தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், பிப்ரவரி 19, 2015

முயற்சி, திருவினையாக்கும்.

 
ன்பை, நான் கொடுத்தேன்
சையை, நீ தொடுத்தாய்
ன்பம், தந்த இறையருளால்
ன்றெடுத்தேன், நம் மகனை
ன், தமிழ்ப்பெயரை உச்சரித்து
ரெல்லாம், சொல்கிறானே
ன்மகன், செஞ்சடையோன்
க்கமுடன், கேட்கிறானே
ந்துவயது, நம்மகனும்
ரேயொரு, தங்கைகூட
டிவிளையாடிடவே, நான்
வையாகி, விடும்முன்னே
முயற்சிப்போமா ?
முத்தமிழ, 
முத்தழகா,   
முத்தெடுத்து, 
முத்தமிட....
முத்தத்திலே, தொட்டிலிட்டால்
முதல்பையன், ஆட்டிடுவான்
முனைந்திடுவோம், கட்டிலிலே
முதல்நாளாய், நினைத்திடுவோம்.
மூண்றாவது, குழந்தைக்கும்
மூண்றாண்டு, போகட்டுமே !
மூப்பையூரு, அத்தை
மூக்காயி, தந்த மகனே
மூக்கழகா, உன்
மூஞ்சிபோல, பிறக்கட்டுமே
மூண்று, முத்துக்களும்.
 
சாம்பசிவம்-
முயற்சி திருவினையாக்கும்னு, வாசுகியக்கா புருஷன், இதுக்குத்தான் சொன்னாரா ?


53 கருத்துகள்:

  1. வணக்கம்
    ஜி
    உயிரும் மெய்யும் சங்கமமிக்கும் கவித்துவம் கண்டு மகிழ்ந்தேன்.. மிக தெளிவாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி நண்பரே...

      நீக்கு
  2. வணக்கம்
    தமிழ் மணத்தில் இணைத்து விட்டேன் வாக்கு1

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  3. ஹ ஹா ஹா.......... இப்படி கவிதை பொழிந்தால்...
    3 என்ன 3X3கூட ஆகிவிடும்
    ஆனால்
    இந்தியாவும் இந்த பூமியும் தாங்காது....
    தம2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனால் என்ன நண்பா, பட்டாளத்துக்கு அனுப்புவோம். வருகைக்கும், கருத்துரைக்கும், வாக்கிற்க்கும் நன்றி.

      நீக்கு
  4. Kமுயற்சி திருவினையாக வாழ்த்துகள். நான் கூட என்னமோ நினைத்தேன்.

    பதிலளிநீக்கு
  5. வாழ்த்துகள் ஜி,,,,,,,,,,,,,,,,,,,

    பதிலளிநீக்கு
  6. உயிர் எழுத்துக்களால்
    தொடுத்த மாலை!

    உரியவருக்காக உயிர்
    தரித்த மாலை!

    தமிழ் அய்யன்
    "வள்ளுவனின்"

    சொல்லுக்கு சொந்த மாலை!

    எள் அளவும் சிறுமையின்றி
    வந்ததுவோ - இந்த
    தமிழ் மாலை!



    (மூக்கழகா மூஞ்சி போல் பிறக்கட்டுமே! மூன்று முத்துக்களும்!

    ஆஹா! வள்ளுவனின் காமத்துப் பாலை பருகியதால் பிறந்ததுவோ

    முத்துக்கள் மூன்றும் ! முத்தான ஆசைகள்!

    "முத்தான முத்தல்லவோ")


    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவியுடன் வாழ்த்திய கவிஞருக்கு நன்றிகள்.

