தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், ஏப்ரல் 07, 2015

அபுதாபி, அப்பு அபுபக்கர்


ABU DHABI ELECTRA STREET AL SADAF FASHIONS BUILDING 4th FLOOR Flat No: 404

அபுபக்கர் ROOMமிலேயே பெரியவர், சொந்தஊர் பெரியகுளம் எல்லோரும் செல்லமாக அப்பு என்றே அழைப்பார்கள், வயதுப் பாகுபாடின்றி ஜாலியாகப் பேசுவார், அல்மரியா தியேட்டரில் வேலை நன்றாக சமைப்பார், யாரையும் KITCHEN பக்கம் விடமாட்டார், REST நேரங்களில் எதையாவது வாங்கி வந்து எதையாவது செய்து கொண்டே இருப்பார் நல்ல ருசியாக இருப்பதால் யாரும் செலவைப்பற்றி கவலைப்படுவதில்லை. ROOMக்குள் நுழைந்த பாரதி சட்டையை கழட்டிக் கொண்டே கேட்டான்,
ஆப்ரஹாம் அப்பு எங்கே ?
அவரு சுப்புராஜூவை கூட்டிக்கிட்டு Dr. சுந்தர்ட்ட, போயிருக்காரு, 
ஏன் ?   
அப்பு, ஏதோ புதுசா கடுகுஅப்பம்னு, செஞ்சாரு சுப்புராஜூ எடுத்துக் கடிச்சாரு, சடக்குன்னு சத்தம் கேட்டுச்சு வாயெல்லாம் ரத்தம் முன்பல்லு ரெண்டும் கையோட வந்துருச்சு, நல்லவேளை நான் முதல்ல எடுக்கலை.
என்னடாஇது அப்பம் கடிச்சா பல்லு ஒடைஞ்சுச்சு ?  
அப்பத்துக்குள்ளே கடுக்கன் ஒரே கடியில ரெண்டு பல்லுக்கும் இடையிலே போயி தூக்கி விட்டுருச்சு.

கடுக்கன் எப்படி அப்பதுக்குள்ளே போச்சு ?  
நம்ம வடுகநாதன் குளிக்கப் போகும்போது அவசரத்துல கடுக்கனை கழட்டி கடுகு டப்பாவுல போட்டுட்டு போயிட்டான், அப்பு தெரியாம அதோடப் போட்டு தாழிச்சுட்டாரு, அந்த மூதேவியால வந்தவிணை.
கதவு திறக்க, அப்பும், சுப்புராஜூம் நுழைந்தார்கள்.
என்ன சுப்புராஜூ இப்ப, எப்படியிருக்கு ?   
சுப்புராஜூ கன்னத்தைப் பிடித்துக்கொண்டு ஊ..ஊ.. என்றான்.
ஏப்பு சும்மா இருக்கமாட்டியலா... எதையாவது செஞ்சுக்கிட்டு....

நான் என்னடா செய்யிறது வடுகநாதன் கடுக்கனை கழட்டி கடுகு டப்பாவுல ஏண்டா போட்டான் ?
சரி டாக்டர் என்ன சொன்னாரு ?
மூணு நாளைக்கு, வாயால சாப்புடக் கூடாதாம்.
அய்யய்யோ அப்புறம் ?
ஜூஸ் மட்டும் குடிக்கச் சொன்னாரு.
எப்படியோப்பு, அப்பம் செஞ்சு சுப்புவ சாப்புடவிடாம ஆப்பு வச்சுட்டீங்க..
டேய் ஆப்ரஹாம் நீ வேற, இவனை சூடேத்துறியா ? உனக்கு அடுத்த வாரம் வக்கிறேண்டா ஆப்பு, வடுகநாதன் வரட்டும், எல்லாச் செலவையும் அவன் தலையிலதான் வைக்கணும்.
அப்ப அடுத்தவார VACATIONனை, நாளைக்கே மாத்திட வேண்டியதான்.

காணொளி

நண்பர் புதுவை வேந்தன் வேலு அவர்களே தாங்கள் கேட்டதற்க்காக இந்தப்பதிவு மற்றதும் வரும்.

62 கருத்துகள்:

  1. ஹா...ஹா... இப்படிக் கூட நடக்குமா? காணொளி சுவையான சீன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பரே அனுபவப் ''பட்டு'' எழுதியதுதான்.

      நீக்கு
  2. ஆஹா கடுக்கண் போட்ட அப்பமா! ....

    ரசித்தேன்.

    த.ம. +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்க மட்டும் லட்டு போட்டு இருக்கீங்க ?

