தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், டிசம்பர் 01, 2015

AIDS DAY


நண்பர், நண்பிகளுக்கு இந்தப் பதிவுக்கு நான் தயார் செய்து வைத்த புகைப்படத்தை மாற்றி விட்டேன் காரணம் கடந்த எனது இதோ E தீ D பதிவுக்கு அனைவரும் தங்களது அன்பால் கண்டித்ததே...
இன்று
World AIDS Day - December 01

மண் தின்ன பிறந்த மானிடா ! 
கண் திறந்து பாரடா - உன்
அகக்கண் திறந்து பாரடா
விண், முட்டும் வரை சிந்தி - அதில்
உழைத்து முட்டிமோதி ஓடிவா ! முந்தி,
எதிரிகள் வந்து கொண்டிருப்பர் பிந்தி,
உனது சாதனைகளை சந்தி
தாயின் கருவறை விட்டு வந்தாய்
நோயின் கல்லறை தொட்டு நின்றாய்
வாழ்ந்து ஏதேதோ கண்டாய் - அதன்
விளைவாய் நோய் எடுத்துக் கொண்டாய்
எட்டுத் திசையும் சுற்றி வந்தாய்
எயிட்ஸை மனைவிக்கு பற்றி தந்தாய்
அந்த, இருளை ஏனெடுத்து வந்தாய் ?
அதன் விளைவாய் இந்நிலையாய் !
எயிட்ஸை, விரட்டினால் 
எமனையும் மிரட்டலாம் !
மண் தின்ன பிறந்த மானிடா !
கண் திறந்து பாரடா...


வணக்கம் உறவுகளே... நமது வலைத்தளங்களை உலகுக்கு அறிமுகப்படுத்த புதியதொரு திரட்டி நமக்கு கிடைத்து இருக்கின்றது பதிவர்களே... www.pathivar.net என்ற தளத்துக்கு சென்று இந்த திரட்டியை தங்களது தளத்தில் இணையுங்கள் நான் கண்ட பலன் இந்த பதிவுலகமும் பெறுக !
என்ன பலன் கண்டேன் ? இதை இணைத்ததால் திடீரென எனது பதிவுக்கு வருகையாளர்களின் எண்ணிக்கை கூடி இருக்கின்றது ஆகவே தாங்களும் பெறுக பலன் இத்திரட்டி நமக்கு கொடுக்கும் நலன்

அன்புடன்
உங்கள் கில்லர்ஜி

49 கருத்துகள்:

  1. விழிப்புணர்வு பெற வேண்டிய நாள்
    விறுவிறுப்பு மிக்க வரிகள்
    வெறுப்பினை வெந்தழலில் பொசுக்கும் வரிகள்
    வாழ்த்துகள் நண்பா!
    த ம +
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதலில் வருகை தந்தமைக்கு நன்றி நண்பா...

      நீக்கு
  2. அன்புள்ள ஜி,

    வருடத்தின் இறுதி மாதம் திசம்பர்... வாழ்க்கையின் இறுதி சோகம் ‘எய்ட்ஸ்’ . விழிப்புணர்வு கவிதை அருமை.
    மானிடமே விழி! இல்லையேல் உனக்கு சாவே கதி!

    ‘யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்று (‘எய்ட்ஸ்’-ஆல் அல்ல) பதிவ்ர் திரட்டியை திரட்டுங்கள் என்று வழிகாட்டிய கைகாட்டிக்கு நன்றி.

    த.ம.3

    பதிலளிநீக்கு
  3. அன்பின் ஜி..

    புல்லர்களுக்குப் புத்தி புகட்டும் வர்த்தைகள்!..
    ஆனாலும் - திருந்துவார்கள் என்று நினைக்கின்றீர்களா?...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி நம்மால் முடிந்த செய்வோம் புரியாத ஜடங்களை நாமென்ன செய்ய முடியும்....

      நீக்கு
  4. கவிதை எளி(அரு)மை.

    பதிலளிநீக்கு
  5. விழிப்புணர்வுக் கவிதை.

    "மண் தின்ன" என்றிருக்க வேண்டாமோ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே திருத்தி விட்டேன் சுட்டியமைக்கு நன்றி

      நீக்கு
  6. அருமையான விழிப்புணர்வுக் கவிதை
    நன்றி நண்பரே
    தம+1

    பதிலளிநீக்கு
  7. உடற் தேய்வு நோய் (AIDS) பற்றிய விழிப்புணர்வு கவிதைக்கு பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் பாராட்டுகளுக்கு நன்றி நண்பரே...

