தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, நவம்பர் 27, 2015

வாழ்க்கை வாழ்வதற்கே !

வாழ்க்கை துணை இறந்த பிறகு சிலர் அவ(ன்)ள் நினைவாகவே, மறுமணம் செய்யாமல் வாழ்ந்து காலத்தை கழித்து விடுகிறார்கள்.
இது சரியா ?
இரு பாலருக்குமே, இது தவறான செயலே !
ஆம், இப்பிறவியின் பயன் என்ன ? தாம்பத்யமே !

பிறவி என்பதே ஒரு முறைதான், அதையேன் நாம் பாழாக்க வேண்டும் ? இல்லை, மறுபிறவி இருக்கிறது என்கிறாயா ?  
அப்படியானால், உமக்கு இது எத்தனையாவது பிறவி ?  
போன பிறவியில், நீ என்னவாக பிறந்தாய் ?
நான் DINOSAUR ஆக பிறந்தேன் என்கிறாயா ?  
இதற்கு, என்ன ஆதாரம் ?  

இறைவனுடன், ஐக்கியமாவதே மரணம் என்கிறாயா ?
அவர்தானே, உம்மை அனுப்பி வைத்தார் ? அப்படியானால் ஏற்கனவே நீ ஐக்கியமாக வில்லையா ?  

மரணத்திற்கு, பின்தான் வாழ்க்கை இருக்கிறது என்கிறாயா ?   
இது எப்படி உமக்கு தெரியும் ?

நம்பிக்கைதான் வாழ்க்கை என்கிறாயா ?
நம்பிக்கைதான் வாழ்க்கை, நாம் நம் இந்தியாவில் வாழமுடியாதா ?
ஏன், நம்பிக்கை இழந்து அயல்நாடு செல்கிறாய் ?
இந்தியாவில், யாரும் வாழ்ந்து முன்னேற வில்லையா ?
கண்ணால் காணும், விசயத்தில் நம்பிக்கை வைக்காத நீ காதால் கேட்ட, விசயத்தில் நம்பிக்கை வைக்கிறாயே எப்படி ?

ஆம், நண்பா, நண்பி மறுமணம் செய்வது தவறல்ல !
கணவன் இருக்கும்போது மனைவி பிறருடன் கூடுவதும்,
மனைவி இருக்கும்போது கணவன் பிறரை நாடுவதும் தான் தவறு.
மறுமணம், மறைந்தவருக்கு செய்யும் துரோகம் ஆகாது.

விபச்சாரம் பெருகி வருவதற்கு மறுமணம் அங்கீகரிப்படாததும் ஒரு காரணமே !  இந்த வழியில் சென்றுகூட, நாம் எயிட்ஸை ஒழிக்கலாமே !

ஓ... அரசாங்கமே, வாழ்க்கைத் துணையை இழந்து மறுமணம் செய்பவர்களுக்கு மட்டும், நீ ஏன் சலுகைகள் வழங்கக்கூடாது ?

(ஊமையன் சொல்றது, செவிடன் காதுல எங்கே கேட்கப்போகுது)

வாழ்க்கை வாழ்வதற்கே ! ஆம், வாழ்க்கை வாழ்வதற்கே !
வாழ்க்கைத் துணை இல்லாமல் வாழ்வது மரணத்தினும் கொடுமை, அது மனவியாதியை மட்டும் பற்றிக் கொள்வதில்லை, உடல் வியாதியையும் தொற்றிக்கொள்ளும், இதைச்சொல்ல, உனக்கென்ன தகுதி உள்ளது எனக் கேட்டுவிடாதே !
என் வாழ்க்கையை, இழந்து விட்டேனா ? இல்லை இழக்கடிக்கப்பட்டதா ? என்பதின், விடையை தேடிக்கொண்டு இருக்கிறேன்.

எனினும் உமக்குச் சொல்வதற்கு, காலஞ்சென்ற கவிஞர் கண்ணதாசன் அவர்கள் சொன்ன வழியை பின்பற்றுகின்றேன், அவர் எழுதிய அர்த்தமுள்ள இந்து மதம் நூலின் முன்னுரையில்,

ஒரு மனிதன் எப்படியெல்லாம் வாழக்கூடாதோ, அப்படியெல்லாம் நான் வாழ்ந்து இருக்கிறேன் ஆகவே, இப்படித்தான் வாழ வேண்டுமென உனக்கு புத்தி சொல்லும் யோக்யதை எனக்கு உண்டு.

