செவ்வாய், ஏப்ரல் 28, 2015

திருவிழா ! தெருவிலா ?

  "It really hurts me deeply to even post this in my website "
 
திருவிழாக் காலங்களில், கோயில்களில், நடனம் என்ற பெயரில் ஆபாச நடனம் என்றுகூட சொல்லமுடியாது பள்ளியறையில் கணவனும், மனைவியும் செய்வதில் முக்கால் பகுதியை செய்து காண்பிக்கிறார்கள். (இதனைப்பற்றி மேலும் விவரிக்கவும், ஆதாரத்துடன் நிரூபிக்கவும், என்னால் முடியும் ஆனால், நான் விரும்ப வில்லை ஏனெனில் அவர்களுக்கும், எனக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும்) அந்த மேடையின் மையப்பகுதியில், ஸ்ரீமுத்து மாரியம்மன் துணை என்ற சுவரொட்டியோடு ஸ்வாமியின் புகைப்படம் வேறு, மறுபுறம் திரைப்பட நடிகரின் புகைப்படம், இதன் முன்னிலையில் ஆபாச நடனம், இல்லை ஆபாச செய்கைகள். இதில் ஒன்றுக்கொன்று பந்தம் இருக்கிறதா ? (இறை நம்பிக்கை மழிந்து கொண்டு வருவதற்கு இதுவும் ஒரு காரணம்) இந்த மேடையைசுற்றி நாளைய மன்னர்கள் என்று சொல்லப்படும் இளைய சமுதாயத்தினர்கள் இதை VIDEO எடுத்து எங்கள் ஊரிலும் நடந்திருக்கிறது என்று YOUTUBE ப்பில்போட்டு உலகம் முழுக்க பார்க்க வைக்கிறார்கள், இதை வெளியிடும் இளையசமூத்தினர் நடத்தும் அமைப்புகளுக்கு பெயர் இளையநிலா, வெண்ணிலா, பாடும்பறவைகள், வெட்கமாக இல்லை ? இந்தசமூகம் எதை நோக்கிப்போய் கொண்டிருக்கிறது ? இதை நடத்துபவர்கள் ஊரின் பெரிய மனிதர்கள். இதை நடத்திமுடிக்கும் வரை POLICE  பாதுகாப்பு, இந்த சமூகம் கேடுகெடும் பாதையை நோக்கிப் போவதற்க்கு காரணம் யார் ?
 
இதை நடத்தும் ஊர்பெரியவர்களா ?
இதைக்கண்டு ஆரவாரிக்கும் இளைய சமூகத்தினரா ?
இதை நடத்த அனுமதி கொடுக்கும் அரசாங்கமா ?
இது முடியும் வரை, பாதுகாப்பு கொடுக்கும் காவல் துறையினரா ?
இதில் வெட்க உணர்வின்றி ஆடும் நடனக் கலைஞர்களா ?
 
நடனக் கலைஞர்கள், இவர்களை குறைசொல்லமுடியாது ஏனெனில், அவர்கள் வயிற்றுப்பிழைப்புக்காக இதில் தள்ளப்பட்டவர்கள் பணம் கூடுதலாக கிடைக்கும்போது...முழுசும் நனைஞ்ச பிறகு முக்காடு எதற்கு என்ற நிலையை கடந்தவர்கள். காவல்துறை, இவர்களை குறை சொல்ல முடியாது ஏனெனில், மேலிட உத்தரவு கொடுத்த வேலையை செய்கிறார்கள் சம்பளத்திற்காக... அரசாங்கம், இவர்களை குறை சொல்ல முடியாது ஏனெனில், கொடுக்கா விட்டால் வீணாக ஜாதிக்கலவரம் வரும், பிறகு ஓட்டுக் கிடைக்காது, எதற்கு வம்பு ? இளைய சமூகத்தினர், இவர்களை குறை சொல்லமுடியாது ஏனெனில், இவர்களுக்கு வயசுப் பிறட்சினை நல்லது கெட்டதை பிரித்தறியத் தெரியாத பருவம்.
ஊர்ப் பெரியவர்கள், இவர்கள்தான் முழுக்க, முழுக்க காரணவாதிகள் ஏனெனில் தீர்மானம் எடுப்பது இவர்களே ! நடனக் கலைஞர்கள் இவர்களிடம் வந்து எங்களை இப்படி ஆடவையுங்கள் எனச் சொல்லவில்லையே ? காவல் துறையினர் இவர்களிடம் எங்களுக்கு வேலை கொடுங்கள் எனச்சொல்லவில்லையே ? அரசாங்கம் இவர்களிடம் இந்த மா3யே விழா நடத்துங்கள் எனச் சொல்லவில்லையே ? இளைய சமூகத்தினர் இவர்களிடம் இந்த மா3 ஆடினால்தான் பார்ப்போம் எனச் சொல்லவில்லையே ? ஆக, இந்த சமூகம் கெட்டுப் போவதற்கு வழிவகுப்பவர்கள் அறிவில், அனுபவத்தில், முதிர்ந்தவர்கள் எனச்சொல்லப்படும் பெரியவர்களே ! ! !
 
