தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, டிசம்பர் 04, 2015

10 க்கு முன்னால் ‘வி’

காவல் துறையே, வி10க்காவது விரைந்து வா !

நாம் சாலையில், நடந்து போய்க் கொண்டிருக்கிறோம் ஒரு விபத்து நடந்திருக்கிறது போய்ப் பார்த்தால், நமக்கு வேண்டியவர் அடிபட்டு உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கிறார், காவல்துறை என்ன உடனே விரைந்து வந்து விடுகிறார்களா ? அதிகார வர்க்கம் என்றால் உடன் வருவார்கள் நாம் காப்பாற்ற நினைத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வாகனத்தை அழைத்தால் யாரும் முன் வருவதில்லை காரணமென்ன ? அவர் பிழைத்துக் கொண்டால் பிரட்சினை இல்லை, ஒருக்கால் அவர் இறந்து விட்டால் ? கொலை வழக்கில் காவல்துறை அவர்களையும் இணைத்து அலைக் கழித்து விடும் இது காவல் துறையின் குற்றமல்ல ! காரணம் சட்டம். இது தர்மமா ? ஒரு உயிர் போவதற்கு சட்டம் காரணமாக இருக்கிறதே ! இதை மாற்றி அமைக்ககூடாதா ? யார் மாற்றுவது ? நம்மை ஆளுபவர்கள், அவர்கள் செய்ய மாட்டார்கள் ஏன் ?

01. அவர்களுக்கு சொத்து சேர்ப்பது, வெளிநாடு சுற்றுவது, விழாக்களில் கலந்து கொள்வது, ஸ்விஸ் வங்கி கணக்கு பார்ப்பது, அடுத்த தேர்தல் செலவுக்கு பண முதலைகளை தேர்வு செய்து வைப்பது, தொலைக் காட்சிகளுக்கு பேட்டி கொடுப்பது, கட்சி மாநாடு நடத்தி பலம் சோதித்துக் கொள்வது, கட்சிக்காரர்களின் திருமணத்திற்க்கு சென்று அரசியல் பேசுவது, தொண்டர்களுக்கு கொம்புசீவி வைத்துக் கொள்வது போன்ற வேலைகள் நிறைய இருக்கிறது.
சரி நாமே, அரசாங்கத்திடம் மாற்றச் சொல்லலாமே ! முடியாதே ஏன் ?
02. நமக்கு அடுத்த தெருவில் நமது தலைவன் நடித்துக் கொண்டிருக்கும் படப்பிடிப்பு நடக்கிறது நாம் குறைந்த பட்சம் 6 நாட்களாவது, அசையாமல் அந்த இடத்தில் நிற்கவேண்டும் அப்பொழுதான் எல்லா நடிகர், நடிகையிடமும் கையெழுத்து வாங்கி, தொட்டுக் கொண்டு நிற்பதுபோல் புகைப்படம் எடுக்க முடியும்.
03. பிறகு அதை பிரேம் போட்டு வீட்டில் மாட்டியிருக்கும் நம்மை வளர்த்து ஆளாக்கிய தாத்தா-பாட்டி புகைப்படத்தை தூக்கி பரணில் போட்டு விட்டு அதை முகப்பறையில் மாட்டவேண்டும்.
04. பிறகு கேவலம் 1800 கோடிரூபாய் ஊழல் செய்ததற்காக நம் தலைவனை ஆளுங்கட்சி கைது செய்வதை கண்டித்து, தண்டவாளத்தில் தலையை வைத்து ரயிலை மறிக்க வேண்டும்.
05. பிறகு நமது தலைவன் அழைத்து விட்டான் என்பதற்காக, லாரியில் 350 K.M பயணம் செய்து சோறு, தண்ணீர் கிடைக்கா விட்டாலும் பரவாயில்லையென, தலைவனுக்காக வாழ்க ! வாழ்க ! எனகோஷம் போடவேண்டும்.
06. பிறகு நகைக்கடையை திறந்து வைத்து கொஞ்சு டமிள் பேச, வருகைதரும் நமது கனவுக்கன்னி கன்னிகாவை காணப் போகவேண்டும்.
07. பிறகு நாம் குடிக்க தண்ணீர் கேட்டதற்காக, பிழைப்பு தேடிப்போன தமிழர்களை பிடித்து வைத்து அடித்தாலும் பெருந்தன்மையாக மன்னித்து விட்டு, தமிழன் இல்லாவிட்டாலும் திரைப்படங்களில் டப்பிங் தமிழ் பேசும் தலைவனுக்கு பிறந்தநாள் விழா சுவரொட்டி ஒட்டவேண்டும்.
08. பிறகு நமது தலைவன் நடித்து வெளியான திரைப்படம் வெற்றியடைய மாவேலி காளியம்மனுக்கு பின் நோக்கி நடந்து பாதயாத்திரை போகவேண்டும்.
09. பிறகு நமது தலைவனின் புதுப்படத்துக்கு கட்டவுட் கட்டும்போது கீழே விழுந்து கால்ஒடிந்து போன மன்ற உறுப்பினருக்கு, நுட வைத்திய செலவுக்கு நடைபாதை வியாபாரிகளிடம் பணம் வசூல் செய்ய வேண்டும்..
இப்படி வேலைகள் நிறைய இருக்கும் பொழுது எப்பூடி ?

