தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், ஏப்ரல் 20, 2015

பெரிய தோசை

 
அன்பு நண்பர்களே, நண்பிகளே... கடந்த எனது பதிவு என்மேல் கொண்ட அன்பின் காரணமாக சில பதிவர்களின் மனதை சங்கடத்தில் ஆழ்த்தி விட்டது வேண்டாமே என்பது போல் அதன் காரணமாய் நமது பதிவர்களை கொஞ்சம் சிரிக்க வைப்போமே எனக்கருதி எனது மூளையை ஆலோசிக்க விட்டுப்பார்த்தேன் ஒன்றும் தோன்றவில்லை நண்பரின் வீட்டுக்குப்போயி ஒரு மூலையில் உட்கார்ந்து யோசித்தது இதோ அது.

ஹலோ, எரிமலை கழகத்தலைவர் 7 மலை இருக்காங்களா ?
ஆமா நீங்க யாரு ?

வணக்கம் ஸார் நான், மண் டெலிவிஷன் நிருபர் லொடக்கு லோகநாதன் பேசுறேன்.
பேசுங்க.

பெரிய, பெரிய தோசை ன்னு ஒரு ப்ரோக்ராம் செய்றோம்..
செய்யுங்க.

அதுக்கு உங்ககிட்ட சின்னதா ஒரு பேட்டி எடுக்கலாம்னு....
எடுங்க.

ஏன் ஸார் விட்டு, விட்டு கேக்குது  
நான், வீட்டுக்குள்ள இருக்கேன். டவர் கிடைக்கல... ம்...இப்ப, கேளுங்க.

ஸார், கல்யாணம் செய்யப்போற இந்தக்கால சந்ததியினருக்கு நீங்க சொல்ற அறிவுரை என்ன ?
வீட்டுக்கு வர்ற அம்மாகிட்ட எல்லாத்தையுமே விட்டு கொடுக்கணும். 

எல்லாத்தையும்னா... என்ன ஸார்...
வீட்டு பத்திரம் தொடங்கி, வீட்டு அலமாரிச்சாவி, சூடு, சொரனை, மானம் இப்படி எல்லாத்தையுமே, விட்டு கொடுத்துப் போயிட்டா எந்தப் பிரச்சனையுமே வராது. 

ஏன் ஸார், இப்படி விட்டு கொடுத்தால் ஆண்களோட தன்மானம் என்ன ஆகும் ?
ஒன்னும் ஆகாது தன்மானத்துக்குன்னு ஏதாவது உருவம் இருக்கா ? எல்லாத்துக்கும் மனசுதான் காரணம்.

ஏன் ஸார் ஒரு கழகத்தலைவரா இருக்கிற நீங்களே இப்படி தன்மானத்தை விட்டு கொடுத்து பேசுறீங்களே உங்களுக்கு வெட்கமா இல்லையா  
எவ்வளவோ, நம்மை விட்டுப்போச்சு, தன்மானம் போனா என்னா வந்தா என்ன ?

என்ன ஸார், தன்மானத்தை இவ்வளவு சுலபமா சொல்றீங்க,
ஏன் தன்மானம்னு, தனியா நினைக்கிறீங்க நம்மானம்னு, பொதுவுல விட்டுப்பாருங்க. 

ஏன் ஸார் நீங்க, எப்பவுமே, விரக்கியிலேயே பேசுறீங்க உங்களுக்கு வாழ்க்கையில விரக்தியா  
ஆமா.

வாழ்க்கை விரக்திக்கு காரணம், சொல்ல முடியுமா ஸார்  
காரணம்.... வாழ்க்கை மேலுள்ள விரக்கிதான்.

நல்லா விட்டு அடிப்பீங்க போலயே.
விட்டு அடிக்கிறது என் வாழ்க்கையில எப்பவோ என்னை விட்டு போச்சு.

இதுகூட நல்ல விட்டு போலத்தான் இருக்கு.
இப்ப என்னை, விட்டுயல்னா நல்லாயிருக்கும், வீட்டு வசதி, வாரியத்தில எனக்கு ஒரு மீட்டிங் இருக்கு. 

