தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, ஏப்ரல் 05, 2015

வனமா ? பணமா ?

 
காடுகளை அழித்து வீடுகளை கட்டுவோம்
அந்த வீடுகளில் பிளாஸ்டிக் மரங்களை நட்டுவோம்.
இறைவன் மனிதனின் பயன்பாட்டிற்கு பசுமையை கொடுத்தான்
மனிதன் பசுமையை அழித்து வளமையை கெடுத்தான்.
ஆம், இன்று காடுகளும், விவசாய நஞ்சை புஞ்சை நிலங்களும் தஞ்சையிலும் கூட அழிக்கப்படுகின்றன.
இதற்கு காரணம் என்ன 
பணம், பணம் காகிதத்தால் மனிதன் உருவாக்கிய பணம்.
இது நாளடைவில் எங்கே கொண்டு போய்விடும் ?
பசி
பசி
பசி
பட்டினி
பட்டினி
பட்டினி
முடிவு ?
மரணம், மரணம், மரணமே.
ஆம் எல்லா மனிதர்களிடமும் பணமிருக்கும், வளமிருக்கும், பொன்னும், பொருளும் குவிந்திருக்கும் லேப்டாப் மட்டுமல்ல, லேப்கள் கூடவீட்டின் டாப்பில் இருக்கும், மாடமாளிகைகள் நிறைந்திருக்கும் ஏன் கார்களும், தேர்களும்கூட நிறுத்தியிருக்கும்.
ஆனால் ?
சோத்துக்கு ? ? ?
சிந்தித்துப்பார் மானிடா சிந்தித்துப்பார் !
நீ, சிந்திப்பது பணத்தை பெருக்குவதெப்படி ? மட்டுமே
சராசரி மனிதன் சிந்திக்க மாட்டான் ஆனால் இந்தக்கடமை அரசாங்கத்திற்கு உண்டே அவர்கள் சிந்திப்பது கூட தன்மக்களுக்கு பணத்தை பெருக்குவதெப்படி ? ஒரு நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டால் கூட மனிதன் சிந்திப்பான் எப்படி ? எதற்கு இந்த சமையல் வேலை பசியை அடக்க ஒருமாத்திரையை கண்டுபிடித்தால் என்ன ? விஞ்ஞானிகள் சாப்பிடுகிறார்களே அவர்களும் மனிதர்கள்தானே
விளைவு ?
 
3 வேளைக்கு 3
Yes, REAL ESTATE  
என்ற பெயரில் மனிதன் காடுகளை அழித்து ஃப்ளாட் போடுகிறான் அந்த ஃப்ளாட்டுகளை மனிதன் போட்டி போட்டுக் கொண்டு வாங்கி சேர்க்கின்றான் மானிடா, இது ஒரு வகையில் நாம் பூமித்தாய்க்கு செய்யும் துரோகமே !

 

 

 
 


மக்களை ஆளும் மன்னர்களே
இந்த மண்ணை அழிக்கும் மன்னர்களை நிறுத்திவை.
பூமிச்சூட்டை அதிகரித்தால் ?
நாம் வனங்களை மட்டும் அல்ல மனித இனங்களையும் இழப்போம்.
 

சாம்பசிவம்-
நண்பா, வாழ்வாதாரம் செல்வது பொருளாதாரத்தின் அடிப்படையில், பொருளாதாரம் அமைவது வாழ்வாதாரத்தின் செயல் முறையில். ஆகவே, அவன் வாங்கத்தான் செய்வான், மனிதன் படைத்த பொருளாலும், இறைவன் அளித்த அருளாலும், காரணம் அவன் வாழ்ந்து கழிக்க வேண்டும் அவனது, வாழ் நாளை... தூஸ்ற க்யா கர ஸக்த ?  दोस्रा कया कर सक्ता ?