சாம்பசிவம்-
அப்ப, விபத்து நடந்தா ?
CHIVAS REGAL சிவசம்போ-
சாக, வேண்டியதுதான்.

52 கருத்துகள்:

 1. சாம்பசிவம் - அப்ப விபத்து நடந்தா???...

  சாமி சதாசிவம் - கோவிந்...தா!.. கோ.....விந்தா!....

  பதிலளிநீக்கு
 2. என்ன.. ஏட்டிக்குப் போட்டி ஏகாம்பரத்தைக் காணோம்?..
  ஏர்வாடியில இருந்து அவுத்து விட்டுட்டாங்களா!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஏற்கனவே ஆரம்பித்து வைத்தது இன்னும் நிலுவையில் உள்ளதே...

   நீக்கு
 3. என் அண்ணன் விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த போது அந்த ஊர் மக்கள் போகும் வாகனங்களை நிறுத்த போராடி இருக்கிறார்கள் நிறுத்தாமல் போய் இருக்கிறது வாகனங்கள்.
  கல் எறிந்து பஸ்ஸை நிறுத்தி எடுத்து சென்று ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள் அன்பான பொதுமக்கள். காலம் கடந்து விட்டதால் பிழைக்கவைக்க முடியவில்லை. . உங்கள் பதிவை படிக்கும் போது மனம் பழைய நினைவுகளில் ஆழ்ந்து போனது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ நானும் எனது நண்பனின் இழப்பு அனுபவத்தையே எழுதினேன்.

   நீக்கு
 4. விபத்து நடப்பது அவனவன் தலைவிதி. ஆண்டவன் செயல்...!. எல்லாவற்றுக்கும் அரசியல் வாதிகளும் திரைத்துறையினரும் அகப்படுகிறார்களா ?சுயபுத்தி என்பது எங்கே போகிறது....?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா ரசிகர் மன்றம் வைத்து இருப்பவர்களுக்கு சுயபுத்தி வேண்டும் என்பதையே நான் வலியுறுத்துகிறேன்

   நீக்கு
 5. கடைசியில் உள்ள வரி ..வேலைகள் என்பதைக் கடுமையாய் ஆட்சேபிக்கிறேன் ,அது கடமைகள் என்றிருக்க வேண்டும் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி இப்ப இது கடமையாக்கப்பட்டு விட்டதா ? சரிதான்.

   நீக்கு
 6. எட்டு எழுத்து படிச்சவனுக்கே புத்தி இல்லாத போது..நாலு எழுத்து படிக்காதவர்களுக்கு எங்கே அறிவு வளரப்போகிறது.. நல்ல மாட்டுக்கு கூட ஒரு சூடு பத்தாது போலிருக்கே..........

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒருவேளை சொன்னது மாட்டுக்குத்தான் மனிதனுக்கு அல்ல ! என்று புரிந்து கொண்டார்களோ....?

   நீக்கு
 7. இப்படி நிறைய வேலைகள் இருக்கும் போது எப்படி?
  அதானே?
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் நண்பரே இதை நண்பர் பகவான்ஜி கடமை என்கிறார்.

