அழகன்குளம்,
‘’அருவா‘’ அழகர்
and
ஜெகதாபட்டணம்,
‘’ஜெயின்‘’ ஜெயந்தி
ஏங்க,
வீட்டுல யாரும் இல்லையா ?
வாங்க,
யாரு ?
‘’கத்திக்குத்து’’ கதிர்வேலு
இருக்காருங்களா ?
அவரு ‘’பிளேடு’’ பிச்சைய பார்க்கப்
போயிருக்காரு.
நீங்க..... ?
நான்,
அவரு மனைவி ‘’ஜெயின்’’ ஜெயந்தி, நீங்க யாரு ?
நான்
‘’அருவா’’ அழகர்.
என்ன
விசயமா வந்தீங்கன்னு சொன்னீங்கன்னா ? அவரு வந்ததும் சொல்றேன்.
நம்ம
‘’வேல்கம்பு’’ வேலாயுதமும், ‘’திருக்கைவாலு’’ திருமாலும் சமரசமா போறதா
சொல்லிட்டாங்க அந்த விசயமா பேசனும் ‘’முச்சந்தி’’ முனுசாமி கடைக்கு
வரச்சொல்லுங்க, உங்களை எங்கேயோ பார்த்தது போல இருக்கே...
‘’சோடாபாட்டில்’’ சோமன் வீட்டுல
பார்த்திருப்பீங்க...
யாரு
‘’ஆசிட்’’ ஆறுமுகத்தோட
மச்சானைத்தானே சொல்றீங்க,
ஆமா,
ஆமா, அவருதான்.
சரிதான்,
அப்ப நான் கிளம்புறேன், வேலையிருக்கு ‘’மான்கொம்பு’’ மாயாண்டி வீட்டுக்கு
போகனும்.
வந்தீங்க
ஒருசெம்பு ‘’கள்ளு’’ அடிச்சுட்டு போனிங்கன்னா
நல்லா இருக்கும்.
பரவாயில்லே,
இப்பத்தான் வீட்ல எம்மனைவி சாரதா ‘’சாராயம்’’ கொடுத்தா
அடிச்சுட்டுதான் வர்றேன்.
யாரு ‘’கஞ்சா’’ கபாலியோட தங்கச்சி சாரதாவா ?
ஆமா
அவதான்.
உங்க
மனைவியை எனக்கு நல்லாத்தெரியுமே..
அப்படியா ? எப்படிப் பழக்கம் ?
நம்ம ‘’சாராயக்கடை’’ சாமுண்டியோட ‘’சால்னாகடை’’ யில ரெண்டு பேரும்தானே ஒன்னாவேலை
செஞ்சோம்.
அப்படியா ? ரொம்ப சந்தோஷம்.
அப்ப
உங்களுக்கு ‘’பிராந்திக்கடை’’ பிரியாவதியத் தெரியுமே ?
ஆமா
ஏங் கொளுந்தியாதானே அவ.
இப்ப,
அவ எங்கே இருக்கா ?
இப்போதைக்கு,
‘’வீச்சருவா’’ வீராசாமி வீட்டுல
இருக்கா.
அதுசரி,
ஒருவிசயம்... யெந்தங்கச்சி ‘’அபின்’’ அபிலாசாவுக்கு ஒரு மாப்பிள்ளை பார்தீங்கன்னா
நல்லாயிருக்கும்.
உங்க
வீட்டுக்காரரோட தம்பி ‘’திராவகம்’’ திராவிடமணிய முடிக்கலாமே...
அவருக்கு
ஏற்கனவே ‘’பிட்பாக்கெட்’’ பிரமிளாவோட தொடர்பு
இருக்குதாம்.
உங்களுக்கு,
யாரு சொன்னா ?
வெள்ளி,
செவ்வாய்க்கு வீட்டுக்கு வர்ற ‘’கடப்பாரை’’ கணேசன் சொன்னாரு.
அப்ப
நம்ம ‘’மண்வெட்டி’’ மகேஷை முடிப்போமா ?
அவரு,
என்நாத்துனா ‘’வெளக்கமாரு’’ வெள்ளையம்மாளோட ஆளாச்சே,
முறை சரியா வராதே...
சரி
நம்ம ‘’தீப்பொறி’’ தீனதயாளனை செய்வோமா ?
போன மாசந்தானே
அவனுக்கும், என் தங்கச்சிக்கும் ஆகாம தீர்த்து வெச்சோம்.
அப்படியா ? எனக்கு தெரியாதுல, நம்ம ‘’சாட்டையடி’’ சாமிநாதனே..