      நீக்கு
  3. வடுகநாதன் வடு செய்யும் நாதனோ...? ஹா... ஹா...

    பதிலளிநீக்கு
  4. கடுகு அப்பமா? கடுக்கண் அப்பமா? கடுக்கண் அப்பம் என்றே கொள்வோம். வாயால சாப்புடக்கூடாதாம் என்ற சொற்றொடரைப் படித்ததும் சிரிப்பு வந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக முனைவரே நான் நடைமுறையில் யதார்த்தமாக பேசுவது அதுவும் வந்து விட்டது.

      நீக்கு
  5. அடடா! இடுக்கண் வருங்கால் நகுகனு சொல்லலாம் கடுக்கண் கடித்தால் நகைக்க முடியாதே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடுக்கண் கடித்தவனுக்குத்தானே... நமக்கென்ன ? நகைப்போம்.

      நீக்கு
  6. நகைச் சுவைபோல் தோன்றினாலும் கடுக்கனைக் கடித்தவனுக்கல்லவா தெரியும் வேதனை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஐயா கடித்தவன் நிலை பாவம்தான்.

      நீக்கு
  7. கடுகப்பம் "கடுக்" என்றானதோ கடுக்கண்ணால்? அதுவும் அதெப்படி அவ்வளவு சரியாக அந்தக் கடுக்கண் உள்ள அப்பம் சுப்புவின் வாயில் கிடைத்ததோ?!! ம்ம் நல்ல அப்பு! அப்படியே கடுகப்பம் எப்படிச் செய்வது என்று அப்புவிடம் கேட்டுச் சொல்லியிருகலாம்ல....இங்க எத்தனை பேர் சமையலறையில நளன் பாகம் செய்பவர்கள் வருகின்றார்கள்!

    காணொளி எப்போது பார்த்தாலும் ரசிக்க வைக்கும் ஒன்று!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொருக்கனும் பந்திக்கு முந்துனான் பல்லுக்கும் முந்திட்டான் விதி வேறென்ன அதுசரி இப்படியே எங்கிட்டே இருந்து அப்பம் சுடுவது எப்படினு படிக்கவா ? நான் யாருக்குமே சொல்லிக்கொடுக்க மாட்டேனே....

      நீக்கு
  8. இடுக்கண் வந்தால் நகுக!.. - என்றார்கள்..
    அப்பத்தில் கடுக்கண் கிடந்து பற்கள் உடைந்தாலுமா!?...

    அப்புறம் - அந்த சாம்பார் (!?..) பேஷ்.. பேஷ்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஜி மற்றவங்களுக்கு உடைந்தால் ?
      சாம்பாரில் Fish Fish சா ?

      நீக்கு
  9. கடு(கு)க்கண் அப்பம்..! ரசித்தேன். காணொளி அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படினா சாப்பிடலையாக்கும், சந்தேகம்தானோ ?

      நீக்கு

  10. கேள்வி - பதில்களால் - நம்ம
    ஆள்களை கட்டிப் போடுமளவுக்கு
    கில்லர்ஐி வளர்ந்திட்டாரு
    இன்னும்
    சிறந்த பதிவுகளை எதிர்பார்க்கலாம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது எதிர்பார்ப்பை முடிந்தவரை முயல்வேன்.

      நீக்கு
  11. கடுக்கா கொடுக்குறதுன்னு கேள்விப் பட்டிருக்கேன்...
    கடுக்கண்ணும் கொடுக்கலாமோ..!!


    அடுத்தவங்களுக்கு இடுக்கண் வந்தா நாம் நகலாம்( சிரிக்கலாம்)

    நமக்குக் கடுக்கண் வந்தாதானே தெரியும் இடுக்கண்!!!!

    ஹ ஹ ஹா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக கவிஞரே கடுக்காவை விட கடுக்கன் விலை உயர்ந்ததுதானே...
      உலகம் தோன்றிய காலம் தொடங்கி நாம் மற்றவரின் துன்பத்தைப்பார்த்துதானே சிரிக்கின்றோம்.

      துன்பம் வரும் வேளையிலும் சிரிங்க
      - வள்ளுவனின் வாக்கு.

      நீக்கு
  12. வணக்கம் சகோதரரே.!

    நல்ல நகைச்சுவை... இருந்திருந்து "கடுக்கண்" கழற்றி வைக்க கடுகு டப்பாதானா கிடைத்தது. அதுவும் அந்த முதல் அப்பத்தில்தான் அது ஒழிய வேண்டுமா? எல்லாம் விதி ..வடுக நாதனின் கடுக்கண்ணும் போச்சு! கடித்த சுப்பு ராஜூ வின் பல்லும் போச்சு.! படித்து சிரித்த எங்கள் வயிறும் போச்சு.! மனம் விட்டு சிரிக்க வைத்தமைக்கு நன்றி சகோதரரே.!