   நீக்கு
 8. எண்களை பார்க்கும் போது "மறுபடியும் தொடர் பதிவா...?" என்று நினைத்து விட்டேன் ஜி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதற்க்கு இன்னும் காலஅவகாசம் இருக்கின்றது ஜி

   நீக்கு
 9. வணக்கம்
  ஜி
  அசத்தலான கேள்விகள்... படித்து மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள் த.ம 8

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக ரூபன் தங்களின் மகிழ்வுக்கு நன்றி

   நீக்கு
 10. அன்புள்ள ஜி,

  விபத்து பற்றி போதிய அக்கறை இல்லை. முன்பெல்லாம் விபத்து ஏற்பட்டால் அரசாங்க மருத்துவமனையில் மட்டுமே அனுமதிக்கப்படுவர். தற்பொழுது அந்த நிலை மாறி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதால் பல உயிர்கள் காப்பற்றப்படுகின்றன.

  இளைஞர்கள் திரைப்பட நடிகர் நடிகைகளைத் தெய்வமாகக் கருதி வணங்குகின்றனர்.

  த.ம.8

  பதிலளிநீக்கு
 11. நண்பா,

  சும்மா இதுபோல பதிவுகள் எழுதி எங்கள படிக்க வச்சி எங்க நேரத்தை வீணாக்காதீர்கள், எங்க கட்சி கொடி கம்பத்த ஒரு எரும மாடு முட்டி கீழே சாச்சிடுச்சாம், அத நிமித்திட்டு அந்த எருமையோட "எருமைய" என்னன்னு கேட்டு நஷ்ட்ட ஈடு வாங்கி வேற புதிய கம்பம் நடனும், ரொம்ப வேல சாரி கடமை இருக்கு...இந்த நேரத்தில வளவளனு எழுதி... படிக்க வச்சி.... பத்துக்கு ஒன்பது மார்க்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நண்பா எருமை மாட்டுக்கு கடுங்காவல் தண்டனை கொடுக்க போராடுங்கள்.

   நீக்கு
 12. மனிதாபிமானங்கள் தொலைக்கப்படும்போது வேதனை அதிகமாகிவிடுகிறது. அதுவும் நமக்கு நெருக்கமானவர்களுடனான இவ்வாறான நிலையை எதிர்கொள்ளும்போது நாம் எதிர்கொள்ளும் துயருக்கு அளவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான் முனைவரே எனது அனுபவத்தையே குறிப்பிட்டு எழுதினேன் வருகைக்கு நன்றி

   நீக்கு
 13. உங்கள் புகைப்படத்தில் இந்தியில் எழுதியுள்ள சொல் விஸ்வரூபம் (எனக்கு ஓரளவு இந்தி தெரியும்) யதார்த்தத்தை தெளிவாக்கியது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முனைவருக்கு இந்தி தெரிந்திருப்பது அறிந்து மகிழ்ச்சி விஸ்வரூபம் சரியே ஆனால் இந்தி வார்த்தையாதலால் விஸ்வரூப் என்று எழுதி இருக்கிறேன்
   विस्वरूपम् - விஸ்வரூபம்
   विस्वरूप् - விஸ்வரூப்

   நீக்கு
 14. ம்..ம் என்னத்தை சொல்கிறது. வேலியே பயிரை மேய்வது போலத் தான் எல்லாம். தலை விதி இல்லையா ஜி ........ எல்லாம் மயான வைராக்கியம் போலவே அப்பப்போ பேசிட்டு மறந்து அடுத்த வேலைக்கு போய் விடுவோம். வழக்கமான பல்லவி தானே.........நன்றி !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ நலமா ? ஆம் சரியாக சொன்னீர்கள்

   நீக்கு
 15. ஆஹா... மீண்டும் தொடர்பதிவா என்று தனபாலன் அண்ணன் போல் நானும் நினைத்தேன்...

  போட்டுத் தாக்கிட்டீங்க...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எல்லோருடைய ஆர்வத்தையும் பார்த்தால் விரைவில் தொடர் பதிவு தொடங்க வேண்டும் போலயே...