அப்பநான் வீட்டுல வந்து பார்க்கலாமா ஸார் ?
கண்டிப்பா வாங்க வெட்கமா இல்லையான்னு கேட்டீங்களே வீட்டுக்கு வாங்க காட்றேன் எப்ப, வருவீங்க ?  

ஆபீஸ் முடிஞ்சதும் என் லவ்வரை, அவவீட்டு விட்டுட்டு வர்றேன் ஸார்.
கூட்டிக்கிட்டு வந்தாக்கூட நல்லதுதான், வரும்போது வண்டிய வீட்டுக்கு வெளியில கொஞ்சம் தூரமா விட்டுட்டு வாங்க.

சரி ஸார்.
வீட்டு வாசல்லயே உங்களுக்கு வரவேற்பு கிடைக்கும், கண்டிப்பா வாங்க.
சந்தோஷம் ஸார்.

சாம்பசிவம்-
போகும்போது உன் லவ்வரை வீட்டு விட்டுட்டு போய்யா அதான் நல்லது, உனக்கு அடி கொடுத்தாலும் பரவாயில்லே..உன் ஆளுக்கு இடி கொடுத்துடப் போறாங்கே. அப்படியே, உன் வீட்டுல சொல்லி விட்டுப்போ வாயக் கொடுத்துட்டு, டிக்கியப் புண்ணாக்கப் போறீயேய்யா விட்டு விளாசப் போறாங்கே.. போ.
காணொளி

70 கருத்துகள்:

 1. வெட்கம், மானம், சூடு, சொரணை. இதுதான் கரெக்ட் ஆர்டர். இப்படித்தான் சொல்லணும்.

  பதிலளிநீக்கு
 2. தோசை போடுவீங்கன்னு வந்தா ஒண்ணையும் காணமே?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் எங்கே ? சொன்னேன் நிருபர் லொடக்கு லோகநாதன் சொன்னது அவரைப்போயி பிடிங்க.

   நீக்கு
 3. எவ்வளவோ நம்மை விட்டுப் போச்சி... சரி தான்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் ஜி எல்லாமே போனதால்தானே அரிசி விலை இந்த ஏற்றம்.

   நீக்கு
 4. தம +
  சிரித்தோம்
  வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 5. கடைசிவரை தோசையை காணோமே, நல்ல நகைசுவை!
  த ம 5

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதான் கடைசியிலே இருக்கே எடுத்துகொள்ளலாமே... 5 இட்டது ரூபன் என காண்பிக்கின்றது.

   நீக்கு
  2. நண்பரே காலையில் நெடொர்க் பிரச்சனையால் ஓட்டு விழ வில்லை இப்போது போட்டு விட்டேன்.
   த ம 10

   நீக்கு
  3. ஆஹா 5 க்கு பதிலாக 10 ஸூப்பர்.

   நீக்கு
 6. பெரிய தோசை என சொல்லி ஆசை காட்டி மோசம் செய்துவிட்டீர்களே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே மண் டி.வி யின் பெரிய தோசை புரோக்ராமுக்கு போனீங்கன்னா தோசை கிடைக்கலாம்.

   நீக்கு
 7. வணக்கம்.
  ஜி

  உண்மையில் சிரித்தேன் ஜி.நல்ல நகைச்சுவை கலந்த கலவை.பகிர்வுக்கு நன்றி

  நன்றி
  அன்புடன்
  ரூபன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ரூபன் உண்மையாய் ரசித்தமைக்கு உண்மையான நன்றி.

   நீக்கு
 8. வணக்கம் நண்பா!
  நட்டு வைத்து செடி நட்டால்
  நன்மை பல உண்டு நண்பா
  விட்டு விட்டு சிரிப்பதனால்
  நம்தமிழ் மட்டுபட்டு போகுதன்றோ!

