தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, ஜூன் 03, 2016

சவுச்சாலயம்

இந்த பதிவின் முந்தைய தொடர்ச்சியை படிக்க இதோ கீழே சொடுக்குக


லாட்ஜுக்குள் நுழைந்ததும் மேல்ட்மெல்ட் மிச்சமிருக்க அதை டேபிள் மேலே வைக்க, கில்லர்ஜி ஷோபாவில் சாய்ந்து டெலிவிஷனை ஆன் செய்ய ஜியெம்பி ஐயாவும், கந்தசாமி ஐயாவும் நேராக சவுச்சாலயம் (TOILET) போக...

என்ன சார் நீங்களுமா ?
ஆமா வயிற்றுக்கு ஒரு மாதிரியாக இருக்கு...

சரி சீக்கிரம் வாங்க..
அவர் வந்ததும், இவர் இவர் வந்ததும் அவர்...

என்ன கந்தசாமி சார் வயிறு ஒரு மாதிரியாக போகுதே... மேல்ட்மெல்ட் வேலையா... ?
அதான் எனக்கும், குழப்பமாக இருக்கு....

ஐயா நைட் டின்னர் ஆர்டர் பண்ணவா ?
ஐயாக்கள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு கண்களால் பேசி வேண்டாமென தீர்மானித்து...

வேண்டாம் கில்லர்ஜி வயிறு சரியில்லை வாங்கினால் வேஷ்டாகும் உங்களுக்கு மட்டும் சொல்லுங்க...
அதெப்படி நடுச்சாமத்துல பசித்தால் என்ன செய்வீங்க ?

பசித்தாலும் சாப்பிடுறது மாதிரி இல்லை எங்களுக்கு வேண்டாம்.
இல்லை ஐயா உங்க ரெண்டு பேருக்கும் சிம்பிளா ஆர்டர் பண்ணுறேன்.

ஒன்றும் சொல்லாமல் மீண்டும் கந்தசாமி ஐயா சவுச்சாலயம் சென்றார் அவர் வந்ததும், இவர் இவர் வந்ததும் அவர்...

‘’டிங்டாங்’’

ஃசோபாவோடு அட்டாச் செய்த பட்டனை கில்லர்ஜி தட்டவும் திறந்த கதவின் வழியே ரூம்பாய் ட்ரே ட்ராலியோடு...

மே ஐ கம்இன் சார்..
எஸ் ப்ளீஸ் கம்.

எல்லாவற்றையும் டேபிளில் வைத்து விட்டு வெளியேறினான் அசைவ உணவுகளின் மணம் சகோ R. உமையாள் காயத்ரி அவர்களின் கைவண்ணம் போல் மூக்கைத் துளைத்தது...
ஐயா சாப்பிடுவோமா ?
இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு விழிகளால் பேச முயன்றார்கள் முடியல...

எங்களுக்கு சிம்பிளா ஆர்டர் செய்யிறோம்னு சொன்னீங்க ? இவ்வளவு வந்துருக்கு சொளவு நிறைய....
ஆமாங்கய்யா... எனக்கு ஃபிஷ் பட்டர் ஃப்ரை சப்பாத்தி, உங்களுக்கு சிக்கன் டிக்கா, சப்பாத்தி. ஜியெம்பி ஐயாவுக்கு மட்டன் சுக்கா, ரொட்டி போதுமா ? இன்னும் சொல்லவா ?

இருவரும் மீண்டும் விழிகளால் பேசினார்கள்.
இதுதான் சிம்பிளா ?
என்னங்கய்யா இதைக்கூட சாப்பிடலைனானா... உடம்பு கெட்டுப்போகும்.

இதையெல்லாம் திங்கிற நிலைமையிலயா ? இருக்கோம்.
ஐயய்யோ... வீணாப்போகுமே...

ஹும் ஆடு நனையுதுன்னு ஓநாய் அழுதுச்சாம்...
என்னங்கய்யா ?

ஆர்டர் ஓவர்னு சொன்னேன்.
ஓவர் இல்லை ஐயா சமாளிச்சிடலாம் ஃபிஷ் பட்டர் ஃப்ரை ஸூப்பர் டேஸ்ட்.
கில்லர்ஜி உள்ளே இறக்கி கொண்டு இருக்க... ஜியெம்பி ஐயா மீண்டும் சவுச்சாலயம் சென்றார் அவர் வந்ததும், இவர் இவர் வந்ததும் அவர்...

ஐயா சூடு ஆறிடப்போகுது சாப்பிட வாங்க....
கில்லர்ஜி நீங்க சாப்பிட்டீங்களா ? மிச்சத்தை தூக்கி ட்ரம்ல கொட்டிட்டு தூங்குங்க...

