தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, செப்டம்பர் 09, 2017

தாலாட்டு


கண்மணி கண்ணழகே கண்ணுறங்கு கற்பகமே
செல்வமணி செண்பகமே கண்ணுறங்கு செந்தமிழே
முத்துமணி முத்தழகே கண்ணுறங்கு முத்தமிழே
பவளமணி பவளமுத்தே கண்ணுறங்கு பைந்தமிழே
ஆராரோ... ஆரிராரிரோ... ஆராரோ... ஆரிராரிரோ..

. தங்கமணி தங்கமயிலே கண்ணுறங்கு தங்கரதம்
வைரமணி வைடுரியமே கண்ணுறங்கு களஞ்சியமே
பொன்னுமணி பொன்மயிலே கண்ணுறங்கு பெட்டகமே
கருகமணி கருப்புமுத்தே கண்ணுறங்கு கனிச்சுவையே
ஆராரோ... ஆரிராரிரோ... ஆராரோ... ஆரிராரிரோ...

தாய்மாமன் வரபோறார் தங்கநகை செய்துக்கிட்டு
சித்தி வரப்போறாள் சீதனமும் கொண்டுக்கிட்டு
தாத்தா வரப்போறார் முத்தமிட தலையைத் தொட்டு
பாட்டி வரப்போறார் முத்தமிட பாதம் தொட்டு
ஆராரோ... ஆரிராரிரோ... ஆராரோ... ஆரிராரிரோ...

சிவாதாமஸ்அலி-
வரப்போற கூட்டம் One Site டாவே இருக்குதே.... ?

54 கருத்துகள்:

  1. கண்ணுறங்கு பொட்டகமே... பெட்டகமே என்று வரவேண்டுமோ?

    ரசித்தேன் நண்பரே.....

    பதிலளிநீக்கு
  2. ஆவ்.....தூங்கிட்டோம் ஜி!.இதுலருந்து என தெரியுது!!...தாலாட்டு நல்லாருக்குன்னு..அப்புறம் நாங்களும் சின்னப் புள்ளைங்கன்னு சைக்கிள் காப்பில்.. சொல்லிக்கிட்டோம் ஹிஹிஹிஹி.....

    ரசித்தோம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது குழந்தைக்காக குழந்தை பாடிய பாட்டுதான்...

      நீக்கு
    2. அதாவது கொடுவா மீசை குழந்தை
      --
      Jayakumar

      நீக்கு
    3. வாங்க ஐயா நன்றி

      நீக்கு
  3. ஓஹோ... ஊர்லபோய் தாலாட்டுலாம் கத்துக்கிட்டீங்களா?

    நல்லா இருக்கு. ஆனா குழந்தைக்கு நீங்க ஒண்ணும் வாங்கப்போறதில்லை போலிருக்கே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாம அதெல்லாம் வாங்குறதுன்னா..
      ஒறவு மொறை என்னத்துக்கு இருக்கு!?...

      நீக்கு
    2. தாலாட்டு தாலாட்டு..
      செந்தமிழன் தாலாட்டு!..
      செங்கனியே கண்ணுறங்கு
      நல்லதமிழ் நீகேட்டு!..

      அப்புறமானா கேக்க விடமாட்டாங்கே!..
      இங்கே அரசியல் அப்படி ஆகிப்போச்சி!..

      நீக்கு
    3. துரை செல்வராஜ் - அட்டகாசம் போங்க!

      நீக்கு
    4. அன்பின் திரு அப்பாதுரை அவர்களின் பாராட்டுரைக்கு மனமார்ந்த நன்றி.. மகிழ்ச்சி..

      நீக்கு
    5. வருக நண்பர் திரு. நெ.த. அவர்களே... கதைகள் கேட்டு வளர்ந்தவர்கள்தானே நாம்

      நீக்கு
    6. அன்பின் ஜி தங்களின் கவிதை வரிகள் அருமை.

      நீக்கு
  4. படிக்கும் போதே நான் தூங்கிட்டேன். நல்லா தூங்க வைக்கிறீங்க. தமிழ்மணம் வாக்குச்சீட்டு என்ன ஆனது. எனது தளத்திலும் காணவில்லை. யாரோ களவாடி விட்டார்கள். காவல்துறை இருசக்கர வாகனங்களை பிடிப்பதில் மும்முரமாய் இருக்கிறது. நாம்தான் கண்டுபிடிக்க வேண்டும் போல இருக்கிறதே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே நன்றி அது கிடக்கட்டும் வந்தாலும் வரட்டும், வராவிட்டாலும் பிரச்சனை இல்லை.