      நீக்கு
  8. நல்ல விழிப்புணர்வு கவிதை நண்பரே!
    த ம 7

    பதிலளிநீக்கு
  9. விழிப்புணர்வு கவிதை அருமை சகோ. பதிவர் திரட்டி என்ற தளத்தையும் அறிமுகப்படுத்தி இருக்கீங்க. தளத்தை எப்படி இணைக்க வேண்டும் என்ற விபரமும் கூறுங்கள் சகோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ முதலில் அந்த தளத்துக்குப் போய் தங்களது மின்னஞ்சல் முவரியைக் கொடுத்து பதிவு செய்யுங்கள் பிறகு உங்களுக்கே புரியும் உதவி தேவைப்பட்டால் நான் சொல்கிறேன்

      எனது முகவரி - sivappukanneer@gmail.com

      நீக்கு
    2. விபரம் சொன்னதற்கு நன்றி சகோ. தேவைப்பட்டால் உங்களிடம் மீண்டும் கேட்டு தெரிந்து கொள்கிறேன்.

      நீக்கு
  10. நாளுக்கேற்ற நல்லதொரு விழிப்புணர் பதிவு ஜீ... பாடல் சூப்பர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே நலம்தானே ? நீண்ட இடைவெளிக்குப் பிறகு வருகை.... நன்றி

      நீக்கு
  11. தகவலுக்கும்,,,,கவிதைக்கும் முதல் வணக்கம்

    பதிலளிநீக்கு
  12. தகவலுக்கும் ,கவிதைக்கும் நன்றிகள் நண்பரே....விரைவில் நமக்கே நமக்கான ஒரு திரட்டிக்கான பணிகள்...நடக்க ஆரம்பித்து இருக்கிறது...இன்னும் விவரங்களுக்காகவும், ஆலோசனைகளுக்காகவும் நீங்கள் தேவைப்படுவீர்கள்...நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே என்னிடம் ஆலோசனை என்பதுதான் எனக்கு விளங்கவில்லை அதை கொஞ்சம் விளக்கினால் விளங்கி கொ(ல்)வேன்

      நீக்கு
  13. கவிதைக்கும் பதிவர் திரட்டி தகவலுக்கும் நன்றி! நன்றி!

    பதிலளிநீக்கு
  14. காலமறிந்து வந்த கவிதை! !

    பதிலளிநீக்கு
  15. வணக்கம் சகோ,
    நல்ல பா வரிகள்

    பதிலளிநீக்கு
  16. எய்ட்ஸ் இரு பாலருக்கும் வருவது ஆணுக்கு மட்டுமல்லபெண்மூலம் ஆணுக்கும் ஆண்முலம் பெண்ணுக்கும் , சிலநேரங்களில் சம்பந்தமே படாத ஒருவருக்கும் வரலாம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா உண்மைதான்...
      இருப்பினும் இதற்க்கு ஆரம்ப காரணம் ஆண் வர்க்கமே என்பது எமது கருத்து விபச்சாரன் ஒழிந்து விட்டால் ? விபச்சாரி அழிந்து விடுவாள் பிறகு விபச்சாரம் என்ற தமிழ்ச்சொல் மறைந்து விடும்

      நீக்கு
  17. வணக்கம்
    ஜி
    நல்ல அறிவுரை... நல்ல விழிப்புணர்வு நல்ல வரிகள் வாழ்த்துக்கள் த.ம 13
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பர் ரூபனின் கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  18. அருமை கில்லர்ஜி அழகான வரிகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வில்லங்கத்தாரின் பாராட்டுகளுக்கு நன்றி

      நீக்கு
  19. கவிதை அருமை சகோ..திரட்டி பற்றிய தகவல் பகிர்விற்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  20. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி அய்யா
    நான் புதிது இணையும் வசதி என்றால் என்ன சொல்லவும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மேலே பாருங்கள்
      (இந்த தளத்தில் இணைக) 111 நபர்கள் இணைந்திருக்கின்றார்கள் இதைப்போல தங்களது தளத்தில் வையுங்கள் நண்பரே...

      நீக்கு
  21. இம்மாதிரி சிறப்பு தின நாட்களின் பதிவு உங்க பாணி இல்லையே :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி புரிஞ்சுக்கிட்டேன்.... புரிஞ்சுக்கிட்டேன். ஏதோ 1 மன்னிச்சுக்கங்களேன்.

      நீக்கு
  22. ஒருவனுக்கு ஒருத்தி என்ற எல்லையை மீறினால்
    ஒருவரால் ஒருவருக்குத் தொற்றும் தொல்லையே
    "உயிர் கொல்லி நோய் (Aids)!"

    வலைப் பக்கம் என் வருகை இன்மை கண்டு
    தொலைவில் இருந்தும் அன்போடு அறிதல் கண்டு
    நட்பைப் பேணும் நண்பரின் செயல் கண்டு
    நட்பைப் பேணும் என் உள்ளம் - உம்மை
    பாராட்டி மகிழ்கின்றது!
    (என்னுடன் தொலைபேசியில் கதைத்து ஊக்கம் தந்த தங்களின் அன்புக்கு நன்றி. விரைவில் வலைப் பக்கம் வருவேன்)

    பதிலளிநீக்கு