என்னங்கய்யா... வீணாப்போகுமே அதுக்கு நானே சாப்பிட்ருவேனே.... ?
அதானே ப்ளான் மூணு வெரைட்டியா ஆர்டர் கொடுக்கும் போதே... நினைச்சேன் திண்ணு தொலைங்க..

கந்தசாமி ஐயா சலிப்புடன் சொல்லி விட்டு ஃசோபாவில் பொத்தென்று விழுந்தவர் நிமிர்ந்து கில்லர்ஜியை பார்த்தார் சிக்கன் டிக்காவை காணவில்லை மட்டன் சுக்கா இறங்கி கொண்டு இருந்தது நெற்றிக்கண் இன்றி பார்த்துக் கொண்டே இருந்தார் சிறிது நேரத்தில் ஜியெம்பி ஐயாவும் வந்து சோபாவில் சாய்ந்தார்.

ஏஏஏஏஏஏ......வ்வ்வ்வ்வ்வ்வ்.... ஐயா சுலைமாணி ஆர்டர் பண்ணவா ?
அவன் யாரு ?

என்னங்கையா... இப்படி கேட்கிறீங்க.. சுலைமாணின்னா... பால் இல்லாத டீ அதை குடிச்சா.. இப்ப சாப்பிட்டது எல்லாம் ஜீரணமாகும் அபுதாபியில, அரபிக்காரன் எல்லாம் சாப்பிட்டதும் இதைத்தான் குடிப்பாங்க...
அது சாப்பிட்டவுங்களுக்குதானே... எங்களுக்கு என்ன எலவுக்கு
 
ஜியெம்பி ஐயா உங்களுக்கு ?
ஆமா அது நல்லாத்தான் இருக்கும் நான்கூட ஒருமுறை பாம்பன் டூர் போனப்ப குடிச்சேன்.

இவருக்கும் வேண்டாம், எனக்கும் வேண்டாம், ஆர்டர் செய்து நீங்கதானா குடிச்சுச் தொலைங்க...
என்னங்கய்யா... கோபப்படுறீங்க... ? ஒண்ணும் தெரியாத சின்னப்பையன்ட்ட..

சின்னப்பையனா ? என்ன எலவை வாங்கி கொடுத்தீங்க... வயித்தாலை ஓடுது 18 தடவையாகிடுச்சு.
கந்தசாமி சார் நீங்க கணக்குல வீக்கா ?

ஏன் ?
இல்லை 17 முறையை 18 னு சொல்றீங்களே அதனால கேட்டேன்.

ஆமா சார் இப்ப அந்த கணக்குதான் முக்கியமாப் போச்சு சொல்லுங்க எதை வாங்கி கொடுத்தீங்க.... ?
மேல்ட்மெல்ட்

வயித்தாலை ஓடுது...
நேற்று நான் குடிச்சேன் ஒண்ணும் செய்யலையே.... ?

கில்லர்ஜி இது எவ்வளவு ?
ரெண்டு ஒரு டாலர் ஐயா.

இரவு நேரம் 12:30 ஐத் தாண்டியது...
மீண்டும் கந்தசாமி ஐயா சவுச்சாலயம் போனார் அவர் வந்ததும், இவர் இவர் வந்ததும் அவர்... கில்லர்ஜி சுலைமாணி ஆர்டர் செய்து வந்தவுடன் குடித்து விட்டு பால்கனியில் நின்று இரவின் ஒளியில் லண்டன் நகரை ரசித்தபடியே.... ஊரிலிருந்து கொண்டு வந்த முருகன் சுருட்டு ஒன்றை ஐயாக்கள் பார்க்காதவாறு பக்கு, பக்குவென்று இழுத்து விட்டு இரவு ஸூட்டை அணிந்து கொண்டு ஃபோம் மெத்தையில் விழுந்து உறக்கத்துக்கு போக... ஐயாக்கள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு விழிகளால் பேசினார்கள் ஐந்தே நிமிடம் போயிருக்கும்....
கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.... கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...

