தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, நவம்பர் 17, 2013

ஆணா ? பெண்ணா ?


கிளி, மாதிரி இருக்காளே
மயில், போல ஆடுறாளே
குயில், போல பாடுறாளே
மான், போல ஓடுறாளே
பெண்களைப்பற்றி, இப்படி நாலு வார்த்தை கௌரவமாக சொன்னவன் ஆண்களை மட்டும்,

யானை, போல நடந்து வர்றான் பாரு
குள்ளநரி, போல தந்திரக்காரன்
நாய், போல நன்றியானவன்
சிங்கம், போல தைரியமா போவான்
கழுதை, போல சுமக்கத்தான் லாயக்கு
மாடு, போல நல்லா உழைப்பான்
கழுகு, மூக்கு வேர்த்தது போல வருவான்
பன்றி, மாதிரி திங்கிறான் பாரு
குதிரை, மாதிரி நல்லா ஓடுவான்
ஒட்டகச்சிவிங்கி, மாதிரி வளந்திருக்கான்
ஆமை, மாதிரி நுழைஞ்சிட்டான்யா
நல்லபாம்பு, கிட்ட பழகுறமாதிரில இவன்
பச்சோந்தி, மாதிரி மாறிக்கிட்டே இருப்பான்
தேள், கொட்டுற மாதிரி பேசுவான்யா
காக்கா, பிடிக்கிறதுல சரியான ஆளுய்யா
கோழி, தவிட்டை முழுங்குறது மாதிரி முழுங்குவான்
ஆந்தை, போல முழிக்கிறான் பாரு
உடும்பு, பிடில பிடிக்கிறான்
திமிங்கலம், மாதிரி உடம்பை வளத்துருக்கான்
குரங்கு, மாதிரி தாவுறானே

என, ஏன் இப்படி கேவலமா சொல்லி வச்சான்  ?  ஒரு வேளை இதையெல்லாம் சொல்லி வச்சது பெண்ணாக இருக்குமோ ?

2 கருத்துகள்:

  1. பெண்களையும்தான் இப்படி எல்லாம் சொல்கிறோம் நீங்கள் கேள்விப்பட்டதில்லையா,?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா இருந்தாலும் ஆண்களுக்கு கூடுதல்தானே...

      நீக்கு