காணொளி.
குறிப்பு – 2011-ல் நான் இந்தியா வந்திருந்த பொழுது ரியல் எஸ்டேட் நடத்தும், நண்பன் என்னை மதுரை விமான நிலையத்திற்க்கு பின்புறம் உள்ள இடத்தை வாங்குவதற்க்கு அழைத்து போகும் பொழுது எல்லாவற்றையும் புகைப்படமும், காணொளியும் எடுத்துக்கொண்டு இடமும் வாங்காமல், எனது வலைப்பூவில் வெளியிட்டதால் மனக்கசப்பு உண்டாக்கிய 2011-ல் உள்ள யாரும் படிக்காத மீள்பதிவு .


63 கருத்துகள்:

  1. மீள்பதிவாக இருந்தாலும்
    இன்றைய சூழலுக்கேற்ற (க)விதையான பதிவு
    தம +2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் வருகை தந்தமைக்கு நன்றி நண்பரே...

      நீக்கு
  2. எல்லா வளங்களையும் நமக்குத் தருவது மரம்தான்! ஆனால் மனிதன்தான் அவற்றை மறந்தான்! இரண்டு நாட்கள் முன்பு வைரமுத்து குரலில் ஒன்றரை நிமிட ஆடியோ வாட்சப்பில் இதே கருத்தை ஒட்டி வந்தது. மிகவும் கவலைப்படவேண்டிய விஷயம் இது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களின் கருத்துப்பதிவுக்கு நன்றி.

      நீக்கு
  3. உண்மைதான் நண்பரே
    மனிதன் தன் சுயநலத்திற்காக அனைத்தையும் அழித்துக் கொண்டே இருக்கிறான்
    முடிவு மனித இனத்தின் அழிவு
    தம =1

    பதிலளிநீக்கு
  4. பலவற்றை இழந்து விட்டோம் ஜி...

    பதிலளிநீக்கு
  5. மரங்களை தொடர்ந்து அழித்து, நம் அழிவை நாமே தேடிக்கொண்டிருக்கிறோம்.... இனியாவது திருந்துவோமா.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதற்க்கு நாமும்தானே காரணம் நணபரே...

      நீக்கு
  6. மீள் பதிவாக இருந்தாலும் தற்போதைக்கும் இது பொருந்தி வருகிறது. எங்குமே பணம் பணம் என்றாகிவிட்டது. மனிதத்தன்மையை இழந்து மனிதத்தை இழந்து இயற்கையையும் இழந்துகொண்டிருக்கிறோம். அதற்கான பலன்களை நாம் அனுபவித்தே ஆகவேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக முனைவரே குற்றம் செய்தவனும், குற்றமற்றவனும் இதில் சேர்க்கப்படுகிறான் 80தான் வேதனை.

      நீக்கு
  7. மிக முக்கியமான பதிவு நண்பரே,

    இந்தியா முழுவதும் எடுத்துக்கொண்டால் தமிழ்நாடு விழிப்புணர்வு மிக்க மாநிலங்களில் ஒன்று. குடும்பக் கட்டுப்பாடாக இருந்தாலும் சரி, கடவுள் நம்பிக்கையாக இருந்தாலும் சரி மற்ற மாநிலங்களைவிட நம்மவர்கள் விழிப்புணர்வோடுதான் இருக்கிறார்கள்.

    ஆனால், காடுகளை அழிப்பதிலும், விவசாய விளைநிலங்களை வீட்டடி நிலங்களாக மாற்றுவதிலும், ஆற்று மணலை கொள்ளையடிப்பதிலும் நமக்கு இணையாக வேறு யாரையும் பார்க்க முடியாது. இயற்கையை சுரண்டுவதில் நம்மை மிஞ்ச முடியாது.

    கேரளாவில் 45 நதிகள் ஓடுகின்றன. ஒரு நதியில் கூட ஒரு பிடி மணலை அள்ள முடியாது. அங்கு கட்டப்படும் கட்டடங்கள் எல்லாவற்றுக்கும் தமிழகத்தில் இருந்துதான் மணல் போகிறது.

    இயற்கையை சுரண்டி எப்படியாவது சம்பாதித்துவிட வேண்டும் என்ற பணவெறி நமக்கு அதிகம். அந்த பணவெறியால் நாம் கண்டது தண்ணீரில்லா தமிழகத்தை.