ஜியெம்பி சார் பார்த்தீங்களா ? நம்மளை இந்த நிலைக்கு ஆளாக்கிட்டு குறட்டை சத்தத்தை பாருங்க ரெண்டு பக்கெட் தண்ணியை தலையில ஊத்தி விடுவோமா ?
வேண்டாம் சார் விடுங்க தூங்கட்டும், நமக்கு இன்றைக்கு ஏகாதசின்னு நினைச்சுக்கிருவோம் அவரு கொண்டு வந்து குடிக்கச் சொன்னாரா ? நாமதான் நண்பர் ஸ்ரீராம் கேட்டு வாங்கிப்போடும் கதை மாதிரி கேட்டு வாங்கி குடிச்சோம் நான் ஒழுங்கா கொக்ககோலா குடிச்சுருப்பேன் அதையும் நீங்கதான் கெடுத்தீங்க...
இருங்க இதோ வாறேன்

மீண்டும் சவுச்சாலயம் சென்றார் அவர் வந்தவுடன் இவர், இவர் வந்ததும் அவர்...
அதிகாலை நேரம் 4:45 ஐத் தாண்டியது... 

என்ன சார் விடியப்போகுது சுத்தமா தூங்கலையே... இன்றைக்கு ஊர் சுற்ற முடியுமா ? ஆமா அந்த மேல்ட்மெல்ட் எதுல தயாரிக்கிறாங்கே...
என்ன இலவோ..... யாரு... கண்டா... ?

சட்டென டேபிளின் மேலிருந்த மேல்ட்மெல்ட் கண்ணில் தென்பட டின்னை எடுத்தவர் சுழற்றிப் பார்த்தவர் கண்ணாடியை போட்டுக் கொண்டு மீண்டும் கூர்ந்து பார்த்ததும் திடுக்கிட்டார்.

தொடரும்...
காணொளி

38 கருத்துகள்:

  1. மேல்ட்மெல்ட்,மாட்டுச் சாணத்தில் இருந்து தயாரிக்கப் பட்டதா :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி யாருக்குத்தெரியும் ? அழகாக இருந்துச்சு வாங்கினோம்.

      நீக்கு
  2. சும்மா சொல்லப்படாது. லண்டன்ல சௌசாலயம் நல்லாவே வச்சிருக்கான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா ‘’சௌசாலயம்’’ நான் சொன்ன, சவுச்சாலத்தைவிட இது சரியாக இருக்கின்றதே....

      நீக்கு
  3. ஐயோ... எனக்கு காணொளி எந்த பிரௌசரிலும் ஓடாது... அதில் என்ன இருக்கிறது என்று சொல்லுங்களேன்..

    என் சம்பந்தப் பட்ட வரி நிறையவே புன்னகைக்க வைத்தது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தசாவதாரம் படத்தில் அசின் இரயிலில் கோவிந்தராஜ பெருமாளுடன் சவுச்சாலயம் செல்லும் காட்சி

      நீக்கு
  4. கில்லர்ஜியிடம் மாட்டிக் கொண்டு படாத படுகிறார்களே,நகைச்சுவை அட்டகாசம் தொடரட்டும்

    பதிலளிநீக்கு
  5. இந்த ஜிக்கிட்ட மாட்டி.....
    ஐயாக்கள் பாடு திண்டாட்டமா போச்சே.....

    ஆஹா...கைமணம் மூக்கைத் துளைக்குதா....:))))

    வீடியோ....செம....செளசாலயம்.....தலைப்பு எங்கே இருந்து வந்ததுன்னு பார்த்தவுடன்.....புரிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ முந்தைய பதிவை படித்தீர்களா ? காணொளி கண்டமைக்கு நன்றி

      நீக்கு
  6. அது சரி மால்ட் பெவெரெஜ் அப்படின்ற பெயர்ல ...ம்ம்ம்ம்ம் எல்லா மால்ட் பெவெர்ஜ்ஜும் பீரல்ல, எல்லா பீரும் மால்ட் பெவெர்ஜ்லதான் செய்யறது ஹிஹிஹிஹி....அதான் சார் திடுக்கிட்டுவிட்டார்!!! ஜிஎம்பி சார்தானே பார்த்தது??!! பாவம் இருவரும்..

    ஜி ..... ஜிஎம்பி சார் சைவம்தானே சாப்பிடுவார்...அவருக்கு நீங்க அசைவம் வாங்கிக் கொடுத்தால் அவர் எப்படிச் சாப்பிடுவார்...ஹஹ்ஹ்...

    சவுச்சாலயம் தசாவதாரம் படத்தில் வரும் க்ளிப்பிங்க்...சரி இன்னொன்று நீங்கள் விவரித்திருப்பதற்கு ஏற்ப ஒரு க்ளிப்பிங்க் உண்டு கவுண்டமணி அதில் வருவார். இப்படித்தான்...செந்தில் ஏதோ கொடுக்க...படம் பெயர் நினைவில்லை. அதையும் போட்டிருக்கலாமோ...ஹிஹிஹிஹி

    ஒழுங்கா சுத்திக்காமிச்சது போல தெரியலையே...ஹஹஹ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க, வாங்க ஜியெம்பி ஐயா சைவம் என்பது எங்களுக்கு தெரியும் அதனாலதானே மட்டன் சுக்கா, ரொட்டி வாங்குனோம் நாங்க எதையுமே ஃப்ளான் போட்டுத்தான் செய்வோம் வீணாப்போயிடக்கூடாதே....