      நீக்கு
  7. முன்னொரு காலத்தில் மூன்றுக்கு பிறகு வேண்டாம் என்றார்கள்.பிறகு நாமிருவர் நமக்கிருவர் என்றார்கள். அதன்பின் நாமிருவர் நமக்கொருவர் என்றார்கள். கடைசியாக நாமே குழந்தைகள் நமக்கெதுக்கு குழந்தைகள் என்றார்கள்.....இப்போ..புதுசா வந்த மணியக்காரர் அஞ்சு குழந்தைகளை பெத்து போடனும்முனு சொல்கிறார்கள். முத்தமிழுக்கும் முத்தழகனுக்கும் எது வசதியோ அது படி செய்து பழகுக...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே வசதிப்படியே இங்கே நிகழ்வுகள் நிகழ்கின்றன...மணியக்காரருக்கோ, Money தருபவருக்கோ அல்ல

      நீக்கு
  8. பெயரில்லா2/19/2015 3:02 PM

    EHIVUM NALLIRRUKU NALUPER SOLLUNGAPPA

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லா இல்லாவிட்டாலும் சொல்லலாம் நண்பரே நான் கோபப்படமாட்டேன், காரணம் இது கருத்து சுதந்திரம் உள்ள நாடு வருகைக்கு நன்றி நண்பரே....

      நீக்கு
  9. நீங்களுமா மூக்கழகன்!..

    பாவம் - இப்படியெல்லாம் நடக்கும்..ன்னு
    தெரியாம சொல்லிட்டாரு - வாசுகி அக்கா புருஷன்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்களுமா ? அப்படீனாக்கா ? அப்ப நீங்களுமா ?
      வருகைக்கு நன்றி ஜி

      நீக்கு
  10. வித்தியாசமாக எழுத முயற்சிக்கிறீர். முயற்சி திருவினையாகட்டும். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  11. தங்களுக்கு வந்த அழைப்பை கவிதையாக்கியுள்ளீரோ?

    வாழ்த்துக்கள்! அடுத்த படைப்பிற்காக காத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  12. அன்பின் ஜி..
    நமது தளத்தில் மீண்டும் - ஒரு காணொளி இணைத்துள்ளேன்.
    கிளித்தட்டு விளையாடுவது எப்படி என்று!.. கண்டு மகிழவும்..

    தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காண வந்தேன் காணத்தந்த அன்பின் ஜி அவர்களுக்கு நன்றி.

      நீக்கு
  13. அருமையான முயற்சி நண்பரே
    முயற்சியில் வென்றிருக்கிறீர் வாழ்த்துக்கள்
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி நண்பரே வார்த்தைகளின் பின்புலம் புரிந்து கொண்டேன் உண்மையே...

      நீக்கு
  14. எப்படீங்க ஜி... தொடரட்டும்... பாராட்டுக்கள்....

    பதிலளிநீக்கு
  15. கீழேயுள்ள home யை கிளிக்கின பிறகுதான் தெரிந்தது , 'வாசுகி அக்கா புருஷன் 'தான் லேட்டஸ்ட்டா வந்திருக்கார்ன்னு!
    தேதியையும் ,நேரத்தையும் தளத்தில் இணைக்க நல்ல நேரம் வரவேண்டுமா கில்லர் ஜி ?
    இளவயது ஔவையின் ஏக்கத்தை killi விடுங்க கில்லர்ஜி:)
    த ம 6

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி தேதியை இணைக்க முடியவில்லை அதில் பல பிரட்சினைகள் இருப்பதாக நண்பர் D.D. சொன்னார்.

      நீக்கு
  16. நவீன ஆத்திசூடியா? அடி ஆத்தி!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுகூட நல்லாயிருக்கே,,,,, அடியாத்தி....

      நீக்கு
  17. பேர் விளையாட்டில் இருந்து கவிதை விளையாட்டு... இது நவீன 'ஆத்தி' சூடியா அண்ணா...

    பதிலளிநீக்கு
  18. ஆக, இந்தியா சீனாவை முந்தனும்ன்னு முடிவு பண்ணிட்டீங்க ?!!!

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    பதிலளிநீக்கு
  19. ஆத்திச்சூடி வரிசையில் புதிய வரிகள். புதுமையான ஆத்திச்சூடி என்று பெயர் வைப்போமே !

    எனது இன்றைய பதிவு அபியும் நானும் !!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி வந்தேன் அபிநவ் கண்டேன்.