    நீர் இருந்தால் தானே விவசாயம் செய்ய முடியும் என்று விவசாயிகள் கேட்கிறார்கள். இப்படி அவர்களை கேட்க வைத்ததில் அரசுக்கும் பெரும் பங்கு இருக்கிறது. நம்மை விட மிக மிக குறைவான நீர் வளம் கொண்ட இஸ்ரேல் விவசாயத்தில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறது. ஆனால் நமது தேவையை விட 10 மடங்கு அதிகமான நீர் வளம் கொண்ட நாம் விவசாய நிலங்களை விற்று தின்று கொண்டிருக்கிறோம். அதற்கு காரணம் நம்மிடம் நீர் மேலாண்மை இல்லை. அதை விவசாயிகளுக்கு கற்று தர வேண்டும். அரசு அதற்கான திட்டங்களை தீட்ட வேண்டும்.

    இப்போதுதான் விவசாயத்திற்கு படித்த இளைஞர்கள் வரத் தொடங்கியிருக்கிரர்கள். இது ஒரு நல்ல மாற்றம். இந்த மாற்றத்தில் என்னையும் நான் இணைத்துக்கொண்டேன். எங்கள் நிறுவனம் மூலமாக, ஏற்கனவே 'அக்ரி டாக்டர்' என்ற விவசாய மாத இதழை நடத்தி வந்த நாங்கள் அதை வருகிற மே மாதம் முதல் நாள் முதல் தினமும் நாளிதழாக வெளிவரவுள்ளது. இதுதான் இந்தியாவிலேயே விவசாயத்திற்காக வரும் ஒரே நாளிதழ் என்ற பெருமையையும் இப்போதே பெற்றுள்ளது.

    நன்றி அருமையான அவசியமான பதிவு நண்பரே,

    த ம 7

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது விரிவான விளக்கவுரை அருமை தங்களது பொதுநல சேவைக்கு தங்களுக்கும், தங்களது குழுவினருக்கும் எமது வாழ்த்துகள்.

      நீக்கு
  8. நண்பா!
    மீள்பதிவு!
    மீண்டு வர முடியாத
    மீத்தேன் வாயு கசிவாகிப் போனது போல்,
    விளை நிலங்களின் நிலையினை
    காகிதக் கருவூலகங்களின் காட்சியினை
    மாட்சியமை படுத்து சொல்லி விட்டீர்கள்!
    சபாஷ்!

    எங்கே துபாஷ்?
    இதனை அரபி மொழியில் மொழி பெயர்க்க சொல்லுங்கள்?
    பத்தும் செய்யும் பத்து இதோ பிடியுங்கள்
    த ம 10
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புதுவையின் வேந்தனே வருக....
      விளை நிலங்கள் விலை நிலங்களானது கொடுமையே...

      நீக்கு
  9. "இன்று காடுகளும் விவசாய நஞ்சை புஞ்சை நிலங்களும் தஞ்சையிலும் கூட அழிக்கபடுகின்றன."

    வெட்டி விஷயத்துக்கும் சட்டசபை பெஞ்சை உடைக்கும் அரசியவாதிகள் காதில் பஞ்சை வைத்து கொண்டு இதனை கேட்காத மாதிரி நடிப்பது நெஞ்சை வாட்டுகிறது. விவேக் மைனர் குஞ்சை தண்டித்ததுபோல் இவர்களை தண்டித்து விட்டு கத்திரிக்கா பிஞ்சை சாகுபடி செய்வதெப்படி என ஆலோசிப்போம்.

    விடுங்க பாஸ் இயற்கையை விட பெரிய நீதிபதி உண்டா என்ன.? அதுவே பாத்து கொள்ளும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியாக சொன்னீர்கள் மாது இயற்கை தண்டனை கொடுக்கட்டும்.