சாம்பசிவம்-
இதையெல்லாம், பார்க்கும்போது காஞ்சிபுரம் தேவநாதனை குறைசொல்ல இந்த சமூகத்துக்கு என்ன, தகுதியிருக்கு ? அப்படின்னு கேட்கலாம்னு தோனுது சரி கேட்டால் என்ன, உறைக்கவா ? போகுது அதனால, கேட்க வேண்டாம்னு தோனுது, அதற்காக தேவநாதனை தேவதூதர் ன்னுசொல்றதா அர்த்தமல்ல ! துரோகி துரியோதன்தான் அதில் மாற்றமல்ல !


ஞாயிறு, ஏப்ரல் 26, 2015

கில்லர்ஜிக்கு, ஆறாம் மாண்டு.

26.04.2015
இன்று உங்கள் கில்லர்ஜிக்கு ஆறாம் மாண்டு ஆம் எழுது கோல். என்ற பதிவின் மூலம் 2010 ஆம் ஆண்டு இதே நாளில் எழுத தொடங்கினேன் தங்களின் அமோக ஆதரவால் இன்று இந்த நிலையை தொட்டு இருக்கிறேன் எமது எழுத்துகள் பிடித்தால் ? ? ? தொடர்ந்து ஆதரவு தர வேண்டுகிறேன்.  
வலைப்பதிவர் நண்பர் தங்கம் பழனி அவர்கள் கடந்த 14 March 2014 அவரது தொழில் நுற்பம் வலைப்பதிவில் எனது வலைப்பூவை அறிமுகப்படுத்தி என்னைப்பற்றி... கன்னா பின்னாவென்று எழுதி இருந்தார் அவருக்கு நன்றி சொல்ல வேண்டுமென, நினைத்துக்கொண்டே இருப்பேன்... புதிய பதிவுகளை இடும் ஆர்வத்தில் சற்று தாமதமாகி விட்டது, கவியரசு கண்ணதாசன் அவர்கள் ஒரு விழாவில் கலந்து பொழுது ஒரு முக்கிய பிரமுகர் வர தாமதமாகி விட்டது இதை அவருக்கு உணர்த்த கவியரசர் பேசும் போழுது நகைச்சுவையாக சொன்னாராம் சிலருக்கு மதம் பிடிக்கும், சிலருக்கு தாமதம் பிடிக்கும் என்று, ஆனால் எனக்கு இரண்டுமே பிடிக்கா...தூ... 80தை தெரிவித்துக்கொள்கிறேன், இந்த பதிவு விசயத்தை எனக்கு தெரிவித்த இனிய நண்பர் ‘’வலைச்சித்தர்’’ திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும் நன்றி.
அவரின் அறிமுகப்பதிவை காண... கீழே சொடுக்குக...
 
 
கண்டுவர நினைப்போருக்கும், காண்பவருக்கும், பின்னே பார்க்கலாமென நினைப்போருக்கும் எமது நன்றி.
அன்புடன்,
Devakottai Killergee Abu Dhabi.


வியாழன், ஏப்ரல் 23, 2015

கிருஷ்ணகிரி கிறுக்கன் கிருஷ்ணன்.