    சிரிக்க வைக்கும் மற்ற பதிவுகளும் வரட்டும்...

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ வேலைக்கு போற அவசரம்போல பயலுக்கு நீங்கள் சொல்லும்போல எல்லாம் விதி கடைசித்தகவல் கடுக்கண் கடித்த எனக்கே கடுக்கண் சொந்தம்னு சுப்புராஜு சொல்லிட்டாராம். பாவம் வடுக்கன் நாதன்.

      நீக்கு
  13. வணக்கம்
    ஜி
    படித்து படித்து சிரித்தேன் ஒவ்வொரு சொற்களும் வித்தியாசம்... வீடியோ மிக அருமை பகிர்வுக்கு நன்றி த.ம12

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்--

    பதிலளிநீக்கு
  14. வாங்க ரூபன் இப்பத்தான் உங்களைப்பற்றி தெரிகிறது அடுத்தவன் பல் உடைந்தது நீங்கள் ரசிச்சு சிரித்திருக்கின்றீர்கள் இது நியாயமா ?

    பதிலளிநீக்கு
  15. கடுக்கன் அப்பம் நகைசுவையாக தெரிந்தாலும் சம்பந்தப்பட்டவரின் வேதனை துயரம் தெரிகிறது.

    காலையிலே எனது வாக்கை செலுத்திவிட்டேன் கருத்திடுவத்ர்க்குள் இணையத்தில் பிரச்சனை ஏற்பட்டுவிட்டது.

    த ம 8

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பரே நீங்களாவது சுப்புராஜின் துயரத்தில் பங்கு கொண்டீர்களே... உங்களுக்கு கடுக்கன் இல்லாத அப்பம் ரெண்டு கொடுக்கனும்.

      நீக்கு
  16. நம்மாளுங்க மென்னு சாப்பிடுபவர்கள் குறைவு, அப்படியே விழுங்குபவர்கள் தான் அதிகம், அந்த மாதிரி ஆள்கிட்ட மாட்டியிருந்தா நேரா கடுக்கன் வயித்துக்குள்ள போயிருக்கும். ஹா..........ஹா..........ஹா..........

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமா நண்பரே நல்ல தகவல் சொன்னீங்க இனிமேல் மென்றுதான் சாப்பிடனும் சில சமயம் கடுக்கண் வந்தால் சத்தமில்லாமல் ஒதுக்கி அடகு வச்சிடலாம்.

      நீக்கு
  17. கடுக்கண் போன வழி தெரிந்தது , வலி ஏதும் தராமல் வெளியே வந்திருச்சா :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Dr. சுந்தர் எடுத்துக்கிட்டதாக கடைசி தகவல் ஜி

      நீக்கு
  18. அட கடுக்கணை கடுகு டப்பாவிலயா போடணும் என்னமா சிந்தீ.........க்கிறீங்க ம்..ம்..ம்
    எங்கேயோ போட்டீங்க ஜி வர வர அளவே இல்லாமல் அசத்துறீங்க. ஒரு சந்தேகம்,
    கடுகை அப்பத்துக்கு போடுவதா ? என்று நினைத்தவுடன் சிரிப்பு தடை பட்டுவிட்ட்டது. நம்ம ஊரில போடுவதில்லை அதான். என்னமோ இடுக்கண் வராம பார்த்துக்கோங்க ஜி. 2 கடுக்கன் அப்பம் ப்ளீஸ் நான் கடிக்காமல் சாப்பிடுவேனாக்கும். கடுக்கனை சொன்னேன். ஹா ஹா ......

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க, வாங்க இருந்த ஒரு கடுக்கணையும் கடிசிச பாவத்துக்கு சுப்புராஜு கைக்கு போயிடுச்சே கடுக்கண் இல்லாத அப்பம் 2 பார்சல்.

      நீக்கு
  19. ஹா...ஹா..ஹா. வழக்கம் போல அருமை நண்பரே...

    பதிலளிநீக்கு
  20. அன்புள்ள ஜி,

    மூனு நாளைக்கு வாயால சாப்புடக் கூடாதாம்... வாயால சாப்புட்டா வவுத்தால போகுமாம்...!

    காணொளியும் இரசிக்கும் அருமை...!

    நன்றி.
    த.ம. 16.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் மணவையாரே டாக்டர் அப்படித்தான் சொல்லி இருக்கார்.
      என்றும் 16 க்கு நன்றி.

