் இதற்கு என்ன உறவு பெயர் சொல்லுவீங்கனு தெரியலை...என் கஸின் ஹஸ்பென்ட் எல்லாம் என்னை விடச் சின்னவங்க அதனால எல்லாரையும் பெயர் சொல்லி மரியாதை கொடுத்து நீங்க வாங்கனு சொல்லுவேன். உறவுப் பெயர் இல்லை...எங்கள் சமூகத்தில் அத்தை மகளை அத்தங்கா என்றும் மாமன் மகளை அம்மங்கா என்றும் சொல்லுவோம். அத்தை பையன் அத்தான் அவரது மனைவியை அத்தாமன்னி என்றும் மாமன் மகனை அம்மான்ஞ்சி என்றும் அவரது மனைவியை அம்மாஞ்சி மதினி என்றும் சொல்லுவோம்..

  கீதா

  பதிலளிநீக்கு
 12. அம்மங்கா, அம்மாஞ்சி, அத்தான், அத்தங்கா எல்லாம் வயதில் பெரியவராக இருந்தால்தான். அதுவும் இப்போது எல்லாம் அப்படி அழைபப்தில்லை. என் தலை முறையிலேயே இல்லை. என் பாட்டி தலைமுறையில் இருந்தது. என் அம்மா கூடா அப்படி அழைத்ததில்லை. என் அப்பாவின் உறவுகள் மட்டும் என் அப்பாவை இன்னும் அப்படி அழைப்பதுண்டு. அத்தான் என்றும் அம்மாஞ்சி என்றும் அதாவது வயதில் பெரியவர் என்பதால் இல்லை என்றால் சிறியவர் என்றால் பெயர் சொல்லித்தான்....

  கீதா

  பதிலளிநீக்கு
 13. செல்லத்துரையை செல்வராஜ் என்று மாற்றி எழுதிவிட்டேன் ஜி....அதை எல்லாம் செல்லத்துரை என்று வாசித்துக் கொள்ளூங்கள் ஜி மன்னிக்கவும் பெயரை மாற்றியதற்கு ஹிஹிஹி

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குவைத் மன்னர் சண்டைக்கு வராமல் இருந்தால் நலம்.

   நீக்கு
 14. வோட் போட்டாச்சு... மிகுதி கொஞ்சத்தால..:)

  பதிலளிநீக்கு
 15. கில்லர்ஜி... நாத்தனார் என்றால், கணவரின் தங்கை.. கொழுந்தியா என்றால்.. கணவரின் அக்காவோ?

  அதேபோல கொழுந்தன் என்றால் யார்? இதுக்கு மட்டும் பதில் போட்டால் நல்லது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக அதாவது பெண்மணிக்கு நாத்தனார் என்றால் கணவரின் அக்கா மற்றும் தங்கை.

   கொழுந்தியாள் என்பது ஆணுக்கே அதாவது அவனது மனைவியின் தங்கை.
   இதில் மனைவியின் அக்கா என்றால் மதினி அல்லது அத்தாச்சி மற்றும் அண்ணி.

   மேலும் கொழுந்தன் பெண்மணிக்கே வரும் தனது கணவரின் தம்பி.
   கணவரின் அண்ணன் என்றால் அத்தான் மற்றும் மச்சான்.

   மீண்டும் கருத்துரை நாளையே திறக்கப்படும்.

   நீக்கு
  2. நன்றி கில்லர்ஜி.. பதில்கள் வருகின்றன.. பரிசை ரெடி பண்ணுங்கோ:)..

   நீக்கு
  3. சகலை என்பது ஆண்களுக்கு மட்டுமான உறவுமுறை

   அதாவது செல்லத்துரை மனைவியின் சகோதரிகளின் கணவர்கள் அனைவருமே செ.துரைக்கு சகலைகளே.

   நீக்கு
 16. பரிசு எனக்குத்தான் ஜொள்ளிட்டேன்ன்.. இதில் கேட்கப்பட்டிருக்கும் கேள்விகள்.. ஒரு ஆணைப் பார்த்தே கேட்கப்பட்டிருப்பதாக எடுத்திருக்கிறேன்..

  1. மருமகளின் கணவன்.. அதாவது மகன் முறை.

  2. சகலை என்பது யார் என்பதில் குழப்பம்.. திரும்ப திரும்ப கேட்க விருப்பமில்லாததால்.. பதில் கூற முடியவில்லை.

  3. தங்கை முறை

  4. மகள்

  5. அண்ணன்/தம்பி

  6.மனைவி

  7. மச்சான்[தங்கை அல்லது அக்கா கணவர்]..