 
கிளிக்கண்ணு பறந்தாள்...
கிஷோருடன் எனைமறந்து...
அவன் கணவனாய் கிடைக்கவும்
கிறுக்கனானேன் அவளுக்கு
கிடைக்க வேண்டியவள்
 எனக்கு கிடைக்கவில்லை,
 ஆதலால் கிடைத்ததை
 எல்லாம் கிடக்கட்டுமென
 கிடைப்பில் கிடத்தினேன்,
 கிளியவள் கிளப்பிய கிளர்ச்சியால்
 கிழிந்த துணியை கிழித்தெறிந்தேன்,
 கிணற்றில் குதித்தேன்
 கிழித்து கீறியது முட்கள்
 காரணம் தண்ணீரற்ற கிணறு...
 கிள்ளிப்பார்க்க சதையில்லாத 42 கிலோ
 உடலில் கிரிட்டிகல் தையல்கள்...
 கில்லி விளையாடும் சிறார்கள்கூட
 எள்ளி நகையாடினர் பல்லி போகுது
 பாரீர் யென சொல்லி,
கிர்ரென்று கிளப்பியது மூளை
 கிளியவளை கிழிதாலென்ன ?
கிளம்பினேன் சங்ககிரிக்கு...
கிச்சனில் கிளியவள்
 முள்ளங்கி கிச்சடியோடு
கிறுக்கன் எனை கண்டதும்
கண்களில் கிலி கிளிக்கு
கீழே கிடத்தி அவளை
கிழிக்க பாய்ந்தபோது...‘’டங்’’
கிண்னென்று சுற்றியது தலை
தள்ளாடி பார்த்தபோது கில்லாடி
கிஷோர் கையில்தடி தடியன்களுடன்
கிறங்கி விழுந்தேன் கிரைண்டர்மீது
கிரிட்டிக்கல் தையல் போட்டு
கீழ்ப்பாக்கத்தில் கிடந்தேன்
கிருஷ்ணகிரி கிருஷ்ணன் நான்.
 
குஷ்பு-
கில்லர்ஜி ஸூப்பர், கல கலனு கலக்கிட்டீங்க..
கலா மாஸ்டர்ர்ர்ர்ர்ர்-
குஷூ சரியாக சொன்னாள், கில்லர்ஜி கிளி.. கிலி.. கிழிச்சுட்டீங்க...
நமீதா-
வாவ் நச்சுனு இருக்கு கில்லர்ஜி மச்சான்.
Video
(Please ask Audio Voice)
 
சாம்பசிவம்-
என்ன ? இவளுகள்....
சிவாதாமஸ்அலி-
ஆஹா...... நமக்கு வேலையில்லையோ ?
CHIVAS REGAL சிவசம்போ-
வச்சாளுகளா.... ஆப்பு.


திங்கள், ஏப்ரல் 20, 2015

பெரிய தோசை.

 
அன்பு நண்பர்களே, நண்பிகளே... கடந்த எனது பதிவு என்மேல் கொண்ட அன்பின் காரணமாக சில பதிவர்களின் மனதை சங்கடத்தில் ஆழ்த்தி விட்டது வேண்டாமே 80போல் அதன் காரணமாய் நமது பதிவர்களை கொஞ்சம் சிரிக்க வைப்போமே எனக்கருதி எனது மூளையை ஆலோசிக்க விட்டுப்பார்த்தேன் ஒன்றும் தோன்றவில்லை நண்பரின் வீட்டுக்குப்போயி ஒரு மூலையில் உட்கார்ந்து யோசித்தது இதோ அது.
 