      நீக்கு
  10. மக்களை ஆள வந்த மன்னர்களின் துரோகம்தான் இதற்கெல்லாம் முதற்காரணம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தோழரே ஆனால் மூலகாரணம் நாம்தானே... (அவர்களை உட்கார வைத்தது)

      நீக்கு
  11. அன்பு நண்பரே உங்கள் ஆதங்கம் புரிகிறது.மரங்களே வளரமுடியாத சூழலில் இருக்கும் வளைகுடா நாடுகளும் சிங்கப்பூர் போன்ற நாடுகளும் பயிர் விளைக்காமலேயே சுபிட்சமாக இல்லையா. அதைப் பார்த்து தேற்றிக் கொள்ளுங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா அவர்கள்கூட செயற்கையான இயற்க்கையை உருவாக்குகிறார்களே...

      நீக்கு
  12. வணக்கம்
    ஜி
    எல்லாவற்றையும் இழந்து விட்டோம் இனி என்னதான் இருக்கு... அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்.த.ம12
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி ரூபன் மிஞ்ஞமும் இழந்த பின்னே புத்தி வரும்.

      நீக்கு
  13. மனிதன் தனக்குத் தானே குழி வெட்டிக் கொள்ளத் தொடங்கி வெகு நாளாயிற்று..
    இனி அவன் மண் வெட்டியை விட்டாலும் - வெட்டிய மண் அவனை விடாது!..

    பதிலளிநீக்கு
  14. அருமையான பதிவு அண்ணா. நானும் இதை மையமாக வைத்து ஒரு சிறுகதையும் எழுதியுள்ளேன்
    http://vimarsanaulagam.blogspot.in/2014/12/bonism.html?m=1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்டிப்பாக படித்து கருத்துரை இடுவேன் நண்பரே...

      நீக்கு
  15. மீள்பதிவு................

    நிச்சயமாய் இந்நிலையில் இருந்து நாம் மீளத்தான் வேண்டும்.


    த ம கூடுதல் 1

    பதிலளிநீக்கு
  16. வணக்கம் சகோதரரே!

    இயற்கை அழிவதை குறித்து வேதனை கொள்ளும் பதிவு. ஒரு மரம் வளர்ந்து தன்னை நிலைப்படுத்திக் கொள்ள எவ்வளவு காலங்கள் எடுத்துக்கொள்கிறது. ஆனால் நாம் நினைத்தவுடன் நம் தேவைக்காக அதை அகற்றி விடுகிறோம். காரணம் ஒவ்வொரு மனிதனின் சுயநலத்தேவைகள்தான். ௬ட்டுக்குடும்பங்களின் பாதிப்பு என்றும் சொல்லலாம்..இனியாவது இயற்கையை பேணுவோம் என்ற எண்ணம் வரவேண்டும். நன்றி

    என் பதிவாக" நற்குணங்கள் "நேரம் கிடைக்கும் போது படித்து கருத்திடவும். நன்றி.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியாக சொன்னீர்கள் சகோதரி ஒருமணி நேரத்தில் ஒரு மரத்தை அழித்து விடுகிறோம் ஆனால் அது வளர்வதற்க்கு எவ்வளவு காலங்கள்.
      நற்குணங்கள் கண்டேன் சகோ....

      நீக்கு
  17. காலத்திற்கேற்ற பதிவு. ஆத்தா தோழியை அழைத்துக் கொண்டு கொடநாடு போய்விடுவார், அவருக்கெங்கே கோவணம் கட்டியவனின் கஷ்ட நஷ்டம் தெரியப் போகிறது? தண்ணீர் மேலாண்மை செய்வதற்குப் பதில் டாஸ்மாக்கிற்கு "தண்ணி" மேலாண்மையை தமிழக அரசாங்கம் செம்மையாகச் செய்கிறது. ஏனென்றால் 6கோடி மக்களை விட ஒரு தோழி முக்கியமானவராகப் போய்விட்டார். தாத்தாவுக்கு குடும்பம் முக்கியமாகப் போய்விட்டது. எதிகாலத்தை நினைத்தால் தீராத கவலை மனதை வாட்டுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர்களை உட்கார வைத்து விட்ட நாம்தான் நண்பரே குற்றவாளி அதிலும் மீண்டும், மீண்டும் எத்தனை முறைதான்....

