வணக்கம் ஸார்.
வணக்கோம்.
ஸார், நான் ஒரு LIC ஏஜண்ட்
அதுக்கு என்னாங்கிறே ?
ஸார் ஒரு பாலிஸி போட்டீங்கள்னா நல்லது.
யாருக்கு நல்லது எனக்கா ? ஒனக்கா ?
உங்களுக்குதான் ஸார்.
எப்புடி ?
ஸார் ஒரு ஐம்பதாயிரத்துக்கு பாலிஸி போட்டா மாசம் 650.00 ரூபாய் கட்டினாப்போதும் 15 வருஷத்துக்குள்ள முடிச்சுக்கிரலாம், இடையில உங்களுக்கு
ஏதாவது..... அப்படி... இப்படினா, மொத்த பணமும் உடனே கிடைச்சுரும் ஸார்.
அப்படி இப்படினா ?
அதாவது... ஸார்.. உங்களுக்கு ஏதாவது ஆகிஸிடெண்ட் அப்படி
ஏதாவது ஆயிட்டா... பணம் கிடைச்சுரும்.
ஆக்செண்டு ஆனா பணம் கெடைக்குமா ?
அப்படியில்லே அதாவது இறந்துட்டா... கிடைக்கும் ஸார்.
யாருக்கு ஒனக்கா ?
இல்லை ஸார் உங்க மனைவிக்கு கிடைக்கும்.
நான் செத்துபோனா அந்த மூதேவிக்கு பணம் கெடைக்கும்
அப்படிங்கிறே...
அப்படி சொல்ல வரலை ஸார்.
வேறெப்புடி ? சரி எனக்கு முன்னாலே அவ செத்துட்டானா பணத்தை யாருட்ட கொடுப்பே ?
உங்க வாரிசுதாரர் சொல்லி இருப்பீங்கள்ல உங்க
மகனுக்கு கிடைக்கும் ஸார்.
யாரு இந்தா திரியுதே...
ஒருதறுதலே அதுக்கா ?
என்ன ஸார், மகனைப்போயி
இப்படி எல்லாம்...
இது, இப்பவே குத்திப்புடுவேன்,
வெட்டிப்புடுவேனுங்குது, அவ என்னடான்னா ஏதாவது கேட்டா, சோத்துல வெசத்தை வச்சு
கொன்னுபுடுவேன் அப்படீங்கிறா இந்தக் கழுதைகளுக்கு நான்யேன் LIC போடணும் ?
என்ன ஸார் குடும்ப விசயத்தைப்போயி..
எங்கிட்டே... இல்லைன்னா பிக்ஸட் டெபாஸிட் செய்ங்க ஸார், அதா..
அப்ப சாகமாட்டேனா ?
ஸார் இப்படி அபசகுணமா பேசுறீங்க ?
யாரு நானு... ஏர்வாடியிலேருந்து...
இதம்பாடல்... வழியா சிக்கல் வரைக்கும் தெனம் நடந்துபோயி யாவாரம் செஞ்டுட்டு வந்து
இப்படி குத்துக்கல் மாதிரி இருக்கேன், என்னப்பாத்து ஆக்செண்டுல போயிடுவே,
அப்பிடிப் போயிடுவே, இப்பிடிப் போயிடுவேங்கிறே, ஏண்டா டேய்.... எத்தனே பேருடா
கெளம்பியிருக்கீங்க இப்பிடி, இனிமே, இந்த தர்ஹா பக்கம் ஒன்னேப் பாத்தேன், ங்கொய்யாலே
உள்ளே தள்ளிகிட்டு போயி கட்டிப் போட்ருவேன், ஓட்றா.....
OK
பதிலளிநீக்குஉங்ககிட்ட மாட்டிகிட்ட.. இல்ல.. இல்ல.. ஏகாம்பரத்திடம் மாட்டிக்கிட்ட எல்.ஐ.சி. ஏஜெண்ட் நிலைமையை நினைத்தால் ஒரு பக்கம் பாவமாயும் மறுபக்கம் சிரிப்பயிம் இருக்கிறது.
பதிலளிநீக்குத ம 7
என்னிடம் யாரும் மாட்டவில்லையே.... நண்பரே...
நீக்குசரியாயிருச்சா அண்ணா...
பதிலளிநீக்குசுத்தி சுத்தி அடிச்சிருக்கீங்க...