      நீக்கு
  21. படிக்கும் போது நகைச்சவையாக இருந்தாலும் கடுகு அப்பத்தை ( கடுக்கன் அப்பம் ) சாப்பிட்ட சுப்புராஜு பாவம். மிக அருமை சகோ. உங்களுடைய அடுத்த பதிவுக்காக வெயிட்டிங் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ நீங்களும் இந்த கடுகு அப்பத்தைப்பற்றி பதிவு போடலாமே...

      நீக்கு
  22. கடுகு அப்பம். புதிதாக இருக்கிறதே. செய்து பார்க்க வேண்டும். ஆனால், கட்டபடி கடுகு டப்பாவை எடுத்துக் கொட்டமாட்டேன். பிறகு பல்லில்லாக் கணவனுடன் தான் காலம் தள்ள வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ நீண்ட இடைவெளிக்குப்பிறகு தங்களின் வருகைக்கு நன்றி செய்து பாருங்கள் பிறகு என்னைக்குறை சொல்லாமல் இருந்தால் சரி.

      நீக்கு
  23. கடுகு அப்பம் சூப்பர் என்று தாங்கள் சாப்பிட்டு பல்லு போன செய்தி அருமை. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹலோ பல்லுப் போனது சுப்புராஜூக்கு எனக்கு அல்ல....

      நீக்கு
  24. கடுகுல கடுக்கனை போட்டு தாளிச்ச அப்புவை டாக்டர் பில்லால தாளிச்சிருப்பாரே...

    நன்றி
    சாமானியன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செலவுதான் வடுகநாதன் தலையில விழுந்துடுச்சே....

      நீக்கு
  25. 50 களில் எங்கள் பக்கம் திருமணம் முடிந்ததும் மாப்பிள்ளை மாமியார் வீட்டிற்கு விருந்துக்கு வரும்போது மணப்பெண்ணின் சகோதரிகள் பஜ்ஜி அல்லது வடை தயாரிக்கும்போது அதில் மோதிரத்தை வைத்து செய்வதுண்டு. சாப்பிடும்போது அதை மாப்பிள்ளை கண்டுபிடிக்கிறாரா என பார்க்க. எல்லோரும் அந்த நிகழ்வை பார்க்க கூட்டமாய் கூடியிருப்பதை பார்க்கும்போதே மாப்பிள்ளைக்கு தெரிந்துவிடும் ஏதோ வில்லங்கம் இருக்கிறதென்று, ஆனால் அதற்குள் மாப்பிளையின் சகோதரிகள் அதை கண்டுபிடித்து முன்பே சொல்லிவிடுவார்கள். இந்த ’விளையாட்டு’ பார்க்க வேடிக்கையாய் இருக்கும்.

    தங்களது பதிவு அந்த நிகழ்வை நினைவூட்டியது. இரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே நல்லதொரு பழையகால நினைவலைகளை மீட்டு வந்து விட்டீர்கள் இந்த வகை சடங்குகளை திருமணங்களில் பார்த்ததுண்டு கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
  26. பெயரில்லா4/09/2015 2:50 PM

    3 நாளுக்கு வாயால சாப்பிடக் கூடாதாம்.
    (துளை போட்டு வயிற்றினுள் செலுத்தலாம் கான்சர் நோயாளி போல)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நல்ல ஐடியா கொடுப்பீங்க போலயே பின்னே அந்தச்செலவை யார் தலையில் வைப்பது ?

      நீக்கு
  27. அடடே வடுகநாதன் கிட்ட நிறைய ஐடியா கேக்கலாம் போலிருக்கே.. கடுக்கனை கடுகு டப்பால போடும் ஐடியா நல்லா தான் இருக்கு. வரட்டும் வடுகநாதன்.. நாம ஊருக்கு போற செலவையும் சேர்த்து அவர் தலையில கட்டலாம். :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க, வாங்க வழி தெரிஞ்சுடுத்தோ... சும்மாவே கடுக்கண் போன வழி தெரியாமல் வடுகநாதன் மன வேதனையில இருக்கான் இது வேறயா ?

      நீக்கு
  28. கடுக்கண் தந்த வேதனையை காணொளி தகர்த்துவிட்டிருக்கும்.ஹஹ
    மன்னிக்கவும் சகோ தாமத வருகைக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பல்லுப்போன வேதனையில மனுஷன் காணொளி காணுறது மா3யா இருக்கு.

      நீக்கு
  29. வடுகநாதான் அப்பத்துக்கு ஆப்பு வச்சட்டாரேன்னு வருத்தமா இருக்கு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுப்புராஜூக்குதானே அப்பு ஆப்பு வச்சாரு.....

      நீக்கு