      நீக்கு
  18. அன்புள்ள ஜி,

    காற்றும் நீரும் வானும் நெருப்பும்
    பொதுவில் இருக்குது
    மனிதன் காலில் பட்ட பூமி மட்டும்
    பிரிந்து கிடக்குது
    பிரித்து வைத்து பார்ப்பதெல்லாம்
    மனிதன் இதயமே
    உலகில் பிரிவு மாறி ஒருமை வந்தால்
    அமைதி நிலவுமே!



    நீங்க (இயற்கை வளங்கள்) நல்லா இருக்கோணும்
    நாடு முன்னேற...!


    இந்த நாட்டில் உள்ள ஏழைகளின்
    வாழ்வு முன்னேற...!

    நன்றி.
    த.ம. 15.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இயற்கையை வாழ்த்தி இயக்கையோடு வாழ்வோம் ஜி

      நீக்கு
  19. நான் ஊட்டிக்குச் சென்றபோது கண்டேன் வயவெளிகருகில் கான்க்ரீட் காடுகள்

    பதிலளிநீக்கு
  20. விவசாயிக்கு தெரியாமலே நிலம் எடுக்கும் சட்டத்தை வேறு கொண்டு வந்தே தீருவோம் என்று மத்திய அரசு கங்கணம் கட்டிக்கொண்டு அலைகிறது ,இது எங்கே போய் முடியுமோ ?பாவம் ,அடுத்த தலைமுறை !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே தும்பை விட்டு வாலைப்பிடித்துக்கொண்டு ஓடுகிறோம்.

      நீக்கு
  21. இதைப் பற்றி எத்தனையோ எழுதியாச்சு, பேசியாச்சு, கவிதைகளும் புனைந்தாயிற்று. எதிர்காலத்தில் உணவு மாத்திரை வடிவத்தில், கலோரி கணக்கில், கிராம் கணக்கில் வரும் என்ற ஃபிக்ஷனும், கணிப்பும் வந்தாயிற்று. எனினும் நாம் எழுதுவோர் எத்தனை பேர் வீடு கட்ட நிலம் வாங்கும் போது மரங்கள் இல்லா நிலம் வாங்குகின்றார்கள்? அப்படியே மரங்கள் இல்லா நிலம் வாங்கினாலும், மரங்கள் நட்டு வளர்க்கின்றார்களா இல்லை சுற்றுப் புறம் முழுவதும் சிமென்ட் போட்டுக் கட்டுகின்றார்களா? மரங்கள் உள்ள நிலம் வாங்குவோர் எத்தனை பேர் மரங்களுக்கு அழிவு வராமல் வீடு கட்டுகின்றார்கள்? அழித்தாலும் அதற்கு இணையாக மரங்களை நடுகின்றார்களா?

    எத்த்தனை பேர் நன்செய் நிலத்தில் வீடு கட்டுகின்றார்கள்? வயல்களைப் ப்ளாட் போடும் போது கூசாமல் தானே வாங்குகின்றோம்! எழுதுபவர்களும், பேசுபவர்களும் நாம் தானே அதையும் செய்கின்றோம்! வறண்ட நிலைத்தை வாங்கியா வீடு கட்டுகின்றோம்? வீடு கட்டினாலும் சுற்றி, அதை நன்செய் நிலமாகவோ, இல்லை அந்த மண்ணை டெஸ்ட் செய்து அதில் என்ன விளையும் என்று பார்த்து ஏதேனும் செய்கின்றோமா.?

    அட போங்க ஜி....வாய்ச் சொல்லில் வீரரடி! எழுத்துக்களில் வீரரடி! நாங்கள்!!