  ஸ்ஸ்ஸ்ஸ் தவறான விடைகளுக்கான பரிசைக் கழிச்சுப்போட்டு, மிகுதியை டி எச் எல் ல அனுப்பி வைக்கவும்.

  செல்லத்துரை அங்கிளுக்கும் வேற வேலை இல்லை.. அப்பத்தாவுக்கும்[கிளாவி] வேற வேலை இல்லை:).. இதில எங்களையும் கொப்பி பென்சில் எடுத்துக் கணக்குப் பார்க்க வச்சிட்டீங்க:).

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் பரிசு ஆயிரம் பொற்காசுகள் பெற்றுக் கொள்ளத்தயார்.

   நீக்கு
 17. ஆஹா கண்டுபிடிச்சிட்டேன்ன்..

  2. சித்தப்பா அல்லது பெரியப்பா முறை வரும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விளக்கமும் விடைகளும் மிகச்சரியே வாழ்த்துகள்.

   நீக்கு
 18. திரு செல்லதுரை உறவுமுறைகள் பற்றிய கேள்விகளுக்கு கீழ்கண்ட பதில்களைத் தந்திருப்பார்.
  1.மகன் முறை
  2.சித்தப்பா முறை
  3.சகோதரி முறை
  4.மகன் முறை
  5.சகோதரன் முறை
  6.மனைவி
  7.மருமகன் முறை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான்கும், ஏழும் தவறு நண்பரே மிக்க நன்றி உங்களது வரவு தாமதமானதுமே உங்களது விடை வரும் என்று உறுதியாக நினைத்தேன்.
   நான்கு எழுத்துப்பிழையோ... மகள் – மகன்.

   நீக்கு
  2. நான்காவது தட்டச்சும்போது மகள் என்பது மகன் என ஆகிவிட்டது. ஏழாவது பிழைதான்.

   நீக்கு
  3. நான் நினைத்தது போலவே நடந்து விட்டது எல்லா உறவுகளையும் சரியாக யோசித்து இருக்கின்றீர்கள் கடைசியில் மருமகன் முறைக்கு பிறகு செல்லத்துரைக்கு என்ன உறவு என்பதை மறந்து விட்டீர்கள் ஆகவே பிழையாகி விட்டது.

   மீள் வருகைக்ககு நன்றி

   நீக்கு
 19. அதிராவுக்குப் பதில் சொல்கிறீர்களா எல்லோரையு ம்குழப்பப் பார்க்கிறீர்களா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஐயா அதிரா நிறைய எழுதி விட்டார்கள் சந்தேகத்திற்கு விளக்கம் கொடுத்தேன் அவ்வளவுதான்.

   நீக்கு
 20. ஐயோ தலை சுத்துதே ஜீ
  1ST 'ப்பா' என்று முடியனும் ....மீதி பேசாம எல்லோரையும் அங்கிள் ஆன்ட்டி சொல்லி தப்பிச்சுக்கலாம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்க கொடுத்து வச்சவங்க தலை சுற்றினால் பின்னால எவனாவது அடிக்க வருவது முன் கூட்டியே தெரிந்து அவனை தூக்கிப் போட்டு ராவிடலாம்

   நீக்கு
 21. 1. மகன் முறை..

  2. சித்தப்பா..

  3. தெரில

  4. மகள் முறை

  5. கொழுந்தன் இல்லன்னா மூத்தார். எங்க ஊர் பக்கம் வீட்டுக்காரரோட அண்ணனை மூத்தார்ன்னு சொல்வோம்.

  6.மாமியார்

  7. தெரில. ஏன்னா என் மாமனாருக்கு கொழுந்தியா இல்ல.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சகோ நான் எதிர்பார்த்தபடி ஓரளவு சொல்லி விட்டீர்கள் மேலே பாருங்கள் விடையை......

   மாமனாருக்கு கொழுந்தியாள் இல்லாதது அவசியமில்லை செல்லத்துரைக்கு உண்டு

   நீக்கு
  2. பரிசு எதுமில்லையா

   நீக்கு
  3. உங்களுக்கும் வாழ்த்துகள் சகோ

   நீக்கு
 22. தலையைப் பிய்த்து கொள்ள வேண்டுமென தீர்மானித்து விட்டீர்கள் நடக்கட்டும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே அப்படியெல்லாம் கெட்ட எண்ணம் கிடையாதே....