இப்படி எழுதி விட்டுத்தான் தொடங்கி இருக்கிறார், ஒரு எடுத்துக் காட்டுக்காகத்தான் அவரைச் சொன்னேனே தவிர,

அவர் வந்த பாதை வேறு, நான் தந்த போதை வேறு. 
அவர் தொட்டு கெட்டு, பாட்டு ஆன அதிர்ஷ்டசாலி,
நான் தொடாமலே கெட்டு, பட்டு போன துரதிர்ஷ்டசாலி.

மனைவி இறந்து, ஏற்கனவே குழந்தைகள் உள்ளவனை, திருமணம் செய்யும் சகோதரிகளே ! உன்னை மணந்த பிறகு உன்னிடம் மயங்கி முதல்தார குழந்தைகளை, உதாசீனப்படுத்துபவனை நம்பாதே ! நாளை ஒருக்கால் நீ இறந்து விட்டால் ? உனது குழந்தைகளுக்கும் இதே கதிதான் உஷார்.


சாம்பசிவம்-
பிள்ளையை கிள்ளி விட்டுட்டு தொட்டிலை ஆட்டுற ஆளைப் பார்த்திருக்கேன், நீர் என்ன ? தொட்டில ஆட்டி விட்டுட்டு பிள்ளைய கிள்ளுறீரு ?

64 கருத்துகள்:

  1. என்ன பிரச்சினை பாஸ் என்ன சொல்ல வரீங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நண்பரே...
      வாழ்க்கை வாழ்வதற்கே... என்று வலியுருத்தி 2 வருடமாக மறுமணம் செய்யாமல் இருந்த நண்பரை சம்மதிக்க வைத்து விட்டேன் அவரிடம் பேசியவை பொதுவுக்காக பதிவில் பகிர்ந்தேன் அந்த மகிழ்ச்சியே அன்றி வேறில்லை.

      நீக்கு

  2. வாழ்க்கை வாழ்வதற்குத்தான். ஆனால் இப்படித்தான் வாழவேண்டும் என பொதுவாக அறிவுரை சொல்லலாம். ஆனால் ஒவ்வொருவருக்கும் என்று தனி ஆசாபாசங்கள் உண்டே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையே அவரவர் தனிப்பட்ட கருத்தும் உரிமையும் உண்டு மிகச்சரி. நண்பரே...

      நீக்கு
  3. நல்ல பதிவு. நல்ல அறிவுரை. ஆனால் இப்பல்லாம் மாப்பிள்ளைக்கு முதல் கல்யாணத்துக்கே பெண் கிடைக்காத நிலை பாஸ்.

    :))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தாங்கள் சொல்வது இன்றைய நிலை மிகவும் சரி.

      நீக்கு
  4. யோசனை ரொம்ப பலமா இருக்கே ஜி...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி வெற்றியின் சந்தோஷம் மட்டுமே பதிவு.

      நீக்கு
  5. வணக்கம் கில்லர் ஜி !

    அழகாய் சொல்லி இருக்கிறீர்கள் இது அடுத்தவர்க்கான புத்திமதி என்பதோடு மட்டும் நிற்கிறது என்று என்னால் சொல்ல முடியவில்லை தாங்களும் அதன் வழி நடந்தால் மகிழ்வேன் ! வாழ்க வளமுடன்
    வருங்காலம் வளமாகட்டும்
    தம 5

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கவிஞரே நானும் அவ்வழியே நடந்தால் மகிழ்வேன் என்று சொன்னமைக்கு மனமார்ந்த நன்றி எனக்கு காலம் கடந்து விட்டது ஆகவே பிறருக்கு உதவுகிறேன்.

      நீக்கு
    2. என்ன பெருசா கடந்துடிச்சி
      பேசுறது மட்டும் பெரிய6 மாதிரி
      செயல்லயும் அதே மாதிரி
      செஞ்சா நாங்கல்லாம் சந்தோசப்பட்டுடுவோம்னு தானே
      அடம் புடிக்கீரு...