  சிரியாய் சிரிக்க வைத்த தமிழ்
  உயிர்(எழுத்தை)காணொளியை
  கண்டு மனம் அழுதது.
  நட்புடன்,
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பரின் வருகைக்கும் வாழ்த்துப்பாவிற்க்கும் நன்றி.

   நீக்கு
 9. நல்ல நகைச்சவை கலந்த பதிவு . படித்தேன் ரசித்தேன் !!

  பதிலளிநீக்கு
 10. வணக்கம் சகோ. எப்படி இருக்கிங்க ?
  லொடக்கு லோகநாதன் பெயர்களும் சிரிப்பை வரவைத்தன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நலமே தங்களின் வருகைக்கும், கருத்துரைக்கும், வாக்கிற்க்கும் ரசித்து சிரித்தமைக்கும் நன்றி.
   6 பதிவு முடிந்து 7 வது பதிவுக்குதான் வருவது என்ற உங்களோட இந்த பாலிஸி எனக்கு பிடிச்சுருக்கு.

   நீக்கு
 11. இதுக்குப் பேர்தான் பெர்ய தோசையா?விட்டு வீட்டு வார்த்தைகளை விட்டுப் பார்த்தால் தோசையில் என்னமிஞ்சும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா, தோசையை புட்டு புட்டுதானே திங்கனும்.

   நீக்கு
 12. கடைசியில் தோசை படத்தையாவது காட்டினீர்களே!!!
  நல்ல நகைச்சுவையான பதிவு... நன்றி...

  வாழ்க வளமுடன்.....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சகோ உங்களைப் போன்ற சமையல் கலைஞர்கள் வந்தால் சாப்பிடத்தான்.

   நீக்கு
 13. தேரோட்டம் பாத்துட்டு வர்றதுக்குள்ள -
  வெச்சிருந்த தோசை காணாப் போச்சே!..

  சாமி சாம்பசிவம் குறி பாத்துச் சொல்லுங்களேங்!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி அவரும் தேரோட்டம் பார்க்க வந்ததாக தகவல்.

   நீக்கு
 14. ஜி தோசை கிடைக்கும் என்று வந்தால்,,,,,,,,,,,,,

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதான் தோசையும் சட்னியும் சாம்பாரோடு இருக்கே...

   நீக்கு
 15. விட்டு விளையாடிட்டீங்க போலேருக்கு! வீட்டுக்குப் போனா தோசை கிடைக்கும் - முதுகில்!

  பதிலளிநீக்கு
 16. ,இங்கே..எல்லாமே..பிரச்சினையாகத்தான் இருக்கு நண்பரே...

  பதிலளிநீக்கு
 17. அன்புள்ள ஜி,

  ‘கற்றது கைமண் அளவு... கல்லாதது உலகளவு’ என்ற பழமொழியை பாருக்கு உணர்த்தும் படம்.

  விட்டு விட்டு அடித்தாலும்...விடாமல் சிரிக்க வைக்க வேண்டும் என்று விட்டத்தீர்கள்...!

  திண்டுக்கல் லியோனியின் உயிரெழுத்துகளின் உயிருள்ள சிரிப்பு... அருமை.

  நன்றி.
  த.ம.14.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மணவையாரின் வருகைக்கும், பழமொழியை உணர்த்தியமைக்கும் கருத்துரைக்கும், வாக்கிற்க்கும் நன்றி.

   நீக்கு
 18. படத்திலயாவது தோசையை காட்டினீங்களே.ம்...ம்..ம். அதுவரை சந்தோஷம்.
  பதிவு அருமை ரசித்தேன். வாழ்த்துக்கள் ...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிச்சயமா உங்களோட பஞ்சாயத்து வரக்கூடாதுனுதான் நேற்று முணியாண்டி விலாஸ்ல போயி வாங்கி வந்து வைத்தேன்.