வேண்டாம்
அவனுக்கும், எனக்கும் ஏற்கனவே ஆகாது.
அப்ப,
நம்ம ‘’பட்டாக்கத்தி’’ பட்டாபிய, முடிப்போமா ?
அந்த மூதேவி,
பட்டப்பகல்லயே பட்டச்சாராயம் அடிக்குமே.
உங்களுக்கு,
எப்படித்தெரியும் ?
நான்,
சால்னாகடையில வேலை பார்க்கும்போது, அதுதானே வீட்டு வாடகை கொடுத்துகிட்டு
இருந்துச்சு.
சரிநம்ம,
‘’சூரிக்கத்தி’’ சூரியா சும்மாதானே
திரியிறான் அவனுக்கு முடிச்சு வைப்போம்,
அவன் சும்மாதான்,
திரியிறானா... சரி தற்போதைக்கு முடிச்சு வெப்போம் Futureல அவ பார்த்துக்கிருவா.
அதான்
சரி.
நீங்க
வந்ததுல சந்தோஷம், அவரு வந்ததும் சொல்றேன், சனிக்கிழமை அவரு ஆஞ்சநேயர் கோயிலுக்கு
போயிடுவாரு, சும்மாயிருந்தா வாங்க கல்யாண விசயமா விரிவா பேசலாம்.
சரி,
நல்லது கட்டாயம் வர்றேன்.
‘’சாவக்கட்டி’’ சாம்பசிவம்-
விரிவா பேசுறீங்களா ? அப்ப இவ்வளவு நேரம் பேசுனது சுருக்கமா ? சமூகத்துல உயந்த அந்தஸ்துள்ள குடும்பங்களா,
இருக்கும் போலயே...
வணக்கம்
பதிலளிநீக்குஜி
அட்டகாசமா.. அசத்தி விட்டீர்கள் நல்ல உரையாடல் வடிவில்.. நகைச்சுவை கலந்த பதிவு. பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
முதல் வருகைக்கு நன்றி நண்பரே..
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஜி
தமிழ்மணத்தில் இணைத்து வாக்கு போட்டாச்சி....த.ம 1
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
இரண்டுக்கும் நன்றி.
நீக்குவீச்சறுவாளும் , சாராயமும், கஞ்சாவும்தான் இல்ல சமூகம் ஆயிப் போச்சு. ம்ம்ம்ம் எப்ப அருவாளத் தூக்குவான், ஆச்சிட ஊத்துவாங்கன்னு தெரியாமத்தான் மக்கள் நடமாடிக்கிட்டுருக்க்காங்க. என்னத்த சொல்ல...என்னவோ போங்க, அருவா அழகருக்கும், ஜெயின் ஜெயந்திக்கும் ஒரு மொய்யி வைச்சாச்சு....பின்ன என்ன பண்ண, மொய்யி வைக்கலனா எங்கியாச்சும் அருவாளத் தூக்கிட்டு தில்லையகத்துக்கு வந்து நின் னுட்டாங்கனா.....ஹஹஹஹ்.....
பதிலளிநீக்குசெம நக்கலு!!!
அப்டீனாக்கா, இனிமேல் அருவாளை எடுத்தால்தான் ஓட்டுப்போடுவீங்க....
நீக்குகத்திக் குத்து கதிர்வேலுக்கும் - கடப்பாரை கணேசனுக்கும்
பதிலளிநீக்குஅல்வா கொடுக்கப் போறானா - அழகன் குளம் அருவா அழகரு!?..
சாமீ!... தாங்க முடியலயே!...
உலக நடப்பு இப்படித்தானே இருக்கு நண்பரே...
நீக்குகடந்த சில நாட்களாகவே வித்தியாசமான பதிவுகளாகவே போட்டு அசத்துகிறீர்கள். நல்ல நகைச்சுவை. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் கிராமங்களில் யார் பெயரைச் சொன்னாலும் பட்டப் பெயரோடு சொன்னால்தான் இன்னாரென்று தெரியும். (உதாரணம்: மேட்டுப் பட்டியார், ஒத்தை வீட்டுக்காரர், மொந்தை, பெட்டிக்கடை, டீக்கடை, சீட்டுக்கட்டை, தாயம், கந்துவட்டி – இந்த பெயர்களோடு அவரவர் பெயரையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்)
பதிலளிநீக்குத.ம.3
நீண்ட இடைவெளிக்குப்பிறகு நண்பரின் வருகை சந்தோஷம் அளிக்கின்றது ஆம் நண்பரே என்னைக்கூட அபுதாபியில் 'அப்பாவி ' கில்லர்ஜி என்றே அழைக்கின்றார்கள்.