   நீக்கு
 16. அடப்பாவி! என்னப்பா நடக்குது இங்க? இந்த ஒரு 3,4 நாள் வலைப்பக்கம் வர முடியல....செய்தி தெரியல ந உடனேயே நினைச்சோம்...நாம ஒரு 20/25 நாளைக்கு முன்னாடிதானே கில்லர்ஜிய விஸ்வரூப் எடுத்தப் பிரதமரா பார்த்தோம்..அதுக்குள்ளயும் கவுத்துட்டாங்களா...அப்படித்தான் போல...25 நாள் பிரதமர்தானா...அதான் இப்படி நாடு கிடந்து தவிக்குது..தமிழ்நாடும் தத்தளிக்குது....அப்ப பிரதமர் நீங்க இல்லையா...அதான் இப்படி எல்லாம் நடக்குது...

  பதிலளிநீக்கு
 17. எங்கள் விஸ்வரூப் எடுத்தப் பிரதமரைக் கவுத்து நாட்டை இந்த நிலைமைக்குத் தள்ளியவர்களை வன்மையாகக் கண்டிக்கின்றோம்..போராட்டம் நடத்துவோம்..அதுதானே எங்க வேலை...கடமை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் விஸ்வரூப் எடுத்தால் நாட்டில் நிறைய நரகாசுரர்கள் அழிக்கப்படுவார்கள்.

   நீக்கு
 18. நண்பரே! நாட்டு நடப்பை நயம்படச் சொன்னீர்கள். இருப்பினும் முன்புபோல் இல்லை; கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறார்கள். விளம்பரத்திற்காக திரைப்படத் துறையினர் செய்யும் செலவு கணக்கில் சிலர் பிழைப்பு நடத்துகிறார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே பலரின் பிழைப்பு பிறரின் உழைப்பில்தான் இருக்கின்றது.

   நீக்கு
 19. ஜி...அருமையான எள்ளல் நடை...வசீகரிக்கும் வார்த்தைகள்...
  தேவகோட்டையின் வெடியே....உலகமெங்கும் பறக்கட்டும் உம் கொடியே....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே கொடி எனக்கு வெடி வைத்து விடுமே...

   நீக்கு
 20. வணக்கம் கில்லர் ஜி !

  விதவிதமா தலைப்பு வைப்பதற்கே ஒரு பட்டம் தரலாம் உங்களுக்கு
  என்னமா சிந்திக்கின்றீர்கள் ஜி அருமை நிறைய வேலைகள் நமக்கும் இருக்கு ! எனக்கு நடிகர்களைப் பிடிக்குதோ இல்லையோ இந்த ரசிகர்களை என்றும் பிடிப்பதில்லை !

  அத்தனையும் அருமை ஜி தொடர வாழ்த்துக்கள் வாழ்க நலம்
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக பாவலரே.. ரசிகர்களை பிடிக்காது தங்களின் மனம் தெரிகின்றது.... என்னைப்போல அப்பாவிகள் மாட்டிக்கொண்டால் பட்டப்பெயர் வைப்பீர்களோ... ?

   நீக்கு
 21. விவிவிவிவிவிவிவிவிவி அருமை

  பதிலளிநீக்கு
 22. இப்போது சட்டம் கொஞ்சம் மாறியிருக்கிறது நண்பரே, விபத்தில் சிக்கியவர்களுக்கு தாரளமாக உதவலாம். மருத்துவமனைகளும் காவல்துறையும் கருணை காட்டுகின்றன. பழைய நடைமுறைகள் மாறி வருகின்றன.

  பதிலளிநீக்கு
 23. நண்பர் திரு S.P. செந்திக்குமார் அவர்கள் சொன்னபடி இப்போது நிலைமைகள் மாறியிருக்கின்றன. ஆனால் என்று அரசியல்வாதிகள் பின்னாலும் நடிகர்கள் பின்னாலும் அலையும் கூட்டம் குறைகிறதோ அன்றுதான் நல்ல காலம் பிறக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன் நண்பரே...

   நீக்கு
 24. வணக்கம் சகோ,

  அது வேலை இல்லை, கடமை, அது மட்டும் தான்,,,

  என்ன சொல்லி என்ன,,,,,,

  பதிலளிநீக்கு
 25. நடிகர்களின் பின்னால் அலையும் கூட்டம் மாறி
  நல்ல மனிதன் பின்னால் கூட்டம் சேர வேண்டும்.
  சிந்தனைப் பதிவு.

  பதிலளிநீக்கு