      உம்ம கவலையப்பத்தி இங்க
      ஒருத்தருக்கும் கவலையில்ல..
      ஆனா நீரு சந்தோஷமா இருந்தா
      கொறஞ்சது 1000 பேருக்காவது வயிறு எரியும்தான்
      அதுக்காக நீரு சந்தோஷமா இருக்க மாட்டீரா?...

      நீக்கு
    3. வருக நண்பரே நம்மால் பிறருக்கு வயிறு எரிந்தால் சாம்பல் ஆவது நமது மனதே... வேண்டாம் நண்பரே....

      நீக்கு
  6. வாழ்க்கை வாழ்வதற்கே
    மாற்றுக் கருத்துக்கு இடமில்லாத பதிவின் தலைப்பு.
    ஆனால்?


    வாழ நினைத்தால் வாழலாம்
    வழியா இல்லை பூமியில்
    ஆழகடலும் சோலையாகும்
    ஆசையிருந்தால் நீந்தி வா !

    பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்
    பார்த்து நடந்தால் பயணம் தொடரும்
    பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும்
    கதவு திறந்தால் காட்சி கிடைக்கும்
    காட்சி கிடைத்தால் கவலை தீரும்
    கவலை தீர்ந்தால் வாழலாம்....

    கண்ணில் தெரியும் வண்ணப் பறவை
    கையில் கிடைத்தால் வாழலாம்
    கருத்தில் வளரும் காதல் எண்ணம்
    கனிந்து வந்தால் வாழலாம்
    கன்னி இளமை என்னை அணைத்தால்
    தன்னை மறந்தே வாழலாம்.
    ஏரிக்கரையில் மரங்கள் சாட்சி
    ஏங்கித் தவிக்கும் இதயம் சாட்சி
    துள்ளித் திரியும் மீன்கள் சாட்சி
    துடித்து நிற்கும் இளமை சாட்சி
    இருவர் வாழும் காலம் முழுதும்
    ஒருவராக வாழலாம்

    வாழ நினைத்தோம் வாழுவோம்
    வழியா இல்லை பூமியில்
    காதல் கடலில் தோணி போலே
    காலம் முழுதும் நீந்துவோம்
    வாழ நினைத்தோம் வாழுவோம்
    வழியா இல்லை பூமியில்
    காதல் கடலில் தோணி போலே
    காலம் முழுதும் நீந்துவோம்
    நன்றி: கவியரசு கண்ணதாசன்


    அதிர்ஷடத்தை அழைத்து பார்!

    துரதிஷ்டத்தை துரத்தி பார்

    தூரிகை எடுத்து துஷ்டத்தை துவம்சம் செய்

    பேரிகை வாழ்த்து முழங்க வாழ்வாங்கு வாழ்வாய்!

    நண்பா!
    இந்தியாவில் வாழ முடியாதா?
    ஏன் நம்பிக்கை இழந்து அயல்நாடு செல்கிறாய்?
    நம்பிக்கையா?
    நம்பிக்கையின்மையா?
    பதில் விரைவில் குழலின்னிசை பதிவில் காண்க!
    த ம +
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பா நல்லதொரு தத்துவப்பாடலை முன் வைத்தமைக்கு நன்றி தங்களின் பதிவுக்காக காத்திருக்கிறேன்

      நீக்கு
  7. உண்மை...
    கடைசி வரிகள் நிதர்சனம்...
    இதே பெண்கள் கூட முதல் தாரத்தின் பிள்ளைகளைக் கொடுமைதானே செய்கிறார்கள்...
    நல்லவர்கள் இல்லையா என்று கேட்கலாம்...
    தூரத்துப் பச்சைபோல் ஒரு சிலர் மட்டுமே இருக்கிறார்கள்... நல்ல மனதோடு...
    நல்ல பகிர்வு அண்ணா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தாங்கள் சொல்வதும் உண்மையே... எனது வெற்றியை பதிவாக பகிர்ந்தேன் இருப்பினும் வரப்போகும் அந்தப் பெண்மணிக்கும் எச்சரிக்கை மணி கடந்த 15 வருடங்களில் இவர் 4 வது நபர்.