   நீக்கு
 23. பாலசந்தர் ஒரு படத்தில் கேட்பது போல் இருக்கிறது.
  உறவுகளை எத்தனை தடவை சொன்னாலும் என் கணவர் விழிப்பார்கள். அது போல் செல்லதுறை உறவுகளை விழிக்காமல் சொன்னாரா என்று வந்து பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ உங்களிடமிருந்து விடை கிடைக்கும் என்று நினைத்தேன்

   நீக்கு
 24. முதல் கேள்விக்கு - தங்கை
  இரண்டிற்கு - சித்தப்பா அல்லது பெரியப்பா
  மூன்று - பிடிபடவில்லை.
  நான்கு - மகள்
  அடுத்த கேள்விகளுக்கு விடயம் குழப்பம்.

  கோ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நண்பா மேலே பாருங்கள் வருகைக்கு நன்றி.

   நீக்கு
 25. பதில்கள்
  1. ஏன் நண்பரே ஓட்டு போட்டு விட்டு ஒன்றும் சொல்லாமல் போய் விட்டீர்கள்

   நீக்கு
 26. சகலன் மட்டும் தெரியும்! மற்ற உறவுகள் சிந்திக்க வேண்டும் ரெண்டாம் தாரம் எல்லாம் நான் கேள்விப்படவில்லை எங்க கிராமத்தில் ஜீ!)))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே ரெண்டாம் தாரம் என்பது இரண்டாவது மனைவிதான், மூத்த தாரம் முதல் மனைவி வருகைக்கு நன்றி.

   நீக்கு
 27. விடை சொல்லிப் பாராட்டுப் பெற ஆசைதான். முடியவில்லை.

  விடைகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
 28. எனக்கு யோசிக்க டையம் கொடுங்க நண்பரே.....என் அம்மாவை கணவனும் மனைவியும் அத்தை என்றே அழைத்தார்கள்..பொண்னுக்கு என்அம்மா வழியில் அத்தை முறையாம் மாப்பிள்ளைக்கு என் தந்தை வழியில் அத்தை முறை யாம்....இப்படித்தான் பல சாதிகளின்உறவு முறைகளில்...........

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பரே நீங்க என்னையும் குழப்புறீங்களே.... சில இடங்களில் இப்படித்தான்.

   நீக்கு
 29. மிகவும் குழப்பமான புதிர் .....கருத்துக்கள் அதனால் குறைவு என நினைக்கிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சகோ கருத்துகள் குறைவுதான் மேலே என்ன எழுதி இருக்கிறேன்.

   நீக்கு
  2. எனக்கு ஒரு உண்மை புரிந்தது்மேலே உள்ள புதிருடன் ஒப்பிட்டால் ஜப்பானிய மொழி படிப்பது ரொம்பவும் ஈஸி

   நீக்கு
  3. இதென்ன புதுசா குண்டு போடுறீங்க அப்படினாக்கா நானும் பழகி கொள்கிறேன் நன்றி

   நீக்கு
 30. ஆஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ் வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ் எல்லோரும் ஓடிவாங்கோ.... அதிராதான் வின்னர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ஹையோ எப்பூடிக் கத்தினாலும் யாரும் வரவே மாய்ட்டாங்களாம் அவிங்களுக்குப் பொர்ர்ர்ர்ராமை:) ஹா ஹா ஹா.....

  எனக்கு இந்த சில உறவுமுறைகள் தெரியாட்டிலும் கேட்டு தெளிவடைஞ்சு கரீட்டாச் சொல்லிட்டனே... என் கண்ணையே நம்ப முடியவில்லை.....:) நன்றி கில்லர்ஜி பூங்கொத்துக்கு... இருங்கோ என்பலப்பை வாங்க என் செக்:) ஐ அழைக்கிறேன்ன்ன்ன்... அவதான் கணக்குப் பார்த்து பாங் ல போடுவா:)....

  இப்பூடியான கேள்விகளுக்குப் ப சொல்ல ரொம்ம்ம்ம்ம்பப் பொறுமை வேணுமாக்கும்:)))... எங்கள் வீட்டில் (குடும்பங்களில்) பொறுமையின் சிகரமே நாந்தேன்ன்ன்:).

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக இதற்கு நிறைய பொருமை வேண்டும் இந்த கேள்விகளை தொகுக்கவே எனக்கு இரண்டு தினங்கள் ஆனது.
   உண்மையிலேயே நீங்கள் சரியான விடை சொன்னது என்னால் இன்னும் நம்ப இயலவில்லை வாழ்த்துகள்.

   நீக்கு
 31. எப்பா தலையச்சுத்துதே,,,/

  பதிலளிநீக்கு