ஹலோ, எரிமலை கழகத்தலைவர் 7 மலை இருக்காங்களா ?
ஆமா, நீங்க யாரு ?
வணக்கம் ஸார் நான், மண் டெலிவிஷன் நிருபர் லொடக்கு லோகநாதன் பேசுறேன்.
பேசுங்க.
பெரிய, பெரிய தோசை ன்னு ஒரு ப்ரோக்ராம் செய்றோம்..
செய்யுங்க.
அதுக்கு உங்ககிட்ட சின்னதா ஒரு பேட்டி எடுக்கலாம்னு....
எடுங்க.
ஏன் ? ஸார் விட்டு, விட்டு கேக்குது  
நான், வீட்டுக்குள்ள இருக்கேன். டவர் கிடைக்கல... ம்...இப்ப, கேளுங்க.
ஸார், கல்யாணம் செய்யப்போற இந்தக்கால சந்ததியினருக்கு நீங்க சொல்ற அறிவுரை என்ன ?
வீட்டுக்கு வர்ற அம்மாகிட்ட எல்லாத்தையுமே விட்டு கொடுக்கனும். 
எல்லாத்தையும்னா... என்ன ? ஸார்...
வீட்டு பத்திரம் தொடங்கி, வீட்டு அலமாரிச்சாவி, சூடு, சொரனை, மானம் இப்படி எல்லாத்தையுமே, விட்டு கொடுத்துப் போயிட்டா எந்தப் பிரட்சினையுமே வராது. 
ஏன் ? ஸார், இப்படி விட்டு கொடுத்தால் ஆண்களோட தன்மானம் என்ன ? ஆகும்.  
ஒன்னும் ஆகாது தன்மானத்துக்குன்னு ஏதாவது உருவம் இருக்கா ? எல்லாத்துக்கும் மனசுதான் காரணம்.
ஏன் ? ஸார் ஒரு கழகத்தலைவரா இருக்கிற நீங்களே இப்படி தன்மானத்தை விட்டு கொடுத்து பேசுறீங்களே உங்களுக்கு வெட்கமா இல்லையா  
எவ்வளவோ, நம்மை விட்டுப்போச்சு, தன்மானம் போனா என்னா ? வந்தா என்ன ?
என்ன ? ஸார், தன்மானத்தை இவ்வளவு சுலபமா சொல்றீங்க,
ஏன் ? தன்மானம்னு, தனியா நினைக்கிறீங்க நம்மானம்னு, பொதுவுல விட்டுப்பாருங்க. 
ஏன் ? ஸார் நீங்க, எப்பவுமே, விரக்கியிலேயே பேசுறீங்க உங்களுக்கு வாழ்க்கையில விரக்தியா  
ஆமா.
வாழ்க்கை விரக்திக்கு காரணம், சொல்ல முடியுமா ஸார்  
காரணம்.... வாழ்க்கை மேலுள்ள விரக்கிதான்.
நல்லா விட்டு அடிப்பீங்க போலயே.
விட்டு அடிக்கிறது என் வாழ்க்கையில எப்பவோ என்னை விட்டு போச்சு.
இதுகூட நல்ல விட்டு போலத்தான் இருக்கு.
இப்ப என்னை, விட்டுயல்னா நல்லாயிருக்கும், வீட்டு வசதி, வாரியத்தில எனக்கு ஒரு மீட்டிங் இருக்கு. 
அப்பநான் வீட்டுல வந்து பார்க்கலாமா ஸார் ?
கண்டிப்பா வாங்க வெட்கமா இல்லையான்னு கேட்டீங்களே வீட்டுக்கு வாங்க காட்றேன் எப்ப, வருவீங்க ?  
ஆபீஸ் முடிஞ்சதும் என் லவ்வரை, அவவீட்டு விட்டுட்டு வர்றேன் ஸார்.
கூட்டிக்கிட்டு வந்தாக்கூட நல்லதுதான், வரும்போது வண்டிய வீட்டுக்கு வெளியில கொஞ்சம் தூரமா விட்டுட்டு வாங்க.
சரி ஸார்.
வீட்டு வாசல்லயே உங்களுக்கு வரவேற்பு கிடைக்கும், கண்டிப்பா வாங்க.
சந்தோஷம் ஸார்.

சாம்பசிவம்-
போகும்போது உன் லவ்வரை வீட்டு விட்டுட்டு போய்யா அதான் நல்லது, உனக்கு அடி கொடுத்தாலும் பரவாயில்லே..உன் ஆளுக்கு இடி கொடுத்துடப் போறாங்கே. அப்படியே, உன் வீட்டுல சொல்லி விட்டுப்போ வாயக் கொடுத்துட்டு, டிக்கியப் புண்ணாக்கப் போறீயேய்யா விட்டு விளாசப் போறாங்கே.. போ.


காணொளி.

Related Posts Plugin for WordPress, Blogger...