    உங்களுக்குப் பாராட்டுகள் ! நீங்கள் நிலம் வாங்காமல் வந்ததற்கு, எங்கள் கொள்கையும் அதுவே! அழிப்பதாக இருந்தால் வாங்கக் கூடாது. துணை போகக் கூடாது. ஆக்கமாக இருந்தால் மட்டுமே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடைசியில் கேட்டீர்களே கேள்வி அதற்க்கு என்னிடம் தனிப்பட்ட பதில் இருக்கிறது ஆம் இந்த இடத்தை நான் பார்வையிடப் போகும்போதே என்மனதில் இதனைப்பற்றிய பதிவு எழுத வேண்டும் என தேன்றியது அதன் காரணமாகவே முதலில் நாம் இதை வாங்குவது தவறுதானே என்று தோன்றியது வாங்கவில்லை அதன் காரணமாய் நான் பகையை பெற்றுக்கொண்டேன் அதனைப்பற்றி எனக்கு கவலையும் கிடையாது அதேநேரம் அந்த இடத்தின் மதிப்பு இன்று மூன்று மடங்கு 80ம் எமக்குத்தெரியும் நான் வாங்கிய இரண்டுமே பழையகால வீடுகளே... நான் ஊரைத்திருத்த முடியாதுதான் ஆகவே என்னைத் திருத்துக்கொண்டேன் உண்மையிலேயே தங்களது குறுக்கு கேள்வி எமக்கு சந்தோசத்தை கொடுத்தது எனது விபரங்களை வெளியேற்ற வழி வகுத்த வில்லங்கத்தார்களுக்கு நன்றி.

      நீக்கு
  22. உங்களுக்கு ஒன்று தெரியுமா? கேரளத்துக் காரர்கள் அவர்கள் பூமியை விட்டுக் கொடுப்பதில்லை. வீடு கட்டினாலும், பசுமையோடுதான் கட்டுகின்றார்கள். அவர்கள் வீடு கட்டுவது தமிழ் நாட்டு மண்ணில்தான்.....அதாவது நமது மண்தான் அவர்களது வீடுகளில்! தமிழ் நாட்டைக் குறை சொல்லிக் கொண்டே! மானம் கெட்டவர்கள் நம்மவர்கள்! நமது ஆற்றுப் படுகைகள் அனைத்தும் தியாகிகள்! அண்டை மாநிலத்தவர் (சுய)நலவாதிகள்! அவர்கள் காடுகளையும் அப்படிப் பராமரிக்கின்றார்கள். வீடுகட்ட, கட்டிடங்கள் கட்ட தியாகம் செய்வதும் நமது மாநிலத்து மரங்கள்தான், நம் மானங்கெட்ட சுயநலவாதிகளால்! அண்டை மாநிலத்தில் மரங்களையோ, ஆற்று நீரையோ, மண்ணையோ நாம் தொட முடியுமா? அவர்கள் காய்கறிகள் ஏன் கறிவேப்பிலை கூட விளைவிப்பது இல்லை. எல்லாம் இங்கிருந்துதான் அங்கு செல்கின்றது. பால் கூட. ஆனால் நம்மவர்கள் எல்லாம் சப்ளை செய்துவிட்டு, அதிலும் நம் மானத்தை படகேற்றுகின்றார்கள். ஆம்! அவர்கள் பத்தரத்தில், "தமிழ் நாட்டிலிருந்து வரும் பால் கலப்படம், காய்கறிகள் பூச்சி மருந்து என்றெல்லாம்...."

    இத்தனைக்கும் இயற்கை எல்லோருக்கும் பொதுதான். நாம் தான் எல்லைக் கோடு வகுத்துக் கொண்டு , இது என்னுடையது, உன்னுடையது என்று அழித்து வருகின்றோம்....அவர்களும் முந்திரி மரங்களில் மருந்து அடிக்கின்றார்கள்.....டீ இலைகளில் மருந்து அடிக்கின்றார்கள்....

    அட போங்க கில்லர்.....கூவிக் கூவி ஒரு பயன் இல்லை.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லா வகையிலும் தமிழன் ஏமாறுவான் இதை எடுத்துச் சொல்பவனை முட்டாள் என்பான்.

      நீக்கு
  23. அட ! கருத்து சொல்லிட்டு வந்தா நம்ம நண்பர் செந்திலும், மணவையும் கிட்டத்தட்ட நம்மளப் போல....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவுங்களெல்லாம் உடனடியாக வருபவர்கள்.