      நீக்கு
  8. நண்பரே! என்ன திடீரென்று புதிய சித்தாந்தம். ஏதோ குறிப்பாக உணர்த்துவது போல் தெரிகிறது. கும்மாச்சி சொல்வது போல, “என்ன பிரச்சினை பாஸ் என்ன சொல்ல வறீங்க “

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே வருகைக்கு நன்றி தயவு செய்து தங்களுக்கான பதில் மேலே நண்பர் திரு. கும்மாச்சி அவர்களுக்கு உள்ளது படிக்கவும் பயப்பட வேண்டாம் இது சந்தோஷப்பதிவே....

      நீக்கு
  9. பதில்கள்
    1. முனைவர் ஐயாவும் முதல் மறுமொழியைப் படிக்கவும் நன்றி

      நீக்கு
  10. எனக்கு ஒன்றுமே புரியவில்லை.
    தலையிடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியும் என்பார்கள்.
    வாழ்க்கைத்துணை விடயத்தில் இது தான்சரி என சொல்ல முடியவில்லை. அத்தனை காலம் கூடி வாழ்ந்து துணை இறந்ததும் மறுமணம் சாத்தியமானால் அதுவரை வாழ்ந்த வாழ்க்கைக்கும் அர்த்தம் என்ன எனவும் தோன்றும் சில நேரம். ஆனால் தனித்து வாழ்ந்து தவறுகள் நடக்க காரணமாகிடாமல் இளவயது இழப்பாயிருந்தால் இன்னொரு துணை தப்பே இல்லை. எல்லாம் அவரவர் மன விருப்பம் தானே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஒன்றுமே புரியவில்லையென்று நான் பதிவில் சொன்ன விடயங்களை அழகாக ரத்தினச் சுருக்கமாக தந்தமைக்கு முதற்க்கண் நன்றி
      அருமையாக சொன்னீர்கள்...

      நீக்கு
  11. பறவைகளில் புறாவும் விலங்குகளில் நரியும் - தமது துணையை இழந்து விட்டால் வேறொரு துணையைத் தேடுவதில்லை என்று படித்துள்ளேன்..

    நல்லதொரு பதிவு.. வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ஜி நான் புறாவாக வாழ்ந்து விட்டேன் பகுதியையும் அப்படியே..... இப்படியே.....

      நீக்கு
    2. ஆமாம்,

      வானத்து பறவைகளைப் பாருங்கள் அவை விதைப்பதும் இல்லை, அறுப்பதும் இல்லை, களஞ்சியத்தில் சேர்த்து வைப்பதும் இல்லை,,,,,

      நீக்கு
  12. மறுமணத்துக்கு தடை ஒன்றும் இல்லையே ?ஏங்கி சாவதை விட முட்டாள்தனம் வேறில்லை :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி தாங்கள் சொல்வதும் சரியென்று உணர்ந்தவன் நான் இருப்பினும் கீழே நண்பர் திரு. கரந்தையார் அவர்கள் சொன்னதே உண்மை

      நீக்கு
  13. வாழ்க்கை வாழ்வதற்குத்தான்
    சந்தேகமே இல்லை
    ஆனாலும் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டே
    செயல்பட வேண்டும் என்பது எனது கருத்து
    நன்றி நண்பரே
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே எனது நிலையை தாங்கள் விளக்கி விட்டீர்கள் நான் சொல்வதற்க்கு ஒன்றுமில்லை.

      நீக்கு
  14. ஜி! தவறு என்பது இல்லை. நிச்சயமாக. ஆனால் குழந்தைகள் இருந்தால் மிகவும் யோசிக்க வேண்டிய விஷயம். ஒரு சில ஆண்கள், பெண்கள் மட்டுமே மறுமணத்தில் புரிதலில் வாழ்கின்றார்கள் முந்தைய திருமணத்துக் குழந்தைகளுடன் அன்புடன். பெரும்பாலும் கொடுமைகள் குழந்தைகளுக்கு...புறம்தள்ளல்தான்...

    எனவே குழந்தைகள் இருந்தால் நல்ல புரிதல் இருந்தால் மட்டுமே மறுமணம்...