நீக்குபட்டப் பெயர் இல்லாதவரே இல்லையோ. பயமாயிருக்கு.
பதிலளிநீக்குஎதற்க்கு ? ஐயா பயப்படுகின்றீர்கள்.
நீக்குஹீ ஹீ ஹீ ! அந்த சொல்லாடல படிச்சே குழம்பி , ரசிச்சி , மறுபடியும் படிக வச்சிட்டிங்க ! சூப்பர் அண்ணே !
பதிலளிநீக்குதம+
குழம்பி ரசித்தீர்களா ? அப்படியா ? இருதுச்சு
நீக்கு
பதிலளிநீக்குநண்பா!
எப்போது நல்ல நகைச் சுவை எழுத்தாளராக அவதாரம் எடுத்தீர்கள்?
அ அ அ
அழகு
அற்புதம்
அருமை
நன்றியுடன்,
புதுவை வேலு
அபராதம் போடுவது போல சாட்டில் பேசினீங்க...
நீக்குஇப்போ அவதாரம் என்கிறீர்களே... நண்பா. நன்றி.
உண்மையிலே..... எனக்கு வயிறு வலி வந்திருச்சு நண்பரே.... இன்னிக்கு ராத்திரி உண்ணாவிரதம்தான்.
பதிலளிநீக்குபதிவுதான் போட்டீங்களே சிவராத்திரி விரதம்னு...
நீக்குஒரே தீவிரவாத குடும்பமா இருக்கே .
பதிலளிநீக்குகலக்கறீங்க கில்லர்ஜி.
ஆமா நண்பரே இவங்களையெல்லாம் மூங்கிலை வச்சே சாத்தனும்.
நீக்குஅடடா...! ஒரு பதிவில் இத்தனை பட்டப் பெயர்களா?!
பதிலளிநீக்குதமிழ்நாட்டில் வழங்கும் பட்டப் பெயர்களைத் தொகுத்து ஒரு நூல் வெளியிடலாம் போலிருக்கே!
கேள்விகள் மட்டுமல்ல, அத்தனை பதில்களும் சிரிக்க வைத்தன.
மிக்க மகிழ்ச்சி...பாராட்டுகள் கில்லர்ஜி.
இன்னும் இருக்கு நண்பரே.... பதிவு நீளமாக இருக்கேனு 'கோடரி' கோபாலு சொன்னான் அதான் நிறுத்தி விட்டேன்.
நீக்குபொருத்தமான ஆஞ்சநேய பக்தர்தான் ,ஊரைக் கொளுத்துவதில் உண்டான பக்தி போலிருக்கே :)
பதிலளிநீக்குத ம நவரசம் :)
பக்தி முத்திப்போனால் இப்படித்தான்.
நீக்குநவரசம்னு சொல்றீங்க... நவராத்திரியாக்கிட்டீங்களே...
வணக்கம் ...படிக்கிற காலத்துல இருந்தே பட்டப்பெயர் வைக்கும் பழக்கமோ..எவ்ளோ பட்டங்கள் ஆத்தாடி...
பதிலளிநீக்குவாங்க சரியா சொல்லி பழையதை ஞாபகப்படுத்திடீங்க எனக்கு பேரு வச்சிடாதேனு லஞ்சம் கொடுத்தவனெல்லாம் இருக்கான்.
நீக்குஅடுக்கு மொழியில அசத்திக் கட்டுறீகளே...அம்மாடியோவ்...!!!
பதிலளிநீக்குதம்மாதுண்டு விஷயம்
இம்மா துண்டா சொல்லாமா...
எம்மாதுண்டா பதிவு போயிடுச்சே...!!!
ஹஹஹா....நானும் முயன்று பார்த்தேன்...அவ்வளவுது தான் விஷயம்....
துண்டு துண்டா சொன்னாலும் சிந்தனையை தூண்டுவது போல் இருக்கிறதே.....இதுவும்.
நீக்குதம.9
பதிலளிநீக்குபகவான்ஜியும், நவரசம்னு போட்டு இருக்காரு...
நீக்குஹா.,.. ஹா....
பதிலளிநீக்குஎப்படி அண்ணா...இப்படி பெயரெல்லாம் செலக்ட் பண்ணுறீங்க..
கலக்கிட்டீங்க போங்க...
எல்லாப்பயல்களும் வாழ்க்கையிலே வந்து போறவங்கதான் நண்பரே....