பாவம் ஏஜெண்ட்...
கலக்கல்...
நல்லவேளை சுத்தியலால் அடித்தேன் என்று சொல்லவில்லை.
நீக்குஅதை வேற செய்தீர்களா?
நீக்குசென்சார் கட்டா...? அது சரி.
வணக்கம் கில்லர் ஜி !
பதிலளிநீக்குஇந்த LIC காரன் இம்சை எல்லா இடத்திலும் இருக்கே தாங்க முடியல்ல சாமி சரியான பதிலடி கொடுத்து இருக்கிறார் தங்கள் கதாநாயகன் மிக அருமை மிகவும் ரசித்தேன் தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் !
தமிழ்மணம் வாக்கு 4 எப்போதோ அளித்திட்டேன் கருத்திட முடியவில்லை தங்கள் பதிவிற்கு இப்போது சரியாகி விட்டது நன்றி !
ஆம் கவிஞரே பட்டு அழுந்திய அனுபவமே பதிவு
நீக்குஏஜன்ட் ,அவர் காலில் சங்கிலி கட்டி இருப்பதை பார்க்காமல் விட்டு விட்டாரோ :)
பதிலளிநீக்குஅப்படியும் இருக்கலாமோ... ஜி
நீக்குஅந்த ஏஜெண்ட் - வழி தெரியாமல் வந்து மாட்டிக் கொண்டார்..
பதிலளிநீக்குஅவருக்கு நேரம் சரியில்லை போலிருக்கின்றது..
வாங்க ஜி யார் முகத்தில் விழித்தாரோ....
நீக்குஎல்ஐஜி காரன் ஒரு பிடி பிடிச்சது சந்தோசமாக இருக்கிறது.. பொழக்கிறதே..ஆத்தா....அப்பான்னு இருக்கு இதுல பாதுகாப்புன்னு
பதிலளிநீக்குஆமாம் நண்பரே தொந்தரவு தாங்க முடியவில்லை....
நீக்குஅவரையும் விடலையா??????? ம்ம்,,,,
பதிலளிநீக்குபாவம் சகோ, ஒரு பாலிசி தானே, போட்டு இருக்கலாம்.
நன்றி.
வாங்க ஒரு பாலிஸியா ? 3 போட்டாச்சு பிறகும் தொந்தரவு பண்ணினால் இப்படித்தான்
நீக்குஏன் இந்தக் கொலைவெறி பாவம் எல் ஐ சி ஏஜெண்ட்.
பதிலளிநீக்குஐயா வருடா, வருடம் விடுமுறைக்கு ஊருக்கு வர்றேன் எல்லா வருடமும் புதிதாக தொடங்க சொன்னால் ?
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஜி
நேற்று வந்தேன் கருத்து போடா முடியாமல் போயிட்டு ஜி த.ம வாக்கு மட்டுமே அளித்தேன்.
அற்புதமாக சொல்லியுள்ளீர்கள் .
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாங்க ரூபன் அனுபவத்தை சொன்னேன்.
நீக்குமார்வாடியாய் (சேட்டு) வந்தவரை ஏர்வாடிக்கு ஏரோபிளேனில் ஏற்றி அனுப்பி வைத்து விட்டீர்களே!
பதிலளிநீக்குபிளைட்டுக்கு பாலிசி எடுக்கச் சொல்லிக் கொடுத்து அனுப்பினீர்களா?
இந்த பிளைட் (கருத்து) கொஞ்சம் லேட் இயற்கை இடர்பாடு!
த ம +
நட்புடன்,
புதுவை வேலு
பட்டு அழுந்தியதின் பாதிப்பு நண்பா....
நீக்குகில்லர்ஜி இப்படி ஏர்வாடிக்காரரையெல்லாம் பிடித்துக் கொண்டு வந்தால் எங்கள் பாடு என்னாவது...
பதிலளிநீக்குஅனுபவிச்சுத்தான் தீரனும்
நீக்குஆயுள் காப்பீட்டு முகவர் என்ன செய்வார் பாவம்.அது அவரது தொழில். ஏகாம்பரத்திற்கு பிடிக்கவில்லையென்றால் காப்புறுதி ஒப்பந்தம் செய்யவேண்டாமே?
பதிலளிநீக்குஅவருக்கிட்டே எத்தனை பேரு போய் தொந்தரவு செய்தார்களோ.... யாரு கண்டா...
நீக்கு