    கீதா: எனது தனிப்பட்டக் கருத்து மேல் சொன்னதுடன்......நல்ல காதலுடன் புரிதலுடன் வாழ்க்கை அமைந்து ஒவ்வொரு நொடியும் இன்பமாய் வாழ்ந்துவரும் சமயம் துணை இழந்தால் தனித்திருந்து அந்தக் காதலுடன் வாழ்ந்த வாழ்க்கையின் நினைவுகளிலேயே மிச்ச வாழ்க்க்கையையும் கழிப்பதை ஆதரிப்பவள்...அதே சமயம் அந்தக் காதல் இல்லாத மண வாழ்க்கை, துணை இழத்தல் என்றால் நல்ல புரிதல் இருந்தால் காதலுடன் மற்றொரு வாழ்க்கையை ஆரம்பிக்கலாம். எதுவாக இருந்தாலும் அந்த வாழ்க்கை காதலுடன் இருக்க வேண்டும்...(இங்கு காதல் என்பது தூய அன்பு...)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக மிகவும் அழகாக விளக்கி பதிவு போன்றே தந்தமைக்கு மிக்க நன்றி
      இது எனது சந்தோஷத்தின் வெற்றிப் பதிவுதான்

      நீக்கு
    2. சரியா சொன்னீங்க கீதா மேடம் அழகான நல்ல விளக்கம், காதல் இருந்தால் நிச்சயம் இரு நிலையையும் வெல்ல முடியும் என்பது என் கருத்து.

      நீக்கு
  15. நேற்றுதான் நகைச்சுவை நடை அழகு என்றேன், நவ"ரசமும்" உங்கள் எழுத்தில் வருகிறதே! நண்பரின் நண்பருக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  16. இது முதலில் தனிப்பட்ட விருப்பம். அவரவர் சூழ்நிலையையும் பொறுத்து இருக்கு. அதைவிட மணவாழ்க்கையை ஆரம்பிக்கிறவர்களின் புரிந்துணர்வு மிகமிக முக்கியம்.
    நற்செயல்கள் எல்லாம் செய்கிறீங்க அண்ணாஜி. நல்லது பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ நான் பெற்ற துன்பம் எனது எதிரியும் படக்கூடாது என்பது எனது கொள்கைகளில் ஒன்று பாராட்டுகளுக்கு நன்றி

      நீக்கு
  17. மனத்தெளிவோடு கடினமான விஷயத்தை
    அலசி உள்ளதால்தான் உங்களால்
    இப்படியொரு உணர்வுபூர்வமான விஷயத்தை
    மிகச் சரியாகச் சொல்ல முடிந்தது

    சிந்திக்கவைத்துப் போகும் சிறப்பான பதிவு
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக கவிஞரே தங்களின் கருத்துரை கண்டு மகிழ்ச்சி.

      நீக்கு
  18. முதல் கேள்விக்கான மறுமொழி பதிவின் காரணத்தை உணர்த்தியதை அறிந்தேன். எந்தவொரு நிலையில் தெளிவாக முடிவு எடுப்பதும், பின்வாங்காமலிருப்பதும் நல்லது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவரின் விரிவான கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  19. வணக்கம்
    ஜி
    எல்லாம் அவரவர்மனநிலையை... சார்ந்துள்ளது..அற்புதமாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் த.ம 14
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  20. ஊமை எப்படி பேசுவான்..... அதை செவிடன் எப்படி கேட்பான்...ஒருவேளை..ஊமைகள் பேசுகிறார்கள். செவிடர்கள் கேட்கிறார்கள் என்று இருக்குமோ....????

    பதிலளிநீக்கு
  21. வணக்கம் சகோ,
    நான் உங்கள் பதிவுக்கு பதில் சொல்வதைவிட ஒரு பதிவாகவே இதனை என் பக்கத்தில் வெளியிட விரும்புகிறேன். சரியா சகோ, செய்யலாம் தானே,
    என் மனதில் நீண்டகாலமாக இருக்கும் கேள்வி இது. சரி,,
    அதைப்பற்றி பேச வயதோ, அனுபவமோ இல்லை என்பதால் அமைதிக் காத்தேன். சரி பேசுவோம் என்று இப்ப கொஞ்சம் துணிச்சல்.

    நல்ல தகவல் சகோ, புரிதல் என்பது எனக்கு தெரிந்த வரை இல்லை என்றே தோன்றுகிறது. நல்ல பகிர்வுக்கு வாழ்த்துக்கள் சகோ,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்கள் விருப்பம் என் பாக்கியம் தாராளமாக செய்யுங்கள் நானும் பதிவுக்காக ஆவலுடன்...