   நீக்கு
 19. pபசியோட வந்தா தோசையக் காணோம்....சரி இப்பதான் மாவாட்ட போயிருக்கீங்க போல நினைச்சு வெளிய போய்டு வந்தா அப்பவும் தோசையக் காணோம்? லொடக்கு லோகநாதன் வீட்டுக்க்ப் போனா கிடைக்குமோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எதுக்கும் போயிப்பாருங்களேன் கிடைக்கலாம் அவனே 7 மலை வீட்டுக்கு வாங்கத்தான் போயிருக்கானாம்.

   நீக்கு
 20. ஆசை..............தோசை..........

  என்ன வழக்கம்போலச் சுடச்சுடத் திங்க முடியல!

  இருந்தாலும் நகைச்சுவை இனிமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சுடச்சுட சாப்பிடனும்னா காலையிலே வரணும் சாயங்காலம் வந்தால்....

   நீக்கு
 21. வணக்கம் சகோதரரே.!

  கல்யாணம் செய்து கொள்ளும் இந்தக் கால சந்ததியினருக்கு சொன்ன அறிவுரை நன்று. உண்மையிலேயே நல்ல விட்டு பதிவுதான். நானும் படிக்கும் வரை பதிவை விட்டு கண்கள் வேறெங்கும் அகற்றாது படித்து விட்டுதான் முடித்தேன்.
  அருமையாக தங்கள் கற்பனையை தட்டி விட்டதற்கு நன்றிகள்.
  நன்றியுடன்,
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மறக்காமல் பதிவை படித்து விட்டு கருத்துரை எழுதி விட்டு சென்றமைக்கு நன்றி.

   நீக்கு
 22. viju சார் வரும்போதே ஆறிப் போச்சு ,நான் வரும்போது காலியாவே போச்சு .அடுத்த தடவை சீக்கிரமே வந்துடுறேன் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படினா அடுத்தும் தோசை பதிவு போடனுமா ? ஜி

   நீக்கு
 23. உங்களோட பதிவு ஒன்றுதான், விட்டதையும் படித்துவிட்டு கருத்துபோடமுடிந்தால் கருத்தும்,வாக்கும் இடுவேன் இப்போதும் அப்படித்தான் (லேட்)முதல் பதிவுக்கு கருத்(voteம்)திட்டு இப்பதிவை வாசித்தால் அந்த கனதியான மனது மிக லேசாகி, வாய்விட்டு ரசித்து சிரித்தேன்.அதுவும் "வாழ்க்கை விரக்திக்கு காரணம்"? வாழ்க்கை மேலுள்ள விரக்தி. பதில் சூப்பர்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ எனது தொடர் வாக்காளர் பட்டியலில் தாங்கள் என்றும் இருப்பது தண்டு மகிழ்ச்சியுடன் நன்றி.

   நீக்கு
 24. பெரிய தோசை - ஃபேமிலி தோசை குடுக்கப் போறீங்கன்னு நினைச்சேன்! :)

  த.ம. +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே அடுத்த முறை சப்பாத்தி போடுகிறேன்.

   நீக்கு
 25. விட்டு விட்டு படிக்காமல் முழுமையாக பதிவினைப் படித்தேன். தங்களது நகைச்சுவை உணர்வும், கற்பனை உணர்வும் பதிவு முழுவதும் காணப்பட்டது. அதே சமயம் நீதிநெறிக்கதைகளில் காணப்படுவதுபோல் ஒரு செய்தியை ஆழமாகச் சொல்லும் உங்களது எழுத்துப்பாணி பாராட்டத்தக்கது. அதுவும் இப்பதிவில் இருந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முனைவர் அவர்களின் இந்த வகையான விமர்சனமே என்னை இன்னும் அழகாக, ஆழமான கருத்துடன் எழுத வைக்கும் நன்றி.