      நீக்கு
  24. ஐயடா வாக்குப் போட்டு விட்டு கவிதையில or கருத்திடலாமே என்று நினைத்து போய் விட்டேன். அதன் விளைவு ஒரு கவிதையே பிறந்து விட்டது பதிவாக இட நினைத்துள்ளேன். உங்களுக்கும் இடுகிறேன்.

    இயற்கையை அழித்து இறையினை பழித்தால்
    இன்பம் எம்மை சூழ்ந்திடுமா
    இயல்பினை தொலைத்து செயற்கையில் நாட்டம்
    மிகுவதனாலே சீர்ரழிவுகள் நேர்ந்திடுமே

    என்று எவ்வளவு ஆதங்கத்தோடு எழுதியுள்ளீர்கள் அனைவரையும் சிந்திக்க வைக்கும் அருமையான பதிவு என்னையும் சிந்திக்க வைத்தது மிக்க நன்றி ஜி அமைதி அமைதி! இப்போ மகிழ்ச்சி தானே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா கவிஞரின் கவிதைப்பின்னூட்டம் அருமை மகிழ்ச்சி சகோ.

      நீக்கு
  25. இயற்கையை சிதைத்து இன்பத்தை தேடும் நிலை எங்கு கொண்டு சென்று விடும் என்பதை மீள் பதிவாக தந்தாலும் திருந்த மாட்டோம். நல்ல பகிர்வு சகோ.

    பதிலளிநீக்கு
  26. மரம் செடி கொடிகள் காணாமல் போனதைப் போல
    என் கருத்துரையும் காணாமல் போனதே!...

    கண்ணீர் வருகின்றது!.. களஞ்சியங்களும் காடுகளும் அழிக்கப்படுவதைக் கண்டு!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தெரியவில்லையே நண்பரே நான் தங்களைக் காணவில்லையே என நினைத்துக்கொண்டு இருந்தேன். நாம் வேறு என்ன செய்ய முடியும்.

      நீக்கு
  27. குமுறல்களை மிகவும் ஆதங்கத்துடன் பதிவு செய்துள்ளீர்கள். ஒவ்வொருவரும் தானே உணர்ந்து திருந்தினால்தான் பூமி செழிக்கும். இல்லையேல் மனித இனம் பூண்டோடு அழியும். சிந்திக்கவைத்த கருத்துப் பகிர்வுக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் சகோ தானே திருந்தவேண்டும் வேறு வழியில்லை.

      நீக்கு
  28. எங்கள் ஊரின்
    ஏரி குளங்களில் கூட
    முளைத்திருக்கின்ற......
    காங்கிரீட் வீடுகள்.

    வருந்த தக்க செய்தி .விழிப்புணர்வு பதிவிற்கு நன்றி+வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  29. தாமதமான கருத்து.பரவாயில்லை.நல்லதொரு விடயம்.மீள்பதிவுக்கு நன்றி. இங்கு இவர்கள் இயற்கையை பராமரிக்கும் விடயத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவம் எத்தனை. வீட்டிலிருக்கும் மரம்(அதுவும் நாங்க வைத்து வளர்ந்த மரத்தை) வெட்டுவதாயின் கூட அனுமதி பெற வேண்டியிருக்கு. சில வேளை அனுமதி மறுப்பும் இருக்கும்.எங்க அனுபவம். ஆனா ஊரில் இதை கேட்கவே நாதியில்லை. வேலியே பயிரை மேயும் காலம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வேலியே பயிரை மேயும் காலம் அருமையாக சொன்னீர்கள் சகோ வருகைக்கு நன்றி.

      நீக்கு
  30. எந்த வனம் போனாலும் இனத்தோடு மேயணும் என்னும் பழமொழியை எல்லா வ(ள)னத்தையும் விற்று பணமாக்கணும் என்று நம் மக்கள் தனக்கேற்றார் போல் மாற்றிக் கொண்டார்கள் நண்பரே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களின் கருத்துரை அருமை.

      நீக்கு
  31. டைமமிங் ரைமிங் எல்லாம் சரி, ஆனால் நான் வந்த டைமிங் தான் சரியில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேரமே வந்திருந்தால் சரியாயிருக்குமே...

      நீக்கு