      நீக்கு
  22. நம்பிக்கையை பற்றிக் கொண்டு மற்றவருக்கு நன்மை செய்யும் நண்பரே ,

    உங்கள் பதிவு சித்தரிடம் பேசியது போல் இருந்தது.சித்தர் மனநிலைக்கு சென்று விட்டீர்களோ ?

    மறுமணம் என்பது மனசு சம்மந்தப்பட்ட விஷயம்.எனக்கு தெரிந்த ஒருவர் மனைவி உயிருடன் இருந்தவரை எல்லா அயோக்கியத்தனமும் செய்து விட்டு ,அவர் திடீரென்று இறந்து விட கைபேசியில் அவர் புகைப்படத்தை வால்பேப்பர் ஆக வைத்துக் கொண்டு,அவர் படத்திற்கு மாலையிட்டு வணங்குவதுமாக இருக்கிறார்.இருந்தும் அவர் அயோக்கியத்தனத்திற்கு குறைவில்லை.எனக்கு வியப்பாகத் தான் இருக்கிறது .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனிதா சிவா அவர்களின் முதல் வருகைக்கு நன்றி
      இறந்த மனைவியை நேசிப்பது தவறு என்று சொல்லி விடமுடியாது ஒருக்கால் சிலருக்கு இழந்த பின்னே அதன் அருமை தெரிய வந்திருக்கலாம்
      ஆனால் அயோக்கியத்தனம் தொடர்ந்தால் அது அன்புக்காக அல்ல வேறு காரணமாக இருக்கலாம். வருகைக்கு நன்றி நண்பரே...

      நீக்கு
  23. கேள்விகள் கேள்விகள் கேட்டால்தானே பதில்கள் வரும் நிறையவே கேட்கிறீர்கள் பதில்களும் கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் ஐயா பதில்கள் கிடைத்துக் கொண்டுதான் இருக்கின்றன....

      நீக்கு
  24. காதலுக்கு இப்போல்லாம் என்னவெல்லாமோ அர்த்தம் வந்திருக்கு. இங்கே சொல்லி இருப்பவை நடந்தால் நல்லது தான்! அது சரி என்ன, கடைசியில்"சாம்பசிவம்"னு நம்ம ரங்க்ஸோட பெயரைப் போட்டிருக்கீங்க? அவருக்கு இந்தப் பதிவுகள் எழுதறதெல்லாம் தெரியவே தெரியாதே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களின் கருத்துப் பகிர்வுக்கு நன்றி
      நான் தளம் தொடங்கிய காலத்திலிருந்தே... திரு. சாம்பசிவம். திரு. சிவாதாமஸ்அலி, திரு. Chivas Regal சிவசம்போ இந்த மூன்று நபர்களும் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கின்றார்கள் பார்த்ததில்லையா ?

      நீக்கு
  25. கார்த்திகைப் பொரி சாப்பிட ஏன் வரலை? :)

    பதிலளிநீக்கு
  26. அன்புள்ள ஜி,

    அனுபவத்தின் முதிர்ச்சி...! அனுபவித்தவருக்கே அதன் வலி தெரியும்...! ’கோரிக்கையற்று கிடக்கதுண்ணே இங்கு வேரில் பழுத்த பலா...!|
    த.ம.16

    பதிலளிநீக்கு
  27. முறை யோடு வாழ வேன்டும்!

    பதிலளிநீக்கு
  28. மறுமணத்தை ஊக்குவிக்கும் பதிவு! என் உடன்பிறவா சகோதரனின் மகளும் விதவையாய் மூன்றாண்டுகளாய் இருந்தவருக்கு, விடாமுயற்சியாய் முயற்சித்து கடந்தாண்டு திருமணம் செய்து வைத்தேன் நண்பரே!... இன்று அவர்கள் மிகவும் நன்றாக இருக்கின்றார்கள்... வாழ வைத்துப் பார்ப்பதிலும் ஒரு சுகமுண்டு அல்லவா!

    அருமை!...அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே முதலில் அந்த மணமக்களுக்கு எமது மனம் நிறைந்த வாழ்த்துகள்.
      வாழ வைத்துப் பார்ப்பதிலும் சுகமுண்டு மிகவும் அழகாக சொன்னீர்கள் நண்பரே..

      நீக்கு