   நீக்கு
 26. பெயரில்லா4/21/2015 3:59 பிற்பகல்

  என்னக் கருத்தொலியில் எழுதி வந்த வன்ன தோசை வாய் வரைக்கும் வந்ததுவோ வாய்க்காலில் விழுந்ததுவோ சொல்லிறைக்கி வைத்தால் மட்டும் கரடிக்கு காஷ்மீரம் தூரம் என்றரிந்திடுமா ? இல்லை ஏற்றம் இறைக்கையில் இலகுவாக்கு பதிவிலக்கம் பாட்டான்கில் வைத்து வைத்து பல் நூறு தோப்புக் கரனங்களை தொல்வகயில் சிலுப்பியது போல் செய்திட்டால் முறையாகுமா என்றே வினவுங்கால் முற்றத்தில் சப்பனமிட்டு முகத்தை முழுதாக்கி முன்னூறு வரி படித்து மௌனத்தில் சன்னிதியில் சானிஸ்பத நிமிடத்தை கரைப்பதுவா ? வன்ன எழுத்தில் வரைந்திட்ட தோசை இதை சொல்வரவில் விட்டுவைத்தால் இல் பொருளில் இருப்பதை சுயமாக விளங்க சூத்திரங்கள் வேண்டுவதா ? ஜம்புலிங்க அய்யா சொன்னது போல் ஆற்றாற்றிப் படுத்தும் அருங்கலையில் அவ்வையாரின் அருஞ்சீடர் அருவனச்சோதியராய் மின்னுகிறீர் நீவீர். சிட்டகையில் சீர்படுத்தும் செந்தூர வன்ன பதிவு இட்டால் எல்லாம் நலமே என்றால் வாட்டமிக்கமாக தோட்டங்களைந்திட மேகதாது விவகாராத்தில் வெடித்தெழ வேண்டாமா ? கில்லர்ஜி எனும் கணிகைப் பெயர் கொண்டு என்ன பயண் கண்டுடீவீர் ? பர்பூர்ன சமத்துவத்தில் பார்புகழ் நிர்பதுவா ? புது மோட்டர் சட்டத்தை எதிர்திடவா ? சார்மீக் நிமடத்தின் சாட்சியாக் போகலாமா ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பெயரில்லா நண்பரின் கவிதை போன்ற கருத்துரைக்கு நன்றி இருப்பினும் சில விடயங்கள் இன்னும் புரியவில்லை நண்பரே மன்னிக்கவும்.

   நீக்கு
 27. பெரிய தோசை பார்க்க வந்தால் சிரிப்புவெடிதான்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே வருகை தந்து வாக்கும் அளித்தமைக்கு நன்றி