      நீக்கு
  7. பாவம்ங்க ரெண்டு பேரும். விட்டுடுங்க! அவங்களைப் பார்க்க வைச்சுட்டு நீங்க சாப்பிட்டதில் உங்க வயிறு வலிக்கப் போகுதே! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க எதுக்கு வயிறு வலிக்கப்போகுது ? நாங்க சாப்பிட்டதும் வெந்தயத்துல மிளகு கரைச்சு குடிப்போமே.... வயிறு வலிக்காதே....

      நீக்கு
  8. கில்லர்ஜி. இது அடுக்குமா. இரு முதியவர்கள் வயிற்றால் போகும்போது மருத்துவரிடம் கூட்டிப்போகாமல் வெளிக்குப் போன எண்ணிக்கை தவறு என்று கணக்கு பார்க்கிறீர்களே இத்தனை முறை போனால் டிஹைட்ரேட் ஆகி இருக்குமே . இருந்தாலும் ரசிக்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திதானே சிக்கன் டிக்கா, மட்டன் சுக்கா ஒரே நேரத்தில் சாப்பிட முடியும் வருகைக்கு நன்றி

      நீக்கு
  9. அப்படி என்னத்தைய்யா வாங்கிக் கொடுத்தீரு?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே இதுவொரு தொடர்பதிவு முந்தைய பதிவு மலைகளோடு மடு படித்தால் புரியும்
      பதிவின் இணைப்பு தொடக்கத்திலேயே இருக்கின்றது வருகைக்கு நன்றி

      நீக்கு
  10. இரண்டு பெரியவர்களும் உங்களிடம் மாட்டிக்கிட்டு ரொம்பவே திண்டாடித்தான் போய் இருக்காங்க!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே நானும்கூட எல்லாவற்றையும் சாப்பிட முடியாமல் திண்டாடித்தான் விட்டேன்

      நீக்கு
  11. இனி கனவில் கூட இவர்கள் இருவ்ரும் உங்களோடு எங்கும் வரமாட்டார்கள்!
    அது சரி! அந்த டின்னின் மேல் என்ன அச்சிடப்பட்டிருந்தது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே விரைவில் விடை தெரியும்.

      நீக்கு
  12. வகையாய் மாட்டிக் கொண்டார்கள் போலிருக்கிறதே

    பதிலளிநீக்கு
  13. மூத்தவர்களை சாப்பிடச் சொல்லி இப்படியா..வதைப்பது....!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாப்பிடச் சொல்வது எப்படி நண்பரே வதைப்பதாகும் ? அன்பால் சாப்பிடச் சொன்னேன் குற்றமா ?

      நீக்கு
  14. அருமை ஐயா அருமை.தொடர்கிறேன் நன்றி.

    பதிலளிநீக்கு
  15. பாவம் பெரியவங்க!..

    சும்மா விடாது கருப்பு..
    வெரட்டிக்கிட்டே வரும்!..

    (அது சரி... 17 - 18 ந்னு சாக்பீஸால கோடு போட்டு வெச்சீங்களா ஒவ்வொருத்தருக்கும்?..கணக்கு சரியா வரல்லேன்னா - மறுபடியும் முதல்ல இருந்தே ஆரம்பித்து விடலாம்!..)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி என்னமோ நான் எண்ணிக்கிட்டு இருந்தது மாதிரி என்னிடம் கேட்கின்றீர்களே.... நானா சொன்னேன் ?

      நீக்கு
  16. நகைச்சுவையாகப் போகின்றது

    பதிலளிநீக்கு
  17. ஐயாக்கள் பார்க்காதவாறு சுருட்டு புகைப்பதை இப்போதுதான் பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா ஐயாவிடம் சொல்லி விடாதீர்கள்.

      நீக்கு
  18. ஹா ஹா ஹா மறுபடியும் தொடருமா...??
    இரண்டாவத் எப்பிசோடுலே சவுச்சாலயம் வரை வந்தாச்சே...!
    இனியும் எதுவரை வர போகுதோ...!
    பார்ப்போம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சவுச்சாலயத்துல போகவேண்டியது போகும்.

      நீக்கு