      நீக்கு
  5. தாலாட்டை ரசிக்காதோர் யார்? அதுவும் உங்களுடைய தாலாட்டை,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவர் அவர்களின் ரசிப்புக்கு நன்றி.

      நீக்கு
  6. அட, கில்லர்ஜி, கொஞ்ச நாட்களாவே நான் தாலாட்டுக்களைப் பகிர நினைத்து வந்தேன்! :) ஹிஹிஹி க்ரேட் பீபிள் திங்க் அலைக்! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ பதிவைப் போடுங்கள் தாலாட்டு என்னைவிட உங்களுக்கே நன்றாக தெரியும்.

      நீக்கு
  7. சில தாய்மார்கள் இம்மாதிரி தாலசட்டுப் பாடல்களில் அவர்களது உறவுகள் பெருமை பற்றியும் கணவரது உறவுகளைத் தூற்றியும்பாடுவார்களாம் மாமன் வருவார் மணக்க மணக்க மல்லிகைப்பூ சாத்திடுவார் படுபாவி அத்தையவள் பாம்பெடுத்து மேலிடுவள் இப்படிப் போகும் பாட்டு நினைவுக்கு வரவில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா இப்படிப் பாடியே குடும்பத்தில் சண்டையை மூட்டுபவர்களும்
      உண்டு.

      நீக்கு
  8. தாலாட்டு பாடல் அருமை. வரவர கவிதையில் கலக்குகிறீர்கள். வாழ்த்துகளும் பாராட்டுகளும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரின் வாழ்த்தும், பாராட்டும் இன்னும் எழுத வைக்கும்.

      நீக்கு
  9. ரசித்தேன்.

    லைப்பே ஒரு இளையராஜா கானத்தை நினைவு படுத்தி விட்டது. உங்கள் கவிதை வரிகளோ எம் எஸ் வி பாடலொன்றை நினைவு படுத்தியது. ஒன்றைத் தருகிறேன். இன்னொன்று எது என்று கண்டுபிடிக்க முடியுமா?!!

    தென்பொதிகையில் நின்றுலவிடும் தென்றல் போல வந்தவன்
    செந்தமிழினில் சிந்திசைக்க சந்தம் கொண்டு தந்தவன்...

    https://www.youtube.com/watch?v=bUVw61DqKVA

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி தண்ணீர் தண்ணீர் படத்தில்
      கண்ணான பூமகனே கண்ணுறங்கு சூரியனே என்ற பி. சுசீலா பாடல் உண்டு.

      நீக்கு
  10. ரசித்தேன் நண்பரே

    பதிலளிநீக்கு
  11. தாலாட்டுப்பாடல் மிக அருமை!

    பதிலளிநீக்கு
  12. உங்க பாட்டைக் கேட்டு கொட்டாவியா வருது ,காலையில் பார்ப்போம் ஜி :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாருங்கோ கில்லர்ஜி .. பகவான் ஜீ தப்பி ஓடுவதற்கு, உங்கள் பாட்டுப் பலியாகியிருக்கு:).. விடாதீங்க..:)

      நீக்கு
    2. அம்பூட்டு நல்லாவா இருக்கு ஜி.

      நீக்கு
    3. பாட்டு பலியாகிடுச்சா.....

      நீக்கு
  13. கில்லர்ஜி தாலாட்டுப் பாடி 12 மணித்தியாலமாச்சுது.. இப்போதான் எனக்குக் கேட்டுது:)..

    அது சரி உகண்டா மாப்பிள்ளை.. பிளேனில போனகதை.. நடிகையைச் சந்தித்த கதை என விதம் விதமா பல கதை சொல்லிக்கொண்டிருந்த நீங்க.. இப்போ திடீரெனத் தாலாட்டுப் பாடும்போது.. நேக்கு டவுட்டு டவுட்டா வருதே:))

    பதிலளிநீக்கு
  14. வரப்போகிற கூட்டமெல்லாம் வன் சைட்டாவே வருதே/////

    ஹா ஹா ஹா உங்களுக்குப் புரிவது அனைவருக்கும் புரிந்தால் சந்தோசமே... எங்களுக்கு இந்த வன் சைட் பிரச்சனை எல்லாம் இல்லை.. இரு பக்கமும் போட்டி போட்டுச் செய்வார்கள்..