   நீக்கு
 28. பெயரில்லா4/22/2015 11:33 முற்பகல்

  சலவைக் காகிதத்தில் பூப்பதல்ல காட்டு ரோஜா முள்ளை எடுத்துவிட்டால் பிழைந்த்திடுமா பூஞ் செடிகள். கஷ்டமில்லாமல் பூஞ்சானம் விளையும் புது நெல் அறுக்க ஏலாது அய்யனே. கட்டுப்பாடுகளுடன் தம் மொழி அறிவை வளர்த்து சாங்கோப சாகரத்தின் மீட்சியான தத்துவ விகாரத்தின் தனித் தன்மை உனர்ந்திருந்தால் இப்படி தம் மொழிக்கே விளக்க உரை கேட்கும் அவலம் இருந்திருக்காது என்று உரைக்கும் போதே விசால மனாசிகம் நிரைந்த பொங்கும் பூம் புனலின் உற்சாகத்தோடு ஆதிர சம்பத்துக்களின் குணம் அறிய கொஞ்சம் உள் கட்டமைப்பின் உவந்த உழைப்பு அவசியமாகிறது என்று கோடிட்டு காட்ட விளைகிறேன். தமிழனின் மர மண்டைக்கு முள்ளிவாய்க்களின் அழுகுரல் புரியாது….ஹிந்தி தினிக்கப்படுவதினால் வரும் வான்கூட்ட பெரு வழுத்த துயரமாவது இப்போது புரியாது. சமுத்திர சாகரத்தின் சாட்டுவ நிலையில் நிற்கும் மீனவனின் மீளாத் துயரம் புரியாது குருசடைத் தீவை கூலிக் காரர்களிடம் பாங்கான பரிச்சய சம்ராட்டினம் செய்ய கொடுத்த பெளகீக வட்டையம் புரியாது சடையன் காட்டில் விவசாய நிலங்கள் ப்ளாட் ஆனால் புரியாது. முள்ளிக் கூண்டில் குளம் ஆக்கிரமித்தால் செய்வதறியாது வெளிநாட்டுக்கு ஓடத் தெரியும். டூரிஸ்ட் கிளப் ஏரியாவே சரணமாவார்கள் .கர்நாடக அனைக்கட்டி முடித்தால் நம் ஒங்கு தாங்கிய ஒர்சீர்படுத்திய அவ்விய விவசாயம் என்னாகும் புரியாது. வன்ன வன்ன எழுத்துக்களில் தோசை வார்ப்பார்கள் குங்கிலயத்தின் வசனை அறியாத இந்த புது தமிழ் இளைய சமுதாயாம் வின்னார்த்த சூட்சமத்தின் விடை அறியாது.
  தண்டியலங்காரம் எனும் இலக்கண வரைவை புறந்தள்ளிய இந்த ஓட்டை தமிழ் சமூகத்துக்கு எது புரியும் ? தலையபிய்த்து அலையவேண்டியது அவ்வளவே
  ”டெராபைட்” தாமஸ்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனிய நண்பர் டெராபைட் தாமஸ் அவர்களுக்கு பெயர் அறிந்து மகிழ்தேன் சுற்றி வளைத்து என்னை மரமண்டை என்று சொன்னது புரிகிறது அதேநேரம் பதிவு பந்தப்பட்ட கருத்துரை வழங்கினால் நலம் அழகு தமிழில் எழுதும் தங்களின் தமிழை ரசித்தேன் நன்றி.

   நீக்கு
 29. பெயரில்லா4/23/2015 12:38 பிற்பகல்

  என் பெயர் அறிவுனர்ந்த நிலை தங்களுக்கு பரிவுபந்த பரிஜாதபூக்களை ஸ்பரிசித்த மாதிரி இருந்ததறிந்து பாசுபதமான மகிழ்ச்சி. என் முதலாக்கிய விபரன பின் பொழிவுரை தங்கள் தோசையைப் பற்றியே இருந்தது என இயம்பக் கட்டுடை நேர்த்திமையான கடமைப் பட்டுள்ளேன். வன்ன எழுத்துக்களில் தோசை இடுவதும் கூட ஒரு வகையான சாருகேசித் தனம் என்று செப்புகிலேன் என்கினும் சொல் பெருத்த சட்டகம் செய்வதை விட மீனவ சமூகத்தை சரிபார்த்து செல்ல வாதிர உத்வேகமளிக்கவில்லை எனும் கால் சாதரான விவசாயிகளின் உயிர்மை பரித்தலான கிடக்கை நிலங்கள் எல்லாம வன்னக் கொடிகட்டிய ப்ளாட்டுகளாக மரித்தலை உங்கள் கொண்ட மதனகார செம்மிய நவச்சிய சமூகம் மறுதளிப்பதும் கீரனசிலாக்கியமாக இருப்பது தவறென்றேன். தவறென்றால் என் வேங்கிள சங்கரம் நிறைந்த பொது செளக்கிய குனத்தையும் டீபிரிட்டோ தாமஸ் என்பவனாகிய என்னுடைய தண்டியலங்காரத் தமிழையும் முன் நிறுத்தி திட்டுங்கள் ....திட்டுங்கள் , நான் வேற என்னெ செய்ய.
  ”டெரா பைட்” தாமஸ்.
  (பெயரைக் குறிப்பிடும் போது டெராபைட் -க்கு கொட்டேஷன் கொடுக்க மறக்காதீர்)

  பதிலளிநீக்கு
 30. தங்களது மீள் வரவும் விளக்கவுரையும் கண்டு மகிழ்ச்சி நண்பர் ''டெராபைட் '' தாமஸ் அவர்களே....

  பதிலளிநீக்கு