நீக்குஉங்க பக்கம் இந்த மாதிரி இசக்கு (இசக்கியம்மாள்.) பிசக்கு (பிச்சையம்மாள்) தலைப்பை பார்த்தால் வர பயமா இருக்கு. வயத்தவலி வந்திடுமே என்ற பயம்தாங்க. ஆத்தீ என்னால மிடியல .
பதிலளிநீக்குசூப்பர்......அருமை.....
பி.கு: மிகவும் ரசித்து படித்து சிரித்தேன்.
தொடர்ந்து வருகை தருவதற்க்கு நன்றி சகோ.
நீக்குநான் படிச்ச
பதிலளிநீக்குதங்கள் பதிவுகளிலே
இந்த பதிவிலே வருகின்ற
பெயர்களுக்கு முன்னாலே வருகின்ற
அடைமொழி எல்லாம்
அருமையாக இருக்கே!
தங்கள் முயற்சிக்கு
எனது பாராட்டுகள்!
தங்களின் வருகைக்கு நன்றி நண்பரே...
நீக்குஆகா
பதிலளிநீக்குஆகா
படிக்கப் படிக்க மகிழ்ச்சிதான்
நன்றி நண்பரே
தம +1
வருகைக்கும், கருத்துரைக்கும், வாக்கிற்க்கும் நன்றி நண்பரே...
நீக்குஒரு அப்பாவி குழந்தை நெஞ்சில் தான் எத்தனை தீவிரமான பெயர்கள்... ஹிஹி...
பதிலளிநீக்குஅசத்துங்க ஜி...
நீங்கதான் ஜி என்னை சரியா புரிஞ்சுக்கிட்டீங்க....
நீக்குஅடடா எத்தனைப் பெயர்கள! பெயர் சூட்டு விழாவே நடத்தி விட்டீர்கள் ! உமக்கு நிகர் நீரே!
பதிலளிநீக்குபுலவர் ஐயாவின் வருகைக்கு நன்றி.
நீக்குநல்ல தகவல் சகோ.... என் பதிவுகளை தமிழ்மணத்திரட்டியில் இணைக்க இயலவில்லை ... கொஞ்சம் உதவவும்.. என் தளம் : www.naveensite.blogspot.com
பதிலளிநீக்குநண்பரின் வருகைக்கு நன்றி எனக்கு அவ்வளவு விபரம் தெரியாது நண்பரே தாங்கள் திரு. திண்டுக்கல் தனபாலன் அவர்களை தொடர்பு கொள்ளவும் அவர்தான் எனக்கு இணைத்துக்கொடுத்தார்.
நீக்குநான் கருத்திட்டு பார்க்கும்போது 8 வரை தான் தம வில் காட்டியது. ஆகையால் தான் அடுத்த கருத்தாக 9 என போட்டேன்.
பதிலளிநீக்குமீள் வருகைக்கு நன்றி
நீக்குஎங்க வீட்டு பக்கத்தில் பிளேடு பிச்சை இருக்காக. பேசி முடித்துவிடலாம் அண்னே வாங்க. அவரு ஆஞ்சநேயர் கோயிலுக்கா? நான் கூட கீழ இருக்க படத்துல வீச்ச அருவா மீச சாமிய பாக்க போயிருப்பாக என்று இருந்தேன்.நான் தான் முதலில் படித்தேன்.வருவதற்குள் அப்பப்பா.
பதிலளிநீக்குமுதலில் படிச்சவங்களா இப்படி கடைசியிலே கருத்துரை போடுறீங்க....
நீக்குஅருவால பார்த்து பயம். அதான் ஒருத்தர் இரண்டு பேர் வரட்டுமே என்று இருந்தேன். ரொம்ப தங்கிட்டேன். பாலமகி பக்கங்களில் தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும்.
நீக்குவந்தேன் படித்து மகிழ்தேன்.
நீக்குகோடாரி கோபாலுக்கு நன்றி! !!!!!!!!!
பதிலளிநீக்குகோடரிக்கு நன்றியுரைத்தமைக்கு கோடான கோடி நன்றிகள்.
நீக்குஉங்கள் பதிவை பார்க்கும் போது நல்ல நகைச்சுவையாக இருக்கிறது. எனது வலைப்பூவுக்கு வருகை தந்து கருத்து சொன்னதற்கு நன்றி. தொடர்ந்து வருகை தாருங்கள்.
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கு நன்றி சகோ நெல்லிக்காய் ஜாம் போல இனித்தது தங்களது கருத்துரை.
நீக்குஎன்ன ஆச்சு என் கமெண்டு காணம போகுது...
பதிலளிநீக்குவெட்டு கத்தி வீராசாமி ஏதாவது வேட்டு வக்கிறானோ?