    சீர், பொருள் பணத்தைப் பொறுத்தவரை.. இவர்கள்தான் செய்ய வேணும் எனும் சட்டமேதும் இல்லை:).. ஆனா குழந்தையைத் தொட்டிலில் போடுவது... பல் முளைக்கும்போது பல்லுக் கொழுக்கட்டை கொட்டுவது இரண்டு உரிமையும் தாய் மாமனுக்கே... அவர் தன் வசதிக்கும் விருப்பத்துக்கும் ஏற்ப அவராக விரும்பி எதுவும் செய்வார்... மற்றும்படி எதுவும் செய்யாவிட்டாலும் ஓகே.. குறை இல்லை.. எதிர்பார்ப்பதும் இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க இப்பொழுது மாமன் சீர் எல்லாம் மலையேறி விட்டது.

      நீக்கு
  15. தாலாட்டு இனிமை தனி தான். வார்த்தையே இல்லாமல் வெறும் ஒலியால் தாலாட்டு பாடிய ஊமை ஒருவரைக் கண்ட போது இனிய திடுக்கிடல். என் தாத்தா என் தங்கையைத் தோளில் சாய்த்து தாலாட்டு பாடுவார் - தூங்குடி தூங்குடி தூங்குடி - இவ்வளவு தான் அவருடைய தாலாட்டு வார்த்தைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே வார்த்தைகள் இல்லாமலே ஹம்மிங் செய்து பாடலாம்தானே... வருகைக்கு நன்றி

      நீக்கு
  16. வணக்கம் ஜி !

    வல்லகவி ராயர் வகுத்ததமிழ் முத்தெனவே
    கில்லர் ஜி பாடுகிறார் கிளிமொழியே கண்ணுறங்கு
    நல்லகவி நாளும் நயந்தகம்பன் சொத்தெனவே
    வெல்லமன முள்ள..ஜி விழித்திருப்பார் கண்ணுறங்கு !

    அருமையா இருக்கு ஜி தொடர்ந்து எழுதுங்கள்

    வாழ்க நூறாண்டு வளத்துடனும் நலத்துடனும் !

    ஜி தமன்னா ஹிதரே......

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாவலரின் கவிதை வரிகள் அருமை வருகைக்கு நன்றி

      நீக்கு
  17. பாடல் அருமை
    ரசித்தேன் நண்பரே

    பதிலளிநீக்கு
  18. அருமையான வரிகள்...
    ரசித்தேன் அண்ணா.

    பதிலளிநீக்கு
  19. நல்ல தாலாட்டு,வாழ்த்துக்கள்.தாத்தாவும் தங்கையும்ம்சித்தியும்,பாட்டியும் பக்கத்தில்
    வந்து மனம் தொட்டு பாராட்டட்டும்/
    தாலாட்டட்டும் வாழ்த்துக்கள்/

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரின் வருகைக்கும், விரிவான கருத்தைக்கும் நன்றி

      நீக்கு
  20. தாலாட்டு நன்றாக இருக்கிறது. நாளா ஒரு சந்தேகம், தாலாட்டு பாடல்களில் ஆராரோ, ஆரிராரோவுக்கு பொருள்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல சந்தேகம்தான் இதுவரை யாரும் கேட்டதுமில்லை, சொன்னதுமில்லையே...

      நீக்கு
  21. அருமையான தாலாட்டு பகிர்வு.
    உங்கள் ஊரில் நகரத்தார் வீடுகளில் தாலாட்டு பாட்டு மிகவும் நன்றாக பாடுவார்கள்.
    நானே என் குழந்தைக்கு தாலாட்டு பாடல் இயற்றி பாடிய பதிவு முன்பு போட்டு இருக்கிறேன்.
    பேரன்களுக்கும் பேத்திக்கும் அந்த பாடலை பாடி தூங்க வைத்து இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ எங்கள் ஊர் தாலாட்டுப்பாட்டு மிகவும் பிரசித்தி பெற்றதே வருகைக்கு நன்றி.

      நீக்கு