      நீக்கு
  20. முயற்சித்து எழுதிய உயிர்-மெய் கலந்த கவிதை அருமை! முயற்சிகள் தொடரட்டும்! நன்றி! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீண்ட இடைவெளி விட்டு மீண்டும் வருகை தந்தமைக்கு நன்றி.

      நீக்கு
  21. நேற்றிலிருந்து தங்களின் இந்த பதிவிற்கு கருத்துரையிட முயன்று தோற்றுக்கொண்டே இருக்கிறேன் . எனக்கு மட்டும் நெட்வொர்க் பிரச்சனை வருகிறது .

    அருமையான , ஆஹா போடவைக்கும் இனிமையாக , ஈகையான , உவகையான ,உள்ளுக்குள் ஊற்றெடுத்த வரிகளைக்கொண்டு , என்னை , ஏமாற்றமல் , ஐயத்திற்கிடமின்றி, ஒவ்வொரு பதிவையும் ஓர்மாதிரியாய் படைத்து கவருகின்றீரே ! தற்கால ஔவையோ தாம் ?

    தம+

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பா தங்களைக்காணோமென நேற்றெல்லாம் மோட்டார் சைக்கிளில் தேடினேன் நெட்வொர்க் நெடுமாறன் சதி செய்தாலும் தொடர்ந்து முயற்சி திருவினையாக்கும் 80தை நிரூபித்து விட்டீர்கள்.
      என்னை ஔவையோடு இணைக்காதீர்கள் அவரின் உண்மையான பேரன்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

      நீக்கு
  22. மூனும் மூக்கழகா மூஞ்சி மாதிரிதான் வேணுமா..ஏன் அப்படி???

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரே பதியோட மூஞ்சு போல குழந்தை இருந்தால் சதிக்கு என்றும் சந்தோஷமே...

      நீக்கு
  23. ஜி! சூப்பர் குறள்! ஆனா என்ன வாசுகி அக்கா புருஷன் 1 1/2 அடி ல சிக்கனமா முடிச்சு இந்த உலகத்துக்கே பொதுமறை ஆக்கிட்டுப் போனாரு...இந்தப் புதுக் குறள்/குரல் காராரு என்னடானா, மூணு முத்துக்கள்னு சொல்லி, 30 கோடிக்கும் மேல முடிவில்லாம முத்துக்களா கொடுக்க வைச்சுருவாரு போல உலகம் தாங்காதுய்யா.....

    அருமை ஜி!!!

    பதிலளிநீக்கு
  24. பரவாயில்லை ஜி! எத்தனை கோடி முத்துக்கள வைத்தாய் இறைவா இறைவா நு பாடிட வேண்டியதுதுஆன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உலகம் ஏன் ? தாங்காது உலக மக்கள் தொகை இன்று எவ்வளவு ? உங்களுக்கு பாடவா சொல்லிக்கொடுக்கணும் மொய் வைத்து வருகை தந்தமைக்கு நன்றி

      நீக்கு
  25. மகன் தங்கை கேட்பதை ரசித்தேன். ''ஓடிப்பிடித்து விளையாட ஒரு தம்பிப்பாப்பா வேண்டும் என்கூட....'' என்ற பாடல் நினைவிற்கு வந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவரின் வருகைக்கு நன்றி. தாங்கள் நினைவூட்டிய பாடலும் நல்ல சிந்தனைக்குறிய பாடலே...

      நீக்கு
  26. முயற்சி கவிதையாக்கும் என்பதும் உண்மை! நன்று!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயாவின் வருகைக்கும், கருத்துரைக்கும், வாக்கிற்க்கும் நன்றி.

      நீக்கு
  27. அழகாக,அருமையாக,நன்றாக தொடர்போடு எழுதியிருக்கிறீங்க. உங்க திறமைகளுக்கு பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும்.தாமதமான கருத்து மன்னிக்க.
    -நன்றி-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாமதமாயினும் கருத்துரை தந்தமைக்கு நன்றி சகோ.

      நீக்கு