இல்லையே நண்பரே.. நீங்களே கிங் உங்கள்ட்டயா....
நீக்கு'பாம்' பட்டப்பெயர்கள். 'ஆசிட்' அட்டகாசம்.
பதிலளிநீக்குநன்றி திரு. துபாய் ராஜா
நீக்குஅருவா..வச்சுகிட்டு நிக்கிறவர்தான் அருவா...அழகரா...தலைவரே....
பதிலளிநீக்குஆமா, அவருதான் மெதுவா பேசுங்க....
நீக்குபதிவின் இறுதியில் எங்களை மிரட்ட இந்த புகைப்படமா?
பதிலளிநீக்குமுனைவருக்காகத்தான் waiting நாளையே அடுத்த பதிவு வருகைக்கு நன்றி.
பதிலளிநீக்குஅருவா அழகர் யாருன்னு தெரிஞ்சு போச்சு... “ஜெயின்” ஜெயந்தி....எந்த ஜெயினோட இருப்பாங்க....????
பதிலளிநீக்குஅடுத்தவ கழுத்துல அறுத்த தாலிச்செயினோடதான்.
நீக்குஅப்பாடி என்னமாதிரி குத்தூசி போல
பதிலளிநீக்குபல ஆயுதங்களைப் புகுத்தி
காம்புச்சத்தகத்தால் சீவிப்புட்டீங்களே.
(நம்ம ஊர் கருவி ரெண்டு பாவித்தேன்)
தெரியாவிடில் தமிழில் கூகிளில் பாருங்க
சிலவேளை காட்டுவான்.
நல:ல நகை தான்
வேதா. இலங்காதிலகம்.
''நகை''யை சுவையுடன் ரசித்தமைக்கு நன்றி சகோ.
பதிலளிநீக்குVariety....தங்களின் பதிவுகள் ஒவ்வொன்றும் ஒரு விதம்! அருமை! நவரச எழுத்தாளர் கில்லர்ஜி க்கு வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குவருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி நண்பரே.
நீக்குஇந்த ரணகளத்தில் "முச்சந்தி" முனுசாமி மட்டும் அப்பாவியா தெரிகிறாரே!!
பதிலளிநீக்குWhere is my previous comment posted few days back, Killer?
ஆமா நண்பா என்னோட சேர்ந்தவரு போல....
நீக்குவரவில்லையே நண்பா, என்னை தாக்கி எழுதியதையே நான் மறைக்கமாட்டேன் தங்களது கருத்தையா மறைக்கப்போறேன்,
வணக்கம் சகோதரரே.!
பதிலளிநீக்குநல்ல கற்பனை வளத்தோடு, அனைவருக்கும் பட்டப் பெயர்களுடன் நகைச்சுவைப் பதிவாக தந்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.!
இவ்வளவு பெயர்களையும் எப்படி பொருத்தமாக,பட்டங்களுடன் சேர்த்து எழுதி.....? எங்களுக்கு படிக்கவே மலைப்பாக இருக்கிறதே. ! சிறப்பான முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரரே.! நகைச்சுவைகள் தொடரட்டும்.!
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
வருகைக்கும், மனதார பாராட்டியமைக்கும் நன்றி சகோதரி.
நீக்குநல்ல கற்பனையோட நல்ல flowல எழுதியிருக்கீங்க. எழுத எழுத உங்களுக்கு எழுத்து வசமாகிக்கிட்டே போகுது. பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குஎல்லாம் விளக்கமாப் பேசிட்டு, அவங்க ஆஞ்சனேயர் கோவிலுக்குப் போறாங்களா. நல்ல அருமையான குடும்ப இஸ்திரிகளா இருக்குதே.
எனக்குத் தெரியாத ஏகப்பட்ட வார்த்தைகளை இப்போது படித்துத் தெரிந்துகொண்டேன். இவ்வளவையும் சர்வ சாதாரணமாக உபயோகப்படுத்தியிருக்கீங்க. எல்லாரும் சொன்னாங்க, கில்லர்ஜி மீசைதான் பெரிசு, மனசு ரொம்ப அன்பானதுன்னு. இதைப் படிச்சப்பறம், தகுந்த முன்னேற்பாடு இல்லாம உங்களை சந்திக்கமுடியாது போலிருக்கே.
பிட்பாக்கெட்-பிக்பாக்கெட்
வருக நண்பரே இது 2015-ல் நான் மிகவும் ஆலோசித்து எழுதியது.
நீக்குவருகை தந்து கருத்திட்டமைக்கு நன்றி பிக்பாக்கெட் பிறகு கணினியில் மாற்றுகிறேன் நன்றி.