தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், செப்டம்பர் 24, 2015

பாண்டுகுடி, பான்பராக் பானுமதி

பானுமிதி.

எல்லாம் விதியென்று மதியை உபயோகிக்காமல் வீடே கதியென்று வேலைக்கு செல்லாமல் வீட்டில் அடைந்து கிடக்கும் பதியை, சதி என்ன செய்வாள் ? நிதி பற்றாக்குறை வரும்போது தன் சாதி சனத்திடம் சொல்லி நீதி கேட்பாள் ? பின்பு என் மனைவி என்னை மதிக்கவில்லை, துதிக்கவில்லை சதித்து விட்டாள் என்றால், வேறு வழியின்றி தூக்கிப் போட்டு மிதிப்பாள், கஜபதி மனைவி பானுமதி.


அன்பு நட்புகளே வலைப்பதிவர் மாநாடு புதுக்கோட்டையில் நடப்பது உலகறிந்த விடயமே ஆகவே கையேடு தயாரிப்பதற்க்கு இன்னும் சில தினங்களே உள்ள காரணத்தால் தங்களது சுய விபரங்களை உடனடியாக பதிவு செய்து அனுப்பவும் அதற்க்கான படிவம் இதோ...


வலையுலக இதயங்களே... உலக தமிழ்ப் பதிவர்களின் முகம் பதித்த கையேடு நாளைய வரலாற்றின் சிறப்பு ஏடு
முகம் காட்ட மறுக்காதீர் முகவரியை மறைக்காதீர்
மேலும் விபரங்களுக்கு மின்னஞ்சல் முகவரி

48 கருத்துகள்:



  1. "பாண்டுகுடி, பான்பராக் பானு மதி"
    மதியை மிதியாக்கும் வித்தையை எங்கு கற்றீர் நண்பா?"
    வலையே கதி என்று இருந்தால் விதி இப்படித்தான் பான்பராக் போட்டு வந்து தூ விளையாட்டு விளையாட துண்டோடு வரும். துள்ளல் நடை துள்ளி விளையாடுது "தி" வடிவில் மீசை வாத்தியாரே!
    த ம +
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே.. வலையே கதினு கிடந்தாலும் பிரட்சினையோ.....

      நீக்கு
  2. 'ஹௌஸ் ஹஸ்பண்டை' மனைவி மதிக்க மாட்டாள் போலும். அதனால்தான் மிதிக்கிறாள்!

    பதிலளிநீக்கு
  3. கல்லானே ஆனாலும் கைப்பொருள்ஒன் றுண்டாயின்
    எல்லாரும் சென்றங் கெதிர்கொள்வர் - இல்லானை
    இல்லாளும் வேண்டாள்(;) மற் றீன்றெடுத்த தாய்வேண்டாள்
    செல்லா(து) அவன்வாயிற் சொல்

    என அவ்வைப்பாட்டி சும்மாவாசொன்னார்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா ஔவையார் சொன்னது இதற்க்கும் பொருந்துகிறதா ? நண்பரே..

      நீக்கு
  4. பானு'மிதி' ரொம்ப நல்லா இருக்கு அண்ணே...
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் ஜி!! கலக்கல்! அசத்துங்க!

    பதிலளிநீக்கு
  6. மதியாத சதியை விதி கொண்டு வெல்ல பதி முயல வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிறையப் பேருடைய முயற்சி விதியோடு கரைஞ்சு போயிடுச்சு நண்பரே..

      நீக்கு
  7. அன்புள்ள ஜி,

    வா வெண்ணிலா உன்னைத்தானே வலைத்தளம் வானம் தேடுதே...
    முகம் பார்க்க நானும் முடியாமல் நீயும்
    திரை போட்டு உன்னை மறைத்தாலே பாவம்
    ஒரு முறையேனும் திருமுகம் காணும் வரம் தரம் வேண்டும்
    எங்களுக்கது போதும்.... வாங்க...வாங்க... வந்து விழாவைச் சிறப்பிச்சிட்டு...விருந்து இருந்து சாப்பிட்டுப் போங்க... இல்லாட்டி சாபிட்டுட்டு இருந்துட்டுப் போங்க... வாங்க... வாங்க... வாங்க...!

    த.ம. ஆறாப் பெருக.



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மணவையாரைக் காணவாவது வர(ம்) வேண்டும்

      நீக்கு
  8. வார்த்தை விளையாட்டு. ரசித்தேன்

    பதிலளிநீக்கு
  9. அட.. அட..! என்ன உங்கள் திறமை!
    சபாஷ்!

    த ம +1

    பதிலளிநீக்கு
  10. மதியின் மிதியால் - பதியின் கதி அதோகதி!..

    கஜ (யானை) மிதியை விட சூப்பர் மிதி - பானுமதி!..

    ஏ.. சாமீ சதாசிவோங்!.. கேட்பாரே இல்லையா?..

    கில்லர்ஜியின் பதிவுகளால் கஜபதிகளுக்குப் பாதுகாப்பே இல்லாமல் போயிருச்சே!?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி சாம்பசிவமே மிதி வாங்கி இருக்கிறா....ராம் ஜி

      நீக்கு
  11. பாவம் கஜபதி போன்றவர்கள்....

    பதிலளிநீக்கு
  12. வணக்கம் சகோ,
    கேட்க ஆள் இல்ல அதான்,,,,
    ம் நடக்கட்டும் ,
    நல்லா இருக்கு சகோ வார்த்தை விளையாட்டு,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சகோ கேட்க ஆளில்லாமல்தானே பானுமதி மிதிக்கிறாள்.

      நீக்கு
  13. மிதிபடாமல் இருக்க நிதி அவசியம்தான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிதிதானே அடிப்படை பிரட்சினை நண்பரே...

      நீக்கு
  14. மதியிருந்தால் மிதி தேவையில்லை தான்.ஹஹ
    சூப்பர் சகோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிதியிருந்தாலும் மிதி இல்லைதான் சகோ.

      நீக்கு
  15. சிறந்த பதிவு
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  16. கையேட்டில் பதிய இன்னுமா நாள் இருக்கிறது ?

    பதிலளிநீக்கு
  17. எல்லாம் விதி!
    கையேட்டுக்கான தகவல் அனுப்பி விட்டேன்!

    பதிலளிநீக்கு
  18. வார்த்தை விளையாட்டு மிக அருமை சகோ.

    பதிலளிநீக்கு
  19. ஆதி முதல் மீதி வரை ஊதிப் பெருக்கி பீதியை கிளப்பும் கதை...
    நதி போன்ற ரதியானவள் ஜதி மாறி குதிக்கலாமா?!

    நாங்களும் எழுதுவோம்ல...!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடே அருமை... வாங்க நண்பா ஸூப்பர் தொடர்ந்து சொல்லுங்க நண்பா...

      நீக்கு
  20. பகிர்வு நன்று.

    மதியுடன் நடந்து கொண்டால் மிதி கிடைக்காது.....

    பதிலளிநீக்கு
  21. பானுமிதி வாசிச்சதுமே சிரிப்புதான்... நிறுத்தமுடியல.. சிரிப்பைதான். ஜுப்ப்பர் அண்ணா ஜி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாவம் ஒருத்தன் மிதிபடுவது உங்களுக்கு சிரிப